நம்முடைய வாழ்வில் நம்மை விட பெரியவர்களானாலும், சிரியவர்களானாலும் நாம் அவரக்ளை மதித்து நடக்க வேண்டும். இதையே நம்முடைய மார்க்கம் நமக்கு வலியுறுத்துகிறது.
அப்படி நாம் மதிக்க வேண்டியவர்களின் முதல் தரத்தில் உள்ளவர்கள், நம்முடைய பெற்றோர்கள்.
அவர்களை நாம் மிக்க மரியாதையுடன் நடத்தும்படி அல்லாஹு தஆலா நம்மை பணிக்கின்றான்.
وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا
(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். (17:23)
இப்படி ஒரு சிறு பிள்ளைக்கு சொல்லும் விதமாக அல்லாஹு தஆலா நமக்கு இதனை கற்றுக்கொடுக்கின்றான்.
حدثنا ابن أبي أويس حدثني أخي عن سليمان بن بلال عن محمد بن هلال عن سعد بن إسحاق بن كعب بن عجرة السالمي عن أبيه - رضي الله عنه - قال : إن كعب بن عجرة - رضي الله عنه - قال : قال النبي - صلى الله عليه وسلم - : أحضروا المنبر فلما خرج رقي إلى المنبر ، فرقي في أول درجة منه قال آمين ثم رقي في الثانية فقال آمين ثم لما رقي في الثالثة قال آمين ، فلما فرغ ونزل من المنبر قلنا : يا رسول الله ، لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه منك ؟ قال : وسمعتموه ؟ قلنا نعم . قال : إن جبريل - عليه السلام - اعترض قال : بعد من أدرك رمضان فلم يغفر له فقلت آمين فلما رقيت في الثانية قال بعد من ذكرت عنده فلم يصل عليك فقلت آمين فلما رقيت في الثالثة قال بعد من أدرك عنده أبواه الكبر أو أحدهما فلم يدخلاه الجنة قلت آمين .
பெற்றோரை மதிப்பதன் முக்கியத்துவம் :
நம்முடைய அமல்களில் சிறந்தது, உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும் தொழுகைக்கு பிறகு பெற்றோருக்கு நற்கருமங்கள் செய்வதே என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்லி தந்தார்கள்.
وفي صحيح البخاري عن عبد الله قال : سألت النبي - صلى الله عليه وسلم - أي العمل أحب إلى الله - عز وجل - ؟ قال : الصلاة على وقتها قال : ثم أي ؟ قال : ثم بر الوالدين قال ثم أي ؟ قال : الجهاد في سبيل الله فأخبر - صلى الله عليه وسلم - أن بر الوالدين أفضل الأعمال بعد الصلاة التي هي أعظم دعائم الإسلام . ورتب ذلك ( بثم ) التي تعطي الترتيب والمهلة
روى الصحيح عن أبي هريرة قال : جاء رجل إلى النبي - صلى الله عليه وسلم - فقال : من أحق الناس بحسن صحابتي ؟ قال : أمك قال : ثم من ؟ قال : ثم أمك قال : ثم من ؟ قال : ثم أمك قال : ثم من ؟ قال : ثم أبوك
في صحيح البخاري عن أسماء قالت : قدمت أمي وهي مشركة في عهد قريش ومدتهم إذ عاهدوا النبي - صلى الله عليه وسلم - مع أبيها ، فاستفتيت النبي - صلى الله عليه وسلم - فقلت : إن أمي قدمت وهي راغبة أفأصلها ؟ قال : نعم صلي أمك .
குழந்தை, இளமை , முதுமை என்பது அனைவருமே எதார்த்தமாக சந்திக்கும் ஓர் நிலை தான். எனவே எந்த நிலையானாலும், அனைவருக்கும் நம் அவர்களுக்குரிய மதிப்பை கொடுக்க வேண்டும் என்பதே நமது மார்க்கம் நமக்கு காண்பித்துக்கொடுக்கும் வழியாகும்.
அதிலும் முக்கியமாக வயதில் மூத்தவர்களை, முதியவர்களை மதித்து நடப்பது என்பது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நமக்கு காண்பித்து தந்த சுன்னத்தான மரபாகும்.
قال ابن عباس رضي الله عنهما: المسلم لا يزداد في طول العمر والبقاء إلا كرامة عند الله تعالى. فإن لشيبته فضلا كبيرا؛ قال رسول الله صلى الله عليه وسلم :« ما من مسلم يشيب شيبة فى الإسلام إلا كانت له نورا يوم القيامة».
وفي رواية:« إلا كتب الله له بها حسنة، وحط عنه بها خطيئة».
قال رسول الله صلى الله عليه وسلم :« إن من إجلال الله إكرام ذي الشيبة».
அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும் :
பொதுவாகவே நாம் பிறரை மிகுந்த கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அதிலும் பல்வேறு கவனிப்புகள் மரியாதைகள் செய்ய வேண்டும் என்று இருந்தாலும், வயது முதிர்ந்தவர்களுடைய விஷயத்தில் நம்மை சற்று அதிக கவனத்துடன் நடந்து கொள்ள சொல்கிறது நம்முடைய மார்க்கம்.
توقيرهم بتقدير شخصيتهم، واحترام كلمتهم، قال النبي صلى الله عليه وسلم :« ليس منا من لم يوقر كبيرنا».
ஸலாம் சொல்வதிலும் அவர்களுக்கே ...
நம் இஸ்லாமிய சுன்னத்தான முறை படி, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறை படி, நாம் பிறரை கண்டால் ஸலாம் கூற வேண்டும். அதிலும் யார் யாருக்கு எப்படி ஸலாம் கூற வேண்டும் என்பதனையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நமக்கு கற்று கொடுத்துள்ளார்கள்.
في صحيح البخاري ومسلم عن أبي هريرة رضي اللّه عنه قال : قال رسولُ اللّه صلى اللّه عليه وسلم : ( يُسَلِّمُ الرَّاكِبُ على المَاشِي , وَالمَاشِي على القاعِدِ , وَالقَلِيلُ على الكثير ) وفي رواية للبخاري : ( يُسَلِّمُ الصَّغيرُ على الكَبيرِ , وَالمَاشِي على القاعِدِ , وَالقَلِيلُ على الكَثِير ) .
ونقل الحافظ ابن حجر عن الْمَازِرِيّ قوله : " لَوْ اِبْتَدَأَ الْمَاشِي فَسَلَّمَ عَلَى الرَّاكِب لَمْ يَمْتَنِع لأَنَّهُ مُمْتَثِل لِلأَمْرِ بِإِظْهَارِ السَّلام وَإِفْشَائِهِ ، غَيْر أَنَّ مُرَاعَاة مَا ثَبَتَ فِي الْحَدِيث أَوْلَى ، وَهُوَ خَبَر بِمَعْنَى الأَمْر عَلَى سَبِيل الاسْتِحْبَاب ، وَلا يَلْزَم مِنْ تَرْك الْمُسْتَحَبّ الْكَرَاهَة ، بَلْ يَكُون خِلاف الأَوْلَى ، فَلَوْ تَرَكَ الْمَأْمُور بِالابْتِدَاءِ فَبَدَأَهُ الآخَر كَانَ الْمَأْمُور تَارِكًا لِلْمُسْتَحَبِّ وَالآخَر فَاعِلا لِلسُّنَّةِ ، إِلا إِنْ بَادَرَ فَيَكُون تَارِكًا لِلْمُسْتَحَبِّ أَيْضًا " انتهى من "فتح الباري" (11/17) .
இப்படி ஓர் மிக சிறந்த அழகான வாழ்க்கை முறையை அல்லாஹு தஆலா அவனது தூதர் கண்மணி நாயகம் ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மூலமாக நமக்கு அமைத்து கொடுத்துள்ளான். அதனை நமது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி மிக சிறந்த வாழ்வாக இந்த உலக வாழ்வை வாழ்வதற்கு அல்லாஹு தாலா நமக்கு கிருபை செய்வானாக. ஆமீன் !
No comments:
Post a Comment