அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 4 January 2018

முஸ்லிம் தனியார் சட்டம் 1937



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

எல்லா கால கட்டத்திற்கும், சூழ்நிலைக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற பொருந்தக்கூடிய, பின்பற்ற தகுந்த நீதமான ஒரு மார்க்கத்தையும், அதற்கு தகுந்த சட்டத்தையும் தான் அல்லாஹு தஆலா நமக்கு வழங்கி இருக்கின்றான்.

அல்லாஹ் தனது அருள் மறையில் :

وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக்கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்!   (5:45)

இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாமிய சட்டக்கலையில் தேர்ச்சி பெற்ற இமாம்களால் தொகுக்கப்பட்ட இஸ்லாமிய பிக்ஹ் சட்டத்தை தான் உலகில் வாழும் இலட்சக்கணக்கான மக்களும் பின்பற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு மதத்தினருக்கும் சில குறிப்பிட்ட செயல்பாடுகளில் தனி சட்டத்தை அவரகள் பின்பற்றுவதால் அதற்கு  ஏற்றார் போல இந்திய அரசியல் சாசன சட்டம் அமைக்கப்பட்டது. அதற்கென தனியார் சட்டமும் வடிவமைக்கப்பட்டது.


முஸ்லிம் தனியார் சட்டத்தின் உள்ளடக்கம்:


இது இரு பிரிவுகளக் கொண்டதாகும்.

1. ஆள்சார் சட்டம் - ( Personal Law )

    இச்சட்டத்தின் கீழ் பின்வருவன உள்ளடங்குகின்றன.

             1. திருமணம், பலதார மணம்
             2. விவாகரத்து
             3. பராமரிப்பு
             4. பிரதி பலன்களை எதிர்பார்க்காத கொடைகள்
             5. பருவமடைதல்
             6. தத்தெடுத்தல் அல்லது மகவேற்பு
             7. பிள்ளைகளது பாதுக்காப்பு
             8. திருமணம் செய்யத் தடுக்கப்பட்டோர்
             9. மஹரும்  கைக் கூலியும்


2. ஆதனம் சார் சட்டம் - ( Law of Property )

     இப்பிரிவில் பின்வரும் விடங்கள் உள்ளடங்குகின்றன.

           1. உயில் எழுதாத சொத்து வாரிசுரிமை:
                 உயில் எழுதாது மரணிப்பவர் சார்ந்த மத்ஹப் சட்டத்தின் பிரகாரம் வாரிசுகள் சொத்துக்களைப் பெறுவர்
           2. பிறப்பின் மூலம் வாரிசுரிமை
           3. வாரிசின் வகை
           4. வக்பு அல்லது நம்பிக்கைப் பொறுப்பு


இந்திய மண்ணில் இஸ்லாம் : 


இந்தியாவில் பலநூறு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள், ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமானதும் 'வாரன் ஹேல்டிங்ஸ் பிரபு' காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாயின. ஹிந்துக்களுக்கு ஹிந்துமத சாஸ்திர அடிப்படையிலும், முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்ட அடிப்படையிலும் உரிமை இறக்கம்.

(Succession) வம்சாவளி சொத்து (INHERITANCE), சாதி (CASTE) போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதி வழங்க 1772-ம் ஆண்டில் வகை செய்யப்பட்டது. மேலும் 'இந்தியக் குற்றவியல் சட்டம்' (INDIAN PENAL CODE) என்பதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டம் (MUSLIM CRIMINAL LAW) முழுமையாக மாற்றப்பட்டது. பின்னர் 1937-ம் ஆண்டில் 'ஷரீஅத் சட்டம்' (MUSLIM PERSONAL LAW SHARIAT APPLICATION ACT 1937) இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின் சரத்துகளில் விவாகரத்து, வாழ்க்கைப் படி (ஜீவனாம்சம்), மஹர் தொகை, காப்பாளராகுதல், அன்பளிப்பு, டிரஸ்ட், வக்ஃபு, திருமணம், பெண்களுக்கான சிறப்புச் சொத்து, உயிலில்லா உரிமையிறக்கம் (INTESTATE SUCCESSION) ஆகிய வழக்குகளில் முஸ்லிம்களுக்கு ஷரீ அத் சட்ட அடிப்படையிலே நீதி வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் காலப்போக்கில் நாட்டில் இயற்றப்படுகின்ற சட்டங்களின் மூலம் இந்த ஷரீஅத் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளிலும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு முரண்பாடான தீர்ப்புகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்குமே மாறானவையாக அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டு: ஷா பானு சீவனாம்ச வழக்கு.

பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகின்றன.


சமயச் சார்பற்ற நாடு : 


சமயச் சார்பற்ற நாடு எனப் பிரகடன்படத்தப்பட்டுள்ள பாரதத்தில் ஒருமைப்பாட்டுணர்வும், சகோதரத்துவமும் நிலை பெறவேண்டுமானால், தனியார் சட்டங்களில் அரசூசா, நீதிமன்றங்களோ தலையிடாமல் இருக்க வேண்டும். தனியார் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய அரசு விரும்பினால், சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளை-வரவேற்பவை, அல்லது எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஹிந்துச் சட்டத்தில் இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. வளர்ந்து வரும் சமுதாயத்தில் நீதி வழங்குவதில் ஆண்-பெண் வேறுபாடு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹிந்துச் சட்டத்தில் சில கட்டுபாடுகளைத் தளர்த்த வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. இதனால் திருமணங்களைப் பற்றிய புது எண்ணங்களும், விவாகரத்துக்களை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தும் ஹிந்துக்கள் இடையேயும் மேலோங்கி, 1955-ம் அண்டு ஹிந்து திருமணச் சட்டம் அமலாக்கப்பட்டது.

இதன்மூலம் விவாகரத்து உரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, சீர்திருத்த திருமணத்திற்கான அங்கீகாரம் ஆகியவை ஹிந்துக்களுக்கும் கிடைத்தன. இது அந்த சமுதாய மக்களின் ஆதரவைக் கொண்டும், கோரிக்கைகள் பேரிலும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் :


இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் ஒன்றினால் மட்டுமே, மனித இனத்தை மாபெரும் முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். குழப்பமும் பீதியும் பரவி, அமைதி இழந்து தவிக்கின்ற இன்றைய உலகுக்கு ஷரீஅத் சட்டம் இறைவனால் அருளப்பெற்றது. என்றென்றும் மாறாதது. அனைத்துலக மக்களுக்கும் வழிகாட்டக் கூடியது.

இன்றைய உலகில் அக்கிரமங்கள் மலிந்து காணப்படுவதற்குக் காரணம், இறைச் சட்டங்களை மனிதன் மறந்து விட்டது தான். ‘அல்லாஹ் அருளிய (இவ்வேதத்) தைக் கொண்டு நீதி வழங்காதவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவர்’ எனத் திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது. (5:45) பற்பல தத்தவங்கள் தோன்றிழியுள்ள விரிடைந்த உலகத்தில் புதுப்பித்துக் கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் விளைவாக மார்க்கத் தீர்ப்புகள் வழங்குவதில் மிகவும் கவனம் தேவைப்படுகிறது. ஷரிஅத் சட்டத்தில் நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு, அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளை நீதிபதிகள் நினைவு கூர வேண்டும்.

மார்க்கத் தீர்ப்புகள் வழங்குவதில் மிகவும் கவனம் தேவைப்படுகிறது. ஷரீஅத் சட்டத்தில் நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு, நபிகள் நாயகம் அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகள் முன்னுதாரனமாய் உள்ளன.சான்று தேவை

நபித்தோழர் முஆது பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு புதிய நீதிபதியாக நியமித்து அனுப்புவதற்கு முன்பு நபிகள் நாயகம் அவர்கள் விடுத்த வினாக்களுக்கு விடை கூறும் போது 'திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு நான் நீதி வழங்குவேன். விஷயம் குர்ஆனில் காணப்படாத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையும் செயலையும் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன். நபிமொழியிலும் நபி வழியிலும் விடை காணக்கிடைக்காவிட்டால், என் பகுத்தறிவைப் பயன்படுத்தி (மனச் சாட்சிக்கொப்ப) நீதி வழங்குவேன்' என நீதிபதியாக நியமனம் பெற்ற நபித்தோழர் பதிலளித்தார். இப்பதில் நபிகள் நாயகம் அவர்களுக்கு மனநிறைவைத் தந்தது. (நூல்: திர்மிதீ, அபூதாவூது, தாரமீ)

இஜ்மா, கியாஸ்[தொகு]

முத்தலாக் தடை மசோதாவின் பின்னணி : 


1980களின் மத்தியில் ஷாபானு வழக்கு இந்திய முஸ்லிம் சமுதா யத்தில் பெரும் விவாத அலை களை உண்டு பண்ணிய பிறகு தான் தனியார் சட்டம் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தி யில் ஏற்பட்டது எனலாம்.
70 வயது நிரம்பிய பேகம் ஷா பானுவை அவரது கணவர் விவா கரத்து செய்கிறார். இதனால் ஷா பானு குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.) 125ன் கீழ் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கேட்டு வழக்குத் தொடர, இதன்படி ஷா பானு மறுமணம் செய்யும்வரை அல் லது மரணிக்கும்வரை ஜீவனாம் சம் கொடுக்க வேண்டும் என கண வருக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். இது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

ஷா பானுவின் கணவர் இதை மறுத்து இத்தா (விவாகரத்துக் குப் பின் காத்திருப்பு காலம்) வரைதான் பராமரிப்புத் தொகை தர முடியும் என்றார். இதற்கு தனி யார் சட்டத்தை ஆதாரமாகக் காட்டினார் ஷா பானுவின் கணவர். பின்னர் உச்ச நீதிமன்றமும் ஷா பானுவிற்கு ஆதரவாக தீர்ப் பளித்தது. சி.ஆர்.பி.சி. 125ன்படி வாழ்க்கை முழுவதும் ஷா பானு விற்கு பராமரிப்புத் தொகை தர வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தீர்ப்பளித்தார்.

சி.ஆர்.பி.சி. 125 என்பது இந் திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமாகும் என்ப தால் இதன் கீழ் ஷா பானு உரிமை கோரியிருந்தார். "சி.ஆர்.பி.சி. 125 பிரிவு எல்லோ ருக்கும் பொதுவானது என்கிற வகையில் இதன் கீழ் ஷாபானு உரிமை கோர முடியும். முஸ்லிம் தனியார் சட்டம் இந்த விஷயத் தில் பொருந்தாது' என நீதிபதி சந்திர சூட் தனது தீர்ப்பில் குறிப் பிட்டிருந்தார்.

இஸ்லாமிய உலமாக்கள் இந்த தீர்ப்பை எதிர்த்தனர். முஸ்லிம் தனியார் சட்டத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என கொந்தளித் தனர். ஷரீயத் சட்டம் இறைச் சட்டம். அதில் நீதிமன்றம் தலை யிடக் கூடாது என்றனர். இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், அப்துல்லாஹ் யூசுஃப் அலி யின் ஆங்கில மொழி பெயர்ப்பு திருக்குர்ஆனிலிருந்து

 وَاِنْ اَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا‌ ؕ اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏ 

நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்புங்கள். இது உங்களிடமுள்ள ("தவ்றாத்" என்னும் வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இதை நிராகரிப்பவர்களில் நீங்களே முதன்மையானவர்களாகிவிட வேண்டாம். (இவ்வேதத்தைப் பற்றி உங்களிடமுள்ள "தவ்றாத்"தில் கூறியிருக்கும்) என்னுடைய வசனங்களை (மாற்றிச்) சொற்ப விலைக்கு விற்றுவிட வேண்டாம். நீங்கள் (மற்ற எவருக்கும் பயப்படாது) எனக்கே பயப்படுங்கள்.

 என்ற  2.41 வது வசனத்தை எடுத்துக் காட்டி விளக்கம் அளித்திருந்தார் நீதிபதி!


"விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். இது இறையச்சமுடையோருக்கு கடமையாகும்' என்கிறது இந்த வசனம்.

நீதிபதி சந்திர சூட், தொடர்ந்து ஜீவனாம்சம் தர வேண்டும் என தீர்ப்பெழுதிவிட்டு, மேற் கண்ட திருக்குர்ஆன் வசனத்தை அந்த தீர்ப்பிற்கு தவறாக பொருத்தியிருந்தார்.

இதனால், குர்ஆன் வசனத் திற்கு எப்படி நீதிபதி தவறான அர்த்தம் கொடுக்கலாம் என முஸ் லிம்கள் கொந்தளித்தனர்.

இந்த சர்ச்சை பெரும் அரசியலாக உருவெடுத்தது. தேசிய அளவில் விவாதமாக்கப்பட்டது இந்த தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம்கள் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இறுதியில் நெருக்கடி யின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு பணிந்தது. பின்னர் சி.ஆர்.பி.சி. 125வது பிரிவிலிருந்து முஸ்லிம் பெண்க ளுக்கு விலக்களிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது ராஜீவ் அரசு. இது தான் முஸ்லிம் பெண்கள் (விவா கரத்து பாதுகாப்பு உரிமைச்) சட் டம் 1986.

1986லேயே இது அமுலுக்கு வந்தது. இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பின்னடைவு என்று, முற்போக்கு முஸ்லிம்கள் சிலர் கருத்துரைத்தனர். சி.பி. ஆர்.சி. 125 சட்டம் இஸ்லாத்திற்கு முரணானதல்ல என்றும் அவர் கள் கூறினர்.
புதிய சட்டம் ஒரே தடவை மொத்தமாக ஜீவனாம்சம் தரச் சொல்லி வலியுறுத்துகிறது. முஸ் லிம் அறிஞர்கள், திருக்குர்ஆனின் 2.41வது வசனம், விவாகரத்து செய்யும்போது போதுமான வச திகளுடன் ஒரே தடவை முழுமை யான ஜீவனாம்சம் தருவதை "நல்ல முறையில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்' என்று கூறுவ தன் மூலம் இந்த வசனமும் தெளி வுபடுத்துகிறது என்கின்றனர்.

முஸ்லிம் பெண்கள் சட்டம் 1986, கணவர் முன்பு திருமணத் தின்போது மஹர் தராமல் இருந் திருந்தால் அந்த மஹர் தொகையை தர வேண்டும்; குர்ஆனில் சொல் லியிருப்பதுபோல் ஒரே தடவை முழுமையான ஜீவனாம்சம் தொகை தர வேண்டும்; அதோடு, மூன்று மாத காலம்வரை இத்தா கால பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்கிறது.


இந்த சட்டத்தின்படி, லக்னோ மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன் றம் முதன் முறையாக ரேகா தீட் சித் என்ற (முஸ்லிமாக மாறிய) பெண்ணுக்கு 80 ஆயிரம் ரூபாய் ஜீவ னாம்சம் ஒரே தடவை தர வேண்டும் என்றும், இதில் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வும், 20 ஆயிரம் ரூபாய் மூன்று மாத இத்தாவிற்கான பராமரிப் புத் தொகையாகவும் தர வேண் டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும் ஏராளமான வழக் குகள் சி.ஆர்.பி.சி. 125ன் கீழ் முஸ் லிம் பெண்களால் நீதிமன்றங்க ளில் தாக்கல் செய்யப்படுகின்றன. பல பெண்கள் அமைப்புகள் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 1986ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தி ருந்திருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் மும்பை உயர் நீதிமன்றம் இந்த புதிய சட்டத்தின்படி ஒரே தடவை ஜீவனாம்சம் வழங்கி தீர்ப்பளித்தது.
இதேபோல கொல்கத்தா உயர் நீதிமன்றமும் ஷகிலா பர்வீன் என்ற பெண்ணின் விவாகரத்து வழக்கில் அவள் வாழ்க்கை முழு வதற்கும் தேவையான பொருளா தாரத்தை ஒரே தடவையில் தர வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.

கடந்த ஜூலை 11, 2000த்தில், இத்தா காலத்திற்குள் விவாக ரத்து செய்யப்பட்ட பெண்ணிற்கு முழு வாழ்க்கைக்குமான நியாய மான வசதிகளை செய்து கொடு க்க வேண்டும் அல்லது அப் பெண் மறுமணம் செய்யும்வரை அல்லது 1986 பெண்கள் பாது காப்பு சட்டத்தின் கூறுகளுக்கு ஒப்ப இவற்றை செய்து தர வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத் தின் முழு அமர்வு தீர்ப்பளித்தி ருந்தது.


நீதிமன்றங்கள் முஸ்லிம் பெண்கள் சட்டம் 1986ன் பிரிவு 3 (ஏ)விற்கு தவறான அர்த்தங்களும் அவ்வப்போது கொடுத்து இத்தா காலம் முடிந்த பின்பும் பெண் ணுக்கு பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்று தீர்ப்பளிக்கின் றன.


ஆனால் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (ஏ) A Reasonable and Fair Provision and Maintenance to be made and paid to her within the iddat period by her former husband என்கிறது.


(நியாயமான முறையில் பொருளாதார வசதிகளும் பராமரிப்புத் தொகையும் முன்னாள் கணவரிட மிருந்து இத்தா காலத்திற்குள் பெண்ணுக்கு கொடுக்க வேண் டும்) இந்த அடிப்படையில் நீதிமன் றங்கள் செயல்பட்டாலும் பிரச் சினை இல்லை. ஆனால் இதற்கு தவறான அர்த்தம் தந்து சி.ஆர். பி.சி. 125ஐ அமல்படுத்தி தனியார் சட்டத்தை காலி செய்ய பார்க் கின்றன நீதிமன்றங்கள்.


ஆணாதிக்கத்தனம் வெளிப்படும் இது போன்ற ஜமாஅத்துகளின் செயல்பாடுகள்தான் இஸ்லாமிய பெண்களுக்கு உரிமைகள் மறுக் கப்படுகின்றன என பெண்ணுரி மைவாதிகள் பேசவும், நீதிமன் றங்கள் தனியார் சட்டத்தில் தலையிடவும் காரணிகளாகின் றன.  எப்படியிருப்பினும், ராஜீவ் காந்தி அரசு கொண்டு வந்த 1986 சட்டத்தின்படி நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலே ஜீவனாம்ச வழக்குகள் இலகுவாக தீர்க்கப்படும். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீதிமன்றங்கள் மீறுவ துதான் பிரச்சினையே!


இவர்களின் நோக்கம் தான் என்ன ?

இஸ்லாமிய சட்டங்களை ஒவ்வொன்றாக நீக்கி, அதற்கெதிரான சட்டங்களையும் அரசியல் சாசனத்தின் முழு அமைப்பையும் அதன் வழக்கத்திற்கு எதிராக மாற்றி அமைத்து இந்த நாட்டையே இந்துத்துவ பாசிச சட்டத்திற்கு உட்பட்டதாக ஆக்க வேண்டும் என்பதே இந்த  பாசிச கும்பலின் நோக்கம். 


இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் தான் ஆரம்பத்தில் பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்பட வேண்டும் என்றும், இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றப்பட கூடாது என்றும் ஓர் பிரச்னையை உருவாக்கினார்.

முஸ்லிம்களை குறிவைத்தே மத்தியில் ஆளும் அரசின் அனைத்து நகர்வுகளும் இருக்கின்றது என்பது கண்கூடாக பார்க்க முடிகிறது.

பொது சிவில் சட்டத்தை தூக்கி பிடிக்கும் அமல் படுத்த துடிக்கும்  உச்ச நீதிமன்றம்,  அனைத்து தரப்பினருக்கும் சமத்துவமாக இது அமையும் என்று காரணத்தை பறைசாற்றி இதனை முஸ்லிம்கள் மீதி திணிக்க பார்க்கின்றது. ஆனால் இதுவரை தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தெரியும், எது சமத்துவத்தை கற்பிக்கும் என்று.

எல்லா தரப்பினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற பிரச்சனைக்கு நீதிமன்றம், இதுவும் சமத்துவத்தை தான் கற்பிக்கிறது  ! எனவே எல்லா தரப்பினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லவில்லையே ! மாறாக, ஆகம விதி படி யார் அர்ச்சகராக முடியுமோ அவர் மட்டும் தான் ஆகா முடியும் என்று நீதத்தை சொன்ன நீதிமன்றம். இன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக சமத்துவம் என்று காரணம் சொல்லி திரிவது, இவர்களுக்கு பின்னல் இருந்து இயக்கம் பாசிச கும்பலின் சதி வேலை என்பது வெட்டவெளிச்சமாகிறது.


நம்முடைய மார்க்க சட்டத்தின் படி வாழ்வது நமக்குரிய உரிமையாகும். அதனை ஒரு போதும் விட்டுக்கொடுக்க கூடாது. நமக்கு எப்படி நம் முன்னோர்கள் மிக பாதுகாப்புடன் நாம் வாழ்வதற்கு வழிவகை செய்து தந்தார்களோ, அதனை நம்முடைய சந்ததியினருக்கும் பாதுகாப்பாக கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. 

ஷரியத்  சொற்படி வாழ்வோம்! அல்லாஹ் நமக்கு உதவி புரிவானாக ! ஆமீன் !~



1 comment:

MUSLIM MOON CITING said...

Congratulations Article published in time.
Kaziyar Erode.