அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Tuesday 9 January 2018

ஆலிம்களின் அடித்தளமே இச்சமூகத்தின் அரண்





ஒவ்வொரு உம்மத்தினருக்கும் அல்லாஹ் ஒரு நபியை அனுப்ப்பி தான் அவர்களுக்கு நேர்வழியை காண்பிக்க வைக்கின்றான். வேதத்தை மட்டும் கொடுத்து விட்டு நீங்கள் படித்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவதில்லை. அந்த வேதத்தையே நபியின் மூலம் தான் விளக்கத்துடன் அருள்கின்றான்.

كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ

அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பி வைத்தோம்.   (2:151)


يٰۤـاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ كَثِيْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ‌ ؕ قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ

வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.   (5:15)


எனவே இறை வேதம் மட்டும் இருந்தால் ஒருவரால் அதை மட்டும் படித்து அறிந்து நேர்வழி பெற்றுவிட முடியாது. காரணம் அதனை விளங்கிக்கொள்ளும் அளவுக்கான அறிவாற்றல் இறை ஞானம் கொடுக்கப்பட்ட நபிமார்கள்  அல்லாத பிறரால் இயலாது என்பதே எதார்த்தமான உண்மை.  அதனால் தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நபிகளின் சொத்தாக கல்வி ஞானத்தையும், வாரிசுகளாக உலமாக்களை வழங்கி இருக்கின்றார்கள்.  


உலமாக்களை பற்றி குர்ஆன்  : 


شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلاَّ هُوَ وَالْمَلائِكَةُ وَأُوْلُو العِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلاَّ هُوَ العَزِيزُ الحَكِيمُ 

(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை." அவ்வாறே மலக்குகளும் (வேதத்தை ஆராய்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (3:18)

இதன் விளக்கம் :


قال العلامة عبد الرحمن السعدي في تفسيره: (وفي هذه الآية فضيلة العلم والعلماء، لأن الله خصهم بالذكر من دون البشر وقرن شهادتهم بشهادته وشهادة ملائكته، وجعل شهادتهم من أكبر الأدلة والبراهين على توحيده، ودينه، وجزائه وأنه يجب على المكلفين قبول هذه الشهادة العادلة الصادقة، وفي ضمن ذلك: تعديلهم، وأن الخلق تبع لهم، وأنهم هم الأئمة المتبعون، وفي هذا من الفضل والشرف وعلو المكانة ما لا يعادل قدره).


ஆலிம்களின் சிறப்பை சொல்கிறது : 


ذكر الإمام ابن القيم أن في هذه الآية عشرة أوجه تدل على شرف العلم وفضل العلماء. ومنها:

1 – أن الله – عز وجل – استشهدهم من بين سائر الخلق.

2 – وضمَّ شهادتهم إلى شهادته تعالى.

3 – وضم شهادتهم إلى شهادة ملائكته.

4 – وكونه تعالى استشهدهم فمعناه أنه عدَّلهم؛ لأنه لا يمكن أن يستشهد بقولهم إلا وأنهم عدول. وفي هذا جاء الأثر: “يحمل هذا العلم من كل خلف عدوله”.

5 – أنهم جعلهم هم والأنبياء في وصف واحد، فلم يفرد الأنبياء عن العلماء، فأشهد نفسه، ثم أشهد ملائكته ثم أشهد أولي العلم، الذين على رأسهم الأنبياء، ومن ضمنهم العلماء.

6 – أنه أشهدهم على أعظم مشهود به، وهذه أجلُّ وأعظم شهادة في القرآن؛ لأن المشهود به هو: شهادة: إن لا إله إلا الله. التي لا يعدلها شيء. (2


ஆலிம்களின் உயர்வு :


يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا العِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ  

உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிவான்.  58:11


رفع الله درجاتهم في الدنيا والآخرة، في الدنيا رفع ذكرهم عند الخلق، ورفع مكانتهم ومنزلتهم. وأما في الآخرة فلهم الدرجات العلى، وأي شرف وأي منزلة أعظم من ذلك



ஒரு ஊரில் இருக்கும் உலமாக்களின் அந்தஸ்து  :



ويقول ميمون بن مهران في بيان حقيقة أهل العلم: “إنهم في البلد كالماء العذب”. أي أن الناس يردون إليه. وكما قال الحسن: “الدنيا ظلمة إلا مجالس أهل العلم”.

மரணித்த பின்பும் பயன் தரும் :


وفي الحديث الآخر في صحيح مسلم: «إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاثَةٍ». وذكر: «أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ» (11). فإن العالم آثاره باقية حتى بعد وفاته


மார்க்க செய்திகளையும் சட்டங்களையும் அனைவருக்கும் எத்திவைக்கும் ஒரு சிறந்த செயலை உலமாக்கள் செய்து வருகின்றனர். தங்களுடைய வாழ்க்கையில்  எத்தனை துன்பங்கள் வந்தாலும், பல சோதனைகள் வந்தாலும் இது  அல்லாஹ் நம்முடைய ஈமானுக்கு கொடுக்கும் சோதனை என்று அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இறை வழியில், மார்க்க பணியில் ஈடுபடுபவர்கள். இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்து சேவை செய்து வருகின்றவர்கள் .இதனை செய்பவர்களுக்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்ன சுபசோபனம் : 

عن عبد الرحمن بن عبد الله بن مسعود عن أبيه عن النبي -صلى الله عليه وسلم- قال: نضر الله امرأ سمع مقالتي فوعاها وحفظها وبلغها فرب حامل فقه إلى من هو أفقه منه، ثلاث لا يغل عليهن قلب مسلم: إخلاص العمل لله، ومناصحة أئمة المسلمين، ولزوم جماعتهم، فإن الدعوة تحيط من ورائهم [رواه الترمذي: 2658، وأحمد: 21630، وهو حديث صحيح]

தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு தேடி செல்லும் பாதை உலமாக்களின் பக்கம் தான்.  எனவே  உலமாக்கள் குறையும் பொழுது மக்களின் அழிவு ஆரம்பமாகும். 

ويقول سعيد بن جبير: “علامة هلاك الناس إذا هلك علماؤهم”


கஷ்டப்படுத்த கூடாது  : 



 ويقول عكرمة – رحمه الله -: “إياكم أن تؤذوا أحدًا من العلماء، فإن مَن آذى عالمًا فقد آذى رسول الله – صلى الله عليه وسلم – لأنهم حملة كلام الرسول – صلى الله عليه وآله وسلم – الذائدون عن حياضه، المنافحون عن كلامه، رحمهم الله”


அவர்களை பற்றி தவறாக பேச கூடாது :




يقول ابن المبارك – رحمه الله -: “من تكلم في الأمراء ذهبت دنياه، ومن تكلم في العلماء ذهبت آخرته، ومن تكلم في الإخوان ذهبت مروءته”.


உலமாக்களுக்கு கட்டுபட்டு நடப்பது : 


 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.


 قال ابن عباس - رضي الله عنه - في تفسير أولي الأمر منكم: (يعني أهل الفقه والدين وأهل الله الذين يعلمون الناس معاني دينهم، ويأمرونهم بالمعروف وينهونهم عن المنكر، فأوجب الله طاعتهم على عباده) (تفسيرالطبري)، ومرد طاعة الأمراء إلى طاعة العلماء، ومرد طاعة العلماء إلى طاعة الله - سبحانه - وطاعة رسوله الله صلى الله عليه وسلم.


காலத்தின் அவசியம் :

கோல் எடுத்தவனெல்லாம் தண்டல் காரனாகி விடலாம் என்று எண்ணி பலரும் நாங்கள் சமுதாயத்தை முன்னெடுத்து தலைமை தங்குவோம் என்று பல விதமான குழப்பத்தை சமூகத்தில் உண்டாக்குகின்றன. வெறும் இந்த உலக கல்வியையும், சமூக நடப்புகளையும்  மட்டும் அறிந்து  வைத்துக்கொண்டு இஸ்லாமிய சமூதாயத்தை வழிநடத்தி விடலாம் என்று கனாக்கண்டு கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்பட முதல் காரணமே சரியான தலைமை இல்லாதது தான். அந்த தலைமையில் வருபவர்கள் அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் நமக்கு குர் ஆன் சொல்லித்தரும் வழிமுறை.

இஸ்லாமிய சமுதாயத்தில் மக்களை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் வருபவர் யாராக இருந்தாலும், ஒவ்வொரு நபரும் ஒவ்வொருவருக்கு தனது ஆதரவை அளிப்பார்கள். ஆனால் அனைவரும் இணைந்து ஒரு சமூகத்தாரை நம்புவர் என்றால், அது ஆலிம்கள் சமூகத்தை தான்.

அதற்கு  கடந்த ஜமாஅத்துல் உலமா  கண்டனக்கூட்டத்தில் எந்த வித பெருமளவு முன்னறிவிப்புகளோ, சுவரொட்டிகளோ இல்லாமல்  திரண்டிருந்த மக்கள் கூட்டமே சாட்சியாக நிற்கிறது.

நம் இஸ்லாமிய சமூக மக்கள் அனைவரும் நாங்கள் உலமாக்களின் கீழ் ஒரே சமுதாயமாக ஒன்றிணைவோம் என்று காட்டி விட்டார்கள். இதனை தொடர்ந்து எல்லா வித சிக்கல்களிலும், பிரச்சனைகளிலும், இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதியாக ஜமாஅத்துல் உலமா செயல்பட வேண்டும் என்பதே மக்களின் ஆசையாகஇருக்கும் .

உலமாக்களின் கீழ் ஒன்றினையும் ஓர் சமூகத்தை அல்லாஹ் கைவிட்டு விட மாட்டான். நிச்சயம் இவர்கள் முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலும் நல்ல தீர்வை கொடுப்பான். இன்ஷா அல்லாஹ் !!

அல்லாஹ் நம் சமூகத்தை ஒன்றிணைந்து வெற்றிகாணும் சிறந்த சமூகமாக ஆக்கியருள்வானாக !! ஆமீன் !!

No comments: