அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Monday 16 October 2017

"ஈ" யும் - 2017 நோபல் பரிசும்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

இன்றைய நாட்களில் ஒவ்வொரு நாளும்  அறிவியல் வளர்ச்சி ஒன்பது கோள்களையும் தாண்டி வளர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் புதிது புதிதாக ஏதேனும்  ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு விஞ்ஞானம்   ஒளி வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர்களின் ஆராய்ச்சி ஒன்றை சார்ந்துதான் இருக்கிறது. 

ஒவ்வொரு விஞ்ஞான ஆராய்ச்சி மையங்களிலும் குர்ஆனை கொண்டு ஆராய்ச்சி செய்யப்படுகிறது. படைப்புகளை பற்றி படைக்கப்பட்டவர்கள் ஆராய்ச்சி செய்யும்பொழுது படைத்தவன் தன் படைப்புக்களை  பற்றி சொல்லும் வார்த்தைகள் ஆராய்ச்சியாளர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குண்டான விளக்கத்தை தரும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. 

இந்த வருட  2017 க்கான  நோபல் பரிசுகளை வென்றவர்களில், மருத்துவத்துக்கான பரிசை  அமெரிக்க அறிஞர்களான 1. ஜெப்பிரி ஹால் 2. மைக்கல் ராஸ்பாஷ் 3. மைக்கல் யாங்  ஆகியோருக்கு சிர்காடியன் ரிதம் என்னும் உயிரியல் கடிகாரம் சம்பந்தமாக செய்த ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய ஆராய்ச்சியை செய்ய அவர்களுக்கு ஒரு சிறிய "ஈ" தான் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. ஈயின் மொத்தம்  ஒரு லட்சம் வகைகளில் நம் வீடுகளில் காணப்படுவது, வெறும் 5 முதல் 7 வகைகள் மட்டும் தான். அதிலும் இவர்கள் ஆராச்சிக்காக பயன்படுத்தியது ஒரே ஒரு வகையான ஈ.அது "பழ ஈ" என்று சொல்லப்படும்.

என்ன ஆராய்ச்சி செய்தார்கள் ? 


ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்வுகள் என்பது நம்முடைய  வாழ்வில் இருக்கும் எதார்த்தமான நடைமுறை. இப்படி நாம் தூங்க வேண்டும், சாப்பிட வேண்டும்,குளிக்க வேண்டும் என்பதெல்லாம் நம்முடைய உடலில் மரபணு மூலம் தூண்டப்படுவது. இவைகளெல்லம் சரியான நேரத்தில் நடைபெறநம்முடைய மரபணு தூண்டுகிறது. இந்த உணர்வுகள் ஏற்படுவதை தான் BIOLOGICAL CLOCK - மனித உயிரியல் கடிகாரம் என்பது. இதனை circadian rhythm - சிரிக்கார்டியன் ரிதம் என்னும் மரபணு மூலமாக கண்டுபிடிக்கப்படுகிறது. 


இந்த சிர்காடியன் ரிதம் என்னும் உயிரியல் கடிகாரம் என்பது நம்முடைய நடைமுறை வாழ்க்கை செயல்பாடுகளான, உறக்கம், உணவு உண்ணுவது போன்றவற்றை எந்தெந்த நேரத்தில் நாம் செய்யவே வேண்டும் என்பது பற்றியது. உரிய  நேரத்தில் அந்தந்த செயல்களை நாம் செய்ய தவறும்பொழுது, மனம் மற்றும் உடல் சார்ந்த   நோய்களுக்கு ஆளாகின்றோம். அதுவே நம் ஆரோக்கியம் சீர்கெடுவதற்கு காரணமாகிறது. இவற்றை எந்தெந்த மரபணுக்கள் சீர்படுத்துகின்றன என்பதை பற்றிய ஆய்வு தான் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மரபணுவை பற்றிய ஆராய்ச்சி செய்வதன் நோக்கம் என்னவென்றால், இதுவரை தூக்கம் வரக்கூடாது,  பசி எடுக்க கூடாது,  என்றால் அதற்கான மாத்திரை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அறிவியலின் அடுத்த கட்ட முயற்சியாக "ஒருவருக்கு தூக்கம் வரக்கூடாது, பசி எடுக்க கூடாது, இந்த உணர்வுகள் இருக்க கூடாது என்றால், அது சம்பந்தமான மரபணுவை கட்டுப்படுத்திவிட்டால் போதும். இந்த ஒரு ஆராய்ச்சியை நோக்கி தான் அறிவியல் நகர்ந்துகொண்டிருக்கிறது!


''ஈ''யிடமிருந்து என்ன கிடைத்தது ?



அல்லாஹு தஆலா குர்ஆனில் ஒரு உயிரினத்தை பற்றி கூறுகின்றான் என்றால் அதனுள் பல வியத்தகு விடயங்கள் உண்டு என்பது நாம் உணர்ந்து கொண்டிருப்பது தான். 

உயிரினங்களை பற்றி கூறும் இறை வசனங்கள் : 


1- {وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَواتِ وَالأَرْضِ وَمَا بَثَّ فِيْهِمَا مِنْ دَابَّةٍ وَهُوَ عَلىَ جَمْعِهِمْ اذَا يَشَاءُ قَدِيْرٌ}. (الشورى‏/ 29)
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவைகளில் கால்நடை (முதலிய பல உயிரினங்)களை (ஆங்காங்கு) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். ஆகவே, அவன் விரும்பியபோது (மரணித்த பின்னரும்) அவைகளை ஒன்று சேர்க்க ஆற்றுலுடையவனாக இருக்கின்றான்.
2- {إِنَّ فِى السَّمَواتِ وَالأَرْضِ لَآياتٍ لِّلْمُؤْمِنْينَ * وَفى خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دابَّةٍ آياتٌ لِّقَومٍ يُوْقِنُونَ}. (الجاثية/ 3- 4)


முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன. 

இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

3- {أَفَلَا يَنْظُرُونَ الىَ الِابِلِ كَيْفَ خُلِقَتْ}. (الغاشية 17)

(நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்கவேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
4- {وَإِنَّ لَكُمْ فِى الأَنْعَامِ لَعِبْرَةً نُّسْقِيْكُمْ مِّمَّا فِى بُطُونِهَا وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ* وَعَلَيْهَا وَعَلىَ الْفُلْكِ تُحْمَلُونَ}. (المؤمنون/ 21- 22)

நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அன்றி, உங்களுக்கு அவைகளில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை நீங்கள் புசிக்கின்றீர்கள்.
அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள்.
5- {وَانَّ لَكُمْ فِى الأَنْعامِ لَعِبْرَةً نُّسْقِيْكُمْ مِّمَّا فِى بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَناً خالِصاً سَائِغاً لِّلشَّارِبِيْنَ}. (النحل/ 66)
(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்து பவர்களுக்கு மிக்க இன்பகரமானது.
6- {وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِّنْ بُيُوْتِكُمْ سَكَناً وَجَعَلَ لَكُمْ مِّنْ جُلُودِ الأَنْعامِ بُيُوْتاً تَسْتَخِفُّونَهَا يَومَ ظَعْنِكُمْ وَيَومَ إِقامَتِكُمْ وَمِنْ أصْوافِهَا وَأَوبَارِهَا وَاشْعارِهَا أَثَاثاً وَمَتاعَاً إِلىَ حِيْنٍ}. (النحل/ 80)
உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான். கால்நடைகளின் தோல்களை நீங்கள் வீடுகளாக அமைக்க (வசதியான விதத்தில்) உங்களுக்காக அவன் படைத்தி ருக்கிறான். அது நீங்கள் பிரயாணம் போகும் சமயத்திலும், ஓர் இடத்தில் தங்கும் சமயத்திலும் எளிதில் சுமந்து செல்லக்கூடியதாக இருக்கிறது. (ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம் (வெள்ளாட்டின்) முடி ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கிறான். அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன.
7- {وَمِنَ النَّاسِ وَالدَّوابِّ وَالأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوانُهُ كَذَلِكَ انَّمَا يَخْشَى‏ اللَّهَ مِنْ عِبادِهِ الْعُلماءُ إِنَّ اللَّهَ عَزِيْزٌ غَفُوْرٌ}. (فاطر/ 28)
மனிதர்களிலும், உயிருள்ளவைகளிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.
8- {أَوَلَمْ يَرَوا أَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ أَيْدِيْنَا انْعَامَاً فَهُمْ لَهَا مالِكُونَ * وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأكُلُونَ * وَلَهُمْ فِيْهَا مَنَافِعُ وَمَشَارِبُ افَلا يَشْكُرُونَ} (يس/ 71- 73).
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்துவிட்டோம் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள். அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள். இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதனை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகின்றோம். அவற்றை இவர்கள் புசிக்கின்றார்கள்.
9- {وَالَّذِى خَلَقَ الأَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمْ مِّنَ الْفُلْكِ وَالأَنْعامِ مَا تَرْكَبُوْنَ * لِتَسْتَووُا عَلَى‏ ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ اذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحَانَ الَّذِى سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ} (الزخرف/ 12- 13) 

.அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் ஏறிச் செல்லக்கூடிய கால் நடைகளையும் கப்பல்களையும் அமைத்தான். ஆகவே, அவைகளின் முதுகுகளின் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன்மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து "இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்தவன் மிக்க பரிசுத்தவான்" என்றும், 
10- {اللَّهُ الَّذِى جَعَلَ لَكُمُ الأَنْعَامَ لِتَرْكَبُوا مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ * وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوا عَلَيْهَا حَاجَةً فِى صُدُوْرِكُمْ وَعَلَيْهَا وَعَلىَ الْفُلْكِ تُحْمَلُونَ * ويُرِيْكُمْ آياتِهِ فَأَيَّ آيَاتِ اللَّهِ تُنْكِرُونَ«1». (غافر/ 79- 81)

அல்லாஹ்தான் உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகங்களைப் படைத்திருக்கின்றான். (அவைகளில்) சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள்; சிலவற்றை நீங்கள் புசிக்கின்றீர்கள். அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அதன் மீதும் கப்பலின் மீதும், (பல இடங்களுக்கும்) நீங்கள் சுமந்துகொண்டு செல்லப்படுகின்றீர்கள். இன்னும், அவன் உங்களுக்குத் தன்னுடைய (கணக்கற்ற) அத்தாட்சிகளைக் காண்பிப்பான். அல்லாஹ்வுடைய அந்த அத்தாட்சிகளில் எதைத்தான் நீங்கள் நிராகரிப்பீர்கள்?

ஈ - யை பற்றி இறைவன் குர்ஆனில் கூறும் கூற்று :


உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான்,


 يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீஈயைக்கூடங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர்  படைக்க முடியாது; இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும்,தேடப்படுவோனும் பலஹீனர்களே!”  அல் குர்ஆன்.  (22:73)

الذباب في العالم

هناك مائة ألف نوع من الذباب في العالم، فقط عشرة أنواع منها تعيش في المنازل. وأكثرها انتشارا وأشهرها ذبابة المنزل المعروفة التي لا يتعدى طولها 7,5 ملم، وأخرى أصغر منها بملميترين.

ஈ - யை பற்றிய நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வார்த்தையும், இன்றைய அறிவியல் ஆய்வும் :


حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي عُتْبَةُ بْنُ مُسْلِمٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ بْنُ حُنَيْنٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ، ثُمَّ لِيَنْزِعْهُ، فَإِنَّ فِي إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالأُخْرَى شِفَاءً ‏"‏‏.

நாயகம் ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நவின்றார்கள் : "உங்களுடைய குடிபானத்தில் ஈ விழுந்துவிட்டால், அதனை முழுமையாக முக்கி பின்பு நீக்குங்கள். ஏனென்றால் அதன் ஒரு இறக்கையில் நோயும் மற்றொரு இறக்கையில் அதற்கான மருந்தும் இருக்கிறது" (புகாரி : 3320)

இதன் படி ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் முடிவு நம்மை நெகிழச்செய்கிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளரின் ஆய்வு :


“ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி அறிவியல் ஆய்வாளர்களுக்கு எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தனர் மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டனர். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார்.

அதனை அல்லாஹ் தன திருமறையில் :


 اِنَّ فِى اخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَّقُوْنَ‏ 


இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (உணர்ச்சியூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன. (10.06)

மற்றுமொரு வசனத்தில் :

الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏ 


எங்கள் இறைவனே! (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து "உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப் பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக! (3:193)

அல்லாஹ் படைத்த படைப்புகளை பற்றி சிந்திப்பதென்பது இறைநேசர்கள் பண்புகள் : 


وعن الحسن البصري أنه قال : تفكر ساعة خير من قيام ليلة . وقال الفضيل : قال الحسن : الفكرة مرآة تريك حسناتك وسيئاتك . وقال سفيان بن عيينة : الفكرة نور يدخل قلبك . وربما تمثل بهذا البيت :
إذا المرء كانت له فكرة ففي كل شيء له عبرة
وعن عيسى ، عليه السلام ، أنه قال : طوبى لمن كان قيله تذكرا ، وصمته تفكرا ، ونظره عبرا .
وقال لقمان الحكيم : إن طول الوحدة ألهم للفكرة ، وطول الفكرة دليل على طرق باب الجنة .
وقال وهب بن منبه : ما طالت فكرة امرئ قط إلا فهم ، وما فهم امرؤ قط إلا علم ، وما علم امرؤ قط إلا عمل .
وقال عمر بن عبد العزيز : الكلام بذكر الله ، عز وجل ، حسن ، والفكرة في نعم الله أفضل العبادة .
وقال مغيث الأسود : زوروا القبور كل يوم تفكركم ، وشاهدوا الموقف بقلوبكم ، وانظروا إلى المنصرف بالفريقين إلى الجنة أو النار ، وأشعروا قلوبكم وأبدانكم ذكر النار ومقامعها وأطباقها ، وكان يبكي عند ذلك حتى يرفع صريعا من بين أصحابه ، قد ذهب عقله .
وقال عبد الله بن المبارك : مر رجل براهب عند مقبرة ومزبلة ، فناداه فقال : يا راهب ، إن عندك كنزين من كنوز الدنيا لك فيهما معتبر ، كنز الرجال وكنز الأموال 

وعن ابن عباس أنه قال : ركعتان مقتصدتان في تفكر ، خير من قيام ليلة والقلب ساه .
وقال الحسن : يا ابن آدم ، كل في ثلث بطنك ، واشرب في ثلثه ، ودع ثلثه الآخر تتنفس للفكرة .
وقال بعض الحكماء : من نظر إلى الدنيا بغير العبرة انطمس من بصر قلبه بقدر تلك الغفلة .
وقال بشر بن الحارث الحافي : لو تفكر الناس في عظمة الله تعالى لما عصوه .

وقال الحسن ، عن عامر بن عبد قيس قال : سمعت غير واحد ولا اثنين ولا ثلاثة من أصحاب النبي صلى الله عليه وسلم يقولون : إن ضياء الإيمان أو نور الإيمان التفكر 




நம்முடைய குழந்தைகளுக்கு ஏன் விலங்குகள் சம்பந்தமான கதைகளை சொல்கின்றோம் :

பறவைகளை கண்டான் விமானம் படைத்தான், மீனை கண்டான் கப்பலை படைத்தான் என்று பல செய்திகள் உண்டு. இது போன்று அல்லாஹ்வின் படைப்புகளை பற்றி எப்படி சிந்திக்க வேண்டும், அவனது இந்த படைப்புகள் மூலமாக நாம் பெறவேண்டிய படிப்பினைகளை நாம் அறிய வேண்டும் என்பதற்காகவும், சிறு வயது முதலே இப்படிப்பட்ட சிந்தனைகளை தூண்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய முன்னோர்கள் அதனை நமக்கு வழமையாக்கி வைத்துள்ளார்கள்.

பறவையிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினை பற்றி நாயகம் ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

عَنْ عُمَرَ بن الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "لَوْ أَنَّكُمْ تَوَكَّلْتُمْ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ، تَغْدُوا خِمَاصاً وَتَرُوْحُ بِطَاناً" رَوَاهُ الإِمَامُ أَحْمَدُ فِي المُسْنَدِ، وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ فِي السُّنَنِ، وَابْنُ حِبَّانَ فِي صَحِيْحِهِ، وَرَوَاهُ الحَاكِمُ فِي مُسْتَدْرَكِهِ وَصَحَّحَهُ، وَقَالَ التِّرْمِذِيُّ


ஒரு பறவை மூலமாக அல்லாஹ் நமக்கு அவன் மீது எப்படி நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை சொல்லித்தருகின்றான். இப்படி ஒவ்வொரு விலங்குகள் மூலமாக ஒவ்வொரு படிப்பினையை நமக்கு கற்று தருகின்றான்.


குதிரை தரும் படிப்பினை :

அல்லாஹ் தன் அருள்மறையில் குதிரையை பற்றியும் கூறுகின்றான் :

وَالْعٰدِيٰتِ ضَبْحًا ۙ‏  
فَالْمُوْرِيٰتِ قَدْحًا ۙ‏ 
فَالْمُغِيْرٰتِ صُبْحًا ۙ‏ 
فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۙ‏ 


மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக! (அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும். அன்றி, அவைகள் அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப் போல்) புழுதியைக் கிளப்பும். பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.  (100:1 - 5)


இப்படி சாதாரண கொல்லை உணவாக தரும் தனது எஜமானனுக்காக அந்த குதிரை போர்களில்  எத்தனை நன்றியுடனும், விசுவாசத்துடனும் இருக்கிறது! ஆனால், அதை விட மேலாம்பரமான அனைத்தையும் அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்ததும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான் !!


اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ ۚ‏ 
وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌ ۚ‏ 
اِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏ 



(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.  நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான். (100: 6 - 8)

என்று குதிரையிலிருந்து அல்லாஹ் அவனுக்கு நன்றியுடன் இருக்கும் படிப்பினையை தருகின்றான். இன்னும் அவனது நிஃமத்துகளை உணர வேண்டும் என்று கூறுகின்றான்.

இப்படி அல்லாஹ் குர்ஆனில் கூறும் உயிரினங்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதுவே இறைவனின் அருட்கொடைகளை நாம் உணர்வதற்கு ஒரு மாபெரும் சித்தாந்தத்தை கற்றுத்தரும்.

இன்னும் பல விதமான ஆச்சர்யத்தக்க உண்மைகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருக்கின்றன. அதனை நாம் இறையச்சத்துடன் நோக்கும்போது பலவிதமான உண்மைகள் கிடைக்கும் என்பதே உண்மை. அல்லாஹ் இது போன்று அவனுடைய படைப்புகளில் இருந்து சிந்தித்து பாடம் பெற நமக்கும் தவ்பீக் செய்வானாக. ஆமீன்!



அடுத்த வாரத்திற்கான தலைப்பு :""ஸபர் மாதம் தரும் வரலாற்று பாடம்""



No comments: