அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 29 March 2018

ஈமான் உறுதிபடட்டும்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

குழப்பமான மிகவும் சூழ்ச்சி மிகுந்த காலகட்டத்தில் அல்லாஹ் நமக்கு ஈமானுடைய பாக்கியத்தை கொடுத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ் !! ஏதோ நம் தாய் தந்தையர்கள் முஸ்லிம்கள் என்பதால் நாமும் அதில் இருக்கின்றோம் என்பதே தவிர,  நம்மில் அதிகமானோருக்கு ஈமான் என்றல் என்ன என்பது கூட அறியாமல் தான் இருக்கின்றோம். அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். 

நாம் ஈமானுடன் இருக்க முதலில் ஈமான் என்றால் என்ன? எதனை எல்லாம் நாம் ஈமான் கொள்ள வேண்டும், ஈமான் உறுதி பட நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் படைக்க பட்டதன் நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகள் கூட பலருக்கு எழுவதில்லை என்பது தான் மிகவும் கவலைக்குரிய செய்தி. ஏதோ பிறந்துவிட்டோம் என்பதற்காக வாழ்கின்றவர்கள் போல சிலரும், இந்த துன்யா தான் நிலையான வாழ்வு என்பது போன்ற எண்ணங்களுடனும் வாழ்கின்றோம் தவிர, அல்லாஹு தஆலா வின் மீதும் அவன் இதனையெல்லாம் கொண்டு ஈமான் கொள்ள சொன்ன்னனோ அவற்றை ஈமான் கொண்டு அதன் மீது உறுதியாக இருந்து ஈமானுடன் மரணிக்க வேண்டும் என்ற நோக்கில் வாழும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தர வேண்டும். 

இந்த ஈமானுடைய பாக்கியம் சாதாரணமானதல்ல, நமக்கு கிடைத்திருக்கும் இந்த ஈமானுடைய பாக்கியம் சாதாரணமானதல்ல. விலைமதிக்க முடியாத ஒன்று என்பதை நாம் உணர வேண்டும். அதனை உணர்ந்ததால் தான் ஸஹாபாக்கள் இந்த ஈமானை  இழந்து விட கூடாது, நமக்கு மட்டும் அல்லாமல் நமக்கு பின் வரும் மக்களுக்கும் இது போய் சேர வேண்டும் என்று தங்களுடைய வாழ்வையே அதற்காக அர்ப்பணித்தார்கள் என்பது நமக்கு வரலாறு கூறும் சான்றுகள். 

முஃமின்கள் யார் ? 

இதற்கான பதிலை அல்லாஹ்வே தனது அருள்மறையின் பல இடங்களில் கூறுகின்றான். 

قال سبحانه وتعالى:" إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُوْلَئِكَ هُمُ الصَّادِقُونَ "، الحجرات/15

(உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இத்தகைய வர்கள்தாம் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள்.


 قال سبحانه وتعالى:" إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آَيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ * الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ * أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ "، الأنفال/2-5.


உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு. 


இதனை கொண்டு ஈமான் கொள்ள வேண்டும்  : 


وقال صلّى الله عليه وسلّم في الحديث الصّحيح حين جاء جبريل عليه السّلام وسأله عن الإيمان، والإسلام، والإحسان، وفيه (... قالَ: أخبرني عنِ الإيمانِ. قالَ: الإيمانُ أن تُؤْمِنَ باللَّهِ، وملائِكَتِهِ، وَكُتبِهِ، ورسلِهِ، واليومِ الآخرِ، والقدرِ كلِّهِ؛ خيرِهِ وشرِّه. قالَ: صدَقتَ...)

1. அல்லாஹ் 
2. மலக்குமால்கள் 
3. இறை வேதங்கள் 
4. இரசூல்மார்கள் 
5. மறுமை நாள்
6. நன்மையும் தீமையும் அல்லாஹ்விடமிருந்து வருகிறது
7. மறுமையில் எழுப்பப்படுவது 

மறைவானதை நம்புவது தான் ஈமான் :


நம்முடைய ஈமான் என்பது மறைவானதை எந்த அளவுக்கு உறுதியாக நம்புகின்றோம் என்பதில் தான் நம்முடைய தரம் அல்லாஹ்விடத்தில் உயர்கிறது. எனவே நம்முடைய அந்த நம்பிக்கையை மிகவும் உறுதியுடன் இருக்க அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்யவேண்டும். 

பார்க்காத்தையும் உறுதியாக நம்புவது தான் ஈமான்.

1. அல்லாஹ் - பார்த்ததில்லை
2. மலக்குமால்கள் - பார்த்ததில்லை
3. இறை வேதங்கள் - குர்ஆனை தவிர பிறவற்றை பார்த்ததில்லை (குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறங்குவதையும் பார்த்ததில்லை)
4. இரசூல்மார்கள் - பார்த்ததில்லை
5. மறுமை நாள் - இது வரை பார்த்ததில்லை
6. நன்மையும் தீமையும் அல்லாஹ்விடமிருந்து வருகிறது - அதையும் பார்த்ததில்லை
7. மறுமையில் எழுப்பப்படுவது - இதுவரை பார்க்கவில்லை


قال سبحانه وتعالى: (وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا)،[١٢] 

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்தான் செல்கின்றான்.



அல்லாஹ்விற்காக விரும்புவதும் அல்லாஹ்விற்காக வெறுப்பதும் தான் உறுதியான ஈமான் : 


فعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ:" كُنَّا جُلُوساً عِنْدَ النَّبِىِّ - صلّى الله عليه وسلّم - فَقَالَ: أَىُّ عُرَى الإِسْلاَمِ أَوْثَقُ؟ قَالُوا الصَّلاَةُ. قَالَ: حَسَنَةٌ وَمَا هِىَ بِهَا.قَالُوا: الزَّكَاةُ. قَالَ: حَسَنَةٌ وَمَا هِىَ بِهَا.قَالُوا: صِيَامُ رَمَضَانَ. قَالَ: حَسَنٌ وَمَا هُوَ بِهِ.قَالُوا: الْحَجُّ. قَالَ: حَسَنٌ وَمَا هُوَ بِهِ.قَالُوا: الْجِهَادُ. قَالَ: حَسَنٌ وَمَا هُوَ بِهِ.قَالَ: إِنَّ أَوْسَطَ عُرَى الإِيمَانِ أَنْ تُحِبَّ فِى اللَّهِ وَتُبْغِضَ فِى اللَّهِ "، أخرجه أحمد، وعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلّم:" يَا عَبْدَ اللَّهِ أَىُّ عُرَى الإِسْلاَمِ أَوْثَقُ؟. قَالَ قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: الْوَلاَيَةُ فِى اللَّهِ الْحُبُّ فِى اللَّهِ وَالْبُغْضُ فِى اللَّهِ "، السّنن الكبرى للبيهقي.



عن أَنَسٍ رضى الله عنه قَالَ: ((كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ: ((يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ))، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، آمَنَّا بِكَ، وَبِمَا جِئْتَ بِهِ، فَهَلْ تَخَافُ عَلَيْنَا؟ قَالَ: ((نَعَمْ، إِنَّ الْقُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ، يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ))([2]).


நாயகம் ஸல் அவர்கள் உள்ளங்களை புரட்ட கூடியவனே ....உன்னுடைய தீனின் பக்கம் என் கல்பை தரி  படுத்துவாயாக...என்று அதிகம் துஆ செய்வார்கள் ...நான் கேட்டேன் ...யா ரசூலுல்லாஹ் உங்களை கொண்டு ஈமான் கொண்டோம் ..நீங்கள் கொண்டு வந்ததை கொண்டும் ஈமான் கொண்டோம் ..நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்ட போது ....நிச்சயமாக உள்ளங்கள் அனைத்தும் இறைவனின் இரு விரலுக்கு மத்தியில் இருக்கிறது ..அவன் எண்ணப்படி நாடினாலும் புரட்டுவான் என்று பதில் சொன்னார்கள் ....

ஈமானின் கிளைகள் :

فعَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلّم:" الإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ "، أخرجه مسلم


சஹாபாக்களுடைய ஈமான் எப்படி இருந்தது : 


 وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا * مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا " [الأحزاب: 22، 23]

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்ட பொழுது "(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மை யையே கூறினார்கள்" என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து "ஷஹாதத்" என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்துவிட்டனர். வேறு சிலர் (மரணிக்க வில்லை என்றாலும் அதனை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியி லிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டு விடவேயில்லை.


அல்லாஹ் முஃமின்களுக்கு சொல்லும் அறிவுரை  : 


وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ  (207) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ  (208) فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ  (209) (البقرة)

அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன். நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்தபின்னும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்தவேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.



அல்லாஹ் நமக்கு உறுதியான ஈமானை தந்து அந்த ஈமானுடன் மரணிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக !! ஆமீன் !! 

No comments: