மிகவும் கண்ணியம் வாய்ந்த சிறப்பு மிக்க ஒரு மாதத்தை அல்லாஹ் நம்மை அடைய செய்திருக்கின்றான்.
அல்லாஹ் மிகவும் அழகான முறையில் இந்த ரமலான் மாதத்தை நமக்கு அறிமுக படுத்தி, மிக சுருக்கமாகவும் தெளிவான முறையிலும் நமக்கு அதன் சட்ட திட்டங்களை விளக்கியுள்ளான்.
شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضاً أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللّهُ بِكُمُ الْيُسْرَ وَلاَ يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ)
(البقرة : 185)
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!
மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் :
عن سعيد بن المسيب عن سلمان قال : خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس إنه قد أظلكم شهر عظيم وفي رواية قد أطلكم بالطاء أطل : أشرف شهر عظيم شهر مبارك شهر فيه ليلة القدر خير من ألف شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من خصال الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كمن أدى سبعين فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة أي المساهمة وشهر يزاد فيه الرزق ومن فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيء قالوا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب لمن فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله عز وجل من حوضي شربة لا يظمأ بعدها حتى يدخل الجنة ومن خفف عن مملوكه فيه غفر الله له وأعتقه من النار حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار فاستكثروا فيه من أربع خصال خصلتين ترضون بهما ربكم وخصلتين لا غنى بكم عنهما أما الخصلتان اللتان ترضون بهما ربكم فشهادة أن لا إله إلا الله ، وتستغفرونه وأما اللتان لا غنى بكم عنهما فتسألون الله الجنة وتعوذون به من النار "
இந்த சிறப்பு மிக்க ரமலான் மாதத்தை அடைந்த மகிழ்வை பிறருடன் பரிமாறிக்கொள்வது :
இந்த சிறப்பு மிக்க ரமலான் மாதத்தை அடைந்த மகிழ்வை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எப்படி சஹாபாக்களுடன் பகிர்ந்து இந்த மாதத்தை அடைந்து விட்டதை அறிவித்தார்களோ அதே போன்று நாமும் பிறருடன் அந்த மகிழ்வை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
وروى النسائي عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين ، لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم ،
وأخرجه أبو حاتم البستي أيضا وقال : فقوله مردة الشياطين تقييد لقوله : صفدت الشياطين وسلسلت ،
وروى النسائي أيضا عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار : إذا كان رمضان فاعتمري فإن عمرة فيه تعدل حجة .
وروى النسائي أيضا عن عبد الرحمن بن عوف قال : قال رسول الله صلى الله عليه وسلم : إن الله تعالى فرض صيام رمضان [ عليكم ] وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه ، والآثار في هذا كثيرة ، كلها بإسقاط شهر ، وربما أسقطت العرب ذكر الشهر من رمضان
இந்த மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் :
இந்த சங்கைக்குரிய மாதத்தில் ஷைத்தான்கள் கடலுக்கடியில் விலங்கிடப்பட்டிருக்கும். எனவே எந்த வித தூண்டுதலும் இன்றி நம்முடைய அசல் குண நலன்கள் வெளிப்படும். அதனால் இந்த மாதத்திலே அதிகம் வணக்கங்கள் செய்து அல்லாஹ்வை எதனை நெருங்கிக்கொள்ள முடியுமோ அவ்வளவு அவனை அடைந்து கொள்ள விடாது முயற்சி செய்ய வேண்டும்.
عَنْ عبدِ اللهِ بنِ عَمْرِو بنِ العاصِ، قالَ: إنَّ في البَحْرِ شَياطِينَ مَسْجُونَةً، أوْثَقَها سُلَيْمانُ، يُوشِكُ أنْ تَخْرُجَ، فَتَقْرَأَ علَى النَّاسِ قُرْآنًا.
الراوي : طاووس بن كيسان اليماني | المحدث : مسلم | المصدر : صحيح مسلم [المقدمة]
الصفحة أو الرقم: 7 | خلاصة حكم المحدث : [أورده مسلم في مقدمة الصحيح]
அந்த விலங்கிடப்பட்ட ஷைத்தான்கள் அங்கிருந்து வெளி வர துடிக்கும் சமயம் அதிகாலை நாம் ஓதும் குர்ஆனின் சப்தம் அதனை விட்டும் அவர்களை தடுத்து விடும்.
சுவனத்தின் கதவுகள் :
இந்த மாதத்தில் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. இன்னும் நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. அதனை அடைத்துக்கொள்ளும் வழியை நாம் தேடிக்கொள்வோமானால் நிச்சயம் அல்லாஹ் நம்மை வெற்றி பெற்றவர்களாக ஆக்குவான். அதற்கான தௌபீக்கை நமக்கு வழங்குவானாக !
أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: ( إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ من شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فلم يُفْتَحْ منها بَابٌ ، وَفُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فلم يُغْلَقْ منها بَابٌ ...) الحديث ، رواه الترمذي (682) ، وابن ماجه (1642) ).
அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், நாம் நம்முடைய தீய பழக்க வழக்கங்களை மாற்றி நல்ல செயல்களை செய்யவதற்கு பழகிக்கொள்ளவேண்டும்.
பிறருக்கு தீங்கு விளைவிக்கும் எல்லா செயல்களை விட்டும் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய மனோ இச்சைகளை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்.
இன்னும் அகத்தை பொய் புறம் பேசுதல், பொறாமை கொள்ளுதல், போன்ற வற்றிலிருந்து தூய்மை படுத்தி கொள்ள வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, இந்த சங்கையான மாதத்தில் அல்லாஹ்வை வாங்குவதிலும், அவனை பற்றிய ஞானத்தை பெறுவதிலும் ஆர்வம் கொள்ள வேண்டும்.
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (فِي الْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ، فِيهَا بَابٌ يُسَمَّى الرَّيَّانَ، لاَ يَدْخُلُهُ إِلاَّ الصَّائِمُونَ) رواه البخاري.
நோன்பாளிக்கின்ற தனி வாயில் :
• عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (فِي الْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ، فِيهَا بَابٌ يُسَمَّى الرَّيَّانَ، لاَ يَدْخُلُهُ إِلاَّ الصَّائِمُونَ) رواه البخاري.
மறுமையின் கேடயங்கள் :
இந்த சங்கைக்குரிய மாதத்தில் நாம் நோன்பு வைப்பதன் பிரதி பலனாக மறுமையில், நோன்பும் நாம் ஓதும் குர்ஆனும் நமக்கு இறைவனிடத்தில் பரிந்துரை செய்யும்.
عَن عَبْدِاللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ : أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ : مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ، قَالَ : فَيُشَفَّعَانِ) رواه أحمد.
அதற்கெல்லாம் மெலாம்பரமாக, அல்லாஹ் ஹதீஸும் குத்ஸியில் இந்த நோன்பிற்கான கூலியாக நானே ஆகிவிடுகின்றேன் என்று கூறுகிறான்:
قَالَ رَسُولُ الله صَلَّ الله عَلَيْهِ وَسَلَّم : (قَالَ الله تَعَالَى : كُلُ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلا الصَوم، فَإِنَهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّه مِنْ رِيحِ الْمِسْكِ) رواه البخاري.
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم : " كل عمل ابن آدم يضاعف له الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع الصائم طعامه وشرابه وشهوته من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فيه أطيب عند الله من ريح المسك الصوم جنة الصوم جنة " .
புனிதமிக்க இந்த ரமலான் மாதத்தின் முழு பலனையும் அடைத்துக்கொள்ளும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ! ஆமீன் !
No comments:
Post a Comment