அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 16 May 2019

மாற்றம் தேடுவோம்




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

சங்கைக்குரிய பரக்கத் பொருந்திய ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களை கடந்து  இரண்டாவது பத்தை அடைந்திருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ். 

அல்லாஹு தாலா நம்மை சிறப்பு மிக மாதமான ரமலானை அடையச்செய்து, அதில் முதல் பத்து நாட்களின் பரக்கத்தை அடையவைத்தது போல் மீதமுள்ள நாட்களையும் மிகவும் சிறப்பான முறையில் அடைந்துகொல்வதற்கு கிருபை செய்வானாக ! ஆமீன் ! 

ரமலான் மாதத்தில்  அல்லாஹ்  நோன்பை நமக்கு கடமையாக்கியதன்  நோக்கத்தை அருள் மறையில் கூறும்பொழுது, 

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.   (2:183)


நமக்கு இதனை பெற வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா நோன்பை கடமையாக்கினானோ அதன் பிரதிபலனை அடைந்துள்ளோமா என்பதை அனுதினமும் நாம் யோகாசித்துக்கொள்ள வேண்டும். 

இந்த சங்கைக்குரிய மாதம், நம்மை நல்ல முறையில் மாற்றிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை அமைத்து தருகிறது. அதனை நாம் அடைந்துள்ளோமா என்பதனை யோசித்து பார்க்க வேண்டும்.


 இறையச்சத்தை தர  வேண்டும் : 


ஒவ்வொரு நாளும் நாம் நோன்ப நோற்று உண்ணலாம் அருந்தாமல் இருக்கின்றோம். ஓர் அறையில் யாரும் இல்லாவிட்டாலும், அதனுள் பல தின்பண்டங்கள் இருந்தாலும் நாம் அதனை உண்ணுவதில்லை. காரணம் நோன்பு நோற்றிருக்கின்றோம் என்ற எண்ணம் நமக்கு இருந்துகொண்டே இருக்கின்றது.

இந்த எண்ணம் அல்லாஹ் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று நம் உள்ளத்தில் வர வேண்டும். அதுவே இறையச்சமாகும்

நோன்பு தரும் இறையச்சத்தை நாம் பெற்றுள்ளோமா என்பதனை சோதித்து  பார்க்க வேண்டும்.
எந்த நோக்கத்திற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைந்துகொள்ளாமல் போனால் நாம் செய்யும் அமலிற்கு என்ன பயன் இருக்க முடியும் ?

இந்த இறையச்சத்தை அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் நமக்கு வஸிய்யத் செய்துள்ளார்கள்.

وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا (131)} [النساء].


(ஏனென்றால்) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்குரியனவே! (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் "அல்லாஹ் ஒருவனுக்கே பயப்படுங்கள்" என்றே நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். ஆகவே (அவனுக்கு) நீங்கள் மாறுசெய்தால் (அதனால் அவனுக்கொன்றும் நஷ்டமில்லை.) நிச்சயமாக வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்குரியனவாகவே இருக்கின்றன. அல்லாஹ் தேவையற்ற வனாகவும், (அனைவராலும்) புகழப்பட்டவனுமாக இருக்கின்றான்.


 وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ 

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும்.  (3:130)


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வஸிய்யத் : 


، ففي يوم حجة الوداع، حينما وعظ النَّبيُّ -صلى الله عليه وسلم- الناس فقالوا له: كأنَّها موعِظَةُ مودِّعٍ فأوصِنا، قال: (أُوصيكم بتقوى اللهِ والسَّمْعِ والطَّاعة).


 أوصى أبا ذرٍّ -رضي الله عنه-: (أوصيكَ بتقوى الله، فإنَّه رأسُ الأمرِ كلِّه) [خرَّجه ابنُ حبان]، 

وبمثلها أوصى أبا سعيدٍ الخدريِّ -رضي الله عنه- فقال له: (أوصيك بتقوى الله، فإنَّه رأسُ كُلِّ شيءٍ)

 وفي رواية أخرى: (علَيكَ بتقوى الله فإنَّها جِماع كُلِّ خيرٍ).


ஹஸ்ரத் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேருரையை இந்த வசியத்தை கொண்டே ஆரம்பம் செய்வார்கள் :


 فكان أبو بكر الصديق -رضي الله عنه- يفتتح خطبته بها قائلاً: أما بعد، فإني أُوصيكم بتقوى الله، ولمَّا حضرته الوفاةُ، وعهد إلى عمر، كان أول ما أوصاه به أنِ: اتَّقِ الله يا عمر، وعلى هذا النّهج كانت وصايا سائر الخلفاء الأربعة رضوان الله عليهم جميعاً، ومن تبعهم من أئمة الهدى.

ரமலானில்  இறையச்சம் : 


சங்கைக்குரிய ரமலான் மாதத்தில் நம்முடைய இறையச்சம் என்பது உணவு உண்ணாமல் இருப்பதும், அருந்தாமல் இருப்பதும் மட்டுமல்ல. நம்முடைய இச்சைகளை கட்டுப்படுத்தி அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் தவிருந்திருப்பதாகும். 



அதனால் தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  நோன்பு நமக்கு கேடயமாகும் என்றார்கள்.

عَن معَاذ بن جبل وَسَهل بن سعد وَكَعب بن عجْرَة وسلامة بن قَيْصر وَبشير بن الخصاصية.
قَالَ: وَاسم بشير زحم، والخصاصية هِيَ أمه.
أما حَدِيث معَاذ فَرَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا عَنهُ.
قَالَ: (كنت مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي سفر فَأَصْبَحت يَوْمًا قَرِيبا مِنْهُ وَنحن نسير، فَقلت: أَخْبرنِي بِعَمَل يدخلني الْجنَّة) .
الحَدِيث، وَفِيه: (ثمَّ قَالَ: أَلا أدلك على أَبْوَاب الْخَيْر: الصَّوْم جنَّة)


 ابنُ الْعَرَبِيِّ: "إِنَّمَا كَانَ الصَّوْمُ جُنَّةً مِنَ النَّارِ؛ لِأَنَّهُ إِمْسَاكٌ عَنِ الشَّهَوَاتِ، وَالنَّارُ مَحْفُوفَةٌ بِالشَّهَوَاتِ، فَالْحَاصِلُ أَنَّهُ إِذَا كَفَّ نَفْسَهُ عَنِ الشَّهَوَاتِ فِي الدُّنْيَا؛ كَانَ ذَلِكَ سَاتِرًا لَهُ مِنَ النار في الْآخِرَةِ"!


இறையச்சத்தின் அந்தஸ்துகள் :

நாம் இறையச்சம் கொள்வதன் மூலம் நமக்கு அல்லாஹ்விடத்தில் பல உயர்ந்த பதவிகள் கிடைக்கப்பெறுகின்றன என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்..
 
ذكر بعض أهل العلم أن للتقوى ثلاث مراتب:

المرتبة الأولى:

التوقي عن كل ما يخلد صاحبه في النار وعليه قوله تعالى: {وَأَلْزَمَهُمْ كَلِمَةَ} [(26) سورة الفتح] 
بمعنى أن الإنسان يقي نفسه من العذاب المخلد في النار وذلك بالتبرؤ من الكفر بجميع أنواعه، وأن يتبرأ من الشرك بكل أشكاله الظاهر منه والباطن،

{إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاء} [(48) سورة النساء].

 நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

المرتبة الثانية:

تجنب كل ما يؤدي إلى الإثم من فعل أو ترك، وهي مرتبة المجاهدة وحمل النفس على فعل المأمورات وترك المنهيات، وهي أيضاً مرتبة النفس اللوامة التي تلوم نفسها لِمَ لا تستزيد من الخير، وتلوم نفسها لِمَ فعلت الذنب.

قال الحسن البصري -رحمه الله-: النفس اللوامة: هي والله نفس المؤمن، ما يُرى إلا يلوم نفسه: ما أردت بكلمتي؟ وما أردت بأكلي؟ وما أردت بحديث نفسي؟ والفاجر لا يحاسب نفسه.

هذه المرتبة هي مرتبة النفس المتيقِّظة التقية الخائفة المتوجسة التي تحاسب نفسها وتجاهدها، وتتلفت حولها، وتتبين هداها، وتحذر خداع ذاتها، هي النفس الكريمة على الله التي أقسم الله بها في كتابه، وقرنها بيوم القيامة

 في قوله تعالى: {لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ * وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ} [(1،2) سورة القيامة].

மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். 
(குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.


 هذه المرتبة يراقب التقي فيها طاعته لربه أن يكون مخلصاً فيها، ويراقب فيها معصيته وذلك بالتوبة والندم والإقلاع

 قال الله تعالى: {إِنَّ الَّذِينَ اتَّقَواْ إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَانِ تَذَكَّرُواْ فَإِذَا هُم مُّبْصِرُونَ} [(201) سورة الأعراف].

 நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படு கிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்.

وهكذا تستقيم أحوال العبد وتشرق الهداية في قلبه باستمرار مجاهدته لنفسه {وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا} [(69) سورة العنكبوت]

எவர்கள் நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக் கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய (நல்) வழிகளில் செலுத்துகின்றோம். 


 فيبتعد شيئاً فشيئاً عن المعصية ويقترب رويداً رويداً من طاعة ربه ورضوانه حتى يتمكن من نفسه ويسلس قيادها لله،

 قال الله تعالى: {فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرًا لِّأَنفُسِكُمْ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ} [(16) سورة التغابن] 
ஆதலால், உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள்.

وقال سبحانه: {وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْواهُمْ} [(17) سورة محمد].
எவர்கள் நேரான வழியில் செல்கின்றார்களோ (அவர்கள் இந்த வேதத்தைச் செவியுறுவதன் காரணமாக) அவர்களுடைய நேர்மையை (மென்மேலும்) அதிகப்படுத்தி இறை அச்சத்தையும் அவர்களுக்கு (இறைவன்) அளிக்கின்றான்.

المرتبة الثالثة:
أن يتنزه المرء عن كل ما يشغل سره عن الحق -تبارك وتعالى- ويتبتل إليه بكليته. وهذه مرتبة التقي الذي تجرد بكليته إلى الله، وامتلأ قلبه بحب الله، واطمأنت نفسه بالأنس به، فلم تعد تحدثه بمعصية، ثم يرتقي بعد ذلك في منازل الطاعات والمجاهدات، فهو حيث أمر الله موجود، وحيث نهى الله مفقود، وضع قدمه في طريق التقوى الفسيح، وتقدم فيه ما وسعه التقدم تحقيقاً 

لقول الله تعالى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ حَقَّ تُقَاتِهِ} [(102) سورة آل عمران]، 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்.

فهو يجاهد في الله حق جهاده، ويخشى الله حق خشيته، ويطيع الله حق طاعته، ويتبع الرسول -صلى الله عليه وسلم- حق اتباعه، ويدعو إلى سبيله حق دعوته، ولا يزال يرتقي في هذا السبيل القويم حتى يصل إلى مرتبة الإحسان، فيعبد الله كأنه يراه، فيلاحظ أمر الله ورقابته في كل قول وعمل وتصرف، وابتعد عنه الشيطان وتخلص من وساوسه؛ لأنه دائم الذكر لله، دائم التفكير بعظمته وجلاله وقدرته، فإنك لا ترى العبد في هذه المرتبة إلا ذاكراً قانتاً متفكراً مجاهداً عاملاً، همّه رضا الله، وهمّه الآخرة، فهو من الذين عقلوا عن الله، وعلموا عن الله جلاله وعظمته ورحمته وإنعامه، فاستغرقوا في الحمد والشكر والثناء على هذه الآلاء 

قال الله تعالى: {أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاء اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُوا الْأَلْبَابِ} [(9) سورة الزمر]


எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்த வனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ, (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம்.

 وهذه هي النفس المطمئنة، المطمئنة إلى ربها المطمئنة إلى طريقها، المطمئنة إلى قدر الله فيها، المطمئنة في السراء والضراء وحين البأس، وفي البسط والقبض، وفي المنع والعطاء، المطمئنة فلا ترتاب، والمطمئنة فلا تنحرف، والمطمئنة فلا تغفل، والمطمئنة فلا تضعف ولا تخضع، والمطمئنة فلا تتلجلج في الطريق، والمطمئنة فلا ترتاع في يوم الهول والرعب، يغمرها جو الأمن والرضا والطمأنينة في مشهد من الود والقربى والسكينة، وتهب عليها ريح الجنة الرضية الندية، وتتجلى عليها طلعة الرحمن

-سبحانه وتعالى-: {يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ * ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً * فَادْخُلِي فِي عِبَادِي * وَادْخُلِي جَنَّتِي} [(27 - 30) سورة الفجر]. 

(எனினும், அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! 
நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்)
"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து,
என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

قال الله تعالى: {تِلْكَ الْجَنَّةُ الَّتِي نُورِثُ مِنْ عِبَادِنَا مَن كَانَ تَقِيًّا} [(63) سورة مريم].
இத்தகைய சுவனத்திற்கு நம் அடியார்களில் இறை அச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம்.
 

இப்படிப்பட்ட உயர்ந்த தராஜாக்களை அடையும் அளவிற்கு இறையச்சத்துடன் இந்த ரமலானை கழிக்கும் ஒரு நல்ல மாற்றத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ! ஆமீன் ! 
 

No comments: