அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Wednesday 11 September 2019

அல்லாஹ் விரும்புகிறான்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

இந்த துன்யாவின் வாழ்க்கையில், அதிகமான மனிதர்களின் நோக்கம் இந்த துன்யாவாகவே இருக்கிறது. ஆனால் நம்முடைய பயணம் என்பது, அல்லாஹ்வையும் ரஸூலையும் நோக்கியதாகவே இருக்க வேண்டும். அவர்கள் காட்டித்தந்த பாதையில் நாம் செல்ல வேண்டும். 


قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்."  (3:31)



எனவே இந்த உலகில் நாம் வாழும் காலமெல்லாம், அல்லாஹ் மற்றும் இரசூலின் பிரியத்தை பெறுவதையே நம்முடைய குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.  அதற்கான அமல்களை அல்லாஹு தஆலா தனது அருள்மறையிலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹ் அலைஹிவ ஸல்லம் அவர்களும் நமக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்கள். 

 اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏

நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், பரிசுத்தவான்களையும் விரும்புகிறான்.  2:222


وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ ﴿١٩٠ البقرة﴾


ஆனால், நீங்கள் (எல்லை) கடந்துவிட வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.

وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ﴿١٤٠ آل عمران﴾

உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்(தறிவிப்ப) தற்காகவுமே (இவ்வாறு செய்கின்றான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ ﴿٢٠٥ البقرة﴾

அவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும் வேளாண்மையையும், மனித இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும்! ஆனால் (அவன் சாட்சியாக்குகின்ற) அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை.


يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ ﴿٢٧٦ البقرة﴾

அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ ﴿٣٢ آل عمران﴾

அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை

بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِ وَاتَّقَىٰ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ ﴿٧٦ آل عمران﴾

(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ அவர்கள்தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறை அச்சம் உடையவர்களை நேசிக்கின்றான். 


وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ ﴿١٩٥ البقرة﴾


அன்றி (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான்.

وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ ﴿١٣٤ آل عمران﴾

அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கின்றான்.



அல்லாஹ் யாரையெல்லாம் விரும்புகிறான், யாரை வெறுக்கிறேன். எந்த விதமான அமல்கள் செய்வோரை விரும்புகிறான், எந்தெந்த அமல்கள் செய்வோரை வெறுக்கிறேன் என்ற அனைத்துமே நமக்கு சொல்லிக்காட்டப்பட்டுள்ளது.

பாவமன்னிப்பு கேட்பவரை அல்லாஹ் விரும்புகிறான் : 


அல்லாஹு தஆலா தான் செய்த பாவங்களுக்காக இறைஞ்சி மன்னிப்பு கேட்கும் அடியானை அல்லாஹு தஆலா விரும்புகிறான். 

 عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم:  لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلَاةٍ فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَأَيِسَ مِنْهَا فَأَتَى شَجَرَةً فَاضْطَجَعَ فِي ظِلِّهَا قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ بِهَا قَائِمَةً عِنْدَهُ فَأَخَذَ بِخِطَامِهَا ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ الْفَرَحِ اللَّهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ 

وقد روى البخاري (6308) ، ومسلم (2747) واللفظ له،


ஆனால் பாவத்தை பொறுத்தவரை இரண்டு வகைகள் உண்டு. 

1. அல்லாஹ்வுக்கும் அடியானுக்கு மத்தியில் உள்ளது 
2. அல்லாஹ்வுக்கும் அடியேனுக்கும் மற்றொரு அடியானுக்கு மத்தியில் உள்ளது.

இவற்றில் முதல் வகையான பாவ பரிகாரத்திற்கு 3 ஷரத்துகளையும், இரண்டாம் வகையான பாவத்திற்கு அதிகப்படியான ஒன்றையும் சேர்த்து கூறுகின்றார்கள். 

وقد اشترط أهل العلم للتوبة النصوح شروطا ثلاثة فيما إذا كان الذنب بين العبد وربه ، وهي : الإقلاع عن الذنب ، والندم على الفعل ، والعزم على عدم العودة إلى الذنب

فإن كان الذنب متعلقا بحق من حقوق العباد فيشترط فيه شرط رابع ، وهو أن يتحلله من صاحبه في الدنيا بأن يرد إليه الحق ، أو يطلب منه العفو .

فعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( "مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ). أخرجه البخاري (2449)

وقال القرطبي في "الجامع لأحكام القرآن" (18/199) :" فَإِنْ كَانَ الذَّنْبُ مِنْ مَظَالِمِ الْعِبَادِ : فَلَا تَصِحُّ التَّوْبَةُ مِنْهُ إِلَّا بِرَدِّهِ إِلَى صَاحِبِهِ ، وَالْخُرُوجِ عَنْهُ ، عَيْنًا كَانَ أَوْ غَيْرَهُ ؛ إِنْ كَانَ قَادِرًا عَلَيْهِ .


மக்களுக்கு பயனுள்ள நபரை அல்லாஹ் விரும்புகிறான் : 

அல்லாஹ்வுக்கு விருப்பமானவர், மக்களுக்கு மிகவும் பயனுள்ள நபரே என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். 

عن عبدالله بن عمر رضي الله عنه، أن النبي صلى الله عليه وسلم قال: (أحب الناس إلى الله أنفعهم للناس وأحب الأعمال إلى الله سرور تدخله على مسلم أو تكشف عنه كربة أو تقضي عنه دينا أو تطرد عنه جوعا ولأن أمشي مع أخي المسلم في حاجة أحب إلى من أن أعتكف فى هذا المسجد شهرا ومن كف غضبه ستر الله عورته ومن كظم غيظه ولو شاء أن يمضيه أمضاه ملأ الله قلبه رضا يوم القيامة ومن مشى مع أخيه المسلم فى حاجة حتى تتهيأ له أثبت الله قدمه يوم تزل الأقدام وإن سوء الخلق ليفسد العمل كما يفسد الخل العسل) 

أخرجه ابن أبى الدنيا فى كتاب قضاء الحوائج (ص 47، رقم 36)  (صحيح الجامع، 176).


மனித வாழ்வில் ஒரு சிலர், அல்லாஹ்வினுடைய ஹக்கை நிறைவேற்றுவதில் மிகவும் கவனத்துடன் செயல்படுவர்.  ஆனால், حقوق العباد என்னும் அவனது அடியார்களுக்குரிய ஹக்கை நிறைவேற்றுவதில் கோட்டைவிட்டு விடுவார்.  அல்லாஹுதஆலா தன்னுடைய ஹக்கை சரியாக நிறைவேற்றும் அடியார்களை விட தன்னுடைய அடியார்களின்  ஹக்கையும் சரிவர நிறைவேற்றும் நபர்களை மிகவும் விரும்புகிறான். 

மறுமையில் ...

மறுமை நாளில் எல்லா இபாதத்துகளும் செய்தும் கையில் ஒன்றும் இல்லாமல் நிற்கும் நபரை பற்றி அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:" أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ ، فَقَالَ:  إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ ، وَزَكَاةٍ ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا ، وَقَذَفَ هَذَا ، وَأَكَلَ مَالَ هَذَا ، وَسَفَكَ دَمَ هَذَا ، وَضَرَبَ هَذَا ، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ

 في صحيح مسلم (2581)
\

எனவே பிற அடியார்களுக்கு அநியாயம் செய்வதையும் அவர்களின் ஹக்கை நிறைவேற்றுவதில் அல்லாஹ்வை மிகவும் பயந்துகொள்ள வேண்டும். 



وقال صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَحْشُرُ اللهُ الْعِبَادَ ، وَأَوْمَأَ بِيَدِهِ قِبَلَ الشَّامِ ، عُرَاةً حُفَاةً غُرْلًا بُهْمًا  ، قَالَ: قُلْتُ: مَا بُهْمًا؟ ، قَالَ: لَيْسَ مَعَهُمْ شيء وَيُنَادِي مُنَادٍ بِصَوْتٍ يَسْمَعْهُ مَنْ بَعُدَ كَمَا يَسْمَعُهُ مَنْ قَرُبَ ، أَنَا الْمَلِكُ الدَّيَّانُ ، لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ يَدْخُلُ الْجَنَّةَ ، وَأَحَدٌ مِنْ أَهْلِ النَّارِ يَطْلُبُهُ بِمَظْلَمَةٍ ، وَلَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ أَهْلِ النَّارِ يَدْخُلُ النَّارَ وَأَحَدٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ يَطْلُبُهُ بِمَظْلَمَةٍ، حَتَّى اللَّطْمَةِ  ، قَالَ: قُلْتُ: وَكَيْفَ وَإِنَّمَا نَأْتِي عُرَاةً غُرْلًا بُهْمًا؟ ، قَالَ:  الْحَسَنَاتُ وَالسَّيِّئَاتُ  .

أخرجه أحمد في المسند (16042) ،)  .

ومن قذف مسلما أو مسلمة في الدنيا ولم يقم عليه حد القذف ، أو تاب ولم يتحلل من صاحب الحق أقيم عليه الحد يوم القيامة ، فعَنْ عِكْرِمَةَ قَالَ: صَنَعَ رَجُلٌ لِابْنِ عَبَّاسٍ - رضي الله عنهما - طَعَامًا , فَبَيْنَمَا الْجَارِيَةُ تَعْمَلُ بَيْنَ أَيْدِيهِمْ إِذْ قَالَ لَهَا الرَّجُلُ: يَا زَانِيَةُ ، فَقَالَ: ابْنُ عَبَّاسٍ: مَهْ إِنْ لَمْ تَحُدَّكَ فِي الدُّنْيَا , تَحُدُّكَ فِي الْآخِرَةِ ".4

 أخرجه البخاري في الأدب المفرد (331) ،
 "صحيح الأدب المفرد" (252)

எனவே அல்லாஹு தஆலா நம்மை இப்படி பட்ட அந்நியாயங்களில் இருந்து பாதுகாத்து, அல்லாஹ்  இரசூலின் பொருத்தத்தையும், மன்னிப்பையும் பெற்றவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக ! ஆமீன் ! 

No comments: