அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 22 August 2019

இரத்த பந்தம்




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

அல்லாஹு தஆலா நமக்கு அருளிய இந்த சிறந்த மார்க்கத்தில் அண்ணல் நபி ஸல்லலாலஹு அலைஹுவ ஸல்லம் அவர்கள் காட்டித்தந்த சுன்னத்தான வழியில் நாம் நடக்கும்பொழுது தான் நமக்கு நம்முடைய இந்த வாழ்வில் வெற்றி கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ

ஆயினும், அல்லாஹ்வின் வேதப்படி, இரத்தபந்தமுடையவர்கள்தாம் ஒருவர் மற்றொருவருக்கு உதவுவதில் அதிக உரிமையுடையவர்களாவர். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (8:75)

என்ற இந்த வசனம் நமக்கு ஓர் சிறந்த படத்தை கற்று தருகிறது. அதே போன்று பல்வேறு ஹதீஸ்களும் நமக்கு நம்முடைய ரத்த பந்தங்களுடன் இனைந்து அவர்களுக்கு உதவி செய்து வாழ்வதை நம்மக்கு வலியுறுத்தி ஓர் சிறந்த குடும்ப சூழ்நிலைகளை அமைத்துக்கொள்ள வழிவகை செய்கிறது. 



தற்போதய காலத்தில் ஒவொரு குடும்பத்திலும் பல்வேறு விதமான பிரச்சனைகள், நிம்மதியின்மை, எவ்வளவு சம்பாதித்தபோதிலும் போதுமானதாக இல்லை என்று சொல்வது, நோய்கள் என எண்ணற்ற பிரச்சனைகளை அன்றாட வாழ்வில் கண்கூடாக காணுகின்றோம். 


ஆனால் அதனுடைய காரணம் என்ன, ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது, எதற்காக இப்படி அல்லாஹு தாலா நமக்கு தண்டனையை கொடுக்கின்றான் என்பது போன்ற பல்வேறு  கோணங்களில் அதிகமானோர் யோசிப்பதில்லை.


நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லலாம் அவர்கள் கூறினார்கள் : 

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ )

روى البخاري (2067) ومسلم (2557)


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மிகவும்  விருப்பமான அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களுக்கு சொன்ன ஆறுதல் வார்த்தைகளில் முதல் வார்த்தையை நாம் நம்முடைய கவனத்தில் கொள்ள வேண்டும். 

قول خديجة رضى الله عنها في حادثة بَدْءِ الْوَحْيِ:«كَلَّا، أَبْشِرْ، فَوَاللَّهِ لَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا؛ إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وتصدُق الْحَدِيثَ، وَتَحْمِلُ الكَلَّ (أي: تنفق على الضعيف، واليتيم والعيال، والكَلُّ أصله: الثقل والإعياء)، وتكسب المعدوم، وَتُقْرِي الضَّيْفَ (أَيْ: تُكْرِمُهُ)، وَتُعِينُ عَلَى نَوَائِبَ الحق (أي الكوارث والحوادث)».

இன்னும் பல்வேறு ஹதீஸ்கள், ஹதீஸுல்  குதுஸீ, எத்தனையோ நமக்கு ரத்த பந்தங்களை மதித்து அவர்களுடன் சேர்ந்து வாழ்வதை வலியுறுத்துகிறது. 


 يقول تعالى في الحديث القدسي: «أنا الرحمن، وأنا خلقت الرحم، واشتققت لها من اسمي، فمن وصلها وصلته، ومن قطعها قطعته». 

وقال النبي صلى الله عليه وسلم موصيا أصحابه: «أرحامكم أرحامكم». أي: الزموا صلة أرحامكم، وأحسنوا إليهم. 

وبذلك أوصى صلى الله عليه وسلم أبا ذر، قال رضي الله عنه: أوصاني خليلي أن أصل رحمي وإن أدبرت. 

قال رسول الله صلى الله عليه وسلم: «تعلموا من أنسابكم ما تصلون به أرحامكم»

قال النبي صلى الله عليه وسلم: «من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه».

சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்வதென்பது  நாம் அல்லாஹ்விற்காக செய்யும் சிறந்த வணக்கங்களில் ஒன்று : 

 يقول عمرو بن دينار : " ما من خطوة بعد الفريضة أعظم أجراً من خطوة إلى ذي الرحم " وقريبك قطعة منك إن أحسنت إليه فإنما تحسن إلى شخصك، وإن بخلت عليه فإنما تبخل عن نفسك، والله خلق الرحم وشق لها اسماً من اسمه، ووعد ربنا بوصل من وصلها " أما ترضين أن أصل من وصلك وأن أقطع من قطعك ؟ قالت : بلى، قال فذاك لك " (متفق عليه) 

நம்முடைய மார்க்கம் நமக்கு செய்ய வலியுறுத்தும் அனைத்திலுமே நமக்கு முதலில் முன்னிறுத்துவது, நாம் நம்முடைய ரத்த பந்தங்களுக்கு முதலுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் தான்.

அதனால் தான் ஒருவர் ஜகாத் கடமையாகி, அதற்கான பங்கை வெளியேற்ற நினைத்தால் அதன் படித்தரங்களிலும் அல்லாஹ் சொந்தங்களுக்கே முன்னுரிமை கொடுக்குமாறு கூறுகிறான்.


نص الحديث عند أحمد والترمذي والنسائي والحاكم: «الصدقة على المسكين صدقة، وهي على ذي الرحم اثنتان؛ صدقة وصلة» 

இப்படி இதனை சிறப்புகளையும், இதனை சலுகைகளையும் இழந்துவிட்டு தான் நாம் இன்று, மனதில் நிம்மதி இல்லாமலும், வீட்டில் பரக்கத் இல்லாமலும் தத்தளிக்கின்றோம்.

இனியாவது இதனை உணர்ந்து எல்லா சொந்தங்களுடனும் அரவணைத்து சேர்ந்து வாழும் ஓர் சிறந்த பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தந்தருள்புரிவானாக ! ஆமீன் !

No comments: