அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 3 May 2018

வெட்கம் வேண்டும்








Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

எந்த சூழ்நிலையில் இருப்பினும், எந்த இடத்தில் இருப்பினும் வெட்கத்துடன் இருக்க வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்ததும், அன்னாரின் தோழர்கள் பின்னப்பற்றி நடந்ததும் அதனை தான்.

இன்று தவறுகள் பெருகி வர காரணம் வெட்ட்கமின்மையே எனலாம். எல்லாவகையிலும், ஆண்களாக இருப்பினும் பெண்களாக இருப்பினும் தங்களுடைய வாழ்க்கையின் நகர்வுகளை வெட்கத்துடன் தொடரும்போது தான் வாழ்க்கை வசந்தம் ஆகிறது. 


வெட்கம் என்பது என்ன ? 


வெட்கம் என்பது, தன்னுடைய உடல் உறுப்புகளை மட்டும் திரையிட்டு மறைத்து வைப்பது தான் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அது மட்டுமே வெட்கம் என்பதல்ல. அது வெட்கத்தில் ஒரு பகுதி. 


 عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «الـحَيَاءُ خَيْرٌ كُلُّهُ» قَالَ: أَوْ قَالَ: «الـحَيَاءُ كُلُّهُ خَيْرٌ» 

என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள். 

அதாவது, வெட்கம் தான் அணைத்து நன்மைகளின் அடிப்படை. அதனை விட்டுவிட்டால் எல்லா நன்மைகளும் போய்விடும். 

عَنْ قُرَّةَ - ابنِ إِيَاسٍ رَضِيَ اللَّهُ عَنهُ - قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم، فَذُكِرَ عِنْدَهُ الحَيَاءُ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، الحَيَاءُ مِنَ الدِّينِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «بَل هُوَ الدِّينُ كُلُّهُ»  


மற்றுமொரு இடத்தில் இப்படி சொன்னார்கள் :  "மார்க்கத்தின் முழுமை அது தான்" என்று. 

அந்த வெட்கம் இல்லாமல் போவது நமது ஈமானை நீக்கிவிடுகிறது. 


வெட்கம் என்பது ஈமான்  :


வெட்கம் என்பது மக்களுக்கு மத்தியில் இருக்கும்பொழுது மட்டும் இருப்பதல்ல. தான் தனிமையில் இருக்கும்போதும் தன்னுடைய இறைவன் உடன் இருக்கிறான் என்ற எண்ணத்துடன் அந்த நினைவை மனதில் கொண்டு அந்த தனிமையிலும் வெட்கத்துடன் இருக்க வேண்டும். 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «الـحَيَاءُ وَالإِيمَانُ قُرِنَا جَمِيعًا، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الآخَرُ» 

அந்த அளவுக்கு இரண்டும் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இவற்றில் ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று இருக்காது. 


وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنهُ: عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم قَالَ: «الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالـحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ» .

வெட்கம் என்பது ஈமானின் ஒரு பகுதியும் கூட என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


وَعَنْ عَبْدِ اللَّهِ بنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ، وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الحَيَاءِ؛ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «دَعْهُ، فَإِنَّ الـحَيَاءَ مِنَ الإِيمَانِ»

வெட்கத்தை பற்றி அதனை இல்லாதவருக்கு சொல்லி கொடுக்க வேண்டும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அதனை வலியுறுத்தினார்கள். 



குர்ஆனில்  வெட்கத்தை பற்றி : 

அருள்மறையில் அல்லாஹ் கூறுகின்றான் : 

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ ؕ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا‏

நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்களுடைய நபி விருந்துக்காக அழைத்திருந்தபோதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள். அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப் பட்டால்தான் உள்ளே செல்லவும். தவிர, நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளிப்பட்டு விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமானதன்று. அன்றி, அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.


இந்த அளவுக்கு பெண்களின் வெட்கத்தை அல்லாஹ் தனது அருள்மறையில் வலியுறுத்துகிறான். ஆனால் தற்போதய நிலை என்னவென்பதை நாம் கண்முன்னே காண்கின்றோம்!!
  

அல்லாஹ் நம் வீட்டுப் பெண்களை பாதுகாத்தருள வேண்டும் ! 


\ஏனென்றால் வெட்கம் என்பது ஒவ்வொரு தனி நபருக்கும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. நம்முடைய பிள்ளைகளுக்கும் மனைவி மக்களுக்கும் நாம் வெட்கத்தை பற்றி எடுத்து கூறி வேண்ட்கத்துடன் வாழ கற்றுக்கொதுத்தோம் என்றால் நிச்சயம் அவர்களை நாம் தவறுகளில் இருந்து பாதுகாத்து விடலாம். 


إن رجلاً قال:

((يا رسول الله أوصني، فقال عليه الصلاة والسلام: أوصيك أن تستحيي من الله عز وجل كما تستحيي رجلاً من صالح قومك))

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடமிருந்து உபதேசம் பெற வந்த ஒரு நபருக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் கூறிய வார்த்தையே நமக்கு வெட்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

வெட்கமும் தைரியமும் : 


சில இடங்களில் வெட்கத்துடன் இருக்கும் சிலர் தைரியமில்லாதவன் என்று நினைப்பதுண்டு. ஆனால் வெட்கம் என்பதே தைரியம் இருந்தால் தான் வரும். எனவே வெட்கத்துடன் இருப்பதே தைரியம் உடையவர என்பதன் சான்றாகும். 

மர்யம் அலைஹிஸலாம் அவர்கள் உலக பெண்களின் முன்னோடியாகவும், குர்ஆனால் அல்லாஹ் கூறும் சிறந்த  முன்மாதிரி பெண்மணியாகவும் திகழ்பவர்கள். அவர்கள் தன்னுடைய இறைவனை வணங்கி கொண்டிருந்த போது தான் ஜிப்ரஈல் அலைஹிஸலம் அவர்கள் வந்து ஸலாம் உரைக்கின்றார்கள். அந்த நேரத்தில் தனது வெட்கத்தை பாதுகாக்க மிக்க தைரியத்துடன் செய்த அவர்களின் உரையாடலை அல்லாஹ் குர்னில் கூறுவது நம் மக்களுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. 

 فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا  فَاَرْسَلْنَاۤ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا‏   قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا‏   ‌قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ‌ ۖ  لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.  “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

அல்லாஹு தஆலா நம்மையும் நம்முடைய குடும்பத்தினரையும், இன்னும் அணைத்து முஃமின்களையம் வெட்கத்துடன் வாழ்ந்து, ஈமானுடன் மரணிக்கும் பாக்யதையை நமக்கு தந்தருள்வானாக !! ஆமீன் !!

No comments: