அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 28 June 2018

விருந்தோம்பல் எனும் உயர்ந்த குணம்




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

மானிடர்களுக்கு மத்தியில் ஒழுக்கத்தையும் அழகிய வாழ்க்கை முறையையும் கற்றுக்கொடுப்பதில் நம் இஸ்லாமிய மார்க்கம் தன்னிகரின்றி விளங்குகிறது என்பது உலகம் அறிந்த உண்மை. அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களும் கூட

حديث أبي هريرة رضي الله عنه مرفوعاً: ((إنما بعثت لأتمم مكارم الأخلاق))
 சொல்வார்கள். 

அந்த வகையில் அல்லாஹ் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலமாக எல்லா விதமான சிறந்த பழக்க வழக்கங்களை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளான். 

இந்த காலகட்டத்தில் மக்களுக்கு மத்தியில், அண்டை வீட்டாருடன்,  இன்னும் சொந்த பந்தங்களுக்கு மத்தியிலும் கூட ஒற்றுமை இல்லாததன் முக்கிய காரணம்ஒழுக்கமின்மையே என்று கூட கூறலாம். 

மக்கள் ஒழுக்கமுடையவர்களாக இருக்கும் வரை நிச்சயம் ஒருவருக்கொருவர் ப்ரியத்துடனும் பாசத்துடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வர். 


அழகிய குணம் என்பது மிகப்பெரிய சொத்து : 


( أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ عِنْدَهُ كَأَنَّمَا عَلَى رُءُوسِهِمْ الطَّيْرُ قَالَ: فَسَلَّمْتُ عَلَيْهِ وَقَعَدْتُ، قَالَ: فَجَاءَتْ الْأَعْرَابُ فَسَأَلُوهُ، فَقَالُوا " يَا رَسُولَ اللَّهِ نَتَدَاوَى؟ قَالَ: نَعَمْ تَدَاوَوْا، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ، قَالَ: وَكَانَ أُسَامَةُ حِينَ كَبِرَ يَقُولُ هَلْ تَرَوْنَ لِي مِنْ دَوَاءٍ الْآنَ ؟ قَالَ: وَسَأَلُوهُ عَنْ أَشْيَاءَ هَلْ عَلَيْنَا حَرَجٌ فِي كَذَا وَكَذَا ؟ قَالَ: عِبَادَ اللَّهِ وَضَعَ اللَّهُ الْحَرَجَ إِلَّا امْرَأً اقْتَضَى امْرَأً مُسْلِمًا ظُلْمًا فَذَلِكَ حَرَجٌ وَهُلْكٌ، قَالُوا: مَا خَيْرُ مَا أُعْطِيَ النَّاسُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ: خُلُقٌ حَسَنٌ ))

[أحمد عن أُسَامَةَ بْنِ شَرِيكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ]


நம்முடைய மார்க்கம் பிறரை கண்ணியப்படுத்துவதை அழகிய முறையில் கற்றுதருகிறது. உலக மக்கள் அனைவர்க்கும் ஓர் நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதனை நம் மக்கள் நல்ல முறையில் பின்பற்ற வேண்டும். ஆனால் தற்போதய காலத்தில் இந்த பழக்கங்கள் காண்பதற்கரியதாகி வருகிறது. இப்படிப்பட்ட சிறந்த வழக்கங்களையும் மறந்து வருகின்றார்கள். 

ஹழ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விருந்தோம்பலை சிறந்த உதாரணமாக அல்லாஹ் குர்ஆனால் கூறிக்காட்டுகின்றான் : 

هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ * إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُّنكَرُونَ * فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاء بِعِجْلٍ سَمِينٍ * فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ 

(நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உங்களுக்கு எட்டியிருக்கின்றதா? 

அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி "உங்களுக்கு) சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், "உங்களுக்கும்) சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணிக் கொண்டு,)
அதனை அவர்கள் முன் வைத்தார். (அதனை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கேட்டார்.

அண்ணல் நபிக்கான ஆறுதல் வார்த்தை : 


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், ஹிரா மலைக்குகையில் பல நாட்கள் தனிமையில் இருந்துவிட்டு ஹழ்ரத் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பார்த்து திடுக்கிட்டுகே அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்தபோது, அண்ணலாருக்கு ஆறுதலாக அன்னை அவர்கள் கூறிய வார்த்தைகளில், 

فقالت خديجة: «كلا. أبشر، فو الله لا يخزيك الله أبدًا، فو الله إنك لتصل الرحم، وتصدق الحديث، وتحمل الكل، وتُكسب المعدوم، وتقري الضيف».


""நீங்கள் விருந்தினர்களை கண்ணியப்படுத்துகிறீர்கள்""

என்றும் கூறி தான் ''உங்களை அல்லாஹ் ஒருபோதும் இழிவாக்க மாட்டான்'' என்றார்கள்.


அண்ணல் நபியின் வழிவந்த தோழர்களின் விருந்தோம்பல் :

 أن أبا طلحة وامرأته رضى الله عنهما نزل بهما ضيف، فقال لامرأته: أعندكِ من القرى شيء؟ قالت: ليس إلا قوت العيال، فقال: هيئيه، فلما هيأته أطفأ المصباح، ووضع الطعام أمام الضيف، وجعلا يريانه أنهما يأكلان وهما لا يأكلان، فلما أصبح قال النبي صلى الله عليه وسلم: «إن الله عجب من صنيعكما البارحة»، 

فنزل قوله تعالى: ﴿وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ﴾ [الحشر: ٩].


தங்களுக்கு அவசியம் இருந்தபோதிலும், தங்களுடைய பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.

விருந்தோம்பலின் முறை :


இப்படி அல்லாஹு தஆலா விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறான்.

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சிறுக சிறுக விருந்தோம்பலின் முறைகளையும் அதன் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தார்கள்.


விருந்தாளியை வரவேற்பது : 


عن ابن عباس رضى الله عنه قال: لما قدم وفد عبد القيس على النبي صلى الله عليه وسلم قال: «مرحبًا بالوفد الذين جاءوا غير خزايا ولا ندامي … الحديث»، والذي لا شك فيه أن استقبال الرجل لضيوفه بعبارات الترحيب وما شابهها، تدخل السرور والأنس عليهم، والواقع يصدقه. 


விருந்தாளிகளுக்கு எந்த சிரமத்தையும் கொடுக்காமலிருப்பது  :

 قال عبد الله بن عمر بن عبد العزيز رحمه الله: «قال لي رجاء بن حيوة: ما رأيت رجلاً أكمل أدبًا، ولا أجمل عشرةً من أبيك؛ وذلك أني سهرت معه ليلة، فبينما نحن نتحدث إذ غشي المصباح، وقد نام الغلام، فقلت له: يا أمير المؤمنين، قد غشي المصباح، أفنوقظ الغلام؛ ليصلح المصباح؟ فقال: لا تفعل. فقلت: أفتأذن لي أن أصلحه؟ فقال: لا؛ لأنه ليس من المروءة أن يستخدم الإنسان ضيفه، ثم قام هو بنفسه، وحط رداءه عن منكبيه، وأتى إلى المصباح، فأصلحه، وجعل فيه الزيت، وأشخص الفتيل، ثم رجع وأخذ رداءه، وجلس، ثم قال: قمتُ وأنا عمرُ بن عبد العزيز، وجلست وأنا عمر بن عبدالعزيز».

விருந்தாளியை கவனிப்பதில் ஒழுக்கங்களை கற்றுத்தந்த இஸ்லாம், பிறர் வீட்டிற்கு செல்லும் விருந்தாளிகள் எப்படி ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற பழக்கவழக்கங்களையும் கற்று தருகிறது.

விருந்தாளியின் ஒழுக்கங்கள் :


عن أبي شريح العدوي قال: سمعتْ أذناي وأبصرت عيناي حيث تكلم النبي صلى الله عليه وسلم فقال: «من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه جائزته»، قيل: وما جائزته يا رسول الله؟ قال: «يوم وليلة، والضيافة ثلاثة أيام، فما كان وراء ذلك فهو صدقة عليه».

விருந்தளித்தவருக்காக துஆ செய்தல் : 


قد نزل رسول الله صلى الله عليه وسلم على أحد الصحابة فقرب إليه طعامًا، فأكل منه صلى الله عليه وسلم، فقال الصحابي رضى الله عنه وأخذ بلجام دابة النبي صلى الله عليه وسلم: ادع الله لنا، فقال صلى الله عليه وسلم: «اللهم بارك لهم في ما رزقتهم واغفر لهم وارحمهم». وعن أنسٍ رضى الله عنه أن النبي صلى الله عليه وسلم جاء إلى سعد بن عبادة، فجاء بخبزٍ وزيتٍ، فأكل، ثم قال النبي صلى الله عليه وسلم: «أفطر عندكم الصائمون وأكل طعامكم الأبرار وصلَّت عليكم الملائكة»، وفي حديث المقداد بن الأسود رضى الله عنه الطويل في احتلاب اللبن، وفيه دعاء النبي صلى الله عليه وسلم: «اللهم أطعم من أطعمني واسق من أسقاني»


இப்படி அனைத்து செயல்களிலும் படிப்படியாக எதை செய்ய வேண்டும் செய்ய கூடாது என்றுசொல்லித்தருகிறது. நாம் அதனை நம்முடைய வாழ்வில் எடுத்து நடந்து, மறுமைக்கான வெற்றிக்குரிய பாதையாக அதனை ஆக்கிக்கொள்ள அல்லாஹு தாலா அருள்புரிவானாக !! ஆமீன் !

2 comments:

Ayub Khan said...

Subahanalla

Unknown said...

Assalamualaikkum Moulana WhatsApp group number irukka