அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 12 October 2017

சமுதாய நலன் காப்போம்



உலக மக்கள் அனைவராலும் போற்றப்படக்கூடிய ஒரே மார்க்கம், நம் இஸ்லாமிய மார்க்கம் தான். அண்ணலாரின் வாழ்க்கைநெறியை பார்த்து வியந்து அதில் பல ஆராய்ச்சிகளை செய்து, வியந்து அண்ணலாரை போற்றி புகழ்ந்து இஸ்லாத்தை தழுவிய வரலாறுகள் பல உண்டு.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைகள் அனைத்துமே ஒற்றுமையுடன் வாழும் அழகிய வழிமுறையை வலியுறுத்துகிறது. குடும்பத்துடன் இணங்கி  வாழ வேண்டும், அண்டை வீட்டாருடன் இணைந்து வாழ வேண்டும், ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழ வேண்டும், சொந்தங்களுடன் சேர்ந்து வாழவேண்டும், முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், தன நாட்டின் மேல் பற்றுடன் வாழவேண்டும், பிற மத சகோதரர்களுக்கும் உதவிசெய்து வாழ வேண்டும் என்று எண்ணற்ற போதனைகளை நமக்கு வழங்கி அதையே வாழ்ந்து காண்பித்திருக்கின்றார்கள்.


 சமுதாயத்தின் சிறப்பு  :

அல்லாஹு தஆலா தன அருள்மறையில் சொல்லும்போது  :

 كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏ 

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (3:110)

என்று கூறி காட்டுகின்றான். நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நம்முடைய நலனை மட்டும் பார்த்து சுயநலனுக்காக வாழாமல், பிறரின் நலனையும் பேண வேண்டும். அதுவே நம் மார்க்கம் நமக்கு  கற்று தரும் பாடம் ஆகும்.


சுயநலத்தோடு செயல்படாமல் பொது நலத்தோடு சமூக அக்கறையோடு செயல்படுவதே நபிகளாரை பின்பற்றுவதன் முதல் அடி. இஸ்லாத்தை பிறருக்கு எடுத்துச் சொன்னதே அதனடிப்படையில்தான்.


                                                                                                            وروى أحمد والدارمي والطبراني من حديث أبي جمعة قال: «قال أبو عبيدة: يا رسول الله، أأحد خير منا؟ أسلمنا معك، وجاهدنا معك. قال: قوم يكونون من بعدكم يؤمنون بي ولم يروني» وإسناده حسن وقد صححه الحاكم.

சமுதாய நலனை காப்பதில் முக்கியத்துவம் செலுத்துவது :-


ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் தான் மரண நேரத்திலும் தன் சகோதரருக்கு வழிகாட்டினார்கள் :       
                                               
وَجَاءَ رَجُلٌ شَابٌّ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدَمٍ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ ثُمَّ شَهَادَةٌ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لَا عَلَيَّ وَلَا لِي فَلَمَّا أَدْبَرَ إِذَا إِزَارُهُ يَمَسُّ الْأَرْضَ قَالَ رُدُّوا عَلَيَّ الْغُلَامَ قَالَ يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ

பஜ்ரு தொழுகையை இமாமாக நின்று தொழவைத்துக்கொண்டிருந்த நீதியின் திரு உருவமான ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள்  அபூலுஃலு என்பனால் விஷம் தேய்த்த கத்தியினால் குத்தப்பட்டு தன் வீட்டில் வேதனையின் உச்சத்திலும் மரணத்தின் விளிம்பிலும் இருந்த நிலையில் கூட தன்னை நலம் விசாரிக்க வந்த வாலிபரின் கீழாடை கரண்டைக்கால் கீழ் இருக்க கண்டு அவர்திரும்ப செல்லும்போது அந்நேரத்திலும் சப்தமிட்டு அவரை அழைக்க முடியாமல் அருகிலுல்லவர்களின் துணை கொண்டு அழைத்து அவரிடம் சொன்னார்கள் சகோதர மகனே உன் ஆடையை உயர்த்திக்கொள் அது உன் ஆடைக்கு மிகுந்த சுகாதரத்தை தருவதுடன் உன் இறைவனிடம் உனக்கு இறையச்சமிகுந்தவன் என்ற பெயரையும் தரும் என்றார்கள். நூல்: புகாரி

பெருமானார்(ஸல்) அவர்கள் மதீனாவில் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் தாக்கம் மேலும் அதை கண்டு அல்லாஹ்வும் ஆசிரியப்பட்டான் மேலும் அவர்கள் விஷயத்தில் ஆயத்தும் இறக்கப்பட்டது                                                                                                                                                                  عن أبي هُرَيرة قال: أتى رجل رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أصابني الجهدُ، فأرسل إلى نسائه فلم يجد عندهن شيئًا، فقال النبي صلى الله عليه وسلم: "ألا رجل يُضَيّفُ هذا الليلة، رحمه الله؟". فقام رجل من الأنصار فقال: أنا يا رسول الله. فذهب إلى أهله فقال لامرأته: ضَيفُ رسول الله صلى الله عليه وسلم لا تَدّخريه شيئًا. فقالت: والله ما عندي إلا قوتُ الصبية. قال: فإذا أراد الصبيةُ العَشَاء فنوّميهم وتعالى فأطفئي السراج ونَطوي بطوننا الليلة. ففعلَت، ثم غدا الرجل على رسول الله صلى الله عليه وسلم، فقال: "لقد عجب الله، عز وجل -أو: ضحك-من فلان وفلانة". وأنزل الله عز وجل: { وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ }

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தனர்.

ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?” அல்லது “இவருக்கு விருந்தளிப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (விருந்தளிக்கின்றேன்)” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.

“அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து” என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு” என்று கூறினார்.
அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.

பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர்.

காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்” அல்லது “வியப்படைந்தான்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்” எனும் (59:9) வசனத்தை அருளினான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3798



பிறர் நமக்கு இழைக்கும்  தொல்லை தொந்தரவுகளை மன்னிக்கும் குணம் வர வேண்டும் . சஹாபியே ரசூல் ஹுதைபா ரலி அவர்களின் மன்னிப்பு நினைவுகூற படவேண்டிய ஒன்று தன் தந்தையை கொன்றவர்களை மன்னித்தார்கள்:

عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَرَخَ إِبْلِيسُ لَعْنَةُ اللَّهِ عَلَيْهِ أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ فَرَجَعَتْ أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ فَبَصُرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي قَالَ قَالَتْ فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ فَقَالَ حُذَيْفَةُ يَغْفِرُ اللَّهُ لَكُمْ قَالَ عُرْوَةُ فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ عَزَّ وَجَلَّ

உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்" என்று கத்தினான்.

 உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, 'அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!" என்று (உரக்கக்) கூவினார்கள்
.
 (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று கூறினார்கள்
.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா(ரஹ்) கூறினார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது நூல்: புகாரி. 4065.

இந்த ஒரு மன்னிப்பு அவர்களின் வாழ்கையில் நல்ல பலன்களை தந்து கொண்டே இருந்தது  . நாமும் நமக்கு இழைக்கப்படும் எல்லா துரோகங்களையும் மன்னிக்க பழகி கொள்ள வேண்டும்

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது . மேலும் இதை நாம் சரியாக கடைபிடிக்கவும்,ஒவ்வொருவரும் சகோதரதுவத்துடன் சமுதாயத்தில் வாழவும் நம் அன்றாட நிகழ்வில் இதை பெருமானார் ஸல் அவர்கள் நமக்கு கற்று தந்து இருக்கின்றார்கள்.


1.தொழுகையின் ஸப்புகளை சரி செய்ய சொல்லி கொடுக்கும் போது அத்தோடு சமுக ஒற்றுமையையும் சேர்த்தே சொன்னார்கள் : 



عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ  قَالَ أَبُو مَسْعُودٍ فَأَنْتُمْ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا

2.முஸாபஹா செய்ய சொல்லிகொடுக்கும் போது


قالَ النَّبِيُّ صلى الله عليه وسلّم: «تَصَافَحُوا فَإنَّ المُصَافَحَةَ تَذْهَبُ بِالشَّحْنَاءِ


3.சலாம் சொல்வதை கற்று கொடுத்தார்கள்


قال رسول الله صلى الله عليه وسلم : " لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أو لا أدلكم على شيء إذا فعلمتموه تحاببتم ؟ أفشوا السلام بينكم " رواه مسلم

இந்த மூன்று செயல்களையும் பெருமானார் செய்ய சொன்ன காரணத்தை உற்றுநோக்குகிற போது இவை மூன்றுமே மற்ற சகோதரர்களோடு இணக்கத்தோடு வாழுவதற்காகவே என்பது புரிகிறது.


இப்படி எல்லா வற்றிலும் சகோதரத்துவத்தையும் பிறர் நலனையும் பேணுமாறும்  வலியுறுத்துகிறது நம் மார்க்கம். முக்கியமாக இதனை முழுமையாக பின்பற்ற அறியாத நபர்களுக்கு அதனை கொண்டுசேர்க்கவேண்டும். சமுதாயத்தை சீர்படுத்தவேண்டும். அதற்கு முக்கிய பொறுப்புகளை வகிக்கும் சமுதாய நலன் விரும்பிகள் மற்றும் உலமாக்கள் அதனை பொறுப்பிலெடுக்க வேண்டும். இன்றைய நம் நாட்டின் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சமூக ஒற்றுமையின்மை தான். அதனை சரிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முஹல்லா மக்களும் அந்த முஹல்லாவின் பள்ளிவாசலின் கீழ் ஒன்றுபட வேண்டும். ஒவ்வொரு பள்ளிவாசலின் நிர்வாகமும் ஒரே அமைப்பின் கீழ் ஒன்றுபட வேண்டும். தற்போதைய நாளில் நம் சமூகத்திற்கு அல்லாஹ் தகுதிவாய்ந்த சிறந்த பொறுப்பாளர்களை நம் சமூகத்திற்கு வழங்கி இருக்கின்றான். இது போன்ற காரியங்களை முன்னெடுத்து, சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும். துவண்டு கிடைக்கும் முஸ்லீம் சமுதாயத்தை ஒன்று திரட்ட வேண்டும். அல்லாஹ் நமக்கு அதற்குரிய பாக்கியத்தை தந்தருவானாக. இன்னும் இஸ்லாத்தின் எதிரிகளை விட்டும் நம் நாட்டு மக்களை பாதுகாத்தருள்வானாக!! ஆமீன் !

No comments: