அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 27 June 2019

மறக்கப்படும் சுன்னத்துகள்






இந்த உலகில் வாழும் சொற்பமான காலத்தில் நாம் அல்லாஹு தஆலா வின் திரு பொருத்தத்தையும் அவனுடைய முஹப்பத்தையும் பெற வேண்டும் என்றால் அதற்கான வழிமுறையை அல்லாஹ்வே நமக்கு கற்று கொடுக்கின்றான். 

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 

(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்."  (3:31)

 وروي أن المسلمين قالوا : يا رسول الله ، والله إنا لنحب ربنا ; فأنزل الله عز وجل : قل إن كنتم تحبون الله فاتبعوني . قال ابن عرفة : المحبة عند العرب إرادة الشيء على قصد له . وقال الأزهري : محبة العبد لله ورسوله طاعته لهما واتباعه أمرهما ; قال الله تعالى : قل إن كنتم تحبون الله فاتبعوني


அல்லாஹ்வின் மீதும் அண்ணலாரின் மீதும் பிரியம் கொள்வதன்  அடையாளங்கள் :


وقال سهل بن عبد الله : علامة حب الله حب القرآن ، وعلامة حب القرآن حب النبي - صلى الله عليه وسلم - وعلامة حب النبي - صلى الله عليه وسلم - حب السنة ; وعلامة حب الله وحب القرآن وحب النبي - صلى الله عليه وسلم - وحب السنة حب الآخرة ، وعلامة حب الآخرة أن يحب نفسه ، وعلامة حب نفسه أن يبغض الدنيا ، وعلامة بغض الدنيا ألا يأخذ منها إلا الزاد والبلغة 


அல்லாஹ் நம்மை விரும்புவதற்கு அண்ணல் நபி ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த செயல்பாடுகள் : 


وروي عن النبي - صلى الله عليه وسلم - أنه قال : من أراد أن يحبه الله فعليه بصدق الحديث وأداء الأمانة وألا يؤذي جاره 

 خرجه أبو عبد الله الترمذي 

1. உண்மையையே  பேசுவது
2. அமானிதத்தை நிறைவேற்றுவது

3. அண்டை வீட்டாரை சிரம படுத்தாமல் இருப்பது



அண்ணலாரின் சுன்னத்தையும், அவர்களின் கலீஃபாக்களுடைய சுன்னத்தையும் பற்றி பிடித்து கொள்ள வேண்டும் : 


நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சுன்னத்துகளையும், இன்னும் அவர்களுடைய நான்கு கலீஃஆக்களின் சுன்னத்துகளையும் நாம் நம்முடைய கடைசீ நாள் வரை விடாது தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும்.


حث النبي صلى الله عليه وسلم على التمسك بها وعدم التفريط فيها فقال : ( فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ ) رواه أبو داود (4607) وصححه الألباني في صحيح أبي داود . 

رَوَى الْبَيْهَقِيُّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قالَ: (مَنْ أَحْيَا سُنَّتي عِنْدَ فَسَادِ أُمَّتي فَلَهُ أَجْرُ شَهِيدٍ)، 

مَعْنَى الْحَدِيثِ أَنَّ الَّذِي يَقُومُ بِإِحْيَاءِ شَريعَةِ الرَّسُولِ في الْوَقْتِ الَّذِي تَفْسُدُ فِيهِ الأُمَّةُ يَكُونُ لَهُ ثَوَابُ الشَّهِيدِ الْمُجَاهِدِ في سَبيلِ اللهِ، والشَّهيدُ دَرَجَتُهُ عَالِيَةٌ عِنْدَ اللهِ فَقَدْ وَرَدَ في الْحَدِيثِ الصَّحيحِ أَنَّ للشَّهِيدِ مِائَةَ دَرَجَةٍ في الْجَنَّةِ مَا بَيْنَ الدَّرَجَةِ والدَّرَجَةِ كَمَا بَيْنَ السَّمَاءِ والأَرْضِ وَقَدْ وَرَدَ أَنَّ مَا بَيْنَ السَّمَاءِ والأَرْضِ مَسِيرَةُ خَمْسِمِائَةِ عَامٍ



நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த அமானிதம் : 


இப்படி இந்த உலகில் நாம் வாழும் நோக்கமே அல்லாஹ் இரஸூலின் திருப்பொருத்தத்தை பெற்று மறுமையில் சிறந்ததை பெறுவது தான்.

நம்முடைய தாய் தந்தையர் பல்வேறு விதமான சுன்னத்தான வழிமுறைகளை நமக்கு அன்றாட வாழ்வின் பழக்க வழக்கங்களாக அமைத்து கொடுத்தார்கள். இன்னும் ஒழுக்கம் என்னும் முறையில் நம்மை அந்த வழியிலேயே சீர்படுத்தினார்கள். 

பெரியவர்களுக்கு மரியாதை செய்வது, அவர்களுக்கு பணிவிடை செய்வது, சிறியவர் பெரியவர் என்று அனைவர்க்கும் ஸலாம் சொல்வது, பணிவுடன் நடப்பது, உண்ணுவது, உடுப்பது, உறங்குவது, என்று நம் அனைத்துவிதமான  செயல்பாடுகளிலும் நல்ல சுன்னத்தான முறையை விதைத்து தந்தார்கள். 


நமக்கும் பிறருக்கு  கொடுத்து பழகும் நல்லெண்ணம்  வர வேண்டும் என்பதற்காக ஸதகா கொடுப்பதை கூட நம் கைகளால் கொடுக்க செய்தார்கள். 

சிறு வயது முதலே பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு அழைத்து சென்றுதொழுகும் முறையை கற்று கொடுத்தார்கள். அதற்கு பின் சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றுவதை வழக்கமாக்கினார்கள். 

தினமும் அருள்மறையை ஓதுவதை பழக்கப்படுத்தினார்கள். அல்லாஹ்விடம் கண்ணீர்விட்டு கேட்டால் நிச்சயம் கொடுப்பான் என்ற அல்லாஹ்வை பற்றிய மெலாம்பரமான எண்ணத்தை நம்மில் உருவாக்கினார்கள். 


அண்டை வீட்டாருடன் நல்ல உறவை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் உரிய உதவிகளை செய்து நம்முடைய உள்ளத்தில் நற்சான்றுகளை விதைத்தார்கள்.

சமைக்கும் உணவுகளில் அவர்களுக்கும் ஒரு பகுதியை நம் கைகளாலேயே கொடுக்கும் பழக்கங்களை உருவாக்கித்தந்தார்கள். 


இப்படி பல்வேறு செயல்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம் எத்தனையோ செயல்கள். 

நமக்கே அறியாமல் சுன்னத்தான வாழ்க்கையை வாழும் ஓர் நற்பேறு நம் முன்னோர்கள் நமக்கு உருவாக்கி கொடுத்தார்கள். இன்றளவும் நம்மின் வாழ்வில் சுன்னத்தான வழிமுறைகள் ஒட்டிகொண்டிக்கின்றது என்றால் அதற்கான முக்கிய காரணமே நம் முன்னோர்கள் நமக்கு பழக்கப்படுத்தி கொடுத்தது தான். 

அண்ணலாரின் சுன்னத்தை பின்பற்றுவதன் பலன் : 


 ويقول النبي- صلى الله عليه وسلم-: «مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي فَعَمِلَ بِهَا النَّاسُ، كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا لَا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ ابْتَدَعَ بِدْعَةً فَعُمِلَ بِهَا، كَانَ عَلَيْهِ أَوْزَارُ مَنْ عَمِلَ بِهَا، لَا يَنْقُصُ مِنْ أَوْزَارِ مَنْ عَمِلَ بِهَا شَيْئًا». 

(سنن ابن ماجة).
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை நாம் பின்பற்றுவதால் நமக்கு இந்த உலகிலும், இன்னும் மறுமையும் பலனை நாம் அடைந்து கொள்கின்றோம்.

இந்த உலகில் நமக்கு பிணி,  நோய், பீடை, போன்றவற்றை வீடும் பாதுகாப்புடன், அல்லாஹ் உடைய ரஹ்மத்தையும் அவனின் பாரத்தையும் பெற்றவர்களாக ஆகின்றோம்.

மறுமையிலும், உயர்ந்த பல தராஜாக்களையும், சுவனத்தியும், எல்லாவற்றிற்கும் மேலாக  அண்ணலாருடன் இருக்கும் பாக்கியத்தையும் பெறக்கூடிய உன்னதமானவர்களின் பட்டியலில் வாய்ப்பு பெறுகின்றோம்.


நம் அன்றாட வாழ்வில் பின்பற்றபாடுவதற்காக ஒரு சில சுன்னத்துகள்  :

1. உணவுக்குப் பின் விரல்களை சூப்புதல் :

عن ابن عباس رضي الله عنهما: أنَّ النَّبيَّ صلَّى الله عليه وسلَّم قال: (إذا أكل أحدكم؛ فلا يمسح يده؛ حتَّى يَلعقها أو يُـلعقها)متفق عليه.

 2. கீழே விழுந்த உணவு பருக்கைகளை சுத்தம் செய்து உண்ணுதல்


عن جابر رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلَّى الله عليه وسلَّم أَمَرَ بِلَعْقِ الأَصَابِعِ وَالصَّحْفَةِ، وَقَالَ: (إِنَّكُمْ لاَ تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ)رواه مسلم. وفي لفظ:(إذا وقعت لقمة أحدكم فليأخذها، فليمط ما كان بها من الأذى، وليأكلها، ولا يدعها للشَّيطان، ولا يمسح يده بالمنديل حتَّى يلعق أصابعه، فإنَّه لا يدري في أيِّ طعامه البركة)رواه مسلم.



3. உணவு உன்ன பாத்திரத்தை வழித்து உண்ணுதல்


دليل هذه السُّنَّة حديث جابر المتقدِّم في المـسألـة السَّابقة، وحديث أنس رضي الله عنه، عن النَّبيِّ صلَّى الله عليه وسلَّم: وأمرنا أن نسلت القصعة قال:(فإنَّكم لا تدرون في أيِّ طعامكم البركة)رواه مسلم.


4. ஸஹர் நேரத்தில் பேரீத்தப் பழங்களை உண்ணு நோன்பு வைத்தால்

عن أبي هريرة رضي الله عنه، عن النَّبيِّ صلَّى الله عليه وسلَّم قال:(نعم سحور المؤمن التَّمر)رواه أبو داود، وصحَّحه الألباني. قال ابن القيم في زاد المعاد عن التَّمر:(وهو فاكهة، وغذاء، ودواء، وشراب، وحلوى).




5. மூன்று மீட்டராக நீர் அருந்துதல்

عن أنسٍ رضي الله عنه قال: كان رسول الله صلَّى الله عليه وسلَّم يتنفَّس في الشَّراب ثلاثاً ويقول:(إنَّه أروى، وأبرأ، وأمْرأ)متفق عليه.



6. பால் அருந்தும் பொழுது பிறருக்கும் பகிர்ந்து கொடுத்தால்


عن أنس رضي الله عنه، أنَّ رسول الله صلَّى الله عليه وسلَّم: أُتْيَ بلبنٍ قد شيب بماء، وعن يمينه أعرابيٌ، وعن يساره أبو بكر، فشرب ثمَّ أعطى الأعرابي وقال:(الأيمنُ فالأيمنُ)متفق عليه.


7. பால் குடிக்கும் இடையில் துஆ ஓதுதல்


عن ابن عباس رضي الله عنهما قال: دخلت مع رسول الله صلَّى الله عليه وسلَّم أنا وخالد بن الوليد على ميمونة، فجاءتنا بإناءٍ من لبنٍ، فشرب رسول الله صلَّى الله عليه وسلَّم، وأنا عن يمينه، وخالد عن شماله، فقال لي:(الشُّربة لك، فإن شئت آثرت بها خالداً) فقلت: ما كنت أوثر على سؤرك أحداً، ثمَّ قال رسول الله صلَّى الله عليه وسلَّم:(من أطعمه الله الطَّعام فليقل: اللهمَّ بارك لنا فيه، وأطعمنا خيراً منه. ومن سقاه الله لبناً فليقل: اللهمَّ بارك لنا فيه وزدنا منه). وقال رسول الله صلَّى الله عليه وسلم:(ليس شيء يجزئ مكان الطَّعام والشَّراب غير اللَّبن)رواه أحمد والترمذي، وحسنه الألباني لكثرة شواهده وطرقه.


8. பால் அருந்திய பிறகு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால்

عن ابن عباس رضي الله عنهما أنَّ رسول الله صلَّى الله عليه وسلَّم شرب لبنًا فمضمض وقال:(إنَّ لـه دسمًا)متفق عليه. قال ابن حجر في الفتح: (فيه بيان العلَّة للمضمضة من اللَّبن، فيدلُّ على استحبابها من كلِّ شيء دسم).



9. அதிகம் பாவ மன்னிப்பு தேடுதல்


عن عبد الله بن عمر رضي الله عنهما قال: (إن كنَّا نعد لرسول الله صلَّى الله عليه وسلَّم، في المجلس الواحد مائة مرة: رب اغفر لي، وتب عليَّ، إنَّك أنت التَّواب الرَّحيم) رواه أبو داود والترمذي، . 


10. நல்லதிற்காக செய்த சத்தியத்தை மீறி அந்த சத்தியத்திற்காக ஈடு கொடுத்தால்

عن أبي هريرة رضي الله عنه: أنَّ رسول الله صلَّى الله عليه وسلَّم قال: (من حلف على يمين؛ فرأى غيرها خيراً منها؛ فليأت الذي هو خير، وليكفر عن يمينه)متفق عليه.


11. மகிழ்வையும், துக்கத்தையும் அல்லாஹ்விடத்தில் ஸஜ்தாவின் மூலம் வெளிபடுத்துதல்

قال البغويُّ في شرح السُّنَّة: (سجود الشُّكر سنَّة عند حدوث نعمة طالما كان ينتظرها، أو اندفاع بليَّة ينتظر انكشافها). وقال ابن القيم في زاد المعاد:(وكان من هديه صلَّى الله عليه وسلَّم وهدي أصحابه، سجود الشُّكر عند تجدُّد نعمة تسر، أو اندفاع نقمة).


12. பிறருக்குண்டான மகிழ்வை அவருக்கு முஸாபாஹா செய்து, முஆனகா (கைகொடுத்து, கட்டியணைத்து )  செய்து வாழ்த்து சொல்வது

أخرج البخاري ومسلم، في قصَّة توبة كعب بن مالك رضي الله عنه قولـه:(فقام إليَّ طلحة بن عبيد الله يُهرول؛ حتَّى صافحني وهنَّأني). قال ابن القيم في الزَّاد:(وفيه دليل على استحباب تهنئة من تجدَّدت لـه نعمة دينيَّة، والقيام إليه إذا أقبل ومصافحته، فهذه سنَّة مستحبَّة). والآن بعض النَّاس يرى أخاه اشترى ثوباً جديداً، أو قطعة أثاث جديدة، ويظلُّ ساكتاً، بإمكانه يقول: ما شاء الله تبارك الله، أسأل الله أن يبارك لك.


13. பாவத்தை விட்டு  மீளும்  பொழுது இரண்டு ரகாஅத் தொழுவது

عن أبي بكر الصِّديق رضي الله عنه أنَّ النَّبيَّ صلَّى الله عليه وسلَّم قال:(ما من رجلٍ يذنب ذنباً، ثمَّ يقوم فيتطهر، ثمَّ يصلِّي - وفي رواية: ركعتين - ثمَّ يستغفر الله؛ إلا غفر الله له)رواه أبو داود والترمذي، وصحَّحه الألباني.


14. பாவத்தை விட்டு மீண்டு அதில் நிலையாகவும் உண்மையாகவும் இருப்பது

أخرج البخاري ومسلم، في قصَّة كعب رضي الله عنه قوله:(قلت: يا رسول الله!! إنَّ من توبتي أن أنخلع من مالي صدقة إلى الله وإلى رسوله، قال رسول الله: أمسك عليك بعض مالك، فهو خيرٌ لك). قال ابن القيم في الزَّاد:(وقول كعب يا رسول الله!! إنَّ من توبتي أن أنخلع من مالي، دليلٌ على استحباب الصَّدقة عند التَّوبة بما قدر عليه من المال).



15. நல்ல செய்திகளை கேட்டால் தக்பீரை கொண்டும், தஸ்பீஹை கொண்டும் ஆச்சர்யத்தை வெளி படுத்துவது


عن أبي هريرة رضي الله عنه قال: أنَّه لقيه النَّبيُّ صلَّى الله عليه وسلَّم في بعض طرق المدينة، وهو جنب فانسلَّ، فذهب فاغتسل، فتفقده النَّبيُّ صلَّى الله عليه وسلَّم فلمَّا جاء قال: أين كنت يا أبا هريرة؟ قال: يا رسول الله!! لقيتني وأنا جنب، فكرهت أن أجالسك حتَّى أغتسل، فقال رسول الله صلَّى الله عليه وسلَّم:(سبحان الله! إنَّ المسلم لا ينجس)متفق عليه. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلَّى الله عليه وسلَّم:       (وإنِّي لأرجو أن تكونوا ربع أهل الجنَّة فكبَّرنا، ثمَّ قال: ثلث أهل الجنَّة فكبَّرنا، ثمَّ قال: شطر أهل الجنَّة فكبَّرنا)متفق عليه.


16. வஸிய்யத் செய்வது


عن ابن عمر رضي الله عنهما: أنَّ رسول الله صلَّى الله عليه وسلَّم قال:(ما حق امرئ مسلم له شيء يوصي فيه، يبيت فيه ليلتين) وفي رواية: (ثلاث ليال إلا ووصيته مكتوبة عنده)متفق عليه. قال نافع سمعت عبد الله بن عمر يقول: ما مرَّت عليَّ ليلة منذ سمعت رسول الله صلَّى الله عليه وسلَّم يقول ذلك؛ إلا وعندي وصيتي مكتوبة.




17. இரவு நேரத்துல குழந்தைகளை வெளியில் விடாமல் இருத்தல், பாத்திரங்களை மூடி வைத்தால்


عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلَّى الله عليه وسلَّم: (إذا كان جنح الليل أو أمسيتم، فكفُّوا صبيانكم؛ فإنَّ الشَّيطان ينتشر حينئذ، فإذا ذهب ساعة من الليل، فخلوهم، وأغلقوا الأبواب، واذكروا اسم الله، فإنَّ الشَّيطان لا يفتح باباً مغلقاً، وأوكوا قربكم، واذكروا اسم الله، وخمِّروا آنيتكم، واذكروا اسم الله، ولو أنَّ تعرضوا عليه شيئاً، وأطفئوا مصابيحكم)متفق عليه.

 18. மழையில் நனைவது

عن أنس رضي الله عنه قال: أصابنا ونحن مع رسول الله صلَّى الله عليه وسلَّم مطرٌ. قال: فحسر " أي: كشف" رسول الله صلَّى الله عليه وسلَّم ثوبه حتَّى أصابه من المطر، فقلنا: يا رسول الله!! لم صنعت هذا؟. قال:(لأنَّه حديث عهد بربِّه)رواه مسلم.

 قال النَّووي في شرحه:(وفي الحديث دليل لقول أصحابنا: إنَّه يستحبُّ عند أول المطر أن يكشف غير عورته يناله المطر واستدلوا بهذا، وفي أنَّ المفضول إذا رأى من الفاضل شيئاً لا يعرفه، أن يسأله عنه، ليعلمه، فيعمل به، ويعلِّمه غيره).


இது போன்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பல்வேறு சுன்னத்துகள் நம்முடைய வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டும்.


அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த நல்லதொரு பாக்கியத்தை தந்து மறுமையில் அந்நால்வருடன் இருக்கு பேரை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக ! ஆமீன் !

No comments: