அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 19 March 2020

தடுமாற்றத்தை தவிர்வோம்





கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தாக்குதலை தொடுத்துள்ளது. இதுவரை இந்தியாவில் 114 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மூவர் பலியாகியுள்ளனர். 13 பேர் குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். என்றாலும் அண்டை மாநிலங்களான கேரளாவிலும், கர்நாடகாவிலும் கொரோனா தனது பிடியை இறுக்கியுள்ளது.
நமது நாட்டில் மிகப்பெரும் இரு சர்ச்சைகள் நிறைந்த சூழ்நிலையாக காணப்படுகிறது. ஒன்று குடியுரிமை திருத்த சட்டம் மற்றொன்று கொரோனா வைரஸ்.இந்த இரண்டிலும் நிறைய சூழ்ச்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் என்று சொல்லி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்தை கலைக்க வேண்டும் என்று சதி செய்துள்ளார்கள் என்றும். இன்னும் இந்தக் கொரோனா வைரஸ் அதுவாக உருவானது இல்லை இது உருவாக்கப்பட்டது என்றும் சிலர் சொல்லுகிறார்கள் அதாவது
உயிரியல் போர்முறை, உயிரிப்போர்அல்லது கிருமி போர்முறை (Biological warfare) என்ற போர்முறையானது உயிரியல் கொல்லிகள் அல்லது தொற்றும் காரணிகளான பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகளைப்பயன்படுத்தி மனிதர்களையோ,விலங்குகளையோஅல்லது தாவரங்களையோ கொல்லும் நோக்கதோடு அல்லது செயல்படாதவாறு செய்யும்படி தாக்குவது ஆகும். உயிரியல் ஆயுதங்கள் என்பது ஓம்புயிருக்குள் சென்றவுடன் அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்து வளர்ச்சியடையும் ஒரு உயிரினம்அல்லது தானே பெருக்கிக் கொள்ளும் திறம் படைத்த உருப்படி (வைரஸுகள் உயிருள்ளவையாக கருதப்படுவதில்லை) ஆகும்[1]. பூச்சியியல் போர்முறையும் உயிரிப்போரில் ஒருவகையாக கருதப்படுகிறது.நால்வகைப் பேரழிவு ஆயுதங்களுள் இதுவும் ஒன்று.கதிரியக்கப் போர், அணுஆயுத போர் மற்றும் வேதியியல் போர்ஏனையவையாகும்.

உயிரி ஆயுதங்கள் ஒரு தனி நபரையோ, ஒரு கூட்டத்தாரையோ அல்லது ஒரு முழு இனத்தையோ அழிக்கும் படி பிரத்யேகமாக உருவாக்கபடலாம். இவை ஒரு நாட்டினாலோ அல்லது நாடு சாராத தனிக் கூட்டத்தாரலோ உருவாக்கப்படவும், வாங்கவும், சேர்ப்பில் வைத்து பின்னர் உபயோகப்படுத்தப்படவும் முடியும். நாடு சாராத தனிக் கூட்டத்தாரால் உபயோகப்படுத்தப்படின், அது உயிரித்தீவிரவாதம்என்றழைக்கப்படும்.
இவ்வாறு சில சர்ச்சையான விஷயங்களைப் பார்த்தால் குடியுரிமை சட்டத்திலும் சரி கொரோனா வைரஸ் இதிலும் சரி உலகளாவிய சூழ்ச்சிகள் இதில் செய்யப்படுகிறது என்பது மட்டும் தெரிகிறது‌.
இந்நிலையில் மக்கள் குடியுரிமையை க்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் மறுபுறம் குறவன் வைரஸ் சம்பந்தமாக இப்படிப்பட்ட தகவல்கள் வர ஒரு சிலர் இடத்தில் தடுமாற்றமும் தயக்க நிலையும் காணப்படுகிறது.


தடுமாற்றம் என்பது மனிதர்களாகப்
பிறந்த அத்தனை பேருடைய
வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது தான். ஏனென்றால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே தடுமாறக்கூடியவனாகவும், பதறக்கூடியவனாகவும், பலவீனமான ஒரு படைப்பாகவுமே படைத்திருக்கின்றான்.

ஆனால் பலவீனமான மனிதர்களாகிய நாம் எந்தச் சூழலில் தடுமாற்றம் ஏற்படுகின்றதோ அந்தச் சூழலில் சுதாரித்து, இறைவனுக்குப் பயந்து தடுமாற்றத்தைத் தவிடுபொடியாக்கக்கூடிய ஒரு தந்திரத்தை கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

 وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا‏            

                            . மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
(அல்குர்ஆன் : 4:28)


لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْ كَبَدٍ‏                                


மெய்யாகவே நாம் மனிதனைக் கஷ்டத்தில் மூழ்கினவனாகவே படைத்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 90:4)
மனிதர்கள் பலவீனமானவர்கள் தான் அவர்களை சுற்றி நடக்கக்கூடிய விஷயங்கள் அவனை பலவீனப்படுத்தும் அல்லாஹ்வுடைய ஒரு நியதி ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவன் கஷ்டத்தில் மூழ்கியவன் அங்கதான் இருப்பேன் அல்லாஹ்வுடைய ஒரு நியதி!

அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ‌ ۚ وَعَلَى
 اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
முஸ்லிம்களாகிய நம்முடைய ஒரு நம்பிக்கை நம்முடைய வாழ்க்கையில் அல்லாஹ் விதித்ததை தவிர வேறு ஏதும் நம்மை அடையாது என்பது தான்.
ஆனால் இங்கே நம்மை அடையக்கூடிய அந்த விஷயம் நல்லதா கெட்டதா என்பது நாம் இருப்பதை பொறுத்துதான் அமையும்.
சென்ற வாரங்களில் எல்லாம் ஒரு உண்மையான முஃமினுடைய நிலையைப் பற்றி நாம் சில தகவல்களை பார்த்தோம் அதனடிப்படையில் ஒரு உண்மையான முஃமினாக நாம் வாழ்ந்தோம் என்றால் அல்லாஹ்விடம் இருந்து வரக்கூடிய விஷயங்கள் நன்மையாக நமக்கு இருக்கும்.
இல்லை என்றால் நமக்கு ஆபத்தாகவே அமையும்.இப்படிப்பட்ட ஒரு ஆபத்தான ஒரு சூழ்நிலையில் நம்மை நாமே ஈமானிய பரிசோதனை செய்து கொள்வோம்.

தடுமாற்றங்களை பற்றி பேசுவதற்கு காரணம் தடுமாறுவது சில சமயத்தில் படத்தையும் மாற்றிவிடும்

قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ عَنْ أَبِيهِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَبِي طَالِبٍ: ((يَا عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ)).                         
فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ، أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ الْمَقَالَةِ، حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَمَا وَاللَّهِ لأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْكَ)). فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ:     {مَا كَانَ لِلنَّبِيِّ} الآيَةَ.                                                   
முஸய்யப்(ரலி) அறிவித்தார்.
அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், 'என்னுடைய பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்' எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?' எனக் கேட்டனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, 'நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)' என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்' என்று கூறியதும், 'இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று' (திருக்குர்ஆன் 9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
ஸஹீஹ் புகாரி : 1360.
நம்முடைய நிலைமையை பொறுத்து தான் நம்மை அடையக்கூடிய விஷயமும் இருக்கும் அல்லாஹுத்தஆலா நிறைய முஃமின்களே பாதுகாத்தும் இருக்கிறான் சில முஸ்லிம்களை அளித்தும் இருக்கிறான்.

حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ أَنَّهُ سَمِعَ
 الزُّهْرِيَّ عَنْ عُرْوَةَ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ عَنْ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ رَضِيَ اللَّهُ عَنْهُنَّ أَنَّهَا قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النَّوْمِ مُحْمَرًّا وَجْهُهُ يَقُولُ: ((لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَاجُوجَ وَمَاجُوجَ مِثْلُ هَذِهِ)). وَعَقَدَ سُفْيَانُ تِسْعِينَ أَوْ مِائَةً. قِيلَ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ: ((نَعَمْ، إِذَا كَثُرَ الْخَبَثُ)). 

ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்.
(ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் சட்டதூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபுகளுக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது.
-அறிவிப்பாளர் சுஃப்யான்(ரஹ்) அவர்கள் ('இந்த அளவிற்கு' என்று கூறியபோது, தம் கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக் காட்டினார்கள்.
அப்போது 'நல்லவர்கள் நம்மிடையே இருக்கும் போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?' என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம். தீமை பெருத்துவிட்டால்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 7059.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنِ الزُّهْرِيِّ أَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِذَا أَنْزَلَ اللَّهُ بِقَوْمٍ عَذَابًا، أَصَابَ الْعَذَابُ مَنْ كَانَ فِيهِمْ، ثُمَّ بُعِثُوا عَلَى.        
أَعْمَالِهِمْ)).   

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7108.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌  ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏ 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான்  உங்களுக்கு நன்மையாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.
(அல்குர்ஆன் : 4:59)

சமூகத்தில் குழப்பம் வெடிக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது அழகல்ல. அதுபற்றிய அறிவும் தெளிவும் பெற்றவர்களுக்கு அதைத் தடுக்கும் பொறுப்பு உள்ளது. குறைந்தபட்சம் அது பரவும் வாசல்களையாவது அடைக்க வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்விடம் நற்பெயரும் உயர்ந்த அந்தஸ்தும் கிடைக்கும்.

நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் பூமியில் குழப்பம் செய்வதைத் தடுக்கும் நல்லோர் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்.

(திருக்குர்ஆன்:11:116)
இப்படிப்பட்ட ஒரு ஆபத்துக்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நம் சமூகத்தினரையும்
விழிப்புணர்வு செய்து தவிர்ந்திருக்க செய்யவேண்டும் உண்மையான ஒரு முஃமினாக வாழ்ந்து அல்லாஹ்வுடைய உதவியைப் பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா தந்தருள் புரிவானாக!
                       ஆமீன்

No comments: