அல்லாஹ் தனது அருள்மறை வசனத்தில் :
وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى
நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். {5:2.}
ஒரு முஸ்லிமான ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்களின் வாழ்வு என்பது, நன்மை மற்றும் இறையச்சத்தை சார்ந்தே உள்ளது.
நாம் செய்யும் எந்த செயலாக இருந்தாலும், நமக்கு ஏதேனும் ஓர் கூலியை நமக்கு பெற்றுத்தருகிறது. அதே போன்று, இறையச்சத்தின் பிரதிபலிப்பாகவே அது அமைகிறது.
இப்படி, நம்முடைய வாழ்வில் நாம் சீர்திருத்தம் கொண்டுவருவது மட்டுமல்லாமல், பிறருக்கும் அவர்கள் இறையச்சத்துடனும் நன்மைகளை செய்தும் தங்களது இந்த துன்யாவின் வாழ்வை அமைத்துக்கொள்வதற்கு நாம் உதவியாக இருக்க வெகுண்டு என்பதே அல்லாஹ் நமக்கு இங்கு கட்டளை இடுவது.
மற்ற உம்மத்தினர்களை காட்டிலும் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உம்மத்தினரை சிறப்புப்படுத்தியதற்கு காரணமாகவே அல்லாஹ் இது போன்ற செயல்களைக்கொண்டு தான் என்று அருள் மறையில் கூறுகின்றான்.
كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (3:110)
روى الترمذي عن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله - صلى الله عليه وسلم - يقول في قوله تعالى : كنتم خير أمة أخرجت للناس قال : أنتم تتمون سبعين أمة أنتم خيرها وأكرمها عند الله . وقال : هذا حديث حسن .
وقال أبو هريرة : نحن خير الناس للناس نسوقهم بالسلاسل إلى الإسلام .
وقال ابن عباس : هم الذين هاجروا من مكة إلى المدينة وشهدوا بدرا والحديبية .
وقال عمر بن الخطاب : من فعل فعلهم كان مثلهم . وقيل : هم أمة محمد - صلى الله عليه وسلم - يعني الصالحين منهم وأهل الفضل
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
حديث رسول الله صلى الله عليه وسلم والذي يقول فيه ;
((من رأى منكم منكراً فليغيره بيده، فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان))
عن ابي سعيد الخدري رضي الله عنه
رواه : مسلم
இப்படி ஒருவர் தவறு செய்வதை பார்த்து தடுப்பதும், அவருக்கு ஒரு செய்யும் உதவி தான். இன்னும், அந்த தவறை செய்யாமல் இருக்க அவருக்கு தேவையான வழியை ஏற்படுத்தி கொடுப்பதும் அவருக்கு செய்யும் உதவி தான்.
அதுவும் அவருக்கு இறையச்சத்திற்கும், நன்மைக்கும் செய்யும் உதவி தான். அதுவே சமுதாயமக்கும் செய்யும் சேவைகள் அவர்களுக்கு இறையச்சத்தையும், நனமையையும் பயக்குவதாக இருக்கும்.
அருள்மறையில் அல்லாஹு தாலா, பல்வேறு இடங்களில் ஒவொரு செயலிலும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் உதவியாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக தான்
(قوله تعالى: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوَاْ)
என்று 89 இடங்களிலும் , இன்னும்,
قوله تعالى: (أَيُّهَا النَّاسُ)
என்று 20 இடங்களிலும் நம்மை மொத்தமாக அழைத்து, செய்திகளை கூறுகின்றான்.
உதவி செய்து கொள்ள அருள்மறை கூறும் ஓர் செய்தி:
அல்லாஹ் அருள்மறையில் பல்வேறு சம்பவங்களை நமக்கு படிப்பினையாக கூறுகின்றான். அவற்றுள் ஒவோன்றும் நமக்கு பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளை நமக்கு தருகிறது.
அதனுள், சுலைமான் அலைஹிஸ்ஸலாம் வரலாற்றில் எறும்பு தன்னுடைய சமூகத்திற்கு செய்த உதவியை அல்லாஹு தாள மிகவும் சிறப்பான முறையில் வர்ணித்து கூறுகின்றான்.
وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ
ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவைகளிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன. (27:17)
حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ
அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது. (27:18)
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ
அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற் செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார். (27:19)
ஒரு சிறிய எறும்பு தனது சமூகத்தின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக தனது சமூகத்தினரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, தான் அறிந்துகொண்ட ஒரு செய்தியை வைத்து, தான் மட்டும் அதனை விட்டு பாதுகாப்பாக இருந்து கொள்ளாமல், பிறரும் அதனை அறிய வேண்டும், பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்று அனைவர்க்கும் அந்த செய்தியை ஏத்தி வைக்கிறது. இது தான் சிறந்த ஓர் குணமாக எறும்பிடமிருந்து அருள்மறை நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
இதே செயலையும் இந்த குணத்தையும் கொண்டு தான் அருள் மறை நமக்கு ஏவுகின்றது. எல்லாவிதமான நன்மைகளையும், நாம் மட்டும் செய்து கொள்ளாமல் அதனை பிறருக்கும் அறிவித்து அவர்கள அதனை செய்வதற்கு உதவ வேண்டும். அதே போன்று தான் ஓர் தீமையை தான் மட்டும் தவிந்திருந்திருந்தல் போதும் என்றில்லாமல், பிறரும் அதனை தவிர்த்திருக்க உதவ வேண்டும்.
அல்லாஹ் அப்படி பிறருக்கும் எல்லாவிதமான உதவிகளை செய்து, அவர்களுக்கும் நமக்கும் நன்மைகளையும், இம்மை மறுமை வெற்றியையும் தந்தருள்வானாக ! ஆமீன் !
No comments:
Post a Comment