அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 31 January 2019

ஒற்றுமை என்னும் அருள்




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

நமக்கு சிறு வயது முதலே நமக்கு கற்று தந்த ஒன்று, இன்னும் நாமும் நம் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கும் ஒன்று. அனைவருடனும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பது தான். 

அதற்கென்றே ஒரு பாரம்பரியமான, பிரபல்யமான கதையும் உண்டு. நான்கு  பசு மாடுகள், காட்டின் அருகே உள்ள ஓர் கிராமத்தில் விவசாயியிடம் இருக்கும், அதனை ஒரு நாரி வேட்டையாடி தனது பசியை தீர்த்துக்கொள்ள எத்தனித்த பொழுது, அதனை நான்கும் சேர்ந்து வீழ்த்தி விட்டது. அதற்கு பின் அந்த குள்ளநரி, தந்திரம் செய்து அந்த பசுக்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி ஒவ்வொன்றையும் தனி தனியாக வேட்டையாடி தனது பசியை தீர்த்துக்கொண்டது  என்பதை நாம் எல்லாம் அறிந்தது.




எல்லாவற்றையும் விட அல்லாஹு தஆலா தன் அருள்மறையில் : 

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏ 

மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்திக் காண்பிக்கின்றான். 3:103



அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்லி தந்தார்கள்  :


قال النبي صلى الله عليه وسلم:
« آمركم بثلاث: أن تعبدوا الله ولا تشركوا به شيئا، وتعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا، وتطيعوا لمن ولاه الله أمركم»

எனவே எந்த முறையில் இருந்தாலும், நாம் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்க வேண்டும்.  எந்த விதத்திலும் தனித்து  எதிராக சென்று விட கூடாது என்பது தெளிவாக விளங்குகிறது.


எது ஒற்றுமை ?


திருமறையின் வசனங்களுக்கு, அதன் மற்ற வசனங்களே விளக்கமாக எடுப்பது சிறந்தது. அதன் விளக்கங்களை அல்லாஹு தாலா மற்றொரு வசனத்தை கொண்டு விளக்கம் சொல்லுவான். மற்ற சில வசனங்களுக்கு அல்லாஹு தஆலா தனது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹதீஸை கொண்டு விளக்கங்களை வெளிப்படுத்தி இருப்பான். 

இப்படி, நீங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் என்று சொல்லும் அல்லாஹ், எது ஓற்றுமை என்பதை தனது தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வார்த்தைகளை கொண்டு  சொல்லி தருகின்றான். 

وروى ابن مردويه من طريق إبراهيم بن مسلم الهجري ، عن أبي الأحوص ، عن عبد الله رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم 

: " إن هذا القرآن هو حبل الله المتين ، وهو النور المبين وهو الشفاء النافع ، عصمة لمن تمسك به ، ونجاة لمن اتبعه "

மார்க்கம் ஒற்றுமையை கற்றுத்தருகிறது : 


நம்முடைய மார்க்கம் நமக்கு கற்று தரும் ஒவ்வொரு செயலிலும் ஒற்றுமையாக இருக்கவே சொல்கிறது. இன்னும் நம் கண்மணி நாயகம் ஸல்லலாலஹு  அலைஹிவ ஸல்லம் அவர்கள் வாழ்வின் வழிமுறையும் அதனையே நமக்கு உணர்த்துகிறது. 

நமது அன்றாட வாழ்வில் அதனை நடைமுறை படுத்த சொல்லித்தருகிறது. 

இன்னும்,  நம்மடைய மார்க்கம் நம் குடும்பத்துடனும், சொந்த பந்தங்களுடனும் இணங்கி வாழ கற்று தருகிறது.



فعن أنس بن مالك -رضي الله عنه- قال: قال رسول الله: (إن الرحم شُجْنةُ متمِسكة بالعرش تكلم بلسان ذُلَق، اللهم صِل من وصلني واقطع من قطعني، فيقول تبارك وتعالى : أنا الرحمن الرحيم، و إني شققت للرحم من اسمي، فمن وصلها وصلته، ومن نكثها نكثه


நம்முடைய ஒவ்வொரு நேர தொழுகையையும் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் இணைந்து நிறைவேற்ற சொல்ல்கின்றது.

இப்படி ஒவ்வொரு செயலும் நமக்கு ஒற்றுமையையே கற்றுக்கொடுக்கிறது. 

பிரிவினை வேண்டாம் : 


நம்முடைய மார்க்கம் எல்லா நேரத்திலும்  பிரிந்திருப்பதை தடுக்கிறது. அதனை கண்டிக்கிறது. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னர்கள் : 

 قال النبي صلى الله عليه وسلم:« الجماعة رحمة، والفرقة عذاب».

நிச்சயமாக ஒற்றுமை என்பது அல்லாஹ்வினுடைய ரஹ்மத்தாகும், இன்னும் பிரிவு என்பது அவனுடைய தண்டனையாகும். 



உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உபதேசம்  : 


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் ஸஹாபாக்களுக்கு இப்படி உபதேசம் செய்தார்கள்.

 عن ابن عمر رضي الله عنه والأصح أن نقول رضي الله عنهما لأن عمر ابن الخطاب خليفةً راشد وابنه صحابي جليل قَالَ:


((خَطَبَنَا عُمَرُ بِالْجَابِيَةِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قُمْتُ فِيكُمْ كَمَقَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِينَا فَقَالَ أُوصِيكُمْ بِأَصْحَابِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَفْشُو الْكَذِبُ حَتَّى يَحْلِفَ الرَّجُلُ وَلَا يُسْتَحْلَفُ وَيَشْهَدَ الشَّاهِدُ وَلَا يُسْتَشْهَدُ أَلَا لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ عَلَيْكُمْ بِالْجَمَاعَةِ وَإِيَّاكُمْ وَالْفُرْقَةَ فَإِنَّ الشَّيْطَانَ مَعَ الْوَاحِدِ وَهُوَ مِنْ الِاثْنَيْنِ أَبْعَدُ مَنْ أَرَادَ بُحْبُوحَةَ الْجَنَّةِ فَلْيَلْزَمْ الْجَمَاعَةَ مَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ وَسَاءَتْهُ سَيِّئَتُهُ فَذَلِكُمْ الْمُؤْمِنُ)) -  الترمذي

இந்த ஒற்றுமை நிலைத்திருக்கும் வழிகளை தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நமக்கு கற்று கொடுத்திருக்கிறார்கள்.


ஓர் சமுதாயத்திலும், குடும்பத்திலும் ஒற்றுமை குழைவது, போட்டி, பொறாமை, கோபம், தற்பெருமை போன்ற மன நோய்களால் தான் என்பது நாம் அறிந்த உண்மை. அதனை அண்ணல் நபி ஸல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நமக்கு இப்படி சொல்லி தந்தார்கள் : 

قول رسول الله صلى الله عليه وسلم :« من صنع إليكم معروفا فكافئوه، فإن لم تجدوا ما تكافئونه فادعوا له حتى تروا أنكم قد كافأتموه».

உங்களுக்கு நன்மை செய்தவர்களுக்கு அதற்கு சமமான ஒன்றை செய்துவிடுங்கள். அப்படி உங்களால் அதற்கு சமமான ஒன்றை செய்ய முடியாவிட்டால் அவர்கள் அதனை பெற்றுக்கொள்ளும் வரை அவர்களுக்காக நீக்கினால் துஆ செய்யுங்கள். 

அல்லாஹு தஆலா நம்முடைய குடும்பங்களிலும், நமது சமுதாயத்திலும் ஒற்றுமையை தந்தருள்வானாக. ஆமீன் !

1 comment:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.கட்டுரை அருமை.
அரபி மொழியில் உள்ளதை தமிழில் விளக்கம் கூறியிருந்தால் இன்னும் அருமை.