அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 15 August 2019

அல்லாஹ்வின் நல்லடியார்கள்







Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்பவர்கள், அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானவர்கள். அவர்கள் நபிமார்களாகவும் இருக்கலாம், இரசூல்மார்களாகவும் இருக்கலாம், இறைநேசர்களாகவும் இருக்கலாம்.
நபிமார்களில் இறுதியான தூதர் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தான். அவர்களுக்கு பிறகு மக்களுக்கு வழிகாட்டுவதற்காகவும், அவர்களுக்கு போதனைகள் செய்வதற்காகவும் கியாமத் நாள் வரை அல்லாஹ் அதற்கான ஒரு கூட்டத்தினரை தொடர்ந்து வர செய்து கொண்டிருக்கின்றான். 

அவர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள அவர்களின் பல்வேறு குணங்களை அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகின்றான். 

اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ‏ لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ؕ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ‌ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُؕ‏

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர். இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.  (10:62- 64)

17713- حدثنا أبو هاشم الرفاعي قال ، حدثنا ابن فضيل قال ، حدثنا أبي عن عمارة بن القعقاع الضبي، عن أبي زرعة بن عمرو بن جرير البجلي، عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن من عباد الله عبادًا يغبطهم الأنبياء والشهداء! قيل: من هم يا رسول الله؟ فلعلنا نحبُّهم! قال: هم قوم تحابُّوا في الله من غير أموالٍ ولا أنساب، وجوههم من نور، على منابر من نور، لا يخافون إذا خاف الناس، ولا يحزنون إذا حزن الناس. وقرأ: (ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون). (5)


17714- حدثنا ابن حميد قال ، حدثنا جرير، عن عمارة، عن أبي زرعة، عن عمر بن الخطاب، قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن من عباد الله لأناسًا ما هم بأنبياء ولا شهداء، يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله! قالوا: يا رسول الله ، أخبرنا من هم وما أعمالهم؟ فإنا نحبهم لذلك! قال: هم قوم تحابُّوا في الله بروح الله ، على غير أرحام بينهم ولا أموال يتعاطونها، فوا الله إن وجوههم لنورٌ، وإنهم لعلى نور، لا يخافون إذا خاف الناس ، ولا يحزنون إذا حزن الناس. وقرأ هذه الآية: (ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون). (6)



وروى سعيد بن جبير أن رسول الله صلى الله عليه وسلم سئل : من أولياء الله ؟ فقال : الذين يذكر الله برؤيتهم . وقال عمر بن الخطاب ، في هذه الآية : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : إن من عباد الله عبادا ما هم بأنبياء ولا شهداء تغبطهم الأنبياء والشهداء يوم القيامة لمكانهم من الله تعالى . قيل : يا رسول الله ، خبرنا من هم وما أعمالهم فلعلنا نحبهم . قال : هم قوم تحابوا في الله على غير أرحام بينهم ولا أموال يتعاطون بها فوالله إن وجوههم لنور وإنهم على منابر من نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس ثم قرأ ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون 

நல்லடியார்களின் குணாதிசியங்கள் : 


அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கென்று ஒரு சில குணங்களை அல்லாஹ் தனது அருள்மறையின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடுகின்றான். இன்னும் ஒரு சில குணங்கள்அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லலாம் அவர்கள் தங்களது நாவால் நவின்றுள்ளார்கள். 



 وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏

இவர்கள்தாம், ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் "ஸலாமுன்" என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள்.

وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏

அன்றி, அவர்கள் தங்கள் இறைவனை, நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்கிக் கொண்டு இருப்பார்கள்.


وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ  اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ‌ۖ 

தவிர, அவர்கள் "எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார்கள்.

اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا‏

(அன்றி) "சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும் (ஆகவே, அதில் இருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்திப்பார்கள்).

وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏

அன்றி, அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள்.

 وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ‌ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ‏

தவிர, அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் வணக்கத்திற்குரியவனாக அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான்.



அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்போர், சதா அவனுடைய நினைவிலேயே இருப்பார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் உறங்கும் நேரத்தில் அல்லாஹ்வை வாங்குவார்கள்.

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفاً وَطَمَعاً وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُون

அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.




 وقال علي بن أبي طالب رضي الله عنه : أولياء الله قوم صفر الوجوه من السهر ، عمش العيون من العبر ، خمص البطون من الجوع ، يبس الشفاه من الذوي . 


அல்லாஹ் நம்மையும் இப்படிப்பட்ட சிறந்த நல்லடியார்களாக ஆக்குவாயாக ! ஆமீன் !


No comments: