அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 26 October 2017

ஸபர் தரும் வரலாற்று பாடம்




ஒரு ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்களாகும். வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். இது இறைவன் விதித்த நியதி.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.       (9:36) என்கிறது திருமறை.

இஸ்லாமிய மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இஸ்லாமிய மாதங் களில் இரண்டாவது 'ஸபர்' மாதம் ஆகும்.

ஸபர் மாதம் 'ஸபர் முளப்பர்' என்ற அடைமொழி வார்த்தையுடனும் அழைக்கப்படுகிறது. அதன் பொருள்: ஸபர் ஒரு வெற்றி மாதம் என்பதாகும். 'ஸபர்' என்ற அரபி வார்த்தை இரண்டு விதமாக உச்சரிக்கப்படுகிறது.


1. ஸபர் (பிரயாணம்), 2. சொபர் (காலி செய்தல்).

பண்டைய அரபிகள் இந்த மாதத்தில் வீட்டை காலி செய்து, போருக்காகவும், வியாபார நிமித்தமாகவும் பிற இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். எனவே இந்த மாதத்திற்கு பிரயாணம் செய்தல், காலி செய்தல் என்ற இருவேறு பெயர்கள் வரக்காரணமாயிற்று. வரலாற்று நெடுகிலும் ஸபர் மாதத்தில் பிரயாணங்களும், யுத்தங்களும் அதிகம் நடந்திருக்கின்றன.


இந்த மாதத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் :


நபி (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த 14-ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'ஹிஜ்ரத்' எனும் பயணம் நடைபெற்றது. இந்த வெற்றிப்பயணம் நடந்த மாதம் ஸபர் மாதம்.

கி.பி.622 செப்டம்பர் 12, ஸபர் மாதம் பிறை 27-ம் இரவில் நபி (ஸல்) அவர்களும், அவர் தம் ஆருயிர் தோழர் அபூபக்கர் (ரலி) அவர் களும் புனித மக்காவை துறந்து, புனித மதீனாவிற்கு புலம் பெயர்ந்து சென்றார்கள். நபித்தோழர்களுக்கு மக்காவில் கிடைக்காத சுதந்திரம் இந்த வெற்றிப் பயணத்தின் வாயிலாக மதீனாவில் கிடைத்தது.

நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போர்க்களம் 'அப்வா' ஆகும். இந்த நிகழ்வும் கி.பி.623 ஆகஸ்டு மாதம், ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ஸபர் மாதத்தில் தான் நடந்தது.

நபி (ஸல்) அவர்களும், 70 முஹாஜிர்களும் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காக 'அல் அப்வா' என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள்.

ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. இந்த போருக்குச் செல்வதற்குமுன் நபி (ஸல்) அவர்கள் 'ஸஅது பின் உபாதாவை' மதீனாவிற்கு தமக்கு பிரதிநிதியாக விட்டுச் சென்றார்கள். இந்தப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் 15 நாட்கள் மதீனாவிற்கு வெளியில் தங்கியிருந்தார்கள். போர்க்களம் சென்று போர் செய்யாமல் திரும்பி வந்தார்கள்.


'தீ அம்ர்'  :


கி.பி. 624 ஹிஜ்ரி 3-ம் ஆண்டு 'தீ அம்ர்' எனும் தற்காப்பு யுத்தத்திற்காக நபி (ஸல்) அவர்கள் எதிரிகளை எதிர்கொள்ள 450 வீரர்களை தயார் செய்து புறப்பட்டார்கள். புறப்படும்முன் மதீனாவிற்கு தமக்கு பிரதிநிதியாக உஸ்மான் (ரலி) அவர்களை விட்டுச் சென்றார்கள்.

'தீ அம்ர்' எனும் நீர் நிறைந்த இடத்தில் நபியும், நபித்தோழர்களும் ஏறக்குறைய ஸபர் மாதம் முழுவதும் தங்கியிருந்தார்கள். இந்த நிகழ்வும் ஸபர் மாதத்தில் தான் நடந்தது.

மதீனாவில் படை வருவதைக் கேள்விப்பட்ட எதிரிப்படையினர் மலை உச்சியில் ஏறி பதுங்கிக் கொண்டனர். நபி அவர்கள், கிராம அரபிகளுக்கு முஸ்லிம்களின் ஆற்றலை உணரச் செய்துவிட்டு, அவர்களைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டு மதீனாவிற்கு கிளம்பி விட்டார்கள்.


நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் அம்மையாருக்கும் திருமணம் :


கி.பி.626 ஹிஜ்ரி 5-ம் ஆண்டு ஸபர் மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் அம்மையாருக்கும் திருமணம் நடந்தது. மேலும் நபி (ஸல்) அவர் களுக்கும், அவர்களின் முதல் துணைவியும், விதவையுமான அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் மேலும் நபியவர்களின் அருமை மகளார் அன்னை பாத்திமா அலி (ரலி) ஆகியோருக்கும் ஸபர் மாதத்தில் தான் திருமணம் நடைபெற்றது.



கைபர் யுத்தம் :


ஹிஜ்ரி 7-ம் ஆண்டு கைபர் யுத்தம் நடைபெற்றது. மதீனாவிலிருந்து வடக்கே 80 மைல் தொலைவில் உள்ளது 'கைபர்' எனும் ஊர். சதித்திட்டங்கள்
 தீட்டுவதற்கும், முஸ்லிம் களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கும் கைபர் நகரம் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கியதால், நபி (ஸல்) அவர்களின் கவனம் அதன் பக்கம் திரும்பியது. அங்கே போர் மூண்டது. இதுவும் ஸபர் மாதத்தில்தான் நடந்தது. நபிக்கும், நபித்தோழர்களுக்கும் வெற்றியும் கிட்டியது.

இஸ்லாம் ஆகுதல் :


ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ஸபர் மாதம் அபிசீனியா நாட்டில் மன்னர் நஜ்ஜாஷியிடம் இருந்தபோது, அம்ர்பின் ஆஸ், காலித் பின் வலீத், உஸ்மான் பின் வலீத் ஆகியோர் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.


போரில் வெற்றி :



  • ஹிஜ்ரி 9-ம் ஆண்டு ஸபர் மாதம் உக்பா பின் ஆமிர் தலைமையில் 20 நபர்கள் 'கஸ்அம்' எனும் கூட்டத்தின் பக்கம்  அனுப்பப்பட்டார்கள். இந்தப் போரின் ஆரம்பத்தில் தளபதி வீரமரணம் அடைந்தாலும் பின்பு முஸ்லிம் படைக்கு வெற்றி  கிட்டியது.

  • ஹிஜ்ரி 11-ம் ஆண்டு ஸபர் மாதம் 27-ந் தேதி நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) வசம் கொடியைக் கொடுத்து ரோம் வாசிகளுடன் யுத்தம் செய்வதற்கு வீரர்களை அனுப்பி வைத்தார்கள்.

  • மேலும் 'பனி அத்ரா' என்ற போரும் ஸபர் மாதத்தில் தான் நடந்தது. ஸபர் மாதத்தில் நடந்த யுத்தங்களும், திருமணங்களும், பிரயாணங்களும் வெற்றி வாகை சூடி உள்ளன. குறிப்பாக ஸபர் மாதம் நடந்த ஹிஜ்ரத் எனும் சுதந்திரப் பயணமும் இன்று வரை வரலாற்றில் பேசப்படுகிறது.

ஸபர் மாதத்தை அபசகுனமாக பார்ப்பதை விட்டுவிட்டு அதை வெற்றி மாதமாக கருதி, அதில் சாதனைகளை படைக்க களத்தில் குதிப்போம். சாதனைகளை படைப்போம்!


ஸபர் பீடை மாதம் அல்ல:-


رواه البخاري  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لا عَدْوَى وَلا طِيَرَةَ وَلا هَامَةَ وَلا صَفَرَ ".

''தொற்று நோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கூடாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கூடாது.''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


இஸ்லாத்தில் இதுபோன்ற எந்த ஒரு மூடநமிக்கைகளும் இல்லை என்பதை நாயகத் திருமேனி ரசூலே ஸல் அவர்கள் மக்களிடம் எடுத்துரைத்து அந்த ஜாஹிலியா காலத்து கொள்கைகளை விட்டு மக்களை காப்பற்றினார்கள். மேலும் ஸபர் , ஷவ்வால் போன்ற மாதங்களை வெறுப்போடு பார்க்கும் குணத்தை களைய பெருமானார் எடுத்த நடவடிக்கைகள் :

ولا صفر على الصحيح أن أهل الجاهلية كانوا يتشاءمون بشهر صفر ويقولون: أنه شهر مشؤوم؛ فأبطل النبي -صلى الله عليه وسلم- ذلك، وبين أنه لا تأثير له وإنما هو كسائر الأوقات التي جعلها الله فرصة للأعمال النافعة، وهذا الاعتقاد الجاهلي لا يزال في بعض الناس إلى اليوم؛ فمنهم من يتشاءم بصفر، ومنهم من يتشاءم ببعض الأيام كيوم الأربعاء أو يوم السبت أو غيره من الأيام، فلا يتزوجون في هذه الأيام. يعتقدون أو يظنون أن الزواج فيها لا يوفق، كما كان أهل الجاهلية يتشاءمون بشهر شوال فلا يتزوجون فيه، وقد أبطل النبي -صلى الله عليه وسلم- هذا الاعتقاد؛ فتزوج عائشة -رضي الله عنها- في شوال، وتزوج أم سلمة -رضي الله عنها- في شوال.


பெருமானார் ஸல் அவர்கள் புதிதாக இஸ்லாத்திற்கு நுழைந்தவர்களுக்கு மத்தியில் எழுந்த ஒரு சில மூடநம்பிக்கை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தது பற்றி:-


حدثنا سعيد بن عبد الرحمن المخزومي حدثنا سفيان عن الزهري عن سنان بن أبي سنان عن أبي واقد الليثي أن رسول الله صلى الله عليه وسلم لما خرج إلى حنين مر بشجرة للمشركين يقال لها ذات أنواط يعلقون عليها أسلحتهم فقالوا يا رسول الله اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط فقال النبي صلى الله عليه وسلم سبحان الله هذا كما قال قوم موسى اجعل لنا إلها كما لهم آلهة والذي نفسي بيده لتركبن سنة من كان قبلكم قال أبو عيسى هذا حديث حسن صحيح وأبو واقد الليثي اسمه الحارث بن عوف وفي الباب عن أبي سعيد وأبي هريرة

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.


அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது

ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி)
நூல்:திர்மிதி



பெருமானார் ஸல் அவர்கள் ஒரு أعرابي -யின் மூட நபிக்கையை களைத்து அங்கே அல்லாஹ்வின் நம்பிக்கையை விதைத்தார்கள்:-


حدثنا عبد العزيز بن عبد
الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أبو سلمة بن عبد الرحمن وغيره أن أبا هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال لا عدوى ولا صفر ولا هامة فقال أعرابي يا رسول الله فما بال إبلي تكون في الرمل كأنها الظباء فيأتي البعير الأجرب فيدخل بينها فيجربها فقال فمن أعدى الأول


தொற்றுநோய் கிடையாது,ஸபர் பீடையும் கிடையாது,ஆந்தை சகுனமும் இல்லை- என்று சொன்னார்கள். அப்போது, கிராமவாசி ஒருவர் ‘அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவைகளின் நிலை என்ன? (தொற்று நோய் இல்லையா?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படி என்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயை) தொற்றச் செய்ததுயார்? என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

மக்கள் அவர்களாகவே ஒரு சில விஷயங்களை தன் மீது விதித்து கொண்டு செய்வதை பெருமானார் ஸல் அவர்கள் தடுத்துள்ளார்கள்:


عن أبي هريرة أن النبي  أدرك شيخا يمشي بين ابنيه يتوكأ عليهما، فقال النبي  ما شأن هذا قال ابناه يا رسول الله كان عليه نذر، فقال النبي  اركب أيها الشيخ فإن الله غني عنك وعن نذرك واللفظ لقتيبة وابن حجر

صحيح مسلم

ஷாபிஈ ரஹ் அவர்களின் ஒரு கவிதை:-

نعيب زماننا والعيب فينا                   وما لزماننا عيب سوانا

குறையை நம்மிடம் வைத்துக்கொண்டு நாம் காலத்தை பழிகூறிக்கொண்டிருக்கிறோம். நம் காலத்திற்கு நம்மை தவிற வேறு குறை இல்லை

என்ற அவர்களின் கவிதை மூட நம்பிக்கையை குழி தோண்டி புதைக்கும் வண்ணம் உள்ளது



காலத்தை ஒரு போதும் திட்டுவது கூடாது மேலும் அது அல்லாஹ்வை குறை கூறுவதாகும்:- அது சம்மந்தமாக வருகிற ஹதீஸ்கள்:-


عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : ( قال الله عز وجل : يؤذيني ابن آدم يسب الدهر ، وأنا الدهر بيدي الأمر ، أقلب الليل والنهار ) رواه البخاري ومسلم

وجاء الحديث بألفاظ مختلفة منها رواية مسلم : ( قال الله عز وجل : يؤذيني ابن آدم يقول : يا خيبة الدهر ، فلا يقولن أحدكم : يا خيبة الدهر ، فإني أنا الدهر أقلب ليله ونهاره فإذا شئت قبضتهما ) ،

ومنها رواية للإمام أحمد : ( لا تسبوا الدهر فإن الله عز وجل قال : أنا الدهر الأيام والليالي لي أجددها وأبليها وآتي بملوك بعد ملوك )


இந்த ஹதீஸில் அல்லாஹ்  يؤذيني என்று என்னை வேதனை படுத்தகிறார்கள் என்று சொலவ்தின் விளக்கமாகிறது:-

يؤذيني : أي ينسب إليَّ ما لا يليق بي .

என்பதாகும்.

எந்த ஒரு மேல் சொன்ன முடனம்பிக்கையான விஷயங்களை விட்டு தவிர்ந்து அல்லாஹ்வை நம்பி வாழ்வோருக்கு கிடைக்கும் பலன்:-


دَّثَنَا ابْنُ عَبَّاسٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " عُرِضَتْ عَلَيَّ الأُمَمُ، فَجَعَلَ النَّبِيُّ وَالنَّبِيَّانِ يَمُرُّونَ مَعَهُمُ الرَّهْطُ، وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ، حَتَّى رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ، قُلْتُ: مَا هَذَا؟ أُمَّتِي هَذِهِ؟ قِيلَ: بَلْ هَذَا مُوسَى وَقَوْمُهُ، قِيلَ: انْظُرْ إِلَى الأُفُقِ، فَإِذَا سَوَادٌ يَمْلَأُ الأُفُقَ، ثُمَّ قِيلَ لِي: انْظُرْ هَا هُنَا وَهَا هُنَا فِي آفَاقِ السَّمَاءِ، فَإِذَا سَوَادٌ قَدْ مَلَأَ الأُفُقَ، قِيلَ: هَذِهِ أُمَّتُكَ، وَيَدْخُلُ الجَنَّةَ مِنْ هَؤُلاَءِ سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ " ثُمَّ دَخَلَ وَلَمْ يُبَيِّنْ لَهُمْ، فَأَفَاضَ القَوْمُ، وَقَالُوا: نَحْنُ الَّذِينَ آمَنَّا بِاللَّهِ وَاتَّبَعْنَا رَسُولَهُ، فَنَحْنُ هُمْ، أَوْ أَوْلاَدُنَا الَّذِينَ وُلِدُوا فِي الإِسْلاَمِ، فَإِنَّا وُلِدْنَا فِي الجَاهِلِيَّةِ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ، فَقَالَ: «هُمُ الَّذِينَ لاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَتَطَيَّرُونَ، وَلاَ يَكْتَوُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ» فَقَالَ عُكَاشَةُ بْنُ مِحْصَنٍ: أَمِنْهُمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ» فَقَامَ آخَرُ فَقَالَ: أَمِنْهُمْ أَنَا؟ قَالَ: «سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ»

இந்த ஹதீஸின் இறுதியில் பெருமானார் கூறும்போது :- என் உம்மத்திலிருந்து 70000

இந்த ஹதீஸின் இறுதியில் பெருமானார் கூறும்போது :- என் உம்மத்திலிருந்து 70000 நபர்கள் கேள்வி கணக்கு இன்றி சொர்க்கம் நுழைவார்கள் என்று சொல்லி அவர்கள் யார் என்று விவரிக்கும் போது "அவர்கள் மந்திரிக்காதவர்கள்; சகுனம் பார்க்காதவர்கள்; இறைவனின்மீது முழுநம்பிக்கை வைத்து செயலாற்றுபவர்கள்۔ " என்று சொன்னார்கள்


அப்போது உக்காஷா ரலி அவர்கள் அதில் நான் இருக்கின்றேனா  என்று  வினவியபோது  பெருமானார்  அவர்கள்   ஆம் என்று  சொன்னார்கள் .


வல்ல ரஹ்மான் நம்மை மூட நம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி அவன் மீது முழுமையான ஈமான் வைத்து, உண்மையான ஈமானுடன் மரணிக்கும் பாக்கியத்தை அனைவர்க்கும் தந்தருள்வானாக !! ஆமீன் !


No comments: