அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Wednesday 4 April 2018

இறைக் கண்காணிப்பு



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

இறைக் கண்காணிப்பு


அல்லாஹ் கூறுகிறான்; -

 الَّذِىْ يَرٰٮكَ حِيْنَ تَقُوْمُۙ‏ وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيْنَ‏ ‏ 


 'அவன் எத்தகையவன் எனில் (நபியே) நீர் எழுகிறபோதும் அவன் உம்மைப் பார்க்கிறான். மேலும் சிரம் பணிந்து வணங்குவோரிடையே உமது அசைவையும் பார்க்கிறான்' (26 :218-219)

وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْ‌ؕ

மற்றோர் இடத்தில், 'நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கிறான்' (57:4)

يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ‏ 

வேறோர் இடத்தில், 'கண்களின் கள்ளத்தனங்களையும் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் அறிகி றான்;'(40 :19)

اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ‌ؕ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ‏  

இவர்களின் இரகசியங்களையும் கிசுகிசுப்புகளையும் நாம் கேட்ப தில்லை என்று இவர்கள் எண்ணிக்கொண்டார்களா, என்ன? நாம் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். நம் மலக்குகள் அவர்களின் அருகில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்' (43 :80)

1) அல்லாஹ் தனது அறிவுஞானம், ஆற்றல், அதிகாரம், நிர்வாகம் ஆகியவற்றால் மனிதர்களைச் சூழ்ந்திருப்பது.



மேலே சொன்ன 57:4 வசனத்தின் கருத்தும் இதுதான். அல் முஜாதலா அத்தியாயத்தி;ல் உள்ள இந்த வசனத்தின் கருத்தும் இதுதான்:

مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْا‌ۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏



'மூன்று மனிதர்களிடையே ரகசியப் பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறுவதில்லை.,அவர்களிடையே நான்காவதாக அல்லாஹ்வும் இருந்தே தவிர! அல்லது ஐந்து மனிதர் களிடையே எந்த இரகசியப் பேச்சு வார்த்தையும் நடை பெறு வதில்லை., அவர்களிடையே ஆறாவதாக அல்லாஹ் இருந்தே தவிர! இரகசியப் பேச்சுகள் பேசுவோர் இதனைவிடக் குறை வாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும்-எங்கு இருந்தாலும் அவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்' (58 :7)

2) எச்சரிக்கை செய்வது. 


يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ يُبَيِّتُوْنَ مَا لَا يَرْضٰى مِنَ الْقَوْلِ‌ؕ وَكَانَ اللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطًا‏ 

'அவர்கள் தம் இழிச்செயல்களை மக்களுக்குத் தெரியாமல் மறைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. அவனோ - அவனது விருப்பத்திற்கு மாறாக அவர்கள் சதியா லோசனை செய்து கொண்டிருக்கும்போதுகூட அவர்களுடன் இருக்கிறான்.மேலும் அல்லாஹ் அவர்கள் செய்யும் அனைத்துச் செயல் களையும் சூழ்ந்து அறியக் கூடியவனாக இருக்கிறான்' ( 4:108)

- அல்லாஹ்வுக்குத் தெரியாது என்று கருதிக்கொண்டு சதியாலோசனை செய்வது குறித்து எச்சரிக்கை செய்வதே இங்கு கருத்து.

3) உதவி செய்வது, ஊக்கம் அளிப்பது.

فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَى السَّلْمِ‌ۖ  وَاَنْـتُمُ الْاَعْلَوْنَ‌ۖ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ يَّتِـرَكُمْ اَعْمَالَـكُمْ

'எனவே நீங்கள் தைரியம் இழந்து விடாதீர்கள். மேலும் சமாதானத்தைக் கோராதீர்கள். நீங்கள்தாம் வெற்றி பெறக் கூடியவர்கள். அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். மேலும் உங்கள் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்க மாட்டான்' (47: 35)

இந்த உடனிருத்தலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று: மேலான குணவொழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர் களுடன் அல்லாஹ் இருக்கிறான்., உதவியும் ஒத்துழைப்பும் அளித்துக் கொண்டிருக்கி றான் என்பது. குர்ஆன் கூறுகிறது:

اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ

'எவர்கள் இறையச்சத்துடன் வாழ்கிறார்களோ மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களு டன் திண்ணமாக அல்லாஹ் இருக்கிறான்'(16:128)

இரண்டு :குறிப்பிட்ட அடியார்களுடன் சேர்த்துச் சொல்வதாகும்.

اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌ ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى‌ ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏ 

நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன?) நிராகரிப்பாளர்கள் அவரை வெளியேற்றியபொழுது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபொழுது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் - தன் தோழரை நோக்கி, கவலை கொள்ளாதீர்., நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று கூறினார் '(9:40)

- ஹிஜ்ரத்தின் பொழுது குகையில் நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர் (ரலி)அவர்களும் தங்கியிருந்தபோது அல்லாஹ் அவர்களுடன் இருந்து உதவியும் ஒத்துழைப்பும் நல்கியது பற்றி கூறுகிறது இந்த வசனம். அப்பொழுது அபூபக்ர் (ரலி) அவர்கள் கவலையும் கலக்கமும் அடைந்த நிலையில் நபியவர் களிடம் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இதோ! எதிரிகள் நம்மை நெருங்கி விட்டார் களே! அந்தப் பாதகர்கள் தங்கள் பாதங்களின் பக்கம் நோக்கினாலே நம்மைப் பார்த்து விடுவார்கள் போலுள்ளதே! என்ன செய்வது?

- ஏனெனில் குறைஷிகள் எப்படியாவது நபியவர்களைப் பிடித்திட வேண்டும் என்று தேடி அலைந்தார்கள். இதற்காக அவர்கள் ஏறாத மலைகள் இல்லை. இறங்காத ஓடைகள் இல்லை. எல்லா இடங்களிலும் சல்லடை போட்டு அரித்தார் கள். நபியவர்களையும் அவர்களின் அன்புத் தோழர் அபூ பக்ர் அவர்களையும் பிடித்துக் கொண்டு வருபவருக்கு 200 ஒட்ட கங்கள் பரிசு என்று அறிவித் தார்கள். நபி(ஸல்) அவர்கள் தலைக்கு 100 ஒட்டகங்கள். அபூ பக்ர் தலைக்கு 100 ஒட்ட கங்கள்!

பரிசுக்கு ஆசைப்பட்டவர்கள் அனைவரும் நாலா திசைகள் நோக்கிப் பறந்தார்கள்.ஆனால் அவர்களால் நபியவர்களையோ அபூ பக்ர் அவர்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெ னில் அவ் விருவருடனும் அல்லாஹ் இருந்தான்! அவனது பாதுகாப்பு இருந்தது! ஒவ்வொரு இடமாகத் தேடிக்கொண்டு வந்த எதிரிகள் ஒரு கட்டத்தில் அந்தக் குகையின் வாசலை நெருங்கினார்கள்!அப்போது அபூபக்ர் (ரலி)அவர்கள் நபியவர் களிடம், இதோ! எதிரிகளில் ஒருவன் தன் பாதங்களின் பக்கம் பார்த்து விட்டாலே நம்மைக் கண்டு கொள்வானே என்று கூறினார்கள்.

அதற்கு நபியவர்கள், 'கவலை கொள்ளாதீர். திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். நாம் இருவர் மட்டுமல்ல., மூன்றாவதாக அல்லாஹ்; இருக்கிறான் ' என்று கூறினார்கள்.

அவ்விருவரையும் யாரும் பிடித்துவிடக்கூடாது என்பது தானே நம் அனைவரின் எதிர்பார்ப்பு! அதுபோன்றுதான் நடந் தது. எந்த ஒருபாதுகாப்பும் தடையும் இல்லாத நிலையில் குகையிலிருந்த அவ்விருவரையும் எதிரிகளில் எவனும் பார்க்க வில்லை.

அவனுக்கு ஏதும் மறைவில்லை :


عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏ 

(எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.

سَوَآءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَ مَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۢ بِالَّيْلِ وَسَارِبٌۢ بِالنَّهَارِ‏ 

எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).

وكان رسول الله يدعوا الله سبحانه بقوله اللهم أسألك خشيتك في الغيب والشهادة 

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் "யா அல்லாஹ் ..!!!! அடியார்கள் பார்வையில் அகப்படாத முடியாத நேரத்திலும் உன் மேல் பயத்தை கொடு என்று துஆ கேட்பார்கள் ...

அவன் நம்மை பார்க்கிறான் :


ان تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك


இஹ்ஸான் என்று கேட்கும் போது நீ இறைவனை வணங்கும் போது ,

1.நீ அவனை பார்ப்பது போல் 
2.அவன் நம்மை பார்க்கின்றான் என்ற எண்ணத்தில் வணங்க வேண்டும் 

அவன் நம்மை கவனிக்கிறான் என்ற எண்ணம் என்பது  ஷைத்தானின் ஊசலாட்டத்தை விட்டும்,நப்ஸின் விபரீதத்தை விட்டும் நம்மை பாதுகாக்கும் ..


لأنهُ إِنَمّاٍ تَرَكَهَا مِن جَرائي 

ஒரு அடியான் பாவம் செய்ய முற்படும் போது மலக்குமார்கள் அல்லாஹ்விடத்திலே சொல்லுவார்கள் யா அல்லாஹ் இன்ன அடியான் பாவம் செய்ய முற்படுகிறான் எனும் போது அல்லாஹ் சொல்லுவான் ..என்னுடைய அடியானை நன்கு கவனியுங்கள் அவன் பாவம் செய்தால் அது போன்றதை எழுதுங்கள் ..அவன் விட்டுவிட்டால் ஒரு நன்மையை எழுதுங்கள் ..அவன் என் மேல் உள்ள பயத்தினால் தான் அந்த பாவத்தை விட்டான் என்று கூறுவான் ...

ஒரு அரபி கவிதை :


إذا ما خلوت الدهر يوما فلا تقل       خلوت ولكن قل علي رقيب

நீ தனித்திருந்தால் நீ மட்டும் தனியாக இருக்கிறாய் என்று சொல்லாதே ..என்னை கவனிப்பவனும் என்னுடனே இருக்கிறான் என்று சொல் ....

No comments: