அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 25 April 2019

அண்ணல் நபியுடன் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

இந்த உலகில் முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுடன் மறுமையில் இருக்க வேண்டும் என்று ஆசை  கொள்வார்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத  உண்மை. 

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீது அளவுக்கடங்காத பிரியம் கொண்ட ஒருவரின் மிகப்பெரும் ஏக்கமாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அதையே தனது நோக்கமாக கொண்டு அதனையே நோக்கியே பயணிப்போரும் உண்டு.

அல்லாஹ் தனது அருள் மறையில் :

 لا يَسْتَوِىْۤ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَـنَّةِ‌ؕ اَصْحٰبُ الْجَـنَّةِ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏ 

நரகத்திற்குச் செல்பவர்களும், சுவர்க்கத்திற்குச் செல்பவர்களும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள்! சுவர்க்கத்திற்குச் செல்பவர்கள்தாம் உண்மையில் வெற்றியாளர்கள்!  ( 59:20  )


நிச்சயமாக நாம் அந்த ஒரு இலக்கை கொண்டு பயணித்தால் நம்முடைய வாழ்வு மிகவும் சிறந்த முறையில் அமைந்து விடும். 

ஆனால் அந்த ஓர் உயர்ந்த பதவியை அடையவதென்பது சாதாரண விஷயம் அல்ல. 

அதே போன்று அதனை கடினமானதும் அல்ல.


சுவனத்தில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் : 


மறுமையில் அந்த சுவனத்தில் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இருக்கு அந்த உயர்ந்த இடத்தை அத்தனை  எளிதில் யாராலும் அடைந்து விட முடியாது. 

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ ، مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ ؛ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ ، وَأَعْلَى الْجَنَّةِ ، أُرَاهُ فَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ ، وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ ) .

روى البخاري (2790)


இப்படிப்பட்ட உயர்ந்த தர்ஜாவில் கண்மணி நாயகம் ஸல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுடன் இருக்கும் பாக்கியம் கிடைப்பதென்பது இந்த உலகமும் அதில் உள்ளவையும் ஒரு சேர நமக்கு கிடைத்தாளும் அந்த ஒரு பாக்கியத்திற்கு ஈடாகாது.

அந்த பாக்கியத்தை அடைவதெப்படி ? 


அகிலத்தின் அருட்கொடை காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், எப்படி  தன் மீது பிரியம் வைப்பதை நமக்கு கடமையாக்கினார்களோ, அதே போன்று அந்த பிரியத்திற்குண்டான கூலியையும், அதனை அடைய கூடிய வழியையும் நமக்கு காண்பித்து கொடுத்துள்ளார்கள். 

அண்ணலாரின் மீது அளவு கடந்த பிரியம் கொள்வது : 


நாம் ஒருவரின் மீது வைக்கும் பிரியம் நிச்சயம் அது உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் அவருடனேயே அது நம்மை கொண்டு சேர்த்துவிடும். 

فعن أنس بن مالك رضي الله عنه: أن رجلا سأل النبي صلى الله عليه وسلم: متى الساعة يا رسول الله؟ قال صلى الله عليه وسلم :« ما أعددت لها؟». قال: ما أعددت لها من كثير صلاة ولا صوم ولا صدقة، ولكني أحب الله ورسوله. قال صلى الله عليه وسلم :« أنت مع من أحببت».

. قال أنس رضي الله عنه: فما فرحنا بشيء بعد الإسلام فرحنا بقول النبي صلى الله عليه وسلم :« إنك مع من أحببت».

கண்மணி நாயகம் அவர்கள் காட்டித்தந்த வழியில் நடப்பது : 

அல்லாஹ் தனது அருள்மறையில் : 


وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏ 

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள்.  4:69.

தோழருக்கு கிடைத்த நற்செய்தி  :


عن سعيد بن جبير قال : جاء رجل من الأنصار إلى النبي صلى الله عليه وسلم وهو محزون ، فقال له النبي صلى الله عليه وسلم : " يا فلان ، ما لي أراك محزونا ؟ " قال : يا نبي الله شيء فكرت فيه ؟ قال : " ما هو ؟ " قال : نحن نغدو عليك ونروح ، ننظر إلى وجهك ونجالسك ، وغدا ترفع مع النبيين فلا نصل إليك . فلم يرد النبي صلى الله عليه وسلم عليه شيئا ، فأتاه جبريل بهذه الآية : ( ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين [ والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ] ) فبعث النبي صلى الله عليه وسلم فبشره .


கடமைகளை சரிவர செய்து வருவது : 



இதனை செய்து வந்தாலே போதுமானது என்பதை போல கண்மணி நாயகம் அவர்கள் நமக்கு மிக அழகிய முறையில் வழிவகுத்து தந்துள்ளார்கள். 

 فقد جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، شهدت أن لا إله إلا الله، وأنك رسول الله، وصليت الخمس، وأديت زكاة مالي، وصمت شهر رمضان. فقال النبي صلى الله عليه وسلم :« من مات على هذا؛ كان مع النبيين والصديقين والشهداء يوم القيامة هكذا -ونصب أصبعيه- ما لم يعق والديه»

இந்த ஓர் அமல் :

فعن ربيعة بن كعب الأسلمي رضي الله عنه قال: كنت أبيت عند رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته، فقال لي:« سل». فقلت: أسألك مرافقتك في الجنة. أي: أسألك أن أكون قريبا منك، متمتعا بالنظر إليك، حتى لا أفارقك. فقال صلى الله عليه وسلم :« أوغير ذلك؟». قلت: هو ذاك. قال:« فأعني على نفسك بكثرة السجود».

இவரே அண்ணலாருக்கு பிடித்தமானவர் : 


இந்த  சிறந்த குணமுடையவர் அண்ணலாருக்கு பிடித்தமானவர். அவர் மறுமையில் அண்ணலாருடன் இருக்கும் பாக்கியம் பெறுவார். 

فعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما: أنه سمع النبي صلى الله عليه وسلم يقول :« ألا أخبركم بأحبكم إلي، وأقربكم مني مجلسا يوم القيامة؟». فسكت القوم، فأعادها مرتين أو ثلاثا، قال القوم: نعم يا رسول الله. فقال صلى الله عليه وسلم :« أحسنكم خلقا». 


அதிகம் ஸலவாத்து ஓதுங்கள் : 


அண்ணல் நபி ஸல்லலாஹ் அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீது அதிகம் ஸலவாத்து ஓதுபவரும் நிச்சயம் அண்ணலாருடன் மறுமையில் நெருக்கமாக இருக்கும் பாக்கியம் பெறுபவர்களின் ஒருவராவார். 



قال ابن القيم رحمه الله: "وإذا أردت أن تعرف مراتب الهمم فانظر إلى همَّة ربيعة بن كعب الأسلمي رضي الله عنه وقد قال له رسول الله صلى الله عليه وسلم: «سلني»، فقال: أسألك مرافقتك في الجنة. وكان غيره يسأله ما يملأ بطنه، أو يواري جلده"

அல்லாஹு தாலா நமக்கும் இந்த உலகில் நல்லமல்கள் செய்து, அண்ணல் நபி ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது உயிரினும் மேலான பிராயத்தை வைத்து, மறுமையில் அவர்களுடன் இருக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக. ஆமீன் 

No comments: