அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 8 March 2018

ஷாமே உனக்கு நற்செய்தி





சிரியாவைப்பற்றி நபி ஸல் அவர்களின் முன்னறிவிப்புக்கள் :


உலகில் போர்கள் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது.மண்ணுக்காக, பெண்ணுக்காக, ஆட்சிக்காக, அதிகாரத்திற்காக ஆனால் சிரியாவில் எல்லா காலத்திலும் ஈமானுக்காக மட்டுமே போர்கள் நடைபெறும்.

சிரியாவில் ஆட்சி வேண்டுமானால் சர்வாதிகார ஆட்சியாக இருக்கலாம்.அங்கு வாழும் மக்கள் ஈமானிய உணர்வு மேலோங்கியவர்கள் எனபதை மறந்து விடக்கூடாது.


சிரியா உண்மையான முஜாஹிதீன்கள் வாழும் பூமி :


عن عبدالله بن حوالة رضي الله عنه قال، قال النبي عليه الصلاة والسلام: "ستجدون أجنادًا جندًا بالشام وجندًا بالعراق وجندًا باليمن"، قال عبدالله فقلت: يا رسول خِرْ لي – يعني اختار لي هل أكون بالعراق أم بالشام أم باليمن؟-، فقال عليه الصلاة والسلام: "عليكم بالشام، عليكم بالشام، فمن أبى فليلحق بيمنه، وليسق من غدره؛ فإن الله عز وجل قد تكفل لي بالشام وأهله" رواه أحمد  

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஹவாலா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சிரியா படை,ஈராக் படை,  யமன் படை என்று நீங்கள் பல ராணுவப்படைகளை பார்ப்பீர்கள்..என  நபி ஸல் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே!நான் எதை வசிப்பதற்கு தேர்வு செய்யட்டும் என கேட்டேன்.

அதற்கு நபி ஸல் அவர்கள் சிரியாவில் தங்குங்கள்.சிரியாவில் தங்குங்கள் என்றார்கள்.ஏனெனில் அல்லாஹ் சிரியாவையும் அதன் மக்களையும் எனக்காக பாதுகாக்கும் பொருப்பை ஏற்றுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

சிரியா ஈமான் மற்றும் கல்வி அடைக்கலமாகும் பூமியாகும் :


وقال عليه الصلاة والسلام مبينًا أن أرض الشام هي أرض العلم والإيمان، قال عليه الصلاة والسلام: "إني رأيت عمود الكتاب انتُزع من تحت وسادتي فنظرت فإذا هو عمود ساطع عمد به إلى الشام، ثم قال: ألا إن الإيمان إذا وقعت الفتن في الشام" أخرجه الحاكم 

என் தலையனைக்கு கீழ் இருந்த வேதத்தின் கழட்டப்பட்டு சிரியாவில் அது ஜொலிப்பதாக காண்கிறேன். தெரிந்துகொள்ளுங்கள். ஈமானுக்கு சோதனை வந்தால் அது சிரியாவில் போய் ஒளிந்து கொள்ளும் என்றார்கள்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நாளை மஹ்ஷர் பூமியும் அந்த சிரியாதான்.

சுவனத்தின் பொருட்களை காண வேண்டுமானால் மக்காவுக்கும் மதீனாவுக்கும் செல்லவேண்டும்.

நாளை மஹ்ஷர் மைதானத்தை காண வேண்டுமானால் சிரியா செல்ல வேண்டும்.ஆம்! அது தான்நாளை மஹ்ஷர் களம்.

في حديث أبي ذر أن النبي صلى الله عليه وسلم قال: قال عليه الصلاة والسلام: "الشام أرض المحشر والمنشر" رواه أحمد وهو صحيح.

சிரியா மஹ்ஷர் பூமி என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

وعن معاوية بن حيدة قال: إن النبي عليه الصلاة والسلام أخبرنا فقال: "إنكم تحشرون رجالاً وركبانًا، وتجرون على وجوهكم ها هنا "قال: وأومأ بيده نحو الشام. صححه الألباني.

நீங்கள் நடந்தவர்களாகவும் வாகனித்தவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். மேலும் நீங்கள் இதன் பக்கம்  இழுத்து கொண்டுவரப்படுவீர்கள் என்று தம் கையால் சிரியாவை சமிக்கை செய்தார்கள்.

وعن فهد بن حكيم عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قيل له: يا رسول الله أين تأمرني ؟ الجد سأل النبي صلى الله عليه وسلم، أين تأمرني؟ أين أسكن؟ إلى أين أسكن؟ قال "هاهنا" وأومأ بيده نحو الشام. قال: "إِنّكُمْ محْشورُونَ رِجَالاً وَرُكْبَاناً ومجرون علَى وُجُوهِكُم". أخرجه الإمام أحمد.

இவ்வாறு ஒருவர் தான் எங்கு வசிப்பது?என  நபி ஸல் அவர்களிடம் கேட்டபோது,சிரியாவை சுட்டிக்காட்டினார்கள்.ஏனெனில் நீங்கள் நடந்தவர்களாகவும் வாகனித்தவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். மேலும் நீங்கள் இதன் பக்கம்  இழுத்து கொண்டுவரப்படுவீர்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

وسئلت جارية لعبد الله بن عمر رضي الله تعالى عنهما قالت له: اشتد عليّ الزمان وإني أريد أن أخرج إلى العراق -يعني أن تسكن في العراق- فقال لها ابن عمر: فهلا إلى الشام أرض المنشر. رواه الترمذي .

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்களின் அடிமைப்பெண் தன் எஜமானரான இப்னு உமர் ரலி அவர்களிடம்  தனக்கு நெருக்கடியாக இருக்கிறது,எனவே இராக் செல்ல நாடுகிறேன் என்றதும் நீ சிரியாவுக்குச்செல் அது தான் மஹ்ஷர் பூமி என்றார்கள்.

கியாமத்தின் நெருக்கத்தில் வெளிப்படும் நெருப்பிலிருந்து தப்பிக்கவே சிரியாவே அடைக்களம் :


وعن سالم بن عبدالله عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال: "ستخرج نار في آخر الزمان من حَضْرمَوْت تحشر الناس" قلنا: بما تأمرنا يا رسول الله ؟ - ماذا تأمرنا استعدادًا لخروج هذه النار، ماذا تأمرنا استعدادا لقرب قيام الساعة؟ - فقال عليه الصلاة والسلام: " عليكم بالشام.. عليكم بالشام"  ورواه الإمام أحمد.

ஸாலிம் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கியாமத்தின் நெருக்கத்தில் ஹழ்ரமவ்த் என்ற ஊரிலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும் என நபி ஸல் அவர்கள் கூறியபோது- அப்போது நாங்கள் எங்கு தங்கட்டும்?என நாங்கள் கேட்டோம்.அதற்கு ஸல் அவர்கள் நீங்கள் சிரியாவில் தங்குங்கள் என்று கூறினார்கள்..

நபி இப்ராஹீம் அலை அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமி :


عن عبدالله بن عمرو رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: "ستكون هجرة بعد هجرة، فخيار أهل الأرض ألزمهم مهاجر إبراهيم -يعني الشام- قال: ويبقى في الأرض شرار أهلها تلفظهم أرضوهم وتقذرهم نفس الله، وتحشرهم النار مع القردة والخنازير". رواه أبو داوود .

ஹிஜ்ரத்துக்கு பின் ஹிஜ்ரத் தொடர்ந்து நடைபெறும்.இறுதியில் நல்லவர்கள் யாவரும் இப்ராஹீம் அலை அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமியான சிரியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அடைக்கலமாகி விடுவார்கள்.    பூமியில் கெட்டவர்கள் மட்டும் வசிப்பர்.அவர்களை நெருப்பு துரத்தும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட பூமி :


ومن حديث عبدالله بن حوالة في رواية من هذا الحديث قال عليه الصلاة والسلام: "عليك بالشام فإنها خيرة الله من أرضه" يعني اختاره الله من أرضه "يجتبي إليه خيرته من عباده" رواه أبو داود وهو حديث صحيح

சிரியாவை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.அது அல்லாஹ் தேர்வு செய்த பூமியாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

சிரியா தஜ்ஜால் அழிந்து நாசமாகும் பூமி :


ويأتي المسيح من قبل المشرق -يعني المسيح الدجال- وهمته المدينة حتى إذا جاء دبر أحد تلقته الملائكة، فضربوا وجهه قبل الشام هنالك يهلك.. هنالك يهلك"كررها هو بأبي وأمي صلوات ربي وسلامه عليه.. ففي الشام يقتل الدجال وهو الذي يسفك فيه دمه. رواه الترمذي.

கிழக்கு பக்கத்திலிருந்து தஜ்ஜால் வருவான்.அவன் மதீனாவை நாடி வரும்போது மலக்குகள் அவனை தடுத்து நிறுத்தி சிரியாவின் பக்கம் அனுப்பி வைப்பார்கள்.அந்த பூமியில் தான் அவன் அழிந்து நாசமாகுவான். என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்..

இறுதி யுத்த பூமி :


وفي رواية قال عليه الصلاة والسلام:

"يوم الملحمة الكبرى فسطاط المسلمين بأرض يقال لها الغوطة فيها مدينة يقال لها دمشق خير منازل المسلمين يومئذ" رواه أبو داوود 
முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் நடைபெறும் இறுதி மாபெரும்  யுத்தம் அந்த சிரியா பூமியின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள கவ்தா எனும் நகரத்தில் நடைபெறும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தஜ்ஜாலின் கதையை முடிப்பதற்காக இந்த பூமியி ஹழ்ரத் ஈஸா அலை அவர்கள் இறுதிகாலத்தில் இந்த பூமியில் இறங்குவார்கள் என்பது நாம் அறிந்ததே!

அவர்கள் இறங்கும் பூமி சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் தான் :


عن النواف بن سمعان قال سمعت النبي صلى الله عليه وسلم يقول: "ينزل عيسى ابن مريم عند المنارة البيضاء شرقي دمشق" رواه الإمام مسلم.

ஈஸா அலை அவர்கள் கிழக்கு திமிஷ்கில் உள்ள ஒரு வெள்ளை மினாராவில் இறங்குவார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


சிரியா மலக்குமார்கள் இறக்கை விரித்திருக்கும் புனித பூமியாகும் :



، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :

( طُوبَى لِلشَّامِ . فَقُلْنَا : لِأَيٍّ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : لِأَنَّ مَلَائِكَةَ الرَّحْمَنِ بَاسِطَةٌ أَجْنِحَتَهَا عَلَيْهَا )

ஷாம் தேசத்திற்கு சுப சோபனம் உண்டாவதாக .என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது நாயக தோழர்கள் காரணத்தை வினவினார்கள் ...அதற்கு நாயகம் (ஸல்)  நிச்சயமாக வானவர்கள் அவர்களின் இரக்கைகளை ஷாம் தேசத்தின் பக்கம் விரித்துள்ளார்கள் என்று சுப சோபனம் சொன்னார்கள்..

பரக்கத் பொருந்திய இடம் : 


وهذه المناقب أمور: أحدها البركة فيه، ثبت ذلك بخمس آيات من كتاب الله تعالى:
الأولى: قوله تعالى في قصة موسى عليه السلام: "وأورثنا القومَ الذين كانوا يُستضعفونَ مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمّت كلمةُ ربك الحسنى على بني إسرائيل بما صبروا " (الأعراف: 129-137) ومعلوم أن بني إسرائيل إنما أورثوا مشارق أرض الشام ومغاربها بعد أن أغرق فرعون في اليم. 

الثانية: قوله تعالى: "سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير" (الإسراء: 1) وهي أرض الشام.

الثالثة: قوله تعالى في قصة إبراهيم عليه السلام: "وأرادوا به كيداً فجعلناهم الأخسرين. ونجّيناه ولوطاً إلى الأرض التي باركنا فيها للعالمين" (الأنبياء: 70-71) ومعلوم أن إبراهيم إنما نجاه الله ولوطاً إلى أرض الشام من أرض الجزيرة والعراق.

الرابعة: قوله تعالى: "ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين" (الأنبياء: 81) وإنما كانت تجري إلى أرض الشام التي فيها مملكة سليمان.

الخامسة: قوله تعالى في قصة سبأ: "وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرىً ظاهرة وقدّرنا فيها السير سيروا فيها ليالَ وأياماً آمنين" (سبأ: 18) وهو ما كان بين اليمن وبين قرى الشام من العمارة القديمة كما ذكره العلما


நாயகம் (ஸல்) அவர்கள்  துஆ செய்த பூமி : 


وفي الصحيحين عنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّه صلى الله عليه وسلم قال: "اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يمننا

பெருமானார் (ஸல்) அவர்கள் யா அல்லாஹ் ...!!! எங்களுடைய ஷாம் தேசத்திற்கு பரக்கத் செய்வாயாக..யா அல்லாஹ் ...!!! எங்களுடைய எமன்  தேசத்திற்கு பரக்கத் செய்வாயாக என்று துஆ செய்தார்கள் ..

பெருமானார் (ஸல்) அவர்களின் முதற்கட்டம் : 


وعن أبي أمامة رضي الله عنه قال: قلت يا نبي الله! ما كان أوّل بدء أمرك؟ قال: "دعوة أبي إبراهيم, وبشرى عيسى, ورأت أُمّي أنه يخرج منها نور أضاءت منها قصور الشام".

அபூ உமாமா (ரழி) அவர்கள் நாயகத்தின் முதல் நிலையை கேட்டதற்கு நபி (ஸல் ) அவர்கள் 3 விஷயத்தை சுட்டிக்காட்டினார்கள் ..

1.நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் பிரார்த்தனை 
2.நபி ஈசா (அலை) அவர்களின் சுப செயதி ..
3.என்னுடைய தாய் தன்னிலிருந்து ஒரு ஒளி ஷாம் தேசத்தை ஒளிமயமாக்கியது என்று சொன்னார்கள் ..

ஷாம் வாசிகள் சோதனைக்குட்பட்டால் :


وعند أحمد والترمذي واللفظ له عن قُرَّة رضي الله عنه قال: قال رسول الله: "إذا فسد أهل الشام فلا خير فيكم، لا تزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة"

பெருமானார் (ஸல்) அவர்கள் " ஷாம் தேசம் சரியாக இல்லையென்றால் உங்களில் எந்த நலனும் இல்லை..
என்னுடைய உம்மத்தில் உதவிசெய்ய கூடியவர்கள் ஷாம் தேசத்திலே கியாமத் நாள் வரைக்கும் இருந்து கொண்டே இருப்பார்கள் .அவர்களுக்கு மோசடி செய்தவர்களுக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டார்கள் என்று நற்செயதிகளை சொன்னார்கள் ..

ஆன்மீக பூமி :


عن واثلة بن الأسقع رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "عليكم بالشام, فإنها صفوة بلاد الله, يسكنها خيرته من خلقه".

நீங்கள் ஷாம் தேசத்தை பற்றி பிடித்து கொள்ளுங்கள்.நிச்சயமாக அது ஆன்மீக பூமி..தன்னுடைய படைப்பில் சிறந்தவர்களை தான் அல்லாஹ் அதிலே தங்க வைப்பான் ....

ஷாம் தேசமே..!!!உன்னை எப்படி வர்ணிப்பேன்???


وكم بالشام من شرف وفضل --- ومرتقب لدى برّ وبحر
بلاد بـارك الرحــــمن فيــــها --- فقـدّسـها على علم وخب

எவ்வளுவு சிறப்புகள் உண்டு ஷாம் தேசத்தில் ...சிறந்த பூமியும் கடலும் எண்ணிலுண்டு ..
அல்லாஹ் அந்த பூமியை பரக்கத் பொருந்தியதாக ஆக்கினான் ..பரிசுத்த பூமியாகவும் ஆக்கினான் ....

நபி ஸல் அவர்களின் ஆட்சியில் சிரியாவுக்கான பொருப்பில் ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் அமர்த்தப்பட்டார்கள்.

அன்றைய இஸ்லாமிய நாடுகளில் பெரும் பலம் பொருந்திய வல்லரசாக சிரியா செயல்பட்டது.அப்படிப்பட்ட வரலாற்றுச்

சிறப்புமிக்க அந்த சிரியாவின் பாரம்பரியம் தெரியாமல் அமெரிக்கா தன் விஷச்செடியை அந்த பூமியில் நட்டத்துடிக்கிறது.

அவர்கள் தஜ்ஜாலுக்கே சமாதி கட்டுபவர்கள்.

அவர்கள் சத்தியவழியில் ஸ்தரமாக காலூன்றி நிற்பவர்கள்.

அமெரிக்க அழிச்சாட்டிய கூட்டணியின் கொட்டம் அங்கு தான் அடக்கப்பட வேண்டுமென்றால் அதை ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

நல்லவர்கள் வாழும் பூமி ..அல்லாஹ் ரசூல் (ஸல் ) அவர்களுக்கு பிடித்தமான பூமி ..இத்துணை சிறப்புகளை கொண்ட உனக்கு ஏன் இந்த சோதனை ...???

எத்துணை கொலைகள் ...பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்களில் கண்ணீர் துளிகள் ...மனதிலோ ஈமானின் பலம் ..கதறிய சப்தங்களை எப்படி வர்ணிப்பேன் ..

கண்களிலே கண்ணீரை பார்த்த நாம் செந்நீரையும் பார்த்து விட்டோம் ..பார்க்கும் கண்களை குளமாக்கியது ..

கல் நெஞ்சையும் பதற வைத்தது ..இரணம் கொடுக்க பெண்களின் உடலை பகரமாக கேட்ட ஈனப்பிறவிகளுக்கு தண்டனை நீயே தான் கொடுக்க வேண்டும் அல்லாஹ் ...!!!!

ஈட்டியின்  முனையில் நிறுத்திய போதும் ஈமான் இழக்க மாட்டோம் .........!!!!!

என்ற சொல்லுக்கு வடிவம் கொடுத்த ஸஹாபாக்களின் வாழ்க்கையை நாங்கள்  வாழும் காலத்திலே படமாகவும் பாடமாகவும் எங்களுக்கு காட்டி விட்டாய் ...

ஷாம் தேசமே ...!!!

உனக்கு  நற்செயதியோ ஆறுதலோ  சொல்லும் அளவுக்கு தகுதி அற்றவர்கள் நாங்கள் ...

நீ பெற்ற நல்லவர்களை  எங்கள் நாடும் பெற வேண்டும் ..நீ பெற்ற சோபனங்களை நாங்களும் பெற வேண்டும் என்பது தான் நாங்கள் கேட்கும் பிரார்த்தனை .....உன்னுள் நடக்கும் விபத்துகள் எங்களின் இருதயங்களை தட்டி எழுப்பி விட்டது ...

நீ பெற்ற ஈமான் பெறுக இந்த உலகம் ...!!!!


No comments: