அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 2 May 2019

அமைதி மார்க்கம் இஸ்லாம்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

நம்  இஸ்லாமிய மார்க்கம் என்பது அமையதியையும் பிரியத்தையும் பாசத்தையும் கற்பிக்கும் மார்க்கம். அதுவே நமக்கு இஸ்லாம் அதன் ஒவ்வொரு செயல்பாட்டிலும் கற்றுக்கொடுக்கும் கொள்கையும் கூட. 

அல்லாஹு தாலா அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நமக்கு அனுப்பி அமைதி என்னும் போதனையை தான் கற்றுக்கொடுக்க செய்தான். அதனை கொண்டு தான் மிக கொடுங்கோலான குணத்துடன் இருந்த மக்களை மிக்க மென்மையானவர்களாக மாற்றினார்கள். 


உலகின் அணைத்து படைப்புகளுடனும் மிகவும் நல்ல பண்புடன் நடந்துகொள்வதையே இஸ்லாம் நமக்கு போதிக்கிறது. 

அதனால் தான் நம் உயிரினும் மேலான கண்மணி றஸூலுல்லாஹி ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், ஒருவர் மற்றொருவரை சந்தித்தால் முதலில் ஸலாம் கூற வேண்டும் என்று வழிவகுத்து தந்திருக்கிறது. 


عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلّى الله عليه وسلم: ( يسلّم الرّاكب على الماشي، والماشي على القاعد، والقليل على الكثير)

روي في صحيح البخاري ومسلم 


எந்த நேரத்திலும் எந்த வகையிலும் இஸ்லாம் பிறருக்கு தீங்கிழைப்பதை கற்றுக்கொடுக்கவில்லை. அது எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி. 

அண்ணல் நபி ஸல்லல்லாஹ் அலைஹிவ ஸல்லம் அவர்கள் நபியாக அனுப்ப படும் முன்பு அரபு தேசத்தை சார்ந்தவர்கள், எதனை போர்களை செய்துள்ளார்கள், தேவ்யாற்ற சிறு சிறு பிரச்சனை களுக்காக, ஒருவரை ஒருவர் கொன்று குவித்தார்கள் என்பது வரலாறுகள் பேசும் வார்த்தைகள்,. 

அவை அனைத்தையும் மாற்றி  அகலத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், குணத்தில் மிக உயர்ந்த சீடர்களாக அவரைகளை மாற்றினார்கள். அதனை பார்த்து இந்த உலகில் இஸ்லாத்திற்கு வந்த மக்கள் லட்சோப லட்சம் பேர்.


ஸஹாபாக்களின் ஒழுக்கமுறை : 


شتم رجلٌ أبا ذر فقال له :

"إن بيني وبين الجنه عقبة ان جزتها فأنا خير مما تقول وإن عرج بي دونها الى النار فأنا شرٌ مما قلت , فانته ايها الرجل فإنك تصير الى من يعلم خائنته الاعين وما تخفي الصدور"


شتم رجلٌ ابن عباس حبر الأمة فلما أنهى كلامه قال له :

" ياعكرمه انظر هل للرجل حاجه فنقضيها" ,فنكس الرجل رأسه واستحى . 


شتم رجل عمر رضي الله عنه فلقيه عمر فقال:

"ياهذا لاتفرط في شتمنا وأبق للصلح موضعا فإنا لانكافئ من عصى الله فينا بأكثر من أن نطيع الله فيه "



قيل:
أن رجلا خاصم الأحنف بن قيس وقال: " لئن قلت واحده لتسمعن عشرا" فقال له " لكنك ان قلت عشرا لم تسمع واحده "



وهذا الربيع بن خثيم حينما سرقت فرسه وكانت تقدر بعشرين ألفا وقيل له:
ادع الله على السارق فقال:
"اللهم ان كان غنيا فاغفر له وان كان فقيرا فاغنه"


அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுடன் ஸஹாபாக்களின் நடைமுறை : 




اجتمع الصحابة في مجلس .. لم يكن معهم الرسول عليه الصلاة والسلام .. فجلس خالد بن
الوليد .. وجلس ابن عوف .. وجلس
بلال وجلس ابو ذر .. وكان ابو ذر فيه حدة وحرارة
فتكلم الناس في موضوع ما .. فتكلم أبو ذر بكلمة إقتراح : أنا أقترح في الجيش أن
يفعل به كذا وكذا .

قال بلال : لا .. هذا الإقتراح خطأ .

فقال أبو ذر : حتى أنت يابن السوداء تخطئني .!!!

فقام بلال مدهوشا غضبانا أسفا .. وقال : والله لأرفعنك لرسول الله عليه الصلاة
والسلام .. وأندفع ماضيا إلى رسول الله .

وصل للرسول عليه الصلاة والسلام ..وقال : يارسول الله .. أما سمعت أبا ذر ماذا يقول
في ؟

قال عليه الصلاة والسلام : ماذا يقول فيك ؟؟

قال : يقول كذا وكذا
..

فتغير وجه الرسول صلى الله عليه وسلم ..وأتى أبو ذر وقد سمع الخبر .. فاندفع مسرعا
إلى المسجد ..

فقال : يارسول الله .. السلام عليكم ورحمة الله وبركاته .

قال عليه الصلاة والسلام : يا أبا ذر أعيرته بأمه .. إنك امرؤ فيك جاهلية .!!

فبكى أبو ذر رضي الله عنه.. وأتى الرسول عليه الصلاة والسلام وجلس .. وقال يارسول
الله استغفر لي .. سل الله لي المغفرة
ثم خرج باكيا من المسجد ..
.. وأقبل بلال ماشيا ..فطرح أبو ذر رأسه في طريق بلال ووضع خده على التراب ..وقال :
والله يابلال لا ارفع خدي عن التراب حتى تطأه برجلك .. أنت الكريم وأنا المهان

فأخذ بلال يبكي .. وأقترب وقبل ذلك الخد ثم قاما وتعانقا وتباكيا .


இலங்கையில்  கொடூர நிகழ்வு : 

கடந்த 21 ஏப்ரல் 2019 ஞாயிறு ஈஸ்டர் திருநாளன்று,  பல்வேறு கிறித்தவர்களும் பிரார்த்தனைக்காக குன்றியிருந்த நிலையில், கிறித்துவ வழிபாட்டு தளங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட  இலங்கையில்  தொடர்ந்து பல இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளது ஓர்  தீவிரவாத அமைப்பு.

இந்த கொடூரமான நிகழ்வில் 400 கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளார். இன்னும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.


இதற்கிடையில், இந்த நிகழ்வில் தற்கொலை படையாக செயல்பட்டவர்களில் பெரும் பங்கு இஸ்லாமியர்கள் என்று செய்திகள் வெளியாகி வருகின்றது.

மக்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நம் இஸ்லாமிய மார்க்கம் எப்பொழுதும் எந்த மதத்தினரும் கொள்கைகளையும், அவர்களின் வழிபாடுகளையும் கேவலப்படுத்த அனுமதிக்கவில்லை.

இன்னும்  எந்த காரணமுமின்றி எந்த மனித உயிர்களையும் கொள்வதற்கு அனுமதி வழங்குவதில்லை. அதனை முற்றிலும் ஹராமாக்கி இருக்கின்றது.

இந்த நிகழ்விற்கு இஸ்லாமிய போர்வையில்  உறுதுணையாக இருந்த எந்த நபரானாலும், எந்த அமைப்பினாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.



ஜாஹிலிய்யா வின் காலத்தில் அரபு களுக்கு மதியில் இருந்த, தேவையற்ற குரோதங்களையும், சண்டை சச்சரவுகளை களைந்து, மிகவும் சீர்திருந்திய உயர்ந்த மனிதர்களாக மாற்றிய நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சுன்னத்துகளையும், வாழ்கை முறையையும் பின்பற்றி வாழும் எந்த ஒரு இஸ்லாமிய நபரும் இது போன்ற காரியங்களுக்கு மனம் பொறுக்க மாட்டார்.

அல்லாஹ் தனது சொந்தங்களை இழந்து தவிக்கும் அந்த மக்களுக்கு பொறுமையை தந்து.இது போன்ற கொடூரமான நிகழ்வுகளில் இருந்து நம் மக்களை காத்தருள்வானாக ! ஆமீன் ! 

No comments: