அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 28 December 2017

வலிமார்கள் சமூக சேவைகள்




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்



பொதுவாகவே இறைநேசர்கள் அல்லாஹ் விரும்பும் பாதையில் தான் வாழ்வார்கள். அதிலும் ஒரு சாரார் தனக்காக அல்லாமல் பிற மக்களுக்காகவும் சமுதாயத்துக்காகவுமே தன்னுடைய வாழ்நாளை செலவு செய்வர்.  அதுவே அவர்களின் இயற்கை குணமாகவும் அமைந்துவிடும். 

அல்லாஹ் தன் அருள்மறையில் : 

وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌  وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌

இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; 

சாதாரணமாகவே அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் பிறருக்கு உதவிகள் செய்வதிலும், அவர்களை நேர்வழிப்படுத்துவதிலும் தான் கழிந்திருக்கும். 

ஸஹாபாக்களை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அந்த வகையில் தான் பரிட்சயப்படுத்தினார்கள். இஸ்லாமிய ஆட்சிபுரிந்த அனைத்து கலீஃபாக்களும் தங்களுடைய முழு நேரத்தையும் மக்களின் நலனை பாதுகாப்பதில் தான் செலவுசெய்தார்கள். 

அவர்கள் செய்த சமூக சேவைகளை கொண்டு தான் இன்று நாம் இஸ்லாமியர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 


இஸ்லாமிய மஹல்லாக்கள் : 

இன்று காணும் இடங்களில் செல்லும் ஊர்களில் நாம் தொழுவதற்கு பள்ளிவாசல்களும், ஓய்வெடுக்க இடங்களும் உள்ளது என்றால் அதை இந்த சமுதாயத்திற்கு உருவாக்கி தந்தவர்கள் வலிமார்கள். 

ஒவ்வொரு ஊர்களிலும் இஸ்லாமிய மார்க்கத்தை மக்களின் கல்புக்குள் புகுத்தியது அவர்கள் தான். அவர்கள் மூலம் தான் மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை கற்றுக்கொண்டார்கள். 

ஸஹாபாக்கள் தங்கள் செய்துவந்த வியாபாரத்தின் போது அவர்களின் நீதத்தையும், உண்மை குணத்தையும் பார்த்தே பலர் இஸ்லாம் ஆகி இருக்கின்றனர். 

ஸஹாபாக்களின் சமூக அக்கறை :


அன்று ஸஹாபாக்களில் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முதல் அனைத்து ஸஹாபாக்களும் சமூகத்திற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலம் நமக்கு கிடைத்த பொக்கிஷமாகிய குர்ஆனை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணினார்கள். அவர்களுடைய எண்ணத்தின் தொடர்ச்சியாக, உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் குர் ஆன் முழுமையான முறையில் ஒன்று சேர்க்கப்பட்டது. 

 وسببه: أنه قُتل في معركة اليمامة عدد كبير من القراء منهم سالم مولى أبي حذيفة أحد من أمر النبي  بأخذ القرآن منهم , فأمر أبو بكر بجمعه لئلا يضيع , ففي البخاري (4986) أن عمر بن الخطاب أشار على أبي بكر  بجمع القرآن بعد وقعة اليمامة, فتوقف , فلم يزل عمر يراجعه حتى شرح الله صدر أبي بكر لذلك فأرسل إلى زيد بن ثابت فأتاه وعنده عمر فقال له أبو بكر: إنك رجل شاب عاقل لا نتهمك وقد كنت تكتب الوحي لرسول الله  فتتبع القرآن فاجمعه , قال زيد: فوالله لو كلفوني نقل جبل من الجبال ما كان أثقل عليّ مما أمراني به , قال: فتتبعت القرآن أجمعه من العسب واللخاف وصدور الرجال , فكانت الصحف عند أبي بكر حتى توفاه الله , ثم عند عمر حياته , ثم عند حفصة بنت عمر  .. . رواه البخاري مطوّلاً 


أن الباعث لجمع أبي بكر "خشية أن يذهب شيء من القرآن" , والباعث لجمع عثمان "منع الاختلاف في قراءته" ولم يغير  حرفاً مما في مصحف أبي بكر  , وأنّى له ذلك , فعن عبد الله بن الزبير  قال : قلت لعثمان  والذين يتوفّون منكم ويذرون أزواجاً  قد نسختها الآية الأخرى , فلِمَ تكتبها أو تدعها ؟ قال : يا ابن أخي لا أغيّر شيئاً من مكانه . (رواه البخاري 6/29 برقم 4530) .

மார்க்க சட்டங்களை சமுதாயத்திற்கு தந்த  நல்லோர்கள் :

உலகின் அதிகமான மக்கள் பின்பற்றும் ஹழ்ரத் இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் வாழ்நாளை எப்படி கழித்தார்கள் என்பது இன்று அவர்களை போற்றும் மக்களின் செயல்பாடுகளில் நாம் அறிந்துகொள்ளலாம். 

ان يتصف بأنه شديد الذكاء و سريع البديهة كما كان رجلا زاهدًا متعبدًا. ويعتبر أبو حنيفة أحد التابعين كان أبو حنيفة النعمان يعمل في حقل التجارة بصدق وأمانة كبيرين و استمر في ذلك معظم حياته فاكتسب خبرة كبيرة مميزة في العرف والعادة و كان من أشد الرجال معرفة في طرق الناس في البيع والشراء.

தாபிஈன்களில் ஒருவரான ஹழ்ரத் அவர்கள் தங்களின் தேவைக்கான வியாபாரத்தை மட்டும் அல்லாமல், மார்க்கத்தின் பல சட்டங்களை மக்களுக்கு தொகுத்து வழங்குபவர்களாக இருந்தார்கள்.

தங்களின் வாழ்வில் மார்க்க மேதைகளாக வாழ்ந்திருந்த இமாம்கள் அனைவருமே மிகப்பெரும் இறைநேசர்களாக வாழ்ந்தார்கள். ஒருபொழுதும் நான் தான் உயர்ந்தவன் என்ற அந்த எண்ணம் அவர்களுக்கு தோன்றியதில்லை. 


قال الإمام أبو حنيفة :" إذا صح الحديث فهو مذهبي "، وقال رحمه الله :" لا يحل لأحد أن يأخذ بقولنا ما لم يعلم من أين أخذناه " ، وفي رواية عنه :" حرام على من لم يعرف دليلي أن يفتي بكلامي " ، زاد في رواية أخرى :" فإننا بشر ، نقول القول اليوم ونرجع عنه غدا "، وقال رحمه الله :" إذا قلت قولا يخالف كتاب الله تعالى ، وخبر الرسول صلى الله عليه وسلم فاتركوا قولي "

وقال الإمام مالك رحمه الله :" إنما أنا بشر أخطيء وأصيب ، فانظروا في رأيي ، فكل ما وافق الكتاب والسنة فخذوه ، وكل ما لم يوافق الكتاب والسنة فاتركوه " ، وقال رحمه الله :" ليس أحد بعد النبي صلى الله عليه وسلم إلا ويؤخذ من قوله ويترك ، إلا النبي صلى الله عليه وسلم "

وقال الإمام الشافعي رحمه الله :" ما من أخذ إلا وتذهب عليه سنة لرسول الله صلى الله عليه وسلم ، وتعزب عنه - أي تغيب - ، فمهما قلت من قول ، أو أصَّلت من أصل ، فيه عن رسول الله صلى الله عليه وسلم خلاف ما قلت ، فالقول ما قال رسول الله صلى الله عليه وسلم ، وهو قولي "

وقال الإمام أحمد :" لا تقلدني ولا تقلد مالكا ولا الشافعي ولا الأوزاعي ولا الثوري ، وخذ من حيث أخذوا " ، وقال رحمه الله :" رأي الأوزاعي ورأي مالك ورأي أبي حنيفة كله رأي ، وهو عندي سواء ، وإنما الحجة في الآثار - أي الأدلة الشرعية "



தற்காலத்து வலிமார்கள்  மற்றும் சேவைகள்   : 


வலிமார்கள ஒரு காலத்திற்கு மட்டும் உள்ளவர்கள் அல்ல. மாறாக எல்லா காலத்திற்கும் அவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள். சமூகத்திற்கு தேவையான சேவைகளை செய்துகொண்டே இருப்பார்கள். 

தமிழகத்தின் தாய் மதரசா பாக்கியத்தின் நிறுவனர் அண்ணல் ஆஃலா ஹழ்ரத் அவர்கள்  தங்களின் சுய வாழ்வை மட்டும் காணாமல் பிறருக்கும் மார்க்க சட்டங்களும் இஸ்லாமிய மார்க்கத்தின் அனைத்தும் தெரிய வேண்டும் என்று தன்னுடைய கஷ்டமான காலகட்டத்திலும் பல இன்னல்களை சமாளித்து வந்த வெற்றி தான்  இன்று இந்தியா முழுவதும் மார்க்க கல்வியை பரப்பி சமுகத்திற்கு சேவை செய்யும் உலமாக்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் தாய் மதரசா வாக திகழ்கிறது. 

தமிழகத்தின் மட்டுமல்ல, உலகின் பல்வேறு இடங்களிலும் மார்க்க கல்வியை போதிக்கும், இன்னும் மார்க்க சேவை செய்யும் சமூக அக்கறை கொண்ட மக்களை உருவாக்கி கொண்டிருக்கும் அனைத்தும் இப்படி நல்லோர்கள் நாதாக்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து தான் சமுதாயத்திற்கு சேவைகளை செய்து வருகிறார்கள்

இன்று தமிழகத்தில் முதலும் முன்னோடியாக திகழும் எங்களை உருவாக்கிய பிலாலியா அரபிக் கல்லூரியின் நிறுவனரான மற்றும் பல உலமாக்களின்  அல்லாமா ஆரிபு பில்லாஹ் ஆஷிகுர் ரசூல் பிலாலிஷா ஜூஹூரி அவர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து தான் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மார்க்கத்தை போதிக்கும் கல்விக்கூடங்களை நடத்தி சமூக அக்கறை கொண்ட உலமாக்களை உருவாக்கி வருகின்றார்கள். 
அல்ஹம்துலில்லாஹ் !! 

No comments: