Like Us : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்
அல்லாஹு தாலா தன் அருள்மறையில் :
يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا ۚ وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ
இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான்.
அல்லாஹ்வின் திருமறையை தவறாமல் புரிதல்களை கொண்டு தனது வாழ்வை மனமுரண்டாக அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக அமைத்துக்கொள்பவர்களே இந்த உலக வாழ்வில் வழி கேட்டு போகின்றார்கள்.
திருமறையில் அல்லாஹ் கூறிய அனைத்தும் உண்மையான கட்டளைகளாயினும் அதனை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் தான் அதனை கொண்டு வழிகேட்டு போகின்றர்கள். \
ஆனாலும் அல்லாஹ்வின் வேதம் தெளிவாகவே தக்க அத்தாட்சிகளுடன் அனைத்தையும் விளக்குகின்றது.
الٓرٰ كِتٰبٌ اُحْكِمَتْ اٰيٰـتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِيْمٍ خَبِيْرٍۙ
அலிஃப்; லாம்; றா. (இது) வேத நூல். அனைத்தையும் நன்கறிந்த ஞானவானால் இதன் வசனங்கள் (பல அத்தாட்சிகளைக் கொண்டு) உறுதி செய்யப்பட்ட பின்னர் (தெளிவாக) விவரிக்கப் பட்டுள்ளன.
அதற்கான விளக்கங்களை அல்லாஹு தஆலா நமக்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை முன்னிறுத்தி தெளிவாக விவரித்தும் காட்டுகிறான்.
அதனை அல்லாஹு தாலா தன அருள்மறையில் :
بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِؕ وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்.) அவ்வாறே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உங்களுக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உங்கள்மீது) இறக்கப்பட்ட இதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பியுங்கள். (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள்.
அதனால் தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், அவர்களின் திருச்சபையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும், அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கங்களையும், பதில்களையும் கொடுத்தார்கள். அதனை ஸஹாபா பெருமக்களும், சேகரித்து வைத்து, அவர்களின் மூலமாக நமக்கு இமாம்களின் உழைப்பை கொண்டு ஹதீஸ்களாக தொகுக்கப்பட்டு நம் கரங்களில் இன்று கிடைத்திருக்கின்றது.
ஆனால். அதற்கு ,முன்பு அது வெறும் சட்டங்களாக மட்டுமே தொகுக்கப்பட்டது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்ன வற்றை கொண்டு ஸஹாபாக்கள் பின்பற்றி வந்த அனைத்தும் சட்டங்களாகவே, அதற்கு பின்னல் வந்த தாபியீன்களில் ஒருவரான இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மூலம் தொகுக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
அதற்கு பின்னுள்ள காலத்தில் வந்த இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, முஸ்லீம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்றோர, வெறும் சட்டங்கள் மட்டுமே இருந்தால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் வார்த்தைகள் பாதுகாக்க வேண்டும் என்று அண்ணலாரின் ஹதீஸ்களை கோர்வையாக சேகரித்தார்.
எனவே, அந்த சேகரிக்கப்பட்ட ஹதீஸ்களை கொண்டு மட்டும் தான் சட்டங்கள் இயற்றப்பட்டது என்பதில்லை. மாறாக, சட்ட்டங்கள் இயற்றப்பட்டு பின்னர் தான் ஹதீஸ்கள் சேகரிக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment