அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Wednesday 11 April 2018

மிஃராஜில் அண்ணலார் கண்ட அற்புதங்கள்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் ...


سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ

தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன். (மஸ்ஐpதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன்.
(அல்குர்ஆன் 17:1)


நாயகத்தின் உள்ளமமும் ,ஜம்ஜம் தண்ணீரும் :


நான் மக்காவில் (என்னுடைய வீட்டில்) இருக்கும் போது என்னுடைய வீட்டின் முகடு திறக்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதன்வழியாக இறங்கி என் நெஞ்சைப் பிளந்து ஜம்ஜம் தண்ணீரால் அதைக் கழுவினார்கள். ஈமானும் அறிவும் நிரம்பிய ஒரு தங்கப்பாத்திரத்தைக் கொண்டு வந்து (அதிலுள்ள ஈமானையும், அறிவையும்) என் உள்ளத்தில் வைத்து பின்பு மூடிவிட்டார்கள். (புகாரி)


ஆதி பிதாவும் ஆரம்ப வானமும் :

فلقيا في السماء الأولى آدم عليه السلام، وفي الثانية يحيى وعيسى عليهما السلام، وفي الثالثة يوسف عليه السلام وفي الرابعة إدريس عليه السلام وفي الخامسة هارون عليه السلام وفي السادسة موسى عليه السلام وفي السابعة إبراهيم عليه السلام



பின்பு என்னை வானத்தின் பக்கம் அழைத்துச்சென்று (முதல்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (தட்டுபவர்) யார்? எனக் கேட்கப்பட்டது. ஜிப்ரீல் எனக் கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார்? எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின் பக்கம் ஏறி வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதா? என (அம்மலக்கு) கேட்டார். ஆம் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது எங்களுக்கு வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்தே ஆதம் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி நல்லதை கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டாம் வானமும் இறைத்தூதர் இருவரும்


பின்பு இரண்டாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (இரண்டாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது இரண்டாவது வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே என் பெரியம்மாவின் (தாயின் சகோதரி) இரு மக்களாகிய மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களையும், ஸகரிய்யா (அலை) அவர்களின் மகன் யஹ்யா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு வாழ்த்துக் கூறி நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

மூன்றாம் வானமும் அழகு நபிச் சிகரமும்


பின்பு மூன்றாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (மூன்றாம்;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது மூன்றாவது வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே யூசுஃப் (அலை) அவர்களை பார்த்தேன் அவருக்கு அழகின் அரைவாசி கொடுக்கப்பட்டிருந்தது. அவர் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

நான்காம் வானமும் இத்ரீஸ் (அலை)


பின்பு நான்காவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (நான்காம்;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது நான்காவது வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே இத்ரீஸ் (அலை) அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஐந்தாம் வானமும் ஹாரூன் (அலை)


பின்பு ஐந்தாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (ஐந்தாம்;;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது ஐந்தாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே ஹாரூன் (அலை) அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஆறாம்; வானமும் மூஸா (அலை)


பின்பு ஆறாம்; வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (ஆறாம்;;;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது ஆறாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே மூஸா (அலை) அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஏழாம்; வானமும் இப்ராஹீம்(அலை)


பின்பு ஏழாம்; வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (ஏழாம்;;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது ஏழாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் முதுகை பைத்துல் மஃமூரின் பக்கம் சாய்த்தவர்களாக வைத்திருப்பதை நான் பார்த்தேன். அதில் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குகள் நுழைகின்றார்கள் அவர்கள் மீண்டும அங்கே வருவதில்லை.


மூஸா (அலை) அவர்களைக் காணுதல்.



من حديث أنس بن مالك قال: رسول الله -صلى الله عليه و سلم-: ((مررت ليلة أسري بي على موسى عليه السلام يصلي في قبره

நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மண் குன்றுக்கு அருகே மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தம்முடைய கப்ரில் தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி)

நூல்கள்: முஸ்ம் 4379, அஹ்மத் 12046, நஸயீ 1613

பைத்துல் மஃமூர்:


நான் அதைக் குறித்து ஜிப்ரீடம் கேட்டேன். அவர், “இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்” என்று கூறினார்.

மூன்று பாத்திரங்களில் மூன்று பானங்கள்:

فجاءني جبريل بإناء من خمر وإناء من لبن فاخترت اللبن، فقال جبريل اخترت الفطرة 


அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து அருந்தினேன். அப்போது என்னிடம், “நீங்களும் உங்களுடைய சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்” என்று சொல்லப்பட்டது.

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி), நூல்: புகாரி 5610)

சுவனத்தில் நுழைக்கப்படுதல் :



பின்னர் நான் சுவனத்தில் நுழைக்கப்பட்டேன். அதில் முத்துக்களினால் ஆன கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது.

(அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புகாரி 349)


ஏழைகளில் அதிகமானோர் சுவனவாசிகளே :


நான் சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையே கண்டேன்.

இறுதி எல்லையும் இறை அலுவலகமும்:


ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்த போது, அங்கு நான் (வானவர்களின்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 3342)

மாஷிதா பின்த் பிர் அவ்ன் :


كما رأى قبر ( ماشطة بنت فرعون ) ووجد ريحاً طيبة فقال : يا جبريل ، ما هذه الرائحة ؟ قال : هذه رائحة
ماشطة بنت فرعون وأولادها


இவர்களின் மண்ணறையை பார்த்தார்கள் ..நல்ல மணமுள்ள வாடையை நுகர்ந்தார்கள் ..ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் இது குறித்து கேட்ட போது இது மாஷிதா பின்த் பிர் அவ்ன் & அவர்களின் குழந்தைகளின்   நறுமண வாடை என்றார்கள் ...

ஹிஜாமாவின் முக்கியத்துவம் :


ما مررت ليلة أسري بي بملأ إلا قالوا: يا محمد! مُرْ أمتك بالحجامة


நான் மிஹ்ராஜுக்கு செல்லும் போது ஒரு கூட்டத்தை பார்த்தேன் அவர்கள் முஹம்மதே (ஸல்) அவர்களே ..!!!!! உங்களுடைய உம்மத்துக்கு ஹிஜாமா செய்ய ஏவுங்கள் என்று சொன்னார்கள் ...

புறம் பேசியவர்களின் நிலை :


 لما عرج بي ربي عز وجل؛ مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم، فقلت: من هؤلاء يا جبريل؟! قال: هؤلاء الذين يأكلون لحوم الناس، ويقعون في أعراضهم

மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரீலே! இவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்” என்று பதிலளித்தார்கள்.

நல்லதை பிறருக்கு சொல்லி தன்னை மறந்தவர்கள் நிலை :


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي رِجَالا تُقْرَضُ شِفَاهُهُمْ بِمَقَارِيضَ مِنْ نَارٍ , فَقُلْتُ : مَنْ هَؤُلاءِ يَا جِبْرِيلُ ؟ فَقَالَ : خُطَبَاءُ أُمَّتِكَ الَّذِينَ يَأْمُرونَ النَّاسَ بِالْبِرِّ , وَيَنْسَوْنَ أَنْفُسَهُمْ , وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ أَفَلا يَعْقِلُونَ "

நான் மிஹ்ராஜுக்கு செல்லும் போது ஒரு சில மனிதர்களை  பார்த்தேன் .நெருப்பு கங்கினால் அவர்களுடைய உதடுகள் கட்டப்பட்டிருந்தது ...நான் அவர்கள் யார் என்று கேட்டதற்கு அவர்கள் தான் செய்யாமல் மக்களுக்கு நல்லதை ஏவிய உங்களுடைய உம்மத்தின் பேச்சாளர்கள் என்று சொன்னார்கள் ....அவரகள் வேதத்தை ஓதினார்கள் அவர்கள் அரிய மாட்டார்களா .....??

அமானிதத்தை பாதுகாக்கதவன் :


 ثم رأى صلى الله عليه وسلم رجل قد جمع حزمة حطب عظيمة لا يستطيع حملها وهو يزيد عليها فقال صلى الله عليه وسلم : ما هذا يا جبريل؟
قال جبريل : هذا الرجل من أمتك تكون عليه أمانات الناس لا يقدر على أدائها وهو يريد أن يحمل عليها.


நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான நெருப்பு கட்டைகளை ஒன்றுசேர்த்து தூக்க முடியாமல் இருக்கும் ஒரு மனிதரை பார்த்தார்கள் ..இது குறித்து வானவர் கோமானிடம் கேட்ட போது மக்களுடைய அமானிதங்களை பாதுகாத்து ஒப்படைக்க முடியாத உங்களுடைய உம்மத்தை சேர்ந்த ஒரு நபர் தான் என்று பதில் சொன்னனர்கள்



No comments: