அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 5 September 2019

குடும்பம்





Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

அல்லாஹ் படைத்த அனைத்து ஜீவா ராசிகளுக்கும் வம்சத்தையும் வளர்ச்சியையும் கொடுத்திருக்கிறான். ஆனால் அணைத்துமே அந்த குடும்பத்துடன் இணைந்து வாழ்வதில்லை. 

அதற்கான நல்ல வாய்ப்பையும், எப்படி வாழ வேணும் என்ற சிறந்த வழிமுறையையும் அல்லாஹு தஆலா மனித வர்க்கத்திற்கு கொடுத்திருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ் !

ஆனாலும் சில மனித படைப்புகள் அதன் சிறப்பை உணர்வதில்லை. ஒவ்வொருவரும் தனது குடும்பத்துடனும், இரத்த பந்தங்களுடனும் சேர்ந்து வாழ்வதை அத்தனை முக்கியத்துவம் கொடுத்து கூறியுள்ளான். 

அது மட்டுமின்றி, மனிதகுலத்திற்கு முன்மாதிரியாய் உதித்த நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலமாகவும் அதற்கான முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்த  பல்வேறு வரலாற்று பதிவுகளை நமக்கு காண்பித்திருக்கின்றான். 

அதனால் தான் அல்லாஹு தஆலா ஆதம் அலைஹிஸலாம் அவர்களை படைத்தது அவர்களுக்கு இணை ஜோடியாக, அன்னை ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் படைத்தான். இன்னும் அவர்களுக்கு பிள்ளைகளை கொடுத்து சந்ததியினை தொடர செய்தான். 

எனவே ஒரு குடும்பம் என்பது, கணவன் மனைவியிலிருந்தே ஆரம்பமாகிறது. 

அதனால் தான் அல்லாஹு தஆலா தன்  அருள்மறையில் : 

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர் களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான் (04;01)

குடும்பத்தின்  பாதுகாப்பு :

ஒரு குடும்பத்தை நிர்வகித்து செல்லும் பொறுப்பில் கணவனுக்கும் மனைவிக்கும் பங்குண்டு.  ஆனாலும், கணவனுக்கே அதிக பங்கு இருக்கிறது. அவனுக்கு தன்னுடைய   மனைவியுடன் 
பக்குவமாக இணைந்து குடும்பத்தை நடத்தாட்டுவதில் மிகுந்த பங்குண்டு. ஏனெனில் ஒரு பெண்ணை கையாள்வது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் குடும்ப விஷயங்களில் மிகவும் பக்குவமாக மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். அது மனைவியாக இருந்தாலும் சரி, மகளாக இருந்தாலும் சரி. 

எனவே தான்  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 

 عن النبي صلى الله عليه وسلم كما عند البخاري في "صحيحه" (3331) ومسلم في "صحيحه" (1468) من حديث أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  اسْتَوْصُوا بِالنِّسَاءِ ، فَإِنَّ المَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ ، وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلاَهُ ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ ، فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ  .

ولفظ " مسلم " : ( إِنَّ الْمَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ لَنْ تَسْتَقِيمَ لَكَ عَلَى طَرِيقَةٍ ، فَإِنِ اسْتَمْتَعْتَ بِهَا اسْتَمْتَعْتَ بِهَا وَبِهَا عِوَجٌ ، وَإِنْ ذَهَبْتَ تُقِيمُهَا ، كَسَرْتَهَا وَكَسْرُهَا طَلَاقُهَا ) 

அனைத்திற்கும் அண்ணலே :

எல்லா மனிதர்க்கும் எல்லா கால கட்டத்திலும், அணைத்து சூழ்நிலைகளுக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே சிறந்த முன்மாதிரி என்பதை நம்மால் மட்டுமல்ல, மாற்று மதத்தினரும் கூட ஏற்றுக்கொள்ளும் உணமை தான் அது.

அதுவே அல்லாஹ் கூறிய அந்த வார்த்தை :

قَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள்.  (33:21)

அல்லாஹ்  மற்றுமொரு வசனத்தில் :

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான மலக்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்..   (66:6)

எப்படி பாதுகாப்பது ?




எனவே நம் மீது நம்மை அந்த நன்றாக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்வது மட்டும் அல்ல, நம்முடைய குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம்முடையது.

 رواه أحمد وأبو داود والترمذي من حديث عبدالملك بن الربيع بن سبرة عن أبيه عن جده قال: قال رسول الله صلى الله عليه وسلم "مروا الصبي بالصلاة إذا بلغ سبع سنين فإذا بلغ عشر سنين فاضربوه عليها" هذا لفظ أبي داود 

قال سفيان الثوري عن منصور عن رجل عن علي رضي الله عنه في قوله تعالى "قوا أنفسكم وأهليكم نارا" يقول أدبوهم وعلموهم وقال علي بن أبي طلحة عن ابن عباس "قوا أنفسكم وأهليكم نارا" يقول اعملوا بطاعة الله واتقوا معاصي الله وأمروا أهليكم بالذكر ينجيكم الله من النار.

وقال مجاهد "قوا أنفسكم وأهليكم نارا" قال اتقوا الله وأوصوا أهليكم بتقوى الله وقال قتادة تأمرهم بطاعة الله وتنهاهم عن معصية الله وأن تقوم عليهم بأمر الله وتأمرهم به وتساعدهم عليه فإذا رأيت لله معصية قذعتهم عنها وزجرتهم عنها وهكذا قال الضحاك ومقاتل حق المسلم أن يعلم أهله من قرابته وإمائه وعبيده ما فرض الله عليهم وما نهاهم الله عنه.


நம்முடைய குடும்பத்தை அந்த அதிபயங்கரமான, நரக நெருப்பிலிருந்து எப்படி பாதுகாப்பது, எது நன்றாக நெருப்பிலிருந்து பாதுகாப்பை தரும் என்பதையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள நமக்கு வழிகாட்டி உள்ளார்கள்


எனவே, அண்ணல் நபி காட்டிய வழியில் நடந்து நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, அல்லாஹ்  கிருபை செய்வானாக! ஆமீன் ! 

No comments: