அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 16 November 2017

குழந்தைகள் தினம் - 2017




நாளுக்கு நாள் அனைத்துமே தலைகீழாக மாறி வருகிறது ! நம்முடைய முன்னோர்கள் நமக்கு வழமையாக ஆக்கித்தந்த இஸ்லாமிய வழிமுறைகள் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்துடன் ஒன்றி வாழவேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவருடனும் மற்றவர்கள் எந்த அளவுக்கு பாசத்துடன் இருக்க வேண்டும், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற  மரபை அழித்தொழிக்க்க ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்களே போதுமானது. இந்த கைபேசிகள் வந்த நாள் முதல் மனிதன் அந்த ஓர் சிறிய பெட்டிக்குள் அடைக்கப்பட்டுவிட்டான். பக்கத்தில் இருப்பவர்கள் கூட தூரமானார்கள். குழந்தைகளை ப்ரியமுடன் ஆரத்தழுவி கொஞ்சுவது, தாய் தந்தை, மனைவி மக்களுடன் சந்தோஷமாக இருக்கும்  அந்த உற்சாகமான காலமெல்லாம் மலைஏறி பொய் விட்டடது என்று தான் சொல்ல வேண்டும். 

இந்த வழக்கங்களையெல்லாம் சிறிதேனும் நாம் நியாபகப்படுத்திகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இது போன்ற குழந்தைகள் தினம், மகளிர் தினம், இன்னும் எத்தனையோ தினங்கள் உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. 

ஆனாலும் சமூகத்தினர் மொபைல் என்னும் சிறிய பெட்டிக்குள் அடைபட்டு தானே இருக்கின்றனர். 

அகிலத்திற்கே நபியாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே குழந்தைகளையும் குடும்பத்தையும் பிரியத்துடன் கவனிக்க அவர்களுக்காக நேரம் ஒதுக்கி, நமக்கான வாழ்வின் எதார்த்தத்தை விளக்கித்தந்தார்கள்.

குழந்தைக்கு எதனை கற்பிப்பது ?


மூன்று விஷயங்களை கொண்டு குழந்தைகளை ஒழுக்கப்படுத்துமாறு பெருமானார் சொல்லி இருக்கின்றார்கள்:-

قالَ النَّبِيُّ صلى الله عليه وسلّم: «أَدبُوا أَوْلاَدَكُمْ عَلَى ثَلاَثِ خِصَالٍ: حُب نَبِيكُمْ، وَحُب أَهْلِ بَيْتِهِ، وَقِرَاءَةِ الْقُرْآنِ،


ஒரு குழந்தை வளரும் பருவத்தில் தாய் மற்றும் தந்தைக்கு இடையூறு செய்யாமல் இருக்க ஐ பாட் களை வாங்கிக்கொடுக்கும் தாய் மற்றும் தந்தை மார்களுக்கு, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்ன அந்த மூன்று முக்கியமான விஷயங்களை கற்றுக்கொடுக்க மறந்துவிடுகிறது.

1. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது பிரியம் கொள்ளுதல்
2. அவர்களின் குடும்பத்தார் மீது பிரியம் கொள்ளுதல்
3. இறைமறையை ஓத கற்றுக்கொடுத்தல் 


குழந்தைகளிடம் எப்படி அணுக வேண்டும் ? 


அனஸ் (ரழி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால்அவர்களுக்கு ஸலாம் உரைப்பார்கள். மேலும் கூறினார்கள் ''நபிஅவர்களும் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்.'' (ஸஹீஹுல்புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


நாம் நம் குழந்தைகளுக்கு கடினமாக இல்லாமல் மென்மையான முறையில அணுகவேண்டும்:-

عَنْ أَنَس بْن مَالِكٍ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ – إبن ماجة

குழந்தைகளை கண்டால் சலாம் சொல்வதும் மேலும் அவர்களை கண்டு பொன்சிரிப்பு சிரிப்பதும் மேலும் இது போல் நல்ல பழக்கங்களை நாம் செய்வதை கொண்டே அவர்களுக்கு கற்றும் கொடுக்கவேண்டும்:-


  وفي البخاري ومسلم عن أنس ابن مالك أتى عليًّ رسول الله  صلى الله عليه وسلم وأنا غلام، فسلم علينا، فبعثني في حاجته.وخدم أنس رسول الله  صلى الله عليه وسلم وهو طفل صغير، عمره عشر سنين، لمدة عشرة أعوام.

     وجاء ابن الزبير وهو ابن سبع سنين أو ثمان؛ ليبايع الرسول صلى الله عليه وسلم ، وأمره الزبير بذلك، فتبسم رسول الله صلى الله عليه وسلم حين رآه مقبلاً وبايعه.


 குழந்தை வளர்ப்பை பற்றி நாளை கண்டிப்பாக கேள்வி உண்டு:-


حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِى مَالِكٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ «أَلاَ كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ الَّذِى عَلَى النَّاسِ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى أَهْلِ بَيْتِ زَوْجِهَا وَوَلَدِهِ وَهِىَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَعَبْدُ الرَّجُلِ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ».

குழந்தையை ஒழுக்கத்தோடு வளர்ப்பது ஸதகாவை விட சிறந்தது:-


عن جَابِرِ بن سَمُرَةَ ، قالَ: قالَ رَسُول الله: «لأَنْ يُؤَدِّبَ الرجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ.» .

பிள்ளை என்பது நம்முடன் வருகிற மறுமைச் சொத்து. : 

இந்த உலகில் பிறந்தோம், வாழ்ந்தோம், மரணித்தோம் என்றில்லாமல், நல்ல பல சாதனைகளை செய்ய வேண்டும் என்ற ஓர் கூற்று மக்களிடத்தில் உண்டு. ஆனால், ஒருவன் தான் பெற்ற குழந்தைகளை நல்லொழுக்கம் நிறைந்த குழந்தையாக வளர்ந்துவிட்டால் அதுவே ஓர் மிகப்பெரும் சாதனை தான். ஏனென்றால், குழந்தைகள் நம்முடைய இம்மைக்கு மட்டும் பயன்தருபவர்கள் அல்ல, நம்முடைய மறுமைக்கும் நம்மக்கள் நன்மைகளை திரட்டி தருபவர்கள்  அவர்கள். 

قال صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلا مِنْ ثَلاثَةٍ : إِلا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ) رواه مسلم (1631) 

அல்லாஹுத்தஆலா தன் அருள்மறையில் :

 وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ

அன்றி, உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

பயன்தரும் கல்வியை தேடுகிற நாம், சதகா செய்கிற நாம் பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.


جاءت في حديث صحيح رواه الإمام مسلموغيره أن النبي صلى الله عليه وسلم قال: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة،إلا من صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له. والمقصود بالولد الصالح الولد المؤمن، وقيل المقصود به أن يتصف بالاستقامة والالتزام. قال النووي في شرح مسلم: معنى الحديث أن عمل الميت ينقطع بموته، وينقطع تجدد الثواب له إلا في هذه الأشياء الثلاثة لكونه كان سببها فإن الولد من كسبه، وكذلك العلم الذي خلفه، وكذلك الوقف الذي أو قفه. وفي عون المعبود على سنن أبي داود عند شرح الحديث المذكور نقلا عن ابن الملك قال: قيد الولد بالصالح لأن الأجر لا يحصل من غيره. ثم قال: وقال ابن حجر المكي المراد بالولد الصالح: المؤمن. ولعل هذا هو الراجح إن شاء الله تعالى ـ فالمسلم الذي يؤدي الفرائض ويجتنب الكبائر. . يعتبر ولداً صالحا يصل ثواب دعائه لأبويه. وفائدة تقييده بالولد مع أن دعاء غيره ينفعه، هو تحريض الولد على الصلاح والدعاء لأبويه، وقيل إن كل عمل صالح يعمله الولد يلحق ثوابه لأبويه ولو لم يدع لهما.. كما أنه إذا ترك صدقة جارية يلحقه ثوابها ولو لم يدع له من انتفع بها أو استفاد منها، جاء ذلك في شرح ابن ماجه للسيوطي والدهلوي. والمقصود بالدعاء أن يسأل الله تعالى لهما الرحمة والمغفرة، وأن يجيرهما من عذاب القبر وعذاب النار، وما أشبه ذلك كما قال الله تعالى: وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيراً {الاسراء: 2

நல்ல குழந்தை  கிடைக்க துஆ செய்ய வேண்டும்: 


இறைத்தூதர்கள்  தங்களுக்கு நல்ல குழந்தை  அமைய துஆ செய்துள்ளனர்.

 يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ ۖ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا 

அவன் எனக்கும், யஃகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக்கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை" என்று பிரார்த்தித்தார். 19:6

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து "என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்" என்று கூறினார். 3:38

சிறுவயது முதல் குழந்தைகளுக்கு இபாதத்துகளின் மீது ஆர்வமூட்டுதளும் மேலும் அதை செய்ய வைப்பதும் பெற்றோர்கள் மீது அவசியமானஒன்றாகும்.

சஹாபாக்கள் தங்களின்  பிள்ளைகளை வளர்த்த  விதம் :-

روى البخاري ومسلم عن الربيِّع بنت معوذ قالت: 'أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: من أصبح مفطرًا فليتم بقية يومه،ومن أصبح صائمًا فليصم، قالت: فكنا نصومه بعد ونصوِّم صبياننا، ونجعل لهم اللعبة من العهن؛ فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذلك حتى يكون عند الإفطار'


குழந்தைகளுக்கு  நல்ல  விஷயங்களை  கொண்டு  துஆ  செய்ய  வேண்டும் :

وعن ابن عباس رضي الله عنهما قال: 'ضمني رسول الله صلى الله عليه وسلم وقال: 'اللهم علمه الكتاب' وفي رواية: 'اللهم علمه الحكمة' وفي أخرى: 'الله فقهه في الدين'.

وعن أسامة بن زيد رضي الله عنه قال: إن كان رسول الله صلى الله عليه وسلم ليأخذني ويُقعدني على فخذه ويُقعد الحسن على الأخرى، ثم يضمنا،ثم يقول: اللهم ارحمهما؛ فإني أرحمهما، وفي رواية: 'اللهم إني أحبهما فأحبهما'

விளையாட்டு என்பது குழைந்தைகளின் இயற்கை எனவே அதை தடுக்காமலும் இருந்து மேலும் விணான விளையாட்டுகளை விட்டு தவிர்ப்பது நம் மீது கடமை :-

وعن الحسن أنه دخل منزله وصبيان يلعبون فوق البيت ومعه عبد الله ابنه فنهاهم فقال الحسن: دعهم فإن اللعب ربيعهم.

சஹாபாக்களின் காலத்தில் சிறுவயதிலேயே விதிக்கப்பட்ட தக்வா இன்று இல்லாமல் போனது மிகப்பெரிய கைசேதம் ஆகும்:-

خرج  ابن عمر في سفر فرأى غلاما يرعى غنما، فقال له: تبيع من هذه الغنم واحدة؛ فقال: إنها ليست لي،  فقال: قل لصاحبها إن الذئب قد أخذ منها واحدة، فقال الغلام: فأين الله؟ فكان ابن عمر يقول بذلك.

மாலிக் ரஹ் அவர்களின் மகளின் அறிவாற்றல்:-

قال الزبيدي: كان للإمام مالك ابنة تحفظ علمه، يعني الموطأ، وكانت تقف خلف الباب، فإذا أخطأ التلميذ، نقرت الباب.

மாலிக் அவர்களின் சிறுவயது மகள் முஅத்தா கிதாபை முழுவதுமாக மனனம் செய்திருந்தார்கள். மேலும் மாலிக் ரஹ் பாடம் நடத்தும் போது கதவின் பின் புறம் நின்றுகொண்டு மாணவர்கள் தவறாக வாசித்தல் கதவை தட்டுவார்கள் என்பதாக இமாம் ஜுபைதி அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் நம் வீட்டு குழந்தைகளையும் சிறந்த இறையச்சம் மிக்க குழந்தைகளாக, மறைமையிலும் நமக்கு பயன் தரும் ஸாலிஹான குழந்தைகளாக ஆக்கிவைப்பானாக!! ஆமீன்

No comments: