அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 9 November 2017

நெருங்கி வரும் இறுதி நாள்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

காலங்கள், சூழ்நிலைகள் அனைத்தும் தலைகீழாக மாறி வருகிறது !  பெரும் பாவங்களையெல்லாம் சிறந்த நன்மையான காரியங்களை போன்று பொது தளங்களில் அரங்கேறிவருகிறது.  நன்மையான காரியங்களை செய்யும் மனிதனை ஆச்சர்யத்துடன் பார்க்கும் காலமாகிவிட்டது! 

இவை அனைத்துமே நமக்கு ஒன்றை தான் திரும்ப திரும்ப நியாபகப்படுத்துகிறது ! நம்மை நெருங்கி வரும் கியாமத் நாள். எல்லா சூழ்நிலைகளும், செயல்பாடுகளும், இதை தான் பறைசாற்றுகின்றன. !! 

நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறுதிநாளின் அறிகுறிகளாக பலவற்றை நமக்கு காண்பித்து கொடுத்திருக்கிறார்கள் ! 


மக்களின் குணங்களும் கலாச்சாரங்களும் மாறிவருவது மட்டுமின்றி, உலகின் அமைப்பும் மாறிவருகிறது. அனைத்தையும் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் جوامع الكلم அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் அழகான ஓரிரு வார்த்தைகளில் அந்த விளக்கத்தையும் நமக்கு தந்திருக்கிறார்கள்! 


 عمر رضي الله عنه قال "بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني على الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إله سبيلا قال صدقت قال فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك

ஹதீஸே ஜிப்ரஈல்  என்று சொல்லப்படும் இந்த ஹதீஸில் மார்க்கத்திற்கும் நம்முடைய ஈமானிற்கும் பலத்தை தரும் செய்திகளை கேள்விகள் மூலம் கேட்டு நமக்கு கற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல், கியாமத் நாளின் முக்கிய சில அடையாளங்களை நமக்கு சொல்லி காண்பித்திருக்கின்றார்கள் ! 


 قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها 

இதில் கியாமத் நாளின் அடையாளமாக, أن تلد الأمة ربتها என்று கூறியதன் நிகழ்வை நாம் இப்போது கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம் ! 

மகளின் தயவில் தாய் இருப்பது கியாமத்தின் அடையத்தில் ஒன்று மேலும் இப்போது அதிகம் நடக்ககூடியஒன்றும் கூட:-


"
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பது" அதாவது தாய் மகளின் தயவில் வாழும் அவல நிலை ஏற்படுவது. 


இதன் தொரடர்ச்சியாக  :

وأن ترى الحفاة العراة العالة رعاء الشاة يتطاولون في البنيان

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது,
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள். 


தற்காலத்திய உயர்ந்த கட்டிடங்கள் :

.1. புர்ஜ் கலீபா - துபாய்,ஐக்கிய அரபு அமீரகம்  - 823 மீட்டர் 
2. ஷாங்காய் டவர் - ஷாங்காய், சீனா - 632 மீட்டர் 
3. மக்கா மணிக்கூண்டு கட்டிடம் - மக்கா, சவூதி அரேபிய - 601 மீட்டர் 

உலகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்களில் பாலைவனத்திலும், ஒட்டகம் மேய்த்தவர்களும். முழு ஆடை உடுத்தவும் பொருளாதாரமற்ற நிலையில் இருந்தவர்கள் தான் அந்த உலகின் உயர்ந்த கட்டிடங்களில் வாழ்கிறார்கள்!!
உலகின் உயர்ந்த கட்டிடங்களின் அதிபதிகள் அவர்களாகவே இருக்கின்றார்கள். 

தற்போதையே "உலகின் உயர்ந்த கட்டிடம் ''புர்ஜ் கலீபா'' :

828 மீட்டரும், 2717 அடியும் உயரமுடைய இந்த கட்டிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் உலக பிரபல்யமிக்கதோர் நகரமான '''துபாய்' இல் அமைந்துள்ளது. இது 163 அடுக்கு மாடி கட்டிடமாகும்.  பாலைவனமாக இருந்த இடங்களில் தற்போது  எங்கு நோக்கினாலும் உயர்ந்த கட்டிடங்கள் கண்களுக்கு தெரிகின்றது. அந்த அளவுக்கு உலகின் பிரபல்யம் வாய்ந்த ஓர் சுற்றுலா தலமாக இந்த கட்டிடம் உலகத்தால் அறியப்படுகிறது. 


இது உலகின் அதிசயங்களில் ஒன்று என்று சொல்வதை விட, இறுதிநாளின் ஓர் மிகப்பெரும் அடையாளம் என்று சொல்லலாம் !


அப்படி உயரமான கட்டிடங்கள் அதிகரித்ததை போன்று, பக்கத்துக்கு பக்கம் திரும்பும் திசைகளில் எல்லாம், கடை தெருக்கள் தான் கண்களுக்கு தெரிகிறது. 

மேலும் பெருமானார் சொன்னார்கள் - அதன் அடையாளங்களில் ஒன்று கடைவீதிகள் நெருக்கமாக இருப்பதாகவும்:- 


عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلّم قال: «لا تقوم الساعة حتى تظهر الفتن، ويكثر الكذب، ويتقارب الأسواق، ويتقارب الزمان، ويكثر الهرج، قيل: وما الهرج؟ قال: القتل».

விபச்சாரம்  அதிகமாகும் , கல்வி குறையும் :


عن أنسٍ قال: لأُحَدِّثنَّكمْ حديثاً لا يُحدِّثُكمْ أحَدٌ بَعدِي، سَمِعْتُ رسولَ اللّهِ صلى الله عليه وسلّم يقول: «مِنْ أشْراطِ الساعةِ أَنْ يَقلَّ العلمُ ويَظْهَرَ الْجَهْلُ، ويَظهرَ الزِّنا،

50 பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை குறையும் :


أَخْبَرَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، أَخْبَرَنَا أَنَسٌ، قَالَ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لاَ يُحَدِّثُكُمُوهُ أَحَدٌ بَعْدِي، سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ تَقُومُ السَّاعَةُ ـ وَإِمَّا قَالَ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ ـ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَظْهَرَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ، حَتَّى يَكُونَ لِلْخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ ‏

கொலை செய்வது அதிகமாகும் :


لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَيَكْثُرَ الْهَرْجُ "، قِيلَ: وَمَا الْهَرْجُ؟ قَالَ: " الْقَتْلُ "

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் (புகாரி )


உலகளவில் ஆய்வு :

ஒரு ஆண்டில் ஒரு உயிரினம் எதனை மனிதர்களை கொள்கிறது என்ற ஆய்வு நடத்தப்பட்டது .

அதன் ஆய்வு முடிவுகள் உலகளவில் ஆய்வு சில நாட்களுக்கு முன் மனிதர்கள் யார் மூலம் அதிகம் கொள்ளப்படுகிறார்கள் என்ற ஆய்வு நடத்தப்பட்டது, அந்த ஆய்வறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது 

அதன் ஆய்வு முடிவுகள் :

1. சுறா   - 10 மனிதர்கள் 
2.ஓநாய் - 10 மனிதர்கள் 
3. சிங்கம் - 100 மனிதர்கள் 
4. யானை - 100 மனிதர்கள் 
5. நீர்யானை - 500 மனிதர்கள் 
6. முதலை - 1000 மனிதர்கள் 
7. வண்டு மற்றும் விஷ பூச்சிகள் - 10000 பேர்கள் 
8. ஈ வகைகள் - 10000 மனிதர்கள் 
9. நாய் - 25000 மனிதர்கள் 
10 பாம்புகள் - 50000 மனிதர்கள் 

11.  மனிதர்கள் - 4, 75000 மனிதர்கள் 

12. கொசு - 7, 25 000 மனிதர்கள் 

கொசுவின் மூலமாக மரணிக்கும் மனிதர்களுக்கு அடுத்து மனிதர்கள் மனிதர்களையே கொலை செய்கின்றனர். 


 أبي موسى الأشعري رضي الله عنه قال : ( كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُنَا أَنَّ بَيْنَ يَدَيْ السَّاعَةِ الْهَرْجَ . قِيلَ : وَمَا الْهَرْجُ ؟ قَال : الْكَذِبُ وَالْقَتْلُ . قَالُوا : أَكْثَرَ مِمَّا نَقْتُلُ الْآنَ ؟ قَالَ : إِنَّهُ لَيْسَ بِقَتْلِكُمْ الْكُفَّارَ ، وَلَكِنَّهُ قَتْلُ بَعْضِكُمْ بَعْضًا ، حَتَّى يَقْتُلَ الرَّجُلُ جَارَهُ ، وَيَقْتُلَ أَخَاهُ ، وَيَقْتُلَ عَمَّهُ ، وَيَقْتُلَ ابْنَ عَمِّهِ . قَالُوا : سُبْحَانَ اللَّهِ ! وَمَعَنَا عُقُولُنَا ؟ قالَ : لَا ، إِلَّا أَنَّهُ يَنْزِعُ عُقُولَ أَهْلِ ذَاكَ الزَّمَانِ ، حَتَّى يَحْسَبَ أَحَدُكُمْ أَنَّهُ عَلَى شَيْءٍ وَلَيْسَ عَلَى شَيْءٍ )

رواه أحمد في " المسند " 

المصدر: في آخر الزمان ... يكثر القتل والهرج والمرج 
شبكه اي ميس يو لفرز

இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட கொலை என்பதற்கான விளக்கம் : 


يقول القرطبي رحمه الله : " بيَّنَ هذا الحديث أن القتال إذا كان على جهل من طلب دنيا ، أو اتباع هوى ، فهو الذي أريد بقوله : ( القاتل والمقتول في النار ) " انتهى." فتح الباري "


இறுதி நாளுக்கு சொல்லப்பட்ட முக்கியமான ஆறு அடையாளங்கள் :

حدّثنا الحُميديُّ حدَّثَنا الوليدُ بن مسلمٍ حدَّثنا عبدُ الله بن العَلاءِ بن زَبرٍ قال: سمعتُ بسرَ بن عبيدِ اللهِ أنه سمعَ أبا إدريسَ قال: سمعت عَوف بنَ مالكٍ قال: «أتيتُ النبيَّ صلى الله عليه وسلّم في غزوةِ تَبوك ـ وهوَ في قُبَّةٍ من أدم ـ فقال: اعدُدْ ستاً بين يدَي الساعة: مَوْتي ، ثمَّ فتحُ بيتِ المَقْدِس ، ثمَّ مُوتانٌ يأخذُ فيكم كقعاصِ الغنم، ثم استفاضة المال حتى يعطى الرجل مائة دينارٍ فيظل ساخطاً، ثمَّ فتنةٌ لا يبقى بيتٌ منَ العربِ إلا دخلَتْه، ثمَّ هدنةٌ تكون بينكم وبينَ بَني الأصفرِ فيَغدِرون، فيأتونَكم تحت ثمانينَ غايةً، تحت كلِّ غايةٍ اثنا عشر ألفاً».

 யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள் : 

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள். (புகாரி)

இப்படி எல்லா வித சிறிய அடையாளங்களும் நம்முடைய இந்த காலத்தில் வந்து விட்டதை நாம் கண்கூடாகவே காண்கின்றோம்!! எனவே இனி பெரிய அடையாளங்களை எதிர்பார்க்க வேண்டியது தான். மிகவும் நெருங்கிவிட்டோம் !! 

கியாமத் நாளின் எல்லா விதமான அமளிதுமளி களில் இருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக !! 

ஆமீன் !!


No comments: