அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Wednesday 9 May 2018

இனிய ரமலானை வரவேற்போம் !




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

சிறப்பு மிக்க மாதமான ரமலான் நம்மக்கு மிக நெருக்கத்தில் இருக்கின்றது. சென்ற வருடம் இந்த மாதத்தை அடைந்த பலரும் இந்த வருடம் மண்ணறையை அடைந்திருக்கலாம். இன்று இருக்கும் பலரும் கூட நாளை மரணிக்கலாம். அல்லாஹ் நமக்கு அந்த சிறந்த பாக்க்கியமிக்க மாதத்தை அடைந்து அதற்குரிய கண்ணியத்தை செலுத்தி, அதனுடைய முழு பலன்களையும் பெறக்கூடிய பாக்கியவான்களாக நம்மை ஆகியருள வேண்டும்.

பிற  மாதங்களை போல் இந்த ரமலான் மாதம் சாதாரணமானதல்ல. மிகவும் மதிப்பிற்குரிய சிறப்பிற்குரிய மாதம் என்பது, அல்லாஹ் தன் அருள்மறையில் இந்த மாதத்தை அறிமுகப்படுத்துவதிலிருந்தே தெரிந்துவிடும். 

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏ 

ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!


ரமலான் மாதத்தை ஏன் வரவேற்க வேண்டும் ?

ரமலான் மாதம் நமக்காக கொடுக்கப்பட்ட ஓர் அருட்கொடை எனலாம்.  எத்தனையோ உயர்ந்த சிறப்புகளுடைய இந்த மாதத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்துள்ளான். அது மட்டுமின்றி லைலத்துல் கத்ர் என்னும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவும் இந்த மாதத்தில் தான் நமக்கு கிடைக்கின்றது. 

மற்ற பிற நாட்களில் நாம் செய்யும் வணக்கங்களுக்கு இறைவன் கொடுக்கும் நன்மைகளை விட இந்த மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கும், வணக்கங்களுக்கும் அதிகமான நன்மைகளை தருகின்றான். 

இவை அனைத்தையும் விட, கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மற்றும் அவர்களை பின்பற்றி வாழ்ந்த ஸஹாபாக்கள் எல்லாம், ரமலான் மாதம் வருவதற்கு வெகு முன்னரே ரமலான் மாதத்தை வரவேற்பதற்காக தயாராகி விடுவார்கள். 


ரமலான் மாதம் வருவதற்கு முன்பே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அதிகமான நோன்புகளை நோற்க ஆரம்பித்து விடுவார்கள். 

عن عائشة رضي الله عنها: (كان رسول الله -صلى اللهُ عليه وسلم- يصوم حتّى نقول: لا يفطر، ويفطر حتّى نقول: لا يصوم، وما رأيت رسول الله -صلى الله عليه وسلم- استكمل صيام شهر قطّ إلّا رمضان، وما رأيته في شهرٍ أكثر منه صياماً في شعبان)



இன்னும் பல சிறப்புகளை இந்த சிறப்பு மிக்க மாதம் தன்னுள் கொண்டுள்ளது. அதை நாம் எவ்வாறு பயன்படுத்தி கொள்கின்றோம் என்பதில் தான் நமக்கு பலன் இருக்கிறது. 

ரமலான் மாதத்தில் நாயகம் ஸல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் :


ورد عن الرّسول عليه السّلام في الحديث الشريف: (كان رسول اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ أجودَ الناسِ، وكان أجودَ ما يكون في رمضانَ حين يلقاه جبريلُ، وكان يلقاهُ في كل ليلةٍ من رمضانَ فيدارسُه القرآنَ، فلرسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ أجودُ بالخيرِ من الريحِ المرسلةِ)


முதன் முதலில் ரமலான் மாதம் நோன்பு வைத்தவர்கள் : 


நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் முதன் முதலில் தன்னுடைய ஈமான் கொண்ட உம்மத்தினரை அல்லாஹ் அந்த மழை வெள்ளத்திலிருந்து பாதுகாத்ததற்காக, நன்றி செலுத்தும் விதமாக நோன்பு நோற்றார்கள். 


أول من صام رمضان نوح عليه السلام لما خرج من السفينة 
 وقد تقدم قول مجاهد : كتب الله رمضان على كل أمة ومعلوم أنه كان قبل نوح أمم ، والله أعلم 


ரமலான் மாதம் வந்துவிட்டால் :

மற்ற பிற மாதங்களை விட்டும் மாறுபட்டு இந்த ரமலான் மாதத்தில் பல மாற்றங்களை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.

அவையெல்லாம் நம்மால் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு வருடமும் ரமலானை அடையும்பொழுதும், நல்ல பல மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டும். அதிகமான நல்லமல்கள் செய்ய வேண்டும், இறைவனின் பொருத்தத்தை அடைய வேண்டும் என்ற பல உறுதிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உன்னை நீ அறிந்துகொள்ள : 

இந்த மாதத்தில் அல்லாஹ் ஷைத்தான்களுக்கு விலங்கிட்டு விடுகின்றான். அதன் மூலம் நம்முடைய உண்மையான குணம் என்ன என்பது மிக தெளிவாக நம்மால் அறிந்து கொள்ள முடியும். 

இன்னும் நரகத்தின் வாசல்கள் மூடப்படும். சுவர்க்கத்தின் வாயில்கள் திறந்து வைக்கப்படும். 

في شهر رمضان تُفتح أبواب السماء وأبواب الجنة، وتغلق أبواب جهنم، وتُسَلسل وتُصَفَّد الشياطين. يقول الرّسول عليه السّلام في الحديث الشريف: (إذا دخل شهر رمضان فُتِّحَت أبواب السماء، وغُلِّقَت أبواب جهنم، وسُلْسلت الشياطين).

ரமலானில் என்னென்ன செய்ய வேண்டும் ?  

எப்படி அல்லாஹு தஆலா இந்த சிறப்பான மாதத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்து கின்றானோ, அதே போல நம்மிலும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பல மாறுதல்கள் நம்மில் நிகழ வேண்டும். 

அந்த மாற்றங்கள்  ரமலான் மாதம் முடிந்த பின்பும் நம்மில் தொடர வேண்டும்.  அதுவே அல்லாஹ் நம்முடைய அமல்களை ஏற்றுக்கொண்டான், நம்மை கொண்டு நம்முடைய இறைவன் பொருந்திக்கொண்டான் என்பதற்காக சான்றாகும். 


பழக்க வழக்கங்கள் நல்லதாக மாற வேண்டும் :


ففي رمضان تكمن فرصة تغيير العادات السيئة استبدالها بأخرى جيّدة، كالسّهر الطويل ليلاً والنوم كثيراً في النهار، ففي رمضان يسهل تحديد جدول يومي والالتزام به في هذا الشهر وما بعده ليصبح نظاماً واضحاً

பொறுமையை கையாள வேண்டும் : 

فمن يصبر على الجوع والعطش يستطيع الصبر على الأمور الأخرى التي تحتاج وقت انتظار، والصبر خصلة مهمة يجب على الجميع أن يتحلّى بها.

ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும் : 


شهوة الجسد، واللسان، والعين، والأذن، وباقي الجوارح، فيمتنع عن السّب والشّتم وسوء الخلق كامتناعه عن الطعام والشراب، والحاجة الجسدية، وغضّ البصر، وكفّ الأذى، وتجنّب الإصغاء إلى المُحرّمات.

பொறாமை குணம் நீங்க வேண்டும் : 


فيُنقّي المسلم نفسه من الأحقاد والخصومات السابقة طمعاً بالأجر والمغفرة، فيسامح من أخطأ بحقّه، ويعتذر ممّن تسبّب لهم بالأذى، فتصفو النفوس، وتزول الخطايا، وتسود المحبّة بين المجتمع في حال الاستمرار على هذا الأمر حتى بعد انتهاء شهر رمضان.

மார்க்க மற்றும் இறை ஞானம் கற்கும் ஆர்வம் வர வேண்டும் : 


أول العلم القرآن الكريم، وبمدارسة القرآن تُفتح أبواب العلم كاملة، من لغويّة، وشرعية، وعلميّة، وعقليّة، فيقبل المسلم على التّعلم والاستزادة في العلم ليفهم القرآن الكريم، ويتوسّع معها في مختلف مجالات العلوم، ولا يقتصر هذا البحث على القرآن فقط، بل يمتدّ ليشمل العلوم كافّة باختلاف مواضيعها، ممّا يخلق جيلاً قارئاً واعياً لمتطلّبات عصره وحاجته.

இது போன்று சிறப்புமிக்க இந்த மாதத்தை அடையும் முன்னரே, நன்மைகளை செய்யும், நல்லகுணங்களை உடையவராக ஆகும் வியூகங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான செயல்படுகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இறைவனிடம் நெருங்கும் செயல்களை அறிந்து அதன் படி செயல்பட வேண்டும்.

இது போன்று பல நல்ல மாற்றங்களுடன் இந்த இனிய ரமலானை வரவேற்று, அதனுடைய முழு பலனையும் அடைந்து இறை பொருத்தத்தை பெற்றவர்களாக அல்லாஹ் நம்மை அக்கையருள்புரிவானாக !! ஆமீன் ! 

No comments: