அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 19 April 2018

அமானிதம் பேணுவோம்






Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


அல்லாஹு தாஆலா தனது அருள்மறையில் முஃமின்களின் குணங்களை வரிசையாக சொல்லி காட்டுகிறான் :

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ (10)


நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள். அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்.  எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள்.  இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள். அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து,  தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப்பிடித்து தொழுது வருவார்கள்  இத்தகையவர்தாம் (சுவனபதிக்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.  (23: 1 - 10 )





அல்லாஹ் முஃமின்களின் குணங்களை பற்றி கூறும் இந்த வரிசையில் அமானிதம் பேணுபவர்களாக இருப்பார்கள் என்பதையும் குறிப்படுகிறான். எல்லா குணங்களும் ஒரு முஃமினுக்கு மிக முக்கியம் என்றாலும் தற்போதய காலத்தில் அமானிதம் என்பது மிகவும் பொடுபோக்காகவே பார்க்கப்படுகிறது. இன்னும் சிலருக்கு அமானிதம் என்றல் என்னவென்பதே தெரியாத அளவுக்கு காலம் மாறிவருகிறது. அமானிதத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். 


நமது முதல் அமானிதம் எது ? 


 ( لأماناتهم ) بالجمع . وابن كثير بالإفراد . والأمانة والعهد يجمع كل ما يحمله الإنسان من أمر دينه ودنياه قولا وفعلا . وهذا يعم معاشرة الناس ، والمواعيد ، وغير ذلك ؛ وغاية ذلك حفظه والقيام به . والأمانة أعم من العهد ، وكل عهد فهو أمانة فيما تقدم فيه قول أو فعل أو معتقد .


இறைவன் நமக்கு கட்டளையிட்ட அனைத்துமே நம்முடைய அமானிதம் தான். சுருக்கமாக சொன்னால், நம்முடைய முழு மார்க்கம் தன நம்முடைய முதல் அமானிதம். 

ஆம் ! நாம் நம்முடைய மார்க்கம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் பொடுபோக்காக இருப்பதே அமானிதத்தை பேணாதது தான். 


அமானிதத்தில்  பல வகைகளை கூறலாம் : 

1. இறை வணக்கத்தில் அமானிதம் 
2. உடல் உறுப்புகளில் அமானிதம் 
3. பிறரின் உரிமைகளில் மற்றும் பொருள்களில் அமானிதம்
4. செயல்பாடுகளில் அமானிதம் 
5. பேசும் பேச்சில் அமானிதம் 
6. பிறரை கவனிப்பதில் அமானிதம் 

عن أبي هريرة -رضي الله عنه- أنّ رسول الله عليه السلام قال: (إذا أُسنِد الأمرُ إلى غيرِ أهلِه فانتظِرِ السَّاعةَ) [صحيح البخاري].

அமானிதத்தில்  பல வகைகளை கூறலாம் : 

1. இறை வணக்கத்தில் அமானிதம்  : 

 இறைவணக்கத்தில் அமானிதம் என்பது, இறைவன் நமக்கு கட்டளையிட்ட கடமையாக்கியவற்றை தவறாமல் அதற்குரிய நேரத்தில் அதனை நிறைவேற்றுவது. 


2. உடல் உறுப்புகளில் அமானிதம் : 

இறைவனால் நமக்கு அருளப்பட்ட உடல் உறுப்புகளை அவன் சொன்ன வழிமுறையில் அவனது தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் பயன்படுத்துவது. 

3. பிறரின் உரிமைகளில் மற்றும் பொருள்களில் அமானிதம் : 

இறைவன் அனுமதித்த ஹலால் ஆன முறையில் வந்த அவரவருக்குரிய பொருட்களை உரிய வகையில் பயன்படுத்துவது. பிறருக்கு சொந்தமான பொருட்களை அவர்களிடத்தில் ஒப்படைத்துவிடுவது. 

4. செயல்பாடுகளில் அமானிதம்: 

மனிதன் தன்னுடைய செயல்களை அதற்குரிய சிறந்த முறையில் செய்வது. 

5. பேசும் பேச்சில் அமானிதம் : 

தன்னுடைய பேச்சின் மூலம் அல்லது வார்த்தைகளின் மூலம் எந்த நேரத்திலும் பிறரை காயப்படுத்தாமல் நோவினை கொடுக்காமல் இருப்பது. 

6. பிறரை கவனிப்பதில் அமானிதம் :

யாரை கண்காணிப்பதும், கவனித்து கொள்வதும் தன மீது கடமையாகிவிட்டதே அவர்களை உரிய முறையில் கவனத்துடன் பார்த்துக்கொள்வது. இதில் தாய் தந்தை, மனைவி மக்கள், மற்றும் ஒருவர் தனது வீட்டில் வளர்க்கும் பிராணிகளும் அடங்கும். 


இதில் பொடுபோக்காக இருப்பது நம்மை தோல்வியடைய செய்யும் : 



قال تعالى :" إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْأِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُوماً جَهُولاً. سورة الأحزاب:72.

நிச்சயமாக "(நம்முடைய) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?" என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் வினவினோம். அதற்கு அவை அதனைப் பற்றிப் பயந்து, அதனைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாமையால் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டான்.

அந்த வாழ்வை தான் நமக்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வாழ்ந்து காண்பித்தார்கள். நுபுவத்திற்கு முன்பே நம்பிக்கைக்குரியவர் என்ற பட்டத்தை பெற்றார்கள். 


 كما جاء في حوار أبي سفيان وهرقل ، حيث قال هرقل : سَأَلْتُكَ : هَلْ يَغْدِرُ ؟ فَزَعَمْتَ أَنَّهُ لاَ يَغْدِرُ ، وَكَذَلِكَ الرُّسُلُ لاَ تَغْدِِرُ. - البُخَاري 


وَلَقَّبَتهُ قُرَيشٌ بِالأَمينِ عَلى * * * صِدقِ الأَمانَةِ وَالإِيفاءِ بِالذِّمَمِ

ولقد جعل الرسول صلى الله عليه وسلم الأمانة دليلا على إيمان المرء وحسن خلقه، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : مَا خَطَبَنَا نَبِيُّ اللهِ صلى الله عليه وسلم إِلاَّ قَالَ:لاَ إِيمَانَ لِمَنْ لاَ أَمَانَةَ لَهُ ، وَلاَ دِينَ لِمَنْ لاَ عَهْدَ لَهُ.


அல்லாஹ்வும் தனது அருள்மறையில் இதனையே கட்டளை இடுகிறான் :  

فقال تعالى :" إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا (58) سورة النساء.


(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். 



இறுதிப் பேருரையில் அண்ணலாரின் அறிவுரை : 


ولقد كانت من آخر وصايا النبي صلى الله عليه وسلم في حجة الوداع الوصية بالأمانة فقال : \" وَمَنْ كَانَتْ عِنْدَهُ أَمَانَةٌ فَلْيُؤَدِّهَا إِلَى مَنِ ائْتَمَنَهُ عَلَيْهَا - وَبَسَطَ يَدَيْهِ فَقَالَ - أَلاَ هَلْ بَلَّغْتُ أَلاَ هَلْ بَلَّغْتُ أَلاَ هَلْ بَلَّغْتُ - ثُمَّ قَالَ - لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّهُ رُبَّ مُبَلَّغٍ أَسْعَدُ مِنْ سَامِعٍ.

 أخرجه أحمد 5/72(20971) و\"الدرامي\" 2537 و\"أبو داود\" 2145

எனவே நாம் கேட்கும் நல்ல விஷயங்களையும் பிறருக்கு சொல்லி தர வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. பிறர் தவறு செய்வதை பார்த்தாலும் அதனை நமது தகுதிக்கேற்ற அளவு தடுக்க வேண்டும். 

عن أبي سعيد الخدري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم أنه قال:  من رأى منكم منكرًا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان

                                          (مسلم رحمه الله في الصحيح )

  معناه: أن المؤمن وهكذا المؤمنة إذا رأيا المنكر وجب تغييره باليد مع الاستطاعة، كالأمير في حدود صلاحيته، وكذلك الهيئة في حدود صلاحيتها، وكالأب مع أهل بيته، والأخ مع أهل بيته، على حسب القدرة، كخمر يراق، آلة لهو تكسر وما أشبه ذلك،

இது தான் நம்முடைய மார்க்கம் கற்று தரும் வழிமுறை. 

அல்லாஹு தாஆலா நாம் வாழும் காலம் முழுக்க சத்திய மார்க்கத்தை பின்பற்றி கண்மணி நாயகம் ஸல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழி நடந்து பிறரின் அம்மனிதத்தையும் இறைவன் நமக்கு தந்த அம்மனிதங்களையும் பேணி நடந்து இறை மற்றும் இறை தூதர் & நேசர்கள் பொறுத்ததுடன் மரணிக்கும் பாக்கியம் நம் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும்.  ஆமீன்  ! 




No comments: