அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 29 August 2019

ஹிஜ்ரத் - நாம் அறிய வேண்டிய ஒன்று




நாளுக்கு நாள் நம்முடைய  வாழ்க்கை என்பது அறிவியல் வளர்ச்சியை நோக்கி வளர்ந்துகொண்டே இருக்கிறது. தினம் தினம் ஆயிரக்கணக்கான புதிய கண்டுபிடிப்புகள், செயலிகள், மின்னணு சாதனங்கள். நம்மை மேலும் மேலும் சோம்பேறியாக்கும் உதவிக்கருவிகள் என பல்வேறு விதமான வளர்ச்சிகள். 

இந்த அசுர வளர்ச்சியில் நாம் பலவற்றை இழந்துவருகின்றோம் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ளவும் முடியவில்லை. அதனை பற்றி சிந்திப்பதற்கு நமக்கு நேரமும் ஒதுக்கமுடியவில்லை. 

நம்முடைய வாழ்வில் நாம் மிக முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, இன்னும் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது, நம்முடைய முன்னோர்களின் வரலாற்று சுவடுகள் தான்.
நம்முடைய தாய் தந்தையர் எப்படி நமக்கு அதனை பாதுகாத்து கொடுத்தார்களோ அதே  போன்று நாமும் நம்முடைய குழந்தைகளுக்கு அதனை மிக்க பாதுகாப்புடன் கொடுக்க வேண்டிய ஓர் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

அதற்கு அத்தாட்சியாக அல்லாஹு தஆலா தனது அருள் மறையில் பல்வேறு வரலாற்று சம்பவங்களை நமக்கு சொல்லித்தருகின்றான். இன்னும் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் ஸஹாபாக்களுக்கு பல வரலாற்று சம்பவங்களை சொல்லிகொடுத்திருக்கின்றார்கள் என்பது நாம் ஹதீஸ்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. எனவே நம்முடைய முன்னோர்களின் வரலாறுகளை, அதிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் முதல் ஸஹாபாக்கள், தாபிஈன்கள், வலிமார்கள் முக்கிய வாழ்கை நிகழ்வுகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்ப்பதே நாம் அவர்களின் மார்க்கத்தை பாதுகாப்பதற்கு ஓர் சிறந்த வழியாக அமையும்.

இந்த வகையில் தற்போது நம் அடுத்த ஹிஜ்ரி வருடத்தில் அடியெடுத்து வைப்பதற்கு காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் தனது ஹபீப் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் உடன்,ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஹிஜ்ரத் செய்த அந்த நிகழ்வுகளை மிக அழகான நிகழ்வுகளாக அருள்மறையில் விவரிக்கின்றான்.

اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌ ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى‌ ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏

(நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கொன்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கின்றான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி "நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங் களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்) தான் மிக உயர்வானது. அன்றி, அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (9:40)




. ولما رأت قريش أن المسلمين قد صاروا إلى المدينة قالوا : هذا شر شاغل لا يطاق ، فأجمعوا أمرهم على قتل رسول الله صلى الله عليه وسلم ، فبيتوه ورصدوه على باب منزله طول ليلتهم ليقتلوه إذا خرج ، فأمر النبي صلى الله عليه وسلم علي بن أبي طالب أن ينام على فراشه ، ودعا الله أن يعمي عليهم أثره ، فطمس الله على أبصارهم فخرج وقد غشيهم النوم ، فوضع على رءوسهم ترابا ونهض فلما أصبحوا خرج عليهم علي رضي الله عنه وأخبرهم أن ليس في الدار أحد فعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد فات ونجا وتواعد رسول الله صلى الله عليه وسلم مع أبي بكر الصديق للهجرة ، فدفعا راحلتيهما إلى عبد الله بن أرقط . ويقال ابن أريقط ، وكان كافرا لكنهما وثقا به ، وكان دليلا بالطرق فاستأجراه ليدل بهما إلى المدينة ، وخرج رسول الله صلى الله عليه وسلم من خوخة في ظهر دار أبي بكر التي في بني جمح ونهضا نحو الغار في جبل ثور ، وأمر أبو بكر ابنه عبد الله أن يستمع ما يقول الناس ، وأمر مولاه عامر بن فهيرة أن يرعى غنمه ويريحها عليهما ليلا فيأخذ منها حاجتهما . ثم نهضا فدخلا الغار . وكانت أسماء بنت أبي بكر الصديق تأتيهما بالطعام ويأتيهما عبد الله بن أبي بكر بالأخبار ، ثم يتلوهما عامر بن فهيرة بالغنم فيعفي آثارهما . فلما فقدته قريش جعلت تطلبه بقائف معروف بقفاء الأثر ، حتى وقف على الغار فقال : هنا انقطع الأثر . فنظروا فإذا بالعنكبوت قد نسج على فم الغار من ساعته ، ولهذا نهى النبي صلى الله عليه وسلم عن قتله ، فلما رأوا نسج العنكبوت أيقنوا أن لا أحد فيه فرجعوا وجعلوا في النبي صلى الله عليه وسلم مائة ناقة لمن رده عليهم ، الخبر مشهور ، وقصة سراقة بن مالك بن جعشم في ذلك مذكورة . 

وقد روي من حديث أبي الدرداء وثوبان رضي الله عنهما : أن الله عز وجل أمر حمامة فباضت على نسج العنكبوت ، وجعلت ترقد على بيضها ، فلما نظر الكفار إليها ردهم ذلك عن الغار


இப்படி அல்லாஹு தஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மற்றும் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவரைகளை அந்த குகையில் காபிர்களிடம் இருந்து பாதுகாத்தான்.


وَمَنْ يُّهَاجِرْ فِىْ سَبِيْلِ اللّٰهِ يَجِدْ فِى الْاَرْضِ مُرٰغَمًا كَثِيْرًا وَّسَعَةً‌ ؕ وَمَنْ يَّخْرُجْ مِنْۢ بَيْتِهٖ مُهَاجِرًا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَى اللّٰهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا

(இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகின்றாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. ஏனென்றால், அல்லாஹ் மிக பிழைபொறுத்து நிகரற்ற அன்பை பொழிபவனாக இருக்கின்றான்.  (4:100)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மக்கமா நகரத்தில் இருந்து மதினா நகரத்திற்கு ஹிஜ்ரத் செய்ததற்கு ஒரு சில காரங்களை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.


கவலை மிக்க வருடம் :


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மிகவும் ஒத்துழைப்பாகவும், இன்னும் ஆறுதலாகவும் இருந்தவர்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இழந்து, இன்னும் நபிகளாரின் அழைப்பு பணி  மக்கமா நகரத்தில் அதனை பலனளிக்கவில்லை என்பதும் அவர்களை மிகிருந்த கவலையில் ஆழ்த்தியது.

حديث عائشة رضي الله عنها، حيث قالت: (كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ إذا ذَكرَ خديجةَ أثنى فأحسَنَ الثَّناءَ، فغِرتُ يومًا فقلتُ: ما أكثرَ ما تذكرُها حمراءَ الشِّدقينِ قد أبدلَكَ اللَّهُ خيرًا منها، قالَ: ما أبدلني اللَّهُ خيرًا مِنها؛ قد آمنَتْ بي إذ كَفرَ بيَ النَّاسُ وصدَّقتني إذ كذَّبني النَّاسُ وواسَتْني بمالِها إذ حرَمَنِيَ النَّاسُ ورزقنيَ اللَّهُ أولادَها إذ حرمني أولادَ النَّساءِ)
رواه الشوكاني، في در السحابة، عن عائشة أم المؤمنين، الصفحة أو الرقم: 249



فقد روي أنّ رسول الله -صلّى الله عليه وسلّم- دخل إلى بيته والتراب على رأسه، فقامت إليه إحدى بناته لتغسل التراب عن رأسه الشريف وهي تبكي، فقال: (أي بنيَّةَ لا تبْكينَ فإنَّ اللَّهَ مانعٌ أباك)، ويقولُ ما بينَ ذلِكَ: (ما نالت منِّي قريشٌ شيئًا أَكرَهُهُ حتَّى ماتَ أبو طالبٍ)،
رواه الذهبي، في تاريخ الإسلام، عن عبد الله بن جعفر، الصفحة أو الرقم: 1/235، 


முதலாவதான முக்கிய காரணம், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அழைப்பு பணியை ஏற்காமல், அது உண்மை என தெரிந்தும் மக்கத்து காபிர்கள்அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அழைப்பு பணியை அலட்சிய படுத்தி, இன்னும் அதனை ஏற்று கொண்டவர்களை தொடர்ந்து வேதனை படுத்திக்கொண்டே இருந்தார்கள்.


தனது ஹபீபை சந்தோஷப்படுத்த அல்லாஹு தஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மதினமா நகரத்தை கனவில் காண்பித்தான்.


அதே சமயத்தில் மதீனத்து மக்களில் பலரும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டும்,  ஏற்று கொள்வதற்கும் தயாராக இருந்தார்கள். அதனால் தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவரகள் ஹிஜ்ரத் செய்து மதினமா நகரத்தை நுழைவதற்கு முன்பே அவர்களை வரவேற்க ஒரு பெரும் கூட்டமே அவர்களுக்காக மதீனத்து எல்லையில் காத்துக்கொண்டிருந்தது என்பது வரலாற்று சுவடுகள்.


كان المسلمون في المدينة المنورة لما سمعوا بخروج النبي ﷺ من مكة يغدون كل غداة إلى ظاهر المدينة ينتظرونه، فإذا اشتد حر الشمس رجعوا إلى منازلهم، فلما كان يوم الـ12 من ربيع الأول خرجوا على عادتهم فلما حميت الشمس رجعوا، فبصر قدوم النبي ﷺ وأصحابه رجل من اليهود، وكان على أطم من آطام المدينة، فقال: "يا بني قيلة! هذا صاحبكم قد جاء، هذا جدكم الذي تنتظرونه". وعن ذلك يقول الصحابي البراء بن عازب: "ما رأيت أهل المدينة فرحوا بشيء فرحهم برسول الله ﷺ".

இன்னும் பல்வேறு வரலாறுகள் நம்முடைய வாழ்வில் நம்நினைவு கூர்ந்து, அதனை கொண்டு பல்வேறு படிப்பினைகளை நம்முடைய வாழ்வில் நம் கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்கான தவ்பீக்கை நம் அனைவருக்கு தருவானாக ! ஆமீன் ! 

No comments: