Like Us : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்
நாம் எந்த விதமான கஷ்டத்தையோ துன்பத்தையோ சமாளிக்க மனவலிமை வேண்டும் என்பார்கள். ஆனால் அந்த மனதை எதிர்த்து போராடவும் மனவலிமை வேண்டும். ஆம். நம்முடைய மார்க்கத்தை பொறுத்த வரை, நம் மனம் போன போக்கில் அனைத்தையும் செய்து விட முடியாது. நாம் செய்யும் அணைத்து செயல்களுக்கும் கேள்வி கணக்கு உண்டு.
மேலும், ஒரு நாளை பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகள் செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். அன்றி, அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். 2:281
அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! 91:8
அதனால் தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்படி துஆ கேட்க கற்றுத்தந்தார்கள் :
ஆனால் அந்த உணர்வை பெற உள்ளம் உயிருள்ளதாக இருக்க வேண்டும். தூயமையானதாக இருக்க வேண்டும். நாம் இந்த நிலையில் இருக்கும்பொழுது தான் இறைவனின் உணர்வுகளும் அவன் நமக்காக கொடுக்கும் நல்லவர்களும் நம்மை வந்தடையும்.
எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான்.
எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். 91: 9, 10
இன்னுமொரு வசனத்தில் :
எவன் தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத் தடுத்துக்கொண்டானோ, அவன் செல்லுமிடம் நிச்சயமாகச் சுவனபதிதான். 79:40,41
இப்படி மனதை கட்டுப்பாட்டுடன் வைக்கும் ஈமானிய பலத்தையும் வலிமையையும் அல்லாஹ் நம் அனைவர்க்கும் தந்தருள்வானாக ! ஆமீன் !
وَاتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ اِلَى اللّٰهِ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
மேலும், ஒரு நாளை பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகள் செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். அன்றி, அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். 2:281
எது மனவலிமை ?
நம்முடைய மனதையே எதிர்த்து போராடும் வலிமையை நாம் பெற வேண்டுமென்றால், இறையச்சம் என்னும் தக்வா நமக்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
ஆம். மற்றவர்களை காட்டிலும் நம் முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு வட்டத்திற்குள் நம்மை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நம்மை அறியாமலேயே நம்மிடத்தில் இறையச்சம் என்னும் ஓர் பாதுகாப்பு வலயத்தை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அது நம்முடைய ஈமானை பொறுத்து அதிகமாவதும் குறைவதும். அதற்கான வழிகாட்டுதலை அல்லாஹ் தான் தருகின்றான்.
قال سبحانه:( فألهمها فجورها وتقواها)
அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! 91:8
அதனால் தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்படி துஆ கேட்க கற்றுத்தந்தார்கள் :
وروي عن أبي هريرة قال : قرأ رسول الله - صلى الله عليه وسلم - فألهمها فجورها وتقواها قال : " اللهم آت نفسي تقواها ، وزكها أنت خير من زكاها ، أنت وليها ومولاها " . ورواه جويبر عن الضحاك عن ابن عباس : أن النبي - صلى الله عليه وسلم - كان إذا قرأ هذه الآية : فألهمها فجورها وتقواها رفع صوته بها ، وقال : " اللهم آت نفسي تقواها ، أنت وليها ومولاها ، وأنت خير من زكاها " .
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا
وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا
எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். 91: 9, 10
இன்னுமொரு வசனத்தில் :
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى* فإن الجنة هي المأوى
எப்படி அல்லாஹ் வை பயந்து கொள்வது ?
ஒரு செயல் நமக்கும் நம் மனோஇச்சைக்கும் சாதகமாக இருக்கும் படச்சத்திலும், அல்லாஹ் எதனை கட்டளையிட்டானோ அதனை நிறைவென்றுவது தான் இறையச்சம் வெளிப்படும் தருணமாகும்.
وأما من خاف مقام ربه فمصعب بن عمير ، وقى رسول الله - صلى الله عليه وسلم - بنفسه يوم أحد حين تفرق الناس عنه ، حتى نفذت المشاقص في جوفه . وهي السهام ، فلما رآه رسول الله - صلى الله عليه وسلم - متشحطا في دمه قال : " عند الله أحتسبك " وقال لأصحابه : " لقد رأيته وعليه بردان ما تعرف قيمتهما وإن شراك نعليه من ذهب " . وقيل : إن مصعب بن عمير قتل أخاه عامرا يوم بدر .
நப்ஸ் பற்றி இமாம் பூசிரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வர்ணனை :
والنفس كالطفل إن تهمله شب على حب الرضاع وإن تفطمه ينفطم
மனித மனம் என்பது குழந்தை போன்றது குறிப்பிட்ட வயதில் பால் குடியை மறக்கடித்தால் தான் மறக்கும்.
அதே போன்று மனிதனுடைய மனதை குறிப்பிட்ட எல்லையுடன் பக்குவப்படுத்தி கட்டுப்படுத்தாவிட்டால், அது எல்லை மீறி போய்விடும்.
கட்டுப்பாடுடன் இருப்பது : :
அல்லாஹ்விடம் சிறந்தது, கோபத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது.
قال رسول الله صلى الله عليه وسلم :« ما تجرع عبد جرعة أفضل عند الله عز وجل من جرعة غيظ، يكظمها ابتغاء وجه الله تعالى
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :
அல்லாஹ்விடம் சிறந்தது, ஒருவன் தன்னுடைய கோபத்தை அடக்கிக்கொண்டு, அதனை அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக வெளிப்படுத்துவது தான்.
கோபத்தை அடக்குபவனே உண்மையான வீரன்.
صلى الله عليه وسلم:« ليس الشديد بالصرعة، إنما الشديد الذي يملك نفسه عند الغضب».
மறுமையில் அவருக்குரிய சன்மானம் :
قال صلى الله عليه وسلم :« من كظم غيظا، وهو قادر على أن ينفذه، دعاه الله سبحانه على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره من الحور العين ما شاء».
இப்படி மனதை கட்டுப்பாட்டுடன் வைக்கும் ஈமானிய பலத்தையும் வலிமையையும் அல்லாஹ் நம் அனைவர்க்கும் தந்தருள்வானாக ! ஆமீன் !
1 comment:
Subhaanallah
Post a Comment