அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Wednesday 31 January 2018

எளிய அமல்களின் அற்புதங்கள்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்




அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் ..

وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِندَ اللَّهِ عَظِيمٌ 



நீங்கள் எதை லேசாக கருதுகிறீரோ அது அல்லாஹ்விடத்தில் பெரியதாகும் ..



، ورَحِم الله محمدَ بن المنكدر الذي عندما حَضَرَتْه الوفاةُ بَكَى، فقِيل له ما يُبكيك؟ فقال: واللهِ ما أبْكِي ذَنباً أذنبْتُه، لكنَّني أخشى أنْ أكونَ أتيتُ شيئاً حَسِبْتُه هَيناً وهو عند الله عظيم..(إحياء علوم الدين: الغزالي، 6/116

முஹம்மது இப்னு முன்கதிர் (ரலி அவர்கள் மரணதருவாயில் இருக்கும் போது அழுதார்கள் ஏன் அழுகிறீர் என்று வினவிய போது *அவர்கள் நான் செய்த பாவத்தை நினைத்து அழவில்லை .மாறாக இறைவனிடத்தில் பெரியதாக இருக்கும் விஷயத்தை நான் லேசாக கருத்திருப்பேனோ என்ற பயத்தினால் அழுகிறேன் என்று பதிலுரைத்தார்கள் ...

 ولا تحقرن من المعروف شيئاً 

நல்லதை எதையுமே குறைத்து மதிப்பிடாதீர்கள்..

وفي الصحيحين " اتقوا النار ولو بشق تمرة " فدل على أن القليل له أثر

பேரீத்தம்பழம் அளவிற்க்காவது நரகத்தை பயந்து கொள்ளுங்கள் ..

சின்ன பொடி கற்கள் தான் மலையாகிறது ..எதையுமே சிறிதாக கருத வேண்டாம்.சின்ன சின்ன அமல்களை நாம் கவனம்  செலுத்துவதே இல்லை.

பனூ இஸ்ரவேலில் ஒரு பெண்மணி பெரிய பாவமாகிய விபச்சாரத்தை செய்து தாகித்திருக்கும்  நாய்க்கு தான் அணிந்திருந்த துணியால் தண்ணீர் கொடுத்தினால் சுவனத்தை பெற்றாள் என்பது நாயகம் (ஸல்) சொன்ன நபிமொழி.


أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مُقَنَّعٌ بِالحَدِيدِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أُقَاتِلُ أَوْ أُسْلِمُ؟ قَالَ: «أَسْلِمْ، ثُمَّ قَاتِلْ»، فَأَسْلَمَ، ثُمَّ قَاتَلَ، فَقُتِلَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَمِلَ قَلِيلًا وَأُجِرَ كَثِيرًا»

ஒரு மனிதர் நாயகத்திடத்தில் வந்து யாரஸூலல்லாஹ் நான் அல்லாஹ்வின் பாதையில் போரிடவா அல்லது இஸ்லாத்தை ஏற்கவா என்ற போது இஸ்லாத்தை ஏற்று போரிடு என்றார்கள் .அவரும் இஸ்லாத்தை ஏற்று இறை பாதையில் ஷஹீதானார்கள்.நபி (ஸல்) சொன்னார்கள்.குறைவாக அமல் செய்து நிறைய கூலியை பெற்று கொண்டார் 

எந்த அமலில் இறை பொருத்தமும் இறை நெருக்கமும் கிடைக்கும் என்பது  தெரியாது ..

அலி (ரலி) அவர்கள் சொன்னனர்கள்.

அல்லாஹ் இரண்டு விஷயத்தை இரண்டில் மறைத்துள்ளான்.

1.இறைநேசர்களை தன்னனுடைய அடியார்களிலும் ,
2.இறை பொருத்தத்தை தன்னுடைய அமலிலும் ,



ஆக இதை செய்தல் தான்  இறை நெருக்கம் கிடைக்கும் என்றில்லை...அன்றாடம் காலையிலிருந்து எழுந்த உடன்  செய்யும் செயல்களிலே அனைத்தையும் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன நபிமொழியில் பொருத்தினால் நன்மை தான்.

அல்லாஹ் ஒருவனுக்கு நலவை நாடினால் :

عن أنس بن مالك رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( إذا أراد الله بعبده خيراً استعمله ) قالوا : كيف يستعمله ؟ قال : ( يوفقه لعمل صالح قبل موته ) رواه الإمام أحمد (11625)



அல்லாஹ் ஒரு அடியானுக்கு நல்லவை நாடினால் நற்கருமங்கள் செய்வதிலே அவனை ஈடுபடுத்துவான்.

ஸலாத்தை பரப்புதல் :


قال رسول الله صلى الله عليه وسلم: (السلامُ اسمٌ من أسماءِ اللهِ وضَعَهُ اللهُ في الأرضِ، فأفْشُوهُ بينَكمْ، فإنَّ الرجلَ المسلمَ إذا مَرَّ بقومٍ فسلَّمَ عليهم، فردُّوا عليه؛ كان لهُ عليهم فضلُ درجةٍ بتذكيرِهِ إيَّاهُمُ السلامَ، فإنْ لمْ يرُدُّوا عليه رَدَّ عليه مَنْ هوَ خيرٌ مِنهمْ وأطْيبُ)

ஸலாம் அல்லாஹ்வின் பெயரிலே ஒன்று.அல்லாஹ் அதை பூமியில் தந்திருக்கிறான் .எனவே உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்புங்கள்.ஒரு மனிதர் உங்களை கடந்து சென்றால் நீங்கள் ஸலாம் சொல்லுங்கள்.அது உங்களுக்கு உயர்வை தரும் .


நோயாளியை நலம் விசாரித்தல் :


قال رسول الله صلى الله عليه وسلم: (ما من امرئٍ مسلمٍ يعودُ مسلمًا إلا ابتعث اللهُ سبعين ألفَ ملَكٍ، يُصلُّون عليه في أيِّ ساعاتِ النهارِ كان، حتى يمسيَ، و أيِّ ساعاتِ الليلِ كان، حتى يُصبِحَ )


ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லிமான நோயாளியை நலம் விசாரித்தால் 70 ஆயிரம் மலக்குகள் அவரை சந்தித்து அவருக்காக துஆ செயகிறார்கள் ..

ஜனாஸாவை பின் துயர்தல் :


عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم : « من شهد الجنازة حتى يصلى عليها فله قيراط، ومن شهدها حتى تدفن فله قيراطان، قيل وما القيراطان؟ قال: مثل الجبلين العظيمين » [متفق عليه].


ஜனாசாவை பின் துயர்ந்து ஜனாசா தொழுகை தொழுதால் ஒரு பெரிய மலை அளவு நன்மை கிடைக்கும் ..அடக்கம் செய்யும் வரை இருந்தால் இரு பெரிய  மலை அளவு நன்மை கிடைக்கும்


பாதையில் இடையூறு தரும் பொருளை அகற்றுதல் :


 أن النبي -صلى الله عليه وسلم- قال: ((لقد رأيت رجلاً يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق، كانت تؤذي المسلمين))


பிறருக்கு நற்கருமங்களை ஏவுதல் :


من دل على خير فله مثل أجر فاعله 

பிறருக்கு நற்கருமங்களை அறிவித்து கொடுப்பதே செய்தவரின் கூலியை பெற்று தரும் ..

ஒளு செய்தல் :


قول النبي صلى الله عليه وسلم : (مَا مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ وَيُصَلِّي رَكْعَتَيْنِ يُقْبِل بِقَلْبِهِ وَوَجْهِهِ عَلَيْهِمَا إِلاَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ) رواه مسلم (234



ஒளுவை முறையாக செய்து இரண்டு ரக் அது தொழுதால் சுவனம் வாஜிபாகும்.
பிலால் (ரலி) அவர்கள்  ஒழு செய்தல் இரண்டு ரக் அதுகள் தொழுவார்கள்

சுபுஹ் உடைய முன் சுன்னத்:


عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال
" ركعتا الفجر خير من الدنيا وما فيها".
رواه مسلم .


சுபுஹ் தொழுகைக்கு முன்னால் 2 ரக் அத் தொழுவது இந்த துன்யா & அதிலுள்ள அனைத்தை காட்டிலும் சிறந்தது.


ஆயத்துல் குர்ஸி :

وقال النبي صلى الله عليه وسلم : " من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة، لم يمنعه من دخول الجنة إلا أن يموت " 

ஒவ்வொரு தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸியை ஓதினால் சுவனத்தில் நுழைய ஏதும் தடையாக இருக்காது ..மரணத்தை தவிர 

சுவனத்தை யாசித்தல்,நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுதல் :


قال - عليه الصلاة والسلام -: «من سألَ اللهَ الجنةَ ثلاثَ مرَّاتٍ قالت الجنةُ: اللهم أدخِله الجنةَ، ومن استَجَارَ من النار ثلاثَ مرَّاتٍ، قالت النارُ: اللهم أجِره من النار»؛ رواه الترمذي.

யார் அல்லாஹ்விடத்தில் சுவனத்தை மூன்று முறை யாசிப்பாரோ சுவனம் சொல்லும் .யா அல்லாஹ் அவரை சுவனத்தில் நுழைய செய்வாயாக....

யார் அல்லாஹ்விடத்தில்  மூன்று முறை நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுவாரோ நரகம் சொல்லும் யா அல்லாஹ் அவரை நரகத்தை விட்டும் பாதுகாப்பு கொடுப்பாயாக....


நற்கருமங்கள் செய்யும் நபர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் பரிசு :


1. சுவனம் நஸீபாகுதல் ,


وَبَشِّرْ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ

(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.


2.மன நிம்மதி கிடைக்கும் .


مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.

3.ஈருலகிலும் வெற்றி :


فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَى أَنْ يَكُونَ مِنْ الْمُفْلِحِينَ

ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்.

4.இறை பிரியம் கிடைக்கும் :


إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمْ الرَّحْمَنُ وُدًّا

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்

5.இம்மையில் பாதுகாப்பு கிடைத்தல் 


وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم فِي الأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمْ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لا يُشْرِكُونَ بِي شَيْئًا

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்..

எனவே வாழ்க்கை ஒரு முறை தான்..போன உயிர் திரும்பி  வருவதில்லை .வாழும் வாழ்க்கையை அல்லாஹ் ரசூல் பொருந்தி கொள்ளும் வாழ்க்கையாக வாழ வேண்டும் .செய்யக் கூடிய சிறிய பெரிய மேலும் கூட பலன் தரும் .அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் ..


فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

ஒரு அணு அளவு நற்கருமங்கள் செய்திடின் அதன் பலனை பெற்றே தீருவார்


நல்ல அமல்கள் செயது இறை பொருத்தம் பெற அல்லாஹ் அருள்  புரிவானாக...


ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்....