அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 8 August 2019

குர்பானி






Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜு பெருநாளை அடைய இருக்கின்றோம். இந்த தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாள் நமக்கு பல்வேறு செய்திகளை சொல்லித்தருகிறது.

நமக்கு கற்றுக்கொடுப்பது என்ன ? 


இந்த உலகத்தை பற்றியும், இதில் நம்முடைய வாழ்க்கை, குடும்பம், நாம் அனுபவிக்கும் சுகபோகங்கள், சொந்தபந்தங்கள், நம்முடைய குடும்பத்தாரின் மீது காண்பிக்கும் பாசம் பிரியம், பற்றிய பல்வேறு செய்திகளை நமக்கு உணர்த்துகிறது. 

அவை அனைத்தும் நமக்கு சொல்ல வரும் கருத்து ஒன்று தான். அனைத்தையும் உனக்கு கொடுத்தது அல்லாஹ் தான், அவை அனைத்தும அவனை கொண்டு தான். எனவே அவை அனைத்தும் அவனுக்கு பின்பு தான்.

அவை அனைத்துமே இந்த உலகில் நாம் வாழ்வதற்கான தாத்பரியத்தை உணர்த்துகின்றது. 

نَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسنِينَ إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ

அச்சமயம் நாம் "இப்ராஹீமே!" என அழைத்து, உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்" என்றும் கூறி,  "நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்" (என்றும் கூறினோம்). ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.  (37:104-107)


எதற்காக நமக்கு கடமையாக்கப்பட்டது ?


அல்லாஹு தஆலா ஹழ்ரத் இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிட்ட ஒன்றை அவர்களை பின்தொடராந்து நம்மையும் அல்லாஹு தஆலா செய்யுமாறு ஏவி ரசிக்கிறான்.


وفي الخبر : إن الذبيح قال لإبراهيم - عليه السلام - حين أراد ذبحه : يا أبت اشدد رباطي حتى لا أضطرب ، واكفف ثيابك لئلا ينتضح عليها شيء من دمي فتراه أمي فتحزن ، وأسرع مر السكين على حلقي ليكون الموت أهون علي ، واقذفني للوجه ، لئلا تنظر إلى وجهي فترحمني ، ولئلا أنظر إلى الشفرة فأجزع ، وإذا أتيت إلى أمي فأقرئها مني السلام . فلما جر إبراهيم - عليه السلام - السكين ضرب الله عليه صفيحة من نحاس ، فلم تعمل السكين شيئا ، ثم ضرب به على جبينه وحز في قفاه فلم تعمل السكين شيئا


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த செயலைக்கொண்டு, நம்மையும் அல்லாஹ் அதனை பின்பற்றி செய்யுமாறு ஏவிய காரணம் என்னவென்றால், நம்மை பக்குவப்படுத்துவதற்காக தான்.


நம்மை அல்லாஹ் தஆலா சோதிப்பதாக கூறுகின்றான். அந்த சோதனைகளின் போது பொறுமைகாப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான். இன்னும் சுபச்செய்தி கூறுகின்றான் என்று அருள்மறையில் கூறுகிறான்.

وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.  (2:155.)

இதன் மூலம் நாம் அந்த இழப்புகளை தாங்கிக்கொள்வதற்காக தான், நாம் ஓர் ஆடு அல்லது மாடு அல்லது  ஒட்டகம் வாங்கி அதனை ஒரு சில நாட்கள் நம்முடன் வளர்த்து அதனை அல்லாஹ்விற்காக அவனது பெயரைக்கொண்டு அறுக்க வேண்டும். அந்த ஒரு சில நாட்கள் நாம் அதற்கு உணவு கொடுத்து தண்ணீர் புகட்டி வளர்க்கும்பொழுது, நம்மை அறியாமலேயே ஒரு விதமான பிரியம் நம்முடைய உள்ளத்தில் ஏற்படும்.அந்த பிரியத்திலேயே அதனை நாம் அல்லாஹ்வுக்காக இலக்கும் பொழுது நமக்கு மனப்பக்குவம் ஏற்படுகிறது.

இதற்கான  கூலியும்  சிறப்பும் :  


இந்த சிறப்புக்குரிய நாளில் செய்யும் அமலுக்கு மிகப்பெரும் சிறப்பு உள்ளது. 

قال صلى الله عليه وسلم: (ما عمِلَ ابنُ آدمَ من عملٍ يومَ النَّحرِ أحبَّ إلى اللَّهِ من هِراقةِ الدَّمِ وإنَّهُ لتأتي يومَ القيامةِ بقرونِها وأشعارِها وأظلافِها وإنَّ الدَّمَ ليقعُ منَ اللَّهِ بمَكانٍ قبلَ أن يقعَ بالأرضِ فطِيبوا بِها نفسًا
رواه ابن حجر العسقلاني، في تخريج مشكاة المصابيح، عن عائشة أم المؤمنين، الصفحة أو الرقم: 2/132، حسن.


قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏   لَا شَرِيْكَ لَهٗ‌ۚ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ‏ 

(அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு யாதொரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்" (என்றும் கூறுங்கள்.)  (6:162- 163)


அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்காக பல்வேறு நல்லமலைகளை செய்ய வாய்ப்பளித்து  அதற்கான மகத்தான கூலியை கொடுப்பதில்  மகா வல்லவன். அப்படி நாம் இந்த சிறப்புக்குரிய நாளில் செய்யும் அந்த சிறப்பான அமலுக்கு மகத்தான கூலியை கொடுக்கின்றான். அதற்கான அத்தாட்சியாக இந்த வசனமே போதுமானது.

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ

இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது.   (22:32)


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் பின்பற்றிய வழிமுறை :

அண்ணலாரின் பாட்டனார்  ஹழ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸ்ஸலாம் அவர்களின் வழிமுறையை அல்லாஹ்வின் கட்டளைப்படி தங்களது வாழ்நாளில் பின்பற்றினார்கள்.

عن النبي صلّى الله عليه وسلّم، ففي الحديث الذي رواه أنس بن مالك رضي الله عنه: (ضحَّى النبيُّ -صلَّى اللهُ عليه وسلَّم- بكبشَينِ أملحَينِ أقرنَينِ، ذبَحهما بيدِه، وسمَّى وكبَّر، ووضَع رجلَه على صِفاحِهما).   
رواه البخاري، في صحيح البخاري، عن أنس بن مالك، الصفحة أو الرقم: 5565، صحيح.


இப்படிப்பட்ட சிறப்புமிக்க பாட்டனார் ஹழ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சுன்னத்துகளை நமக்கு பின்பற்றும் தௌபீக்கை தந்து அதற்காக மகத்தான நற்கூலியை பெறுவதற்கான பேறு பெற்றவர்களாக அல்லாஹ் நம்மை ஆங்குவானாக ! ஆமீன் !


No comments: