அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 1 August 2019

பத்து இரவுகள்




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

அல்லாஹு தாலா நமக்காக கொடுத்த சிறந்த வாய்ப்புகள், நமக்கு வருடம் முழுவதும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. நம்முடைய வாழ் நாள் நமக்கு மற்ற உம்மத்தினரை விட குறைவானதாக இருந்தாலும், அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்த அந்த சிறந்த நாட்களை நாம் சரியான முறையில் பயன்படுத்தி, அதில் அதிக நல்லமல்களை செய்துவந்தால் நிச்சயம் பிற உம்மத்தினரை விட அதிக நன்மைகளை நம்மால் பெற முடியும். 

அல்லாஹ் நமக்கு அதற்கான தவ்பீக்கை தருவானாக ! ஆமீன் !

ஹிஜ்ரி ஆண்டு 1440 உடைய கடைசீ மாதத்தை அடைந்துள்ளோம். இந்த வருடத்தின் கடைசீ மாதத்தின் அதிகமான நாட்கள் நமக்கு நல்லமல்களை செய்வதற்கான நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றது. ரமளானுக்கு பிறகு இந்த மாதத்திலேயே நாம் அதிகமான நல்லமல்கள் செய்ய முடியும். அதன் ஆரம்பமே மிக சிறப்பான நாட்களாக அமைத்து கொடுத்திருக்கிறேன் அல்லாஹு தஆலா . 



وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3) وَاللَّيْلِ إِذَا يَسْرِ (4) هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ (5)

விடியற்காலையின் மீதும், பத்து இரவுகளின் மீதும், ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், நிகழ்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்). இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கின்றது.

 روي عن ابن عباس : أنها العشر الأول من ذي الحجة . وهو قول مجاهد ، وقتادة ، والضحاك ، والسدي ، والكلبي .

இந்த வசனத்தில் வரும் பத்து இரவுகள் என்பது குர்ஆன் விரிவுரையாளர்கள் தலைவர் என்று கண்மணி நாயகம் ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்களால் சுயபச்செய்தி சொல்லப்பட்ட ஹழ்ரத் இப்னு அபபாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் விள்ளக்கப்படி அது, துல்ஹஜ் மாதத்தின் முதல் பாத்து நாட்கள் தன என்று  கூறுகின்றார்கள். 


وروى أبو الزبير عن جابر أن رسول الله - صلى الله عليه وسلم - قال : " والفجر وليال عشر - قال : عشر الأضحى " فهي ليال عشر على هذا القول ; لأن ليلة يوم النحر داخلة فيه ، إذ قد خصها الله بأن جعلها موقفا لمن لم يدرك الوقوف يوم عرفة .



அல்லாஹ்வுக்கு பிடித்தமான நாட்கள் :


இந்த பத்து நாட்கள் அல்லாஹ்வுக்கு மிக பிடித்தமான நாட்கள். அந்த நாட்களில் நம் அதிகம் நல்லமல்கள் புரிய வேண்டும். 

فقد قال صلى الله عليه و آله وسلم  : ( ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر» قالوا: ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء )،


இந்த பத்து நாட்கள்  :


இந்த பாத்து சிறப்புமிக்க நாட்கள் தன ஹஜ்ஜுடைய நாட்களாகும். இந்த நாட்களில் தான் சிறப்பு மிக்க நகரமான மக்கத்துல் முகர்ரமாவில் ஹாஜிகள் அதன் கிரியைகளை நிறைவேற்றுவார்கள்.. அந்த  நாட்களை தான் அல்லாஹு தஆலா தனது அருள்மறையில், 

 وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ‏ 

لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِ‌‌ ۚ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ

 (அவரை நோக்கி) "ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிக்கையிடுங்கள். (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள்.

(வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்.) குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள். ஆகவே, அவ்வாறு அறுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்; சிரமப்படும் ஏழைகளுக்கும் புசிக்கக் கொடுங்கள்.

இந்த துன்யாவின் நாட்களில் சிறந்தது :

அண்ணல் நபி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 

 قال النبي صلى الله عليه وسلم: «أفضل أيام الدنيا أيام العشر». يعني: عشر ذي الحجة

இந்த பாத்து நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த நாட்களில் நாம் அதிகம் நல்லமல்களை செய்ய வேண்டும்.

முதலாவதாக நம்முடைய பாவங்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.

 قال الله تعالى: (وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

நரக நெருப்பிலிருந்து விடுதலை கேட்க வேண்டும்.

في صحيح مسلم أنّ الرسول -صلّى الله عليه وسلّم- قال: (ما من يومٍ أكثرَ من أن يُعتِقَ اللهُ فيهِ عبدًا من النارِ، من يومِ عرفةَ، وإنَّهُ ليدنو ثم يُباهي بهم الملائكةُ، فيقول: ما أراد هؤلاءِ؟

அல்லாஹ்வுக்காக குர்பானி கொடுக்கும் எண்ணத்துடன் முடி நகங்களை கலையாமல் இருக்க வேண்டும் :

عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال : " إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره " .
أخرجه مسلم في كتاب الأضاحي ، باب نهي من دخل عليه عشر ذي الحجة وهو مريد التضحية أن يأخذ من شعره أو أظفاره شيئاً رقم ( 1977 ) 3 / 1565 ، 


அரஃபா உடைய நாள் : 


இந்த பாத்து நாட்களில் ஒன்பதாவது நாள் அரஃபா உடைய நாளாக கடைபிடிக்கப்பட்டு அன்று நோன்பு நோக்கப்படுகிறது.

 لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவைகளைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான்.  (5:3)

في صحيح مسلم أنّ الرسول -صلّى الله عليه وسلّم- قال: (ما من يومٍ أكثرَ من أن يُعتِقَ اللهُ فيهِ عبدًا من النارِ، من يومِ عرفةَ، وإنَّهُ ليدنو ثم يُباهي بهم الملائكةُ، فيقول: ما أراد هؤلاءِ؟


இந்த அரஃபா உடைய நாளில் தன அதிகமான மக்கள் நன்றாக விடுதலை பெறுகின்றனர்.

قال علي بن أبي طلحة ، عن ابن عباس قوله : ( اليوم أكملت لكم دينكم ) وهو الإسلام ، أخبر الله نبيه صلى الله عليه وسلم والمؤمنين أنه أكمل لهم الإيمان ، فلا يحتاجون إلى زيادة أبدا ، وقد أتمه الله فلا ينقصه أبدا ، وقد رضيه الله فلا يسخطه أبدا .

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மறைவு :



قال ابن جريج وغير واحد : مات رسول الله صلى الله عليه وسلم بعد يوم عرفة بأحد وثمانين يوما .


رواهما ابن جرير ، ثم قال : حدثنا سفيان بن وكيع ، حدثنا ابن فضيل ، عن هارون بن عنترة ، عن أبيه قال : لما نزلت ( اليوم أكملت لكم دينكم ) وذلك يوم الحج الأكبر ، بكى عمر فقال له النبي صلى الله عليه وسلم : " ما يبكيك؟ " قال : أبكاني أنا كنا في زيادة من ديننا ، فأما إذ أكمل فإنه لم يكمل شيء إلا نقص . فقال : " صدقت 


இந்த வசனம் இறங்கி ஒரு சில நாட்களில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள இந்த உலகை விட்டு மறைந்தார்கள் .


மறுமையில் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுடன் இருக்கும் மிகப்பெரும் பாக்க்கியத்தை நமக்கு தந்து அல்லாஹ் நமக்கு தந்த இந்த சிறப்பு மிக்க நாட்களில் அதிகமான நல்லமல்கள் செய்து அதனுடைய முழுமையான பலனை பெரும் பாக்கியத்தை நம் அனைவர்க்கும் தந்தருள் புரிவானாக ! ஆமீன் ! 

No comments: