Like Us : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்
கியாமத்துடைய நாள்நெருங்க நெருங்க நேரம் சுருங்கிவிடும் என்ற கியாமத்தின் அடையாளத்தை நாம் கண்கூடாக காண்கின்றோம். அத்தனை வேகமாக சங்கைக்குரிய ரமலான் மாதம் நம்மை விட்டும் கடந்துகொண்டிருக்கின்றது.
ரமழானுடைய கடைசீ பத்தை அடைந்து, லைலத்துல் கதருடைய இரவை சந்திக்கவிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் ! அந்த சிறப்பு மிக்க இரவையும் அதன் முழு பலனுடன் அடைந்து கொள்ளும் பாக்கியத்தை அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக ! ஆமீன் !
யார் ரமலானில் இரவு முழுவதும் நின்று வணங்குகின்றாரோ அவரது முன் சென்ற பாவங்களை மன்னித்து விடுகின்றான் என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري (37) ، ومسلم (759)
இத்தணை சிறைப்புக்குரிய மாதத்தை 3 பத்துக்களாக பிரித்து அதன் கடைசீ பத்து நாட்களை நன்றாக நெருப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆக்கினான்.
அதே நாட்களில் தான் லைலத்துல் கத்ர் இரவையும் வைத்தான்.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :
قد قال صلى الله عليه وسلم : ] إنَّ لله تعالى عتقاء في كل يوم و ليلة – يعني في رمضان – وإنَّ لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة [[ رواه الإمام أحمد
நரகத்திலிருந்து விடுதலை பெறுவது என்பது, அவர் சுவனத்தை அடைந்தவர் என்பதை உறுதிப்படுத்துவதாகும்.
எது வெற்றி ?
அல்லாஹ் தனது அருள்மறையில் வெற்றியை மூன்று விதமாக கூறுகின்றான்.
الفوز العظيم. - மகத்தான வெற்றி
الفوز الكبير - மிகப்பெரிய வெற்றி
الفوز المبين - தெளிவான வெற்றி
இவற்றில் இந்த الفوز العظيم. மகத்தான வெற்றி என்பதே மிகவும் உயர்ந்தது. அதனையே அல்லாஹ் தாலா 13 இடங்களில் கூறி காட்டுகின்றான்.
அதற்கடுத்த தரத்தில் الفوز الكبير - மிகப்பெரிய வெற்றி . அதனை 1 இடத்திலும், அதற்கடுத்த தரத்தில் உள்ள, தெளிவான வெற்றி எனும் வார்த்தையை, 2 இடங்களிலும் பயன்படுத்துகிறான்.
அவை அனைத்திலுமே அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைவதையும், சுவனத்தை பற்றி கூறியும் அதனை அடைவதையே முதல் இரண்டு தரங்களுக்கு பயன்படுத்துகிறான்.
எனவே வெற்றிகளில் உயர்ந்தது, அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று சுவனப்பதியில் நுழைவது தான் என்பது மிகத்தெளிவானதாகிறது.
"الفوز العظيم. - மகத்தான வெற்றி" வசனங்கள் :
تِلْكَ حُدُودُ اللَّهِ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனபதிகளில் சேர்க்கின்றான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
قَالَ اللَّهُ هَذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
அதற்கு அல்லாஹ் "உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்" என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம்.
وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே (என்றென்றும்) தங்கியும் விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சுவனபதிகளில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வாக்களித்திருக்கின்றான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால் (இவை அனைத்தையும் விட) அல்லாஹ்வின் திருப்பாருத்தம் மிகப் பெரியது. (அதுவும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அனைத்தையும் விட) இது மகத்தான பெரும் பாக்கியமாகும்.
أَعَدَّ اللَّهُ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
அவர்களுக்காக சுவனபதிகளை அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான், அவற்றின்கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள், நிரந்தரமாகத் தங்கி இருப்பவர்கள், அதுவே மகத்தான வெற்றியாகும்.
وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்குச் சுவனபதி தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொள்வார்கள்; (அல்லது) கொள்ளப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சுவனபதி தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ் வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இது(வன்றோ) மகத்தான பெரும் வெற்றி!
لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ لا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
اِلَّا مَوْتَتَـنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சுவனபதியில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்" (என்றும் கூறுவார்). நிச்சயமாக இது மகத்தானதொரு பாக்கியமாகும்.
وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَنْ تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
அவர்களை எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள். அன்றைய தினம் எவர்களை நீ எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக் கொண்டாயோ, அவர்கள் மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்துவிட்டாய்" என்று பிரார்த்திப்பார்கள். இதுதான் மிக மகத்தான பெரும் பாக்கியமாகும்.
لَا يَذُوْقُوْنَ فِيْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰى ۚ وَوَقٰٮهُمْ عَذَابَ الْجَحِيْمِۙ
فَضْلًا مِّنْ رَّبِّكَ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
.
முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) ஆகவே, அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்.
உங்களது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும்.
11 الحديد 57 12 يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
(நபியே!) நம்பிக்கை கொண்ட இத்தகைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில், அவர்களுடைய ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும், வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, அவர்களை நோக்கி மலக்குகள்:) "இன்றைய தினம் உங்களுக்கு நற்செய்தி (என்றும்) தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியில் நுழைந்து விடுவீர்கள். என்றென்றும் அதில் தங்கியும் விடுவீர்கள்" என்றும் கூறுவார்கள். இதுதான் மகத்தான ஒரு வெற்றியாகும்.
يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
(அவ்வாறு செய்தால்) உங்களுடைய பாவங்களை மன்னித்து, சுவனபதியிலும் உங்களைப் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி, நிலையான சுவனபதியிலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ ذَلِكَ يَوْمُ التَّغَابُنِ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளில் அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். அதுதான் (பாவிகளுக்கு) நஷ்டம் உண்டாக்கும் நாளாகும். எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றாரோ, அவருடைய பாவத்திற்கு (அவைகளைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் அவரைப் புகுத்தி விடுகின்றான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தானதொரு வெற்றியாகும்.
"الفوز الكبير - மிகப்பெரிய வெற்றி " வசனங்கள் :
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும்.
"الفوز المبين - தெளிவான வெற்றி" வசனங்கள் :
பின் தெளிவான வெற்றி என்னும் வார்த்தையை, வேதனையை விட்டு பாதுகாக்க படுவதையும், இன்னும், அல்லாஹ்வின் ரஹ்மத்தை அடைந்து கொள்வதையும் குறிப்பிட்டு கூறுகின்றான்.
مَنْ يُّصْرَفْ عَنْهُ يَوْمَٮِٕذٍ فَقَدْ رَحِمَهٗؕ وَ ذٰ لِكَ الْـفَوْزُ الْمُبِيْنُ
அந்நாளில் எவரை விட்டும் வேதனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் அருள்புரிந்தே விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்.
فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِىْ رَحْمَتِهٖ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْمُبِيْنُ
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன்னுடைய அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்.
இந்த நிலையில், அல்லாஹ் இந்த சிறப்பு மிக்க ரமலான் மாதத்தை நமக்கு கொடுத்து, அதன் கடைசீ பத்து நாட்களில் அடையச்செய்துள்ளன். அந்த ஒரு வாய்ப்பை பயன் படுத்தி, நாம் மகத்தான வெற்றியை அடைந்துகொள்ள அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக ! ஆமீன் !
No comments:
Post a Comment