அல்லாஹு தஆலா ஒன்றின் மீது சத்தியம் இடுகிறான் என்று சொன்னால் அது நிச்சயமாக மிக முக்கியமான ஒன்றாக தான் இருக்க முடியும். அப்படி அல்லாஹு தாலா பல்வேறு இடங்களில் நேரத்தின் மீதி சத்தியம் செய்கின்றான்.
وَالْعَصْرِۙ
காலத்தின் மீது சத்தியமாக!
وَالَّيْلِ اِذَا عَسْعَسَۙ
وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ
செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!
உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக! (81:17-18)
وَالنَّهَارِ اِذَا جَلّٰٮهَا
وَالَّيْلِ اِذَا يَغْشٰٮهَا
மேலும், பகலின் மீது சத்தியமாக, அது சூரியனை வெளிப்படுத்திக் காட்டும்போது!
மேலும், இரவின் மீது சத்தியமாக, அது சூரியனை மூடி மறைத்துக் கொள்ளும்போது! (91:3-4)
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ
உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கை யையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன். (67:2)
நம்மை அல்லாஹு தஆலா படைத்தது நமக்கான ஒரு காலக்கெடுவை கொடுத்திருக்கிறான் அது நமக்கு எப்போது ஆராம்பித்தது என்பதனை அருந்துகொண்டோம். ஆனால் எப்போது முடியும் என்பது நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால், அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்று நம்மை சோதிப்பதற்காகவே என அல்லாஹு தஆலா அருள்மறையில் கூறுகின்றான். அதை கொண்டு தான் மறுமையில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நம்மை எச்சரிக்கிறான்.
நாம் எப்படி பயன் படுத்துகிறோம் ?
எதுவாக இருந்தாலும் நாம் நல்ல முறையில் பயன்படுத்தினால் அது நமக்கு நன்மை பயக்கும். தீய முறையில் பயன்படுத்தினால் அது நமக்கு தீமை பயக்கும். நம்முடைய பயன்பாடை பொறுத்து அதனுடைய பயன் நமக்கு கிடைக்கும். இந்த நேரமும் அதே போன்று தான்.
அழகான பயன் தரும் வகையில் சிறந்த வழியில் பயன் படுத்தினால் முஃமினான மக்களுக்கு மிக்க நன்மை பயப்பதாக இருக்கும்.
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ
அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கியிருந்து கொண்டு (உல்லாசமாக) உரையாட ஆரம்பித்து,
قَالُـوْۤا اِنَّا كُـنَّا قَبْلُ فِىْۤ اَهْلِنَا مُشْفِقِيْنَ
"இதற்கு முன்னர், நாம் நம்முடைய குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்து கொண்டே இருந்தோம்.
فَمَنَّ اللّٰهُ عَلَيْنَا وَوَقٰٮنَا عَذَابَ السَّمُوْمِ
ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான்.
اِنَّا كُـنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ ؕ اِنَّهٗ هُوَ الْبَـرُّ الرَّحِيْمُ
இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன் நன்றி செய்பவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான்" என்றும் கூறுவார்கள்.
قال تعالى: (وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ* وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ
எவர்கள் (நம்முடைய வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) அன்றி, அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்.
அதில் அவர்கள் பெரும் சப்தமிட்டு "எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றிவிடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) "நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரையில் நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள். ஆதலால், நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை" (என்று கூறுவான்). (35: 36 -37)
روى الترمذي في سننه (عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى بَكْرَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلاً قَالَ
يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ قَالَ « مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ ».
قَالَ فَأَيُّ النَّاسِ شَرٌّ قَالَ « مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ » حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
'யாருக்கு அதிக ஆயுள் கொடுக்கப்பட்டு அவர் அதனை நன்மையான காரியங்களில் பயன்படுத்தி கொண்டாரோ அவரே மக்களில் சிறந்தவர் ' என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்..
கவனம் வேண்டும் !
இப்படி ஒரு சூட்சமம் மிக்க ஒன்றை நாம் கையாளும் பொழுது மிகவும் கவனத்துடன் கையாள்வது தான் சிறந்த மதியுடைமை.
இதனை எப்படி கையாள்வது என்பது குறித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நம்மை எச்சரித்துள்ளார்கள். அதனை நாம் நம்மடைய மனதில் கொண்டு நம்முடைய வாழ்வை நடைமுறை படுத்தி கொள்ள வேண்டும்.
قال رسول الله صلى الله عليه وسلم :« نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ»
மக்களில் அதிகமானோர் இரண்டு நிஃமத்துகளில் பொடுபோக்காக உள்ளனர். 1. உடல் நலம் 2. ஓய்வு நேரம்.
கேள்விகள் காத்திருக்கின்றது ...
والمسلم مسؤول عن وقته يوم القيامة، فقد قال الرسول عليه الصلاة والسلام: (لا تزولُ قدما عبدٍ يوم القيامة حتَّى يُسأل عن أربع خصالٍ: عن عمرِه فيما أفناه
எனவே நம்மை நோக்கி கேள்விக்கணைகளை பாய்வதற்கு காத்துக்கொண்டிருக்கிறது என்பதனை நம் நினைவில் கொண்டு நமக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை மிக சரியான முறையில் பயன்படுத்துவதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக ! ஆமீன் !
No comments:
Post a Comment