அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 10 January 2019

வெற்றியின் பக்கம் வாருங்கள்


Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்



ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண் பெறுபவனை தான் நாம் அறிவாளி என்று சொல்கின்றோம். இன்னும் தேர்வில் அவனையே முதல் வெற்றியாளன் எனவும் குறிப்பிடுகின்றோம். அதே போன்று அந்த தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைபவனை தான் நாம் அறிவில்லாதவன் என்று சொல்கின்றோம்.


வெற்றி பெறுவதற்கான வழிகள் : 


இப்படி தான் அல்லாஹ் தான் திருமறையில் அறிவுள்ளவர்களே  நீங்கள் வெற்றி அடைந்து கொள்ளுங்கள் என்று சொல்கின்றான். 

 ۚ فَاتَّقُوا اللّٰهَ يٰۤاُولِى الْاَ لْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ 


அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்" என்று கூறுங்கள்.  (5:100)



இன்னும் அல்லாஹு தஆலா நாம் வெற்றி பெறுவதற்கான வழியை மிக தெளிவாக பல்வேறு வசனங்களிலும் நமக்கு சொல்லி காண்பிக்கிறான். 

الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون* والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون* أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون

அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.

(அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்.

இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள்.


இன்னும் அண்ணல்   நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்லி தந்த முறை படி ஒவ்வொரு தொழுகைக்கு அழைக்கும் பொழுதும், வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள் என்று தான் அழைக்க கற்று தந்தார்கள் . 

எது வெற்றி ?


முஃமின்களை பொறுத்தவரை வெற்றி என்பது மறுமையை நோக்கிய இந்த  உலக வாழ்வில் வெற்றி பெறுவது தான். அதனை தான் அல்லாஹ் தஆலா தன் அருள் மறையில் : 

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ 

நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். 

அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்.

அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்.
எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

 ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள். 

இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள்.

அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து,

தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப்பிடித்து தொழுது வருவார்கள்.

இத்தகையவர்தாம் (சுவனபதிக்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.

ஆகவே, இவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதியை அனந்தரமாகக் கொண்டு அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.



தொழுகையே வெற்றியில் வாசல் : 


ஒவ்வொரு முஃமினுக்கும் அவரின் நேரம் தவறாத தொழுகையே  அவருடைய மறுமை வெற்றியின் வாசலாகும். அதனால் தன தொழுகைக்கு அழைக்கப்படும் பொழுது, வெற்றியின் பக்கம் வாருங்கள் என்று அழைக்கின்றார்கள்.  

இன்னும் மறுமையில் நம்முடைய முதல் கேள்வி, தொழுகையை பற்றி தான் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

أكد عليه النبي صلى الله عليه وسلم بقوله:« إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته، فإن صلحت فقد أفلح وأنجح».


அண்ணல் நபி & ஸஹாபாக்கள் பாதை வந்த வலிமார்கள் வழியே வாழ்வின் வெற்றி : 

இப்படி தொழுகை என்பது வாசல் என்றல் உள்ளே செல்வதற்கு உதவுவது ஸஹாபாக்கள் மற்றும் வலிமார்கள் வழிகாட்டுதல்கள் தான். 

எந்த ஒரு செய்தியையும் உறுதிப்படுத்தி கூற, சாத்தியமிட்டு சொல்லும் அல்லாஹு தஆலா அதிகம் சாத்தியமிட்டு சொன்ன ஒரு செய்தி. அதனை நாம் அடைய வேண்டுமென்றால் நிச்சயம் வலிமார்கள் தொடர்பை கொண்டு தான் அடைந்து கொள்ள முடியும். 

وَالشَّمْسِ وَضُحَاهَا (1) وَالْقَمَرِ إِذَا تَلَاهَا (2) وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا (3) وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا (4) وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا (5) وَالْأَرْضِ وَمَا طَحَاهَا (6) وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَن دَسَّاهَا (10

சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும்,\

(அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,

(சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,

(அதனை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,

வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,

பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,

ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,

அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!

எவன் (தன் ஆத்மாவைப்) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான்.


இப்படி இந்த உள்ள தூய்மையை நாம் வலிமார்கள் தொடர்பில் தான் பெற்றுக்கொள்ள முடியும். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்கள் ஸஹாபாக்களின் உள்ளதை தூயமை படுத்தி அதில் கலிமாவை காமிலாக்கினார்களோ அதே போன்று, அவர்களின் வழி வந்த வலிமார்கள் தொடர்பில் தான் நாம் அதனை பெற்று கொள்ள முடியும். நாமே அதனை செய்ய நினைத்தால் நிச்சயம் நப்ஸ் என்னும் எதிரியிடம் சிக்கி சிதைந்து விடுவோம் என்பதில் மாற்று கருத்தில்லை. 


எனவே அல்லாஹு தஆலா நமக்கு இம்மையிலும் மறுமையிலும் சிறந்த வெற்றியை தந்தருள்வானாக ! ஆமீன்