அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 7 February 2019

நூர் எனும் ஒளி




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

இந்த அகிலம் அனைத்தும் ஒளியை கொண்டே இயங்குகிறது. இந்த சமுதாயம் மிகவும் நேர்த்தியான முறையில் வழிநடந்து செல்ல, அல்லாஹ் தனது அருள்மறையை இறக்கி தந்தான். அதே போன்று தான் அல்லாஹு தஆலா அதனுடன் நூர் எனும் ஒளியையும்அனுப்பியதாக, தனது அருள்மறையில் கூறி காட்டுகின்றான். 

 قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ‏ 


நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.  (5:15)

அல்லாஹு தஆலா முதலில் நூர் என்னும் ஒளியை கூறிவிட்டு பின்பு தான், தெளிவான வேதத்தை  குறிப்பிடுகிறான். அந்த நூர் என்பது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தான். அவர்களை கொண்டு தான் அல்லாஹ் இந்த அகிலத்தை ஒளிரச்செய்கிறான்.  அதே நூர் என்னும் ஒளி தான் அனைத்து முஃமின்களின் உள்ளங்களிலும் ஈமானாக ஒளிர்கிறது.


قال أبو جعفر: يقول جل ثناؤه لهؤلاء الذين خاطبهم من أهل الكتاب: " قد جاءكم "، يا أهل التوراة والإنجيل=" من الله نور "، يعني بالنور، محمدًا صلى الله عليه وسلم الذي أنار الله به الحقَّ، وأظهر به الإسلام، ومحق به الشرك، فهو نور لمن استنار به يبيِّن الحق. ومن إنارته الحق، تبيينُه لليهود كثيرًا مما كانوا يخفون من الكتاب

இரு விதமான ஒளி  இருந்தால் மட்டுமே, ஒருவன் அருள்மறையை ஓத முடியும். ஒன்று, அவனது பார்வை எனும்    கண்களுக்குரிய ஒளி. மற்றொன்று  கண்களுக்கு வெளியில் இருக்க வேண்டிய ஒளி. அந்த இரு ஒளிகளும் இணைந்து ஒருசேர கிடைத்தால் மட்டுமே அவன் அருள்மறையை கண்களை கொண்டு பார்த்து ஓதி விட முடியும். அதில் ஒன்று இல்லாவிடினும், 

எப்படி, ஒளி இல்லாத கண்களை கொண்டு ஒருவன் அருள்மறையை ஓத முடியாதோ, அதே போன்று தான், ஈமான் எனும் ஒளி இல்லாமல் நேர்வழியை அடைய முடியாது. அந்த ஒளி அவனது உள்ளத்திலும் வேண்டும். வெளியிலும் வேண்டும். 

அதனால் தான் அல்லாஹ் தந்து அருள்மறையில், அல்லாஹ்வே  வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான் என்பதை தெள்ளத்தெளிவாக கூறுகின்றான். 




 اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌ ؕ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌ ؕ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ‏ 

அல்லாஹ், வானங்கள் பூமி (ஆகியவை)களின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கும்) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக்கொண்டு) இருக்கின்றது. (அதில்) பாக்கியம் பெற்ற "ஜைத்தூன்" மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகின்றது. அது கீழ்நாட்டிலுள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. அந்த எண்ணெய் நெருப்புத் தொடாவிடினும் பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடிய வர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகின்றான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன்னுடைய தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் மிக்க அறிந்தவன்.  (24:35)


மற்றொரு வசனத்தில் அல்லாஹு தஆலா :

 وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ

இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப் பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங் களையும் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (39:69) 


அதற்கான  விளக்கமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வார்த்தைகள் : 

قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ اللَّهَ تَعَالَى خَلَقَ خَلْقَهُ فِي ظُلْمَةٍ فَأَلْقَى عَلَيْهِمْ نُورًا مِنْ نُورِهِ فَمَنْ أَصَابَهُ مِنْ ذَلِكَ النُّورِ اهْتَدَى وَمَنْ أَخْطَأَهُ ضَلَّ فَلِذَلِكَ أَقُولُ جَفَّ الْقَلَمُ عَلَى عِلْمِ اللَّهِ عَزَّ وَجَلَّ». 


உள்ளங்களின் ஒளி :

உள்ளங்களில் ஒளி இருந்தால் தான் ஒரு அடியான் நேர்வழி பெறுகின்றான். அந்த உள்ளத்தின் ஒளியை அல்லாஹ்வே  தான் நாடியவருக்கு  தருகின்றான். 

அல்லாஹ் தனது அருள்மறையில்  : 

فَمَن يُرِدِ اللّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلإِسْلاَمِ

அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாமின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான்.  (6:125)



அல்லாஹ் தனது மற்றுமொரு வசனத்தில்  :

اَوَمَنْ كَانَ مَيْتًا فَاَحْيَيْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا يَّمْشِىْ بِهٖ فِى النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِى الظُّلُمٰتِ لَـيْسَ بِخَارِجٍ مِّنْهَا‌ ؕ كَذٰلِكَ زُيِّنَ لِلْكٰفِرِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ

வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவானா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன.


அந்த ஒளி உள்ளத்தில் வந்ததினுடைய அடையாளங்களாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறியது :


عن أبي جعفر قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ) قال رسول الله صلى الله عليه وسلم : " إذا دخل الإيمان القلب انفسح له القلب وانشرح قالوا : يا رسول الله ، هل لذلك من أمارة؟ قال : " نعم ، الإنابة إلى دار الخلود ، والتجافي عن دار الغرور ، والاستعداد للموت قبل الموت "

இப்படி யாருடைய உள்ளத்தில் நூர் எனும் ஒளி வந்துவிட்டதோ அவர்களின் வாழ்வில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறிய அடையாளங்களை நாம் காணலாம். 


1.நிலையான உலகின் பக்கமே சார்ந்திருப்பது

2.நிலையில்லா உலகை விட்டும் பற்றற்றிருப்பது

3.மரணம் வரும் முன்பே அதற்குரிய தயாரிப்புகளை செய்துகொள்வது

மறுமையில் பிரகாசமுடையவர்கள் : 


அல்லாஹ் மறுமையில் அவர்களது அமல்களுக்கேற்ப அவர்களுக்கு ஒளி என்னும் பிரகாசத்தை கொடுப்பான் . அவர்களின் பிரகாசத்தை கொண்டு தான் அவர்களின் தரங்கள் பிரித்தறியப்படும். 

قال عبد الله بن مسعود رضي الله عنه: يعطون نورهم على قدر أعمالهم، فمنهم من يعطى نوره مثل الجبل بين يديه، ومنهم من يعطى نوره دون ذلك. فالناس يومئذ درجات بحسب نورهم

 قال رسول الله صلى الله عليه وسلم :« أول زمرة تدخل الجنة على صورة القمر ليلة البدر، والذين على آثارهم كأحسن كوكب دري في السماء إضاءة، قلوبهم على قلب رجل واحد، لا تباغض بينهم ولا تحاسد

ஒவொருவரும் அவர்கள் செய்த அமல்களின் அளவுக்கு பிரகாசத்தை  அடைந்துகொள்வார்கள் . 


பிரகாசத்தை தரும் அமல்கள்  : 


நம்மில் ஒவொருவரும் செய்யும் அமல்களை பொறுத்து, அல்லாஹ் தன் அடியானுக்கு இந்த உலகிலும் மறுமையிலும் பிரகாசத்தை கொடுக்கின்றான்.  

ஒழு செய்வதன்  மூலம் பெறப்படும் பிரகாசம் :


قال النبي صلى الله عليه وسلم :« إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء». ومعناه: أن النور يسطع من وجوههم وأيديهم وأرجلهم يوم القيامة. فإذا أسبغ المرء وضوءه

இருளில் பள்ளிவாசலுக்கு செல்வதில் பிரகாசம் : 

قال النبي صلى الله عليه وسلم :« بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة».


ஜூம்ஆ நாளில் சூரத்துல் கஹஃப் ஓதுவதால் மூலம் கிடைக்கும் பிரகாசம் : 

قال رسول الله صلى الله عليه وسلم :« من قرأ سورة الكهف في يوم الجمعة؛ أضاء له من النور ما بين الجمعتين»

தொழுகையின் மூலம் உண்டாகும் பிரகாசம் :

 قال رسول الله صلى الله عليه وسلم :«الصلاة نور». ومعناه أنه يكون أجرها نورا لصاحبها يوم القيامة. فعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما، عن النبيصلى الله عليه وسلم  أنه ذكر الصلاة يوما فقال:« من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة من النار يوم القيامة». 

ஒளியை பெறுவதற்கான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கற்று தந்த துஆ : 

وكان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يخرج إلى الصلاة؛ سأل الله تعالى النور في أعضائه وجهاته، وطلب الهداية في جميع تصرفاته، 

فقال:« اللهم اجعل في قلبي نورا، وفي بصري نورا، وفي سمعي نورا، وعن يميني نورا، وعن يساري نورا، وفوقي نورا، وتحتي نورا، وأمامي نورا، وخلفي نورا، وعظم لي نورا». 

ஹஸ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிகம் கேட்ட துஆ  : 

وكان عبد الله بن مسعود رضي الله عنه يكثر أن يدعو بهؤلاء الدعوات: ربنا أصلح بيننا، واهدنا سبيل الإسلام، ونجنا من الظلمات إلى النور.


அல்லாஹு தஆலா நமக்கும் ஈமான் எனும் ஒளியை நம்முடைய உள்ளங்களில் தந்து, நம்மையும் மறுமையில் அதிகம் பிரகாசம் உடையவர்களாக ஆக்கி வைப்பானாக ! ஆமீன் ! 

No comments: