அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 23 November 2017

மார்க்கத்தை கற்றுத்தரும் மீலாது விழாக்கள்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ‌ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ‌ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ مَّعْرُوْفًا‌ ؕ كَانَ ذٰ لِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا‏ 


இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்;      (33:6)

இப்படி ஒவொரு  முஃமினும் தன் உயிரினும் மேலாக  நினைக்க வேண்டும் என்பது கூட அறியாத மக்களாக பலர் இருக்கின்றனர். 


அன்பு வந்தால் அனைத்தும் வந்துவிடும் :


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், நம்முடைய சிறு குழந்தைகளை 3 விஷயங்களில் ஒழுக்கப்படுத்தி வளர்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.



قالَ النَّبِيُّ صلى الله عليه وسلّم: «أَدبُوا أَوْلاَدَكُمْ عَلَى ثَلاَثِ خِصَالٍ: حُب نَبِيكُمْ، وَحُب أَهْلِ بَيْتِهِ، وَقِرَاءَةِ الْقُرْآنِ،



1. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது பிரியம் கொள்ளுதல்
2. அவர்களின் குடும்பத்தார் மீது பிரியம் கொள்ளுதல்
3. இறைமறையை ஓத கற்றுக்கொடுத்தல்


இவற்றில் முதலில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், நாயகத்தின் மீது அன்பு வைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள். காரணம் ஒரு நபரின் மீது அன்பு வைத்துவிட்டால் நாயகத்தை பின்பற்ற வேண்டி நாம் சொல்லித்தர வேண்டியதே இல்லை. அவர்களாகவே அது போன்ற செயல்களில் ஆர்வம் கொண்டு தேடி பிடித்து பல சுன்னத்துகளை ஹயாத்தாக்குவார்கள்.

ஆனால், அந்த அன்பு வர முதலில் பெற்றோர்களுக்கு அந்த அன்பு இருக்க வேண்டும். அதுவே இல்லாமல் போகும் அவலத்தை தடுக்க நம் முன்னோர்கள், தங்களுடைய வீடுகளில் சிறப்பான நாட்களிலும், நாயகம் இந்த பூவுலகில் உதித்த அந்த சிறந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, அன்னாரின் சிறப்புகளை எடுத்துரைத்து, அல்லாஹுதஆலா அவர்களுக்கு கொடுத்திருந்த சிறப்புகளை கோர்த்தும், பல கவிப்பக்களை இயற்றி, இன்னும் பல ஸஹாபாக்கள் அண்ணலாரை புகழ்ந்து இயற்றிய பாக்களை படித்தும், அந்த நிகழ்வில் அண்ணலாரின் சிறப்புகளை பற்றிய உரைகளை நிகழ்த்தியும் மக்களின் மத்தியில் மார்க்கத்தை நிலை பெற செய்தார்கள்.

இந்த மீலாது விழாக்கள் தான் காபிர்களின் உள்ளங்களிலும்  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் பிரியத்தை உதிக்க செய்யதது. பலருக்கு இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பு ஏற்பட்டது. பலர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவ காரணமானது.

மீலாது விழாவில் மத நல்லிணக்கம்:

அறிஞர் அண்ணா பேசியது,

இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.

நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.


ஒரு காலத்தில் மீலாது விழா என்பது விழாக் கோலமாய் இருந்தது. பின்பு அது மறைந்து மறைந்து இன்று அது போன்ற விழாக்கள் நடப்பது அரிதாகி வருகிறது. நமது தலைவர் பெருமானார் ரசூல் (ஸல்) அவர்களைப் பற்றி பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா போன்றவர்கள் மீலாது விழா மேடைகளில் பேசினார்கள். பெருமானார் ரசூல் (ஸல்) அவர்கள் குறித்து இஸ்லாமியர் அல்லாதவர்கள் பேசுவதற்கும், அறிந்து கொள்வதற்கும் மீலாது விழாக்கள் பெரிதும் உதவியது. இன்று மீலாது விழா கூடாது என்று கூறி, ரபீவுல் அவ்வல் மாதத்தில் நாமும் நமது தலைவர் பெருமானார் ரசூல் (ஸல்) அவர்களைப் பற்றி மேடைகள் அமைத்து பேசுவதில்லை. இதை விட சோகம் மற்றவர்களும் பெருமானார் ரசூல் (ஸல்) அவர்கள் குறித்து பேசவும். அறிந்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு குறைந்து வருகிறது. குறைந்தபட்சம் இந்த நோக்கத்திற்காகவாவது மீலாது மீண்டும் நடத்தப்பட வேண்டும்.



பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியது,


பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் இஸ்லாம் மார்க்கம் குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகள் குறித்தும் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார். மீலாது நபி விழாவை யொட்டி முதல்வர் கலைஞர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யிலும்கூட மிகச் சிறப்பாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அதனை இங்கு வாசித்து காட்டுகின்றேன்:

``அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த திருநாள் மீலாது நபி நன்னாளாக இஸ்லாம் சமு தாய மக்கள் வாழும் இடங் களிலெல்லாம் எழுச்சி யோடு கொண்டாடப்படு கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பை, அமைதியைப் போதித் தார்; அறத்தை வலியுறுத் தினார். அடுத்தவர்க்கு உதவிகள் புரிவதை உயர்ந்த பண் பாகக் கருதினார்.

சூரியன் உதிக்கும் ஒவ் வொரு நாளிலும் இரு வருக்கு மத்தியில் நீ சமா தானம் செய்துவைப்பது தர்மமாகும்; ஒருவரை, அவ ரது வாகனத்தில் ஏறு வதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும்; நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும்; இடையூறு அளிப்பவை களைப் பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும்"" எனக் கூறி, அடுத்தவர் நலன்கருதி ஆற்றும் அருட்பணி களையே அறம் என வலி யுறுத்தினர்.

இத்தகைய அறநெறி களைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக் கருதி மீலாது நபித் திருநாளுக்கு 1969ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணையிட்டு நடை முறைப்படுத்தியதை இவ் வேளையில் நினைவு கூர்கிறேன்.

2001இல் ஏற்பட்ட அ.தி. மு.க. அரசு மீலாது நபித் திருநாள் விடுமுறையை இரத்து செய்ததையும், 2006இல் இந்த அரசு மீண்டும் அமைந்தபோது, மீலாது நபித் திருநாளுக்கு மறு படியும் அரசு விடு முறை வழங்கி இஸ்லாம் சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாகத் திகழ்வதை யும் சுட்டிக் காட்டி; மீலாது நபித்திருநாள் கொண்டா டும் இஸ்லாம் சமுதாய மக் கள் அனை வர்க்கும் தமி ழக அரசின் சார்பில் எனது நெஞ் சார்ந்த நல்வாழ்த்து களை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் தெரி வித்துள்ள வாழ்த்துச் செய் தியில் குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களை முஸ்லிம் சமுதாயம் நன்றி யுடன் நினைவு கூர்ந்து நபி களார் (ஸல்) அவர்கள் காட் டிய வழியில் வாழ்ந்து அண் ணலாரின் புகழினை மேலும் மேலும் மேலோங் கச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிறைவுரை யாற்றும் போது குறிப் பிட்டார்.


மீலாது விழாக்கள்  காட்டாயம் நடத்தப்பட வேண்டும் :



திருக்குர் ஆனின் விரிவுரையாளர் ஹாபிழ் இப்னு கஸீர்கூறுகிறார்கள் :

قال ابن كثير وقد ذهب الجماهير من العلماء من المذاهب الأربعة إلى مشروعية الاحتفال بميلاد سيد البشرية وإمام الإنسانية سيدنا محمدٍ صلى الله عليه وسلم، وصنفوا في ذلك مصنفات.


இமாம் இப்னு கஸீர்  (ரஹ்) அவர்கள் இமாம் முக்ரிஸி அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்கள். அதில் இவ்வாறான ஒரு மவ்லிது மஜ்லிஸில் சுல்தான் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் மந்திரிப் பிரதானிகள், சுல்தானுக்கு வலப்புறம் ஷைகுல் இஸ்லாம் புல்கீனி, நானிலமறிந்த  நபிமொழி விரிவுரையாளருமான புகாரி ஷரீபின் முதன்மை விளக்கவுரையாளர்] ஷைகுல் இமாம் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அமர்ந்திருக்கிறார்கள். அதற்கடுத்து அந்தக் கால நான்கு மத்ஹபின் பிரதம நீதிபதிகள்- பேரறிஞர்களெல்லாம் அமர்ந்திருக்கிறார்கள். அந்த சபையில் முதலில் குர்ஆன் ஷரீப் ஓதினார்கள். பிறகு மவ்லிது ஷரீப் நபி புகழ் பாடினார்கள். பிறகு பெரிய விருந்து நடைபெற்றது. முடிவில் இனிப்பு (நேர்ச்சை) வழங்கப்பட்டது.

எனவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற மீலாது மொலூது நிகழ்ச்சிகள் என்பது ஏதோ முந்தா நாள் தோன்றிய நடைமுறை அல்ல. நம்முடைய முன்னோர்கள் –மார்க்கம் அறிந்து – மக்களுக்கு அறியச் செய்த பெருமக்கள் நடைமுறையில் கையாணட வழிமுறையாகும்.

பெருமானார் (ஸல்)அவர்களுக்கு கட்டுப்படுவது மட்டுமல்ல கண்ணியப்படுத்துவதும் நமது கடமை என்பதை நாம் புரிந்து நடந்து கொள்வோம்.

மீலாது என்கிற உன்னத கலாச்சாரம் நமது சமூகத்தில் பெருமானாரின் மீது அன்பை- மதிப்பை பற்றுதலை ஏற்படுத்தியது. அது மக்களது உள்ளத்தில் இறைய்ச்சத்தை தோற்றுவித்தது. சமூகத்தில் பரகத்த்தையும் நல்லிணக்கத்தையும் நன்மைகளுக்கான சூழ்நிலையையும் உண்டுபன்னியது.

இதை எதிர்த்தவர்கள் தீமைக்க்கும் தீவிரவாத்திற்கு சமூக அமைதி குலைவதற்கும் குர் ஆணையே மறுக்கிற நிலைக்கும் சென்றார்கள்.

இந்த எதார்த்ததையும் நாம் சிந்தித்துப் பார்த்துச்செயல்படவேண்டும்.

உங்களது மஹல்லாக்களில் நடைபெறுகிற மீலாது விழாக்களில் கலந்து கொள்ளுங்கள். பெருமானாரின் அன்போடு. அல்லாஹ் நம்முடைய ஈருலக வாழ்வையும் வெளிச்சமாக்கித்தருவான.



அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிரதான கலிஃபாக்கள் மீலாது குறித்து சொல்வது :


பெருமானாரின் மீலாத் மௌலித் குறித்து அபூபக்கர் சித்திக் நாயகம் :

قال أبو بكر الصديق رضي الله عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة



உமர் ரலி :

قال عمر رضي الله عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام


உஸ்மான் ரலி :

قال عثمان رضي الله عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين


அலி ரலி 

قال علي رضي الله عنه وكرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب


முதல் மீலாது நிகழ்வு :


ஆலமுல் அர்வாஹ் எனும் ஆன்ம உலகில் வைத்து ஒரு மாபெரும் மீலாது மாநாடு நடந்தது. நடத்தியவன் யார் தெரியுமா? அல்லாஹ். மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் யார் தெரியுமா? உலகைத்திருத்தவந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகள். சில ஆயிரம் பேர் கலந்துகொண்டாலே மாநாடு என்றால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்நிகழ்வு மாநாடுதானே?

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா? 



‎واذ اخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتومنن به ولتنصرنه۔۔۔(3:81)

பின்னால் ஒரு நபி வருவார். அவரை நீங்கள் நம்பவேண்டும்; அவருக்கு உதவியாக இருக்கவேண்டும்; என்று கேட்டதோடு மட்டுமின்றி இதில் நீங்கள் கையெழுத்திடுகிறீர்களா?என்றான். அனைவரும் இதை ஆமோதிக்கிறோம் என்றனர். அப்படியா இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்.” என்று தீர்மானம் போட்டு, அதை மிஃராஜ் இரவில் நடத்திக்காட்டினான். பைத்துல் முகத்தஸில் அனைத்து நபிமார்களும் கூடியிருக்க ஜிப்ரீல் அலை பாங்கு சொல்ல அதில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னபோது அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அல்லாஹு தஆலா நம் அனைவரையும் நம் உயிரை விட மேலாக கண்மணி நாயகம் சலல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களை விரும்புபவர்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக. !! இன்னும் மறுமையில் அன்னவர்களின் ஷபாஅத்தை பெறுபவர்களாக ஆக்குவானாக !!ஆமீன் !!


No comments: