அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 14 February 2019

இறைவனும் அவனது நேசர்களும்









அல்லாஹு தஆலா ஒவ்வோரு சமுதாயத்திற்கும் நபிமார்களையும் இரஸூல்மார்களையும்  அவர்களின் வழிக்காட்டுதலுக்காக அனுப்பினான்.

இறுதி தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பின்பு இந்த சமூகத்தின் வழிகாட்டுதலுக்காக அல்லாஹு தஆலா வலிமார்களை இறுதிநாள்  வரை தொடர்ந்து வர செய்திருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ் ! 

அல்லாஹு தஆலா இப்படிப்பட்ட சிறப்புமிக்க உம்மத்தில் நம்மையும் ஓர் அடியானாக ஆக்கி மிகப்பெரும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ். 

அந்த வலிமார்கள் தான் ஒவொரு காலத்திலும், ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ்வினுடைய மார்க்கத்தையும், அவனது இரசூலின் வாழ்கை முறையையும், அவர்களின் முஹப்பாதையும் நம்முடைய உள்ளங்களில் விதைத்தார்கள். 

யார் அந்த இறைநேசர்கள் ?


இறைநேசர்கள் அவர்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ் அவர்களையும் பொருந்திக்கொண்டிருப்பார்கள்.  இன்னும் அவர்களுக்கு பயமோ கவலையோ இருக்காது என்று அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகின்றான். 

قال الله تعالى : ( أَلا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ . الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ . لَهُمْ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ) يونس/62-64. 


(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர்.  இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.   (10: 62 - 64)


رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏ 


இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.  (9:100)



நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், தன் ஸஹாபாக்களுக்கு இறைநேசர்கர்கள் யார் என்பதை சொல்லி கொடுத்தார்கள். 

عن أبي هريرة رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم :
 ( إن من عباد الله عبادا يغبطهم الأنبياء والشهداء . قيل : من هم يا رسول الله ؟ لعلنا نحبهم . قال : هم قوم تحابوا في الله من غير أموال ولا أنساب ، وجوههم نور على منابر من نور ، لا يخافون إذا خاف الناس ، ولا يحزنون إذا حزن الناس . ثم قرأ : ( أَلا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ ) رواه أبو داود


இறைநேசர்களை அறிந்துகொள்வது எப்படி ? 


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, ஒவ்வொருவருடைய உள்ளத்தின் நிலைமையை அவர்களின் முகத்திலேயே அறிந்துகொள்ளலாம். 

ஒருவருடைய முகமும் அவர்களின் அகத்தின் அழகையே பிரதிபலிக்கின்றது. அதே போன்று தான் இறைநேசர்கள் முகம் என்பது, இறை பிரகாசத்தில் ஜொலிப்பதை நாம் காணலாம். 
அதே போன்று இன்னும் அவர்களின் செயல்பாடுகள் மூலம் அவர்களை அறிந்து கொள்ள முடியும். அவர்களின் அடையாளங்களை அல்லாஹு தஆலா தன் அருள்மறையில் கூறுகின்றான். 

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ (11)


  • நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். 

  • அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.

  • அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்.

  • அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.

  • அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்.

  • எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள்.

  • இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள்.

  • அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து,

  • தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப்பிடித்து தொழுது வருவார்கள்.

  • இத்தகையவர்தாம் (சுவனபதிக்கு) உண்மையான வாரிசுதாரர்கள்

  • ஆகவே, இவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதியை அனந்தரமாகக் கொண்டு அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (23: 1 - 11)
இப்படி சன்னம் சன்னமாக அல்லலாஹு தஆலா இறை நெருக்கம் பெற்றவர்களின் அடையாளங்களை வர்ணிக்கிறான். 



அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சமூகத்தில் இறைநேசர்கள் என்போர் யார் என்று கேட்கப்பட்ட பொழுது,  கண்மணி நாயகம் ஸல்லகள். 


سئل رسول الله صلى الله علي وسلم من هم اولياء الله؟ فقال عليه الصلاة والسلام : " الذين اذا رؤوا ذكر الله

  رواه سعيد بن جبير كما في الكشاف ج 1 : 425

வலிமார்களை பார்த்தல், அல்லாஹ்வின் நினைவு வரும் என்பது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்   அவர்களின் வாக்கு. அப்படி இருக்க, சிலரை மக்கள் பலர் இறை நேசர் என்று கொண்டாடும் பொழுது ஒரு சிலருக்கு அவர்களை பார்த்தால்அல்லாஹ்வின் நினைவே வரவில்லையே என்று எண்ணுவர். 


ஒரு ரூமிலுள்ள ஒரு  மின்விசிறி, அதன் சுவிட்ச் போட்ட பின்பும் சுத்தவில்லை அதன் ஒயரில் கரண்ட் வருகிறது. அதே ரூமில் மற்றொரு சுவிட்ச் போட்டால், பல்ப் எரிகிறது. ஆனால் அந்த மின்விசிறியின் ஒயரில் கரண்ட் வந்தும் அது சுத்தவில்லை என்றால், குறை கரண்ட் மீது தான் என்று சொல்வது அறிவின்மையாகும்.  அதற்கு எலெக்ட்ரிக்ஷன் வந்து அதனை பார்த்து விட்டு சொல்லுவார், அந்த மின்விசிறியின் உள்ளே உள்ள ஒரு காயில் பழுதாகிவிட்டது என்று. அதனை சரி செய்தால் மின்விசிறி சுற்றஆரம்பித்து விடும்.

அப்படி தான், இறைநேச செல்வார்கள். அவர்களை பார்த்தல், அல்லாஹ்வின் நினைவு வரும் என்பது மறுக்க முடியாத உண்மை ஒருவருக்கு வர வில்லை என்றால், அது அவருடைய பழுதடைந்த உள்ளத்தின் காரணமாக தானே தவிர அவர்களின் உள்ளத்தின் அந்த இறைநேசரை பார்த்தால் இறை சிந்தனை வரவில்லை என்பதல்ல. 

இறைநேசர்கள் தொடர்பு : 


அல்லாஹு தஆலா  தனது அருள் மறையில்  : 


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏ 

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்.   (9:119)

அதற்கான விளக்கமாக அல்லாஹ் மற்றொரு வசனத்தில் :

وإنما معنى الكلام: وكونوا مع الصادقين في الآخرة باتقاء الله في الدنيا,

 كما قال جل ثناؤه: وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ [سورة النساء: 69].
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள்.

இந்த நல்லடியார்களின் தொடர்பில் இருப்பது அவர்களின் வாழ்வை மார்க்கத்தில் நிலையானதாக ஆக்கும். இன்னும் அவர்களின் நல்ல பண்புகள் நம்மிலும் பிரதிபலிக்கும். அதனால் தான் நாம் இறையச்சத்துடன் இருந்தினும், அல்லாஹு தஆலா நல்லடியார்களின் தொடர்பில் இருக்குமாறு கூறுகின்றான்.


இறைநேசர்கள் கராமத்துகள் : 


அல்லாஹ் மூலம் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு, முஃஜிசாத் என்னும் சிறப்பை கொடுத்திருந்தது போல அல்லாஹ் தனது நேசர்களுக்கு கராமத் என்னும் சிறப்பை கொடுத்திருந்தான். 

அதற்கு சான்றாக, அவனது அருள்மறையிலேயே, முன்பு வாழ்ந்த இறைநேசர்கள் ஒரு சில நிகழ்வுகளை அல்லாஹ் தனது அருள் மறையில் குறிப்பிடுகின்றான்.

{وقوله تعالى: {كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله

ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ் விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள்.


ومن ذلك قصة صاحب سليمان عليه السلام حيث قال:

قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ‌ۚ وَاِنِّىْ عَلَيْهِ لَـقَوِىٌّ اَمِيْنٌ‏ 
قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ۖ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏ 


அதற்கு ஜின்களிலுள்ள "இஃப்ரீத்" (என்னும் ஒரு வீரன்) "நீங்கள் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதனை நான் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்" என்று கூறினான்.

(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) "நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன்" என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,) (27:40)

இது மட்டுமின்றி நம்முடைய நாட்டில் வாழ்ந்து வந்த எத்தனையோ இறைநேசர்கள் கராமத்துகளை காதுகுளிர கேட்டறிந்திருப்போம். இன்னும் சிலர் கண்கூடாக பார்த்திருப்பார். 

அப்படிப்பட்ட வலிமார்களில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இறைநேசர், நாகூர் வாழ் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வரலாறு நமக்கு பல பாடங்களைபுகட்டும். 

ஒரு சில இறைநேசர்கள் பிறப்பே அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிலைநாட்ட கூடியதாக இருக்கும். இப்படி, இவர்களின் பிறப்பை பற்றி  முன்னறிவிப்பை அல்லாஹ் ஹஸ்ரத் கிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமே அவர்களின் தாயான பாத்திமா அவர்களுக்கு அறிவிக்கச்செய்தான். இன்னும் அவர்களின் வாழ்விலும், மறைவுக்கு பின்னும் நடந்த பல கிராமத்துகள் அவர்களின் வரலாற்றை படித்தால் அறிந்து கொள்ள முடியும். 

அல்லாஹ் இப்படிப்பட்ட இறைநேசர்கள் தொடர்பில் நம்மை கொண்டு வந்து, அவர்களின் மூலம் அல்லாஹ்வின் பாதையில் நிலையாக இருந்து மரணிக்கும் பாக்கியத்தை நம் அனைவர்க்கும் தந்தருள்வானாக. ஆமீன்.

No comments: