அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Wednesday 7 February 2018

ஷரீஅத்தை பற்றி பிடிப்போம் !!






Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் நமக்கு அழகான வாழ்க்கை வழிமுறையை கற்று தருகிறது. நாம் சிறந்த முறையில் எல்லா வகையிலும் அனைத்து  வளங்களையும் பெற்று வாழ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவ்வனைத்திற்கும் நம்முடைய மார்க்கம் வழிவகை செய்கிறது.


காலையில் எழுந்தது முதல் இறைவாக்கு உறங்கும் அவரை என்னென்ன செயல்கள் நாம் செய்ய வேண்டி இருக்குமோ அது அனைத்திற்கும் இது  வழிமுறை என்று வகுத்து தந்தது நம் இஸ்லாமிய மார்க்கம். ஒவ்வொரு செயலையும் அணு அணுவாக சிறந்த முறையில் செய்ய கற்று தருகிறது.  ஏனென்றால் இது இறைவன் நமக்கு  வழங்கிய மார்க்கம்.

 உறக்கமும் விழிப்பும் : 

(1) محاسبة النفس قبل النوم :

فيُستحب للمسلم أن يُحاسب نفسه قبيل النوم عمَّا بدر منها من أعمال خلال نهاره، فإن وجد خيرًا حمد الله تعالى، وإن وجد غير ذلك استغفر وأناب وبادر إلى التوبة وعزم أن يكون يومه الآتي خيرًا من يومه السالف بإذن الله .

(2) النوم مبكرًا :

لحديث عائشة رضي الله عنها أنَّ رسول الله صلى الله عليه وسلم كان ينام في أول الليل ويقوم آخره فيصلِّي ( متفق عليه ) .

(3) استحباب الوضوء قبل النوم :

والاضطجاع على الشقِّ الأيمن، لحديث البراء بن عازب رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : «إذا أتيت مضجعك فتوضَّأ وضوءك للصلاة، ثم اضطجع على شقِّك الأيمن..»..ولا بأس أن يتحوَّل إلى شقِّه الأيسر فيما بعد .

(4) استحباب نفض الفراش:

وذلك ثلاثًا قبل الاضطجاع عليه، لحديث أبي هريرة رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال : «إذا أوى أحدكم إلى فراشه فلينفض فراشه بداخلة إزاره، فإنه لا يدري ما خلَّفه عليه..» .

وفي رواية «ثلاث مرات» ( متفق عليه ) ، وداخلة الإزار: طرفه الداخلي الذي يلي الجسد .

(5) كراهية النوم على البطن :

لحديث أبي ذر رضي الله عنه قال : «مرَّ بي النبي صلى الله عليه وسلم وأنا مضطجع على بطني فركضني برجله وقال : يا جنيدب، إنما هذه ضجعة أهل النار» (رواه ابن ماجه وصححه الألباني )

(6) كراهية النوم على سطح غير محجر :

لحديث علي بن شيبان أنَّ النبيَّ صلى الله عليه وسلم قال : «من بات على ظهر بيتٍ ليس عليه حجاب فقد برئت منه الذمّة» (البخاري في الأدب المفرد  .

(7) إغلاق الأبواب وإطفاء النار والمصابيح قبل النوم :

لحديث جابر رضي الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال : «اطفئوا المصابيح بالليل إذا رقدتم، وأغلقوا الأبواب، وأوكئوا الأسقية، وخمروا الطعام والشراب» ( متفق عليه ) .

(8) قراءة آية الكرسي وخاتمة سورة البقرة :

و"قل هو الله أحد" والمعوذتين، لِما ورد في ذلك من الأحاديث الصحيحة .

(9) قراءة بعض الأدعية والأذكار:

والثابتة عن رسول الله صلى الله عليه وسلم ومنها «اللهم قِني عذابك يوم تبعث عبادك» ثلاث مرات (رواه أبو داود وصححه الألباني) و«باسمك اللهم أموت وأحيا»  (رواه البخاري) .

(10) يستحب للنائم إذا فزع من نومه أو قلق أو أرق أن يدعو بهذا الدعاء: «أعوذ بكلمات الله التامة من غضبه وشر عباده، ومن همزات الشيطان، وأن يحضرون»
 (رواه أبو داود)

(11) أن يقول إذا استيقظ من نومه : «الحمد لله الذي أحيانَا بعدما أماتنا وإليه النشور» (رواه البخاري) .



மாலஜலம் கழிப்பதன் ஒழுக்கங்கள் :


(1) الإسراع إلى قضاء الحاجة :

فمتى أحسَّ الإنسان بحاجته إلى دخول الخلاء أسرع إلى ذلك، لما في ذلك من الفوائد الدينية والطبية .

(2) الاستتار عن أعين الناس عند قضاء الحاجة :

لحديث المغيرة بن شعبة رضي الله عنه أنَّ النبي صلى الله عليه وسلم كان إذا ذهب المذهب - أي الخلاء - أبعد (رواه الأربعة وصحَّحه الألباني) .

(3) اجتناب الملاعن الثلاث :

وهي طريق الماء، وطريق الناس، وظلِّهم .. لحديث معاذ بن جبل رضي الله عنه.. قال صلى الله عليه وسلم :  «اتقوا الملاعن الثلاث: البراز في الموارد، وقارعة الطريق، والظل» .

(4) عدم رفع الثوب حتى يدنو من الأرض :

وذلك حتى لا تنكشف العورة؛ لحديث أنس رضي الله عنه قال : «كان النبي صلى الله عليه وسلم إذا أراد قضاء الحاجة لم يرفع ثوبه حتى يدنو من الأرض» (رواه أبو داود والترمذي وصحَّحه الألباني) .

(5) عدم دخول الخلاء بشيءٍ فيه ذكر الله :

إلاَّ لحاجة، وذلك لأنَّ الخلاء مكانٌ للقاذورات والنجاسات، وفيه تجتمع الشياطين، وصيانة لاسم الله تعالى عن الإهانة والازدراء .

(6) النهي عن استقبال القبلة واستدبارها :

لحديث أبي أيوب الأنصاري رضي الله عنه أنَّ النبيَّ  صلى الله عليه وسلم قال : «إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها ببول أو غائط ولكن شرقوا أو غربوا» (متفق عليه) .

وهذا الحكم خاص بالخلاء - أي الصحراء - أمَّا في البنيان أو مع وجود سائر بين المتخلِّي والقبلة فيجوز ذلك .

(7) النهي عن البول في الماء الراكد (الدائم) :

لحديث أبي هريرة رضي الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال : «لا يبولنَّ أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه» (متفق عليه) .

(8) كراهية استخدام اليد اليمنى في قضاء الحاجة :

لحديث أبي قتادة أن النبي صلى الله عليه وسلم قال : «لا يمسكنَّ أحدكم ذكره بيمينه وهو يبول، ولا يتمسَّح من الخلاء بيمينه» (متفق عليه) .

(9) استحباب البول قاعدًا وجوازه قائمًا :

فالأصل في البول أن يكون من قُعود، لحديث عائشة رضي الله عنها : «من حدَّثكم أنَّ رسول الله صلى الله عليه وسلم بال قائمًا فلا تصدِّقوه، ما كان يبول إلاَّ جالسًا» (رواه النسائي وصححه الألباني)  .

ويجوز البول قائمًا بشرط أن يأمن تلويث بدنه وثوبه، وأن يأمن النظر إليه لحديث حذيفة قال: «كنت مع النبي صلى الله عليه وسلم فانتهى إلى سُباطة قوم فبال قائمًا فتنحَّيت فقال: «ادنه» فدنوتُ حتى قمت عند عقبيه، فتوضَّأ فمسح على خُفيه(متفق عليه) .

(10) كراهية الكلام أثناء قضاء الحاجة إلاَّ لحاجة :

لحديث ابن عمر رضي الله عنهما : «أنَّ رجلاً مرَّ ورسول الله صلى الله عليه وسلم يبول فسلَّم فلم يردّ عليه» (رواه مسلم) .

(11) كراهية الاستجمار بالعظم والروث واستحبابه وترًا: لحديث سلمان الفارسي رضي الله عنه قال : «نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستنجي بأقل من ثلاث أحجار، أو أن نستنجي برجيع أو عظم»(رواه مسلم)  وقال صلى الله عليه وسلم : «من استجمر فليوتر» .

(12) استحباب الدخول بالرجل اليسرى والخروج بالرجل اليمنى :

مع ذِكر أذكار الدخول والخروج .. فعن أنس قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال : «اللهم إني أعوذ بك من الخبث والخبائث» (متفق عليه) .

وعند الخروج : يقدم رجله اليمنى ويقول : «غفرانك» .

(13) غسل اليدين بعد قضاء الحاجة :


لحديث أبي هريرة رضي الله عنه : «أنَّ النبي صلى الله عليه وسلم قضى حاجته ثم استنجى من تور - أي إناء صغير - ثم دلَّك يده بالأرض» وفي رواية: «ثم مسح يده على الأرض»(رواه أبو داود وابن ماجه)

இப்படி இது போன்று, உணவு  உண்ணும் வழிமுறை ஒழுக்கங்கள், ஒருவருடன் சந்திக்கும்போதும் பேசும்போதும் பழகும்போதும், என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், அண்டை வீட்டாருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டு ம், சொந்த பந்தங்களுடன் இருக்க வேண்டிய நடைமுறை, தாய் தந்தையுடன், மனைவி மக்களுடன், சகோதர சகோதரிகளுடன் என்று இப்படி சமுதாயத்திலும் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு கற்றுத்தந்திருக்கிறது நம்முடைய மார்க்கம்.


அடித்தளங்களை வலுவாக்குகிறது : 


அல் குர்ஆன் அல்லாஹு தஆலா நமக்கு, நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறக்கி தந்த இறைவேதம். அதில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு வசனத்திலும் பல்வேறு விளக்கங்கள் பொதிந்திருக்கிறது. ஒவ்வொரு காரியத்திலும் அதன் முக்கிய மைய கருத்தை நமக்கு ஓரிரு வார்த்தைகளில் போதித்துவிடும்.

 قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் மை அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்டபோதிலும் கூட! (18:109).

எதில் சமுதாய நலன் ? : 

உம்மத்தில் சிறந்தது கண்மணிநாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உம்மத்தாகிய நாம் தான் என்பது அல்லாஹ் அருள்மறையில் கூறுவது. உடன்  அதற்கான காரணத்தையும் அதனுடன் கூறிக்காட்டுகின்றான் :

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ 

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.  3:110)

இந்த வசனம்  ஒரு முக்கியமான செய்தியை நமக்கு தருகிறது.

நம்முடைய இந்த அற்பமான சொற்ப காலம் மட்டுமே வாழும் இந்த வாழ்க்கையில், சுயநலனை மட்டுமே நம்முடைய நினைவில் கொண்டு அந்த குறிக்கோளுடன் வாழாமல், பிறரின் நலனையும் பேணி வாழுமாறு நம்முடைய வாழ்வு அமைய வேண்டும்.

அது தான் சிறந்த வாழ்க்கை முறை என்று சொல்லிக்கொடுக்கிறது. இந்த சித்தாந்தத்தி கீழ் வாழ்பவர்கள் தான் வரலாற்றில் சிறந்து போற்றப்படும் நல்லோர்களாக இருப்பார்கள். அது இஸ்லாமியராக இருந்தாலும் மாற்று மதத்தினராக இருந்தாலும் அனைவர்க்கும் இது பொருந்தும். யாராக இருந்தாலும் நாம் அவருடன்  நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை இது தான்.

ஒரு நல்லதை நாம் மட்டும் செய்வதுடன் நம்முடைய செயல் முடிந்துவிட கூடாது. அதனை பிறரும் செய்யுமாறு ஏவ வேண்டும். அதே போல ஒரு தீமையை நாம் மட்டும் செய்யாமல் தவிர்த்திருந்தால் போதாது. அதனை செய்யும் பிறரையும் நாம் அதனை விட்டும் தடுக்க வேண்டும். அதற்குண்டான வழிமுறைகளையும் மார்க்கம் நமக்கு சொல்லி தருகிறது. அதில் தான் படித்தரங்களும், உயர்வுகளும் கிடைக்கும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

عن أبي سعيد الخدري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم أنه قال:  من رأى منكم منكرًا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان


 معناه: أن المؤمن وهكذا المؤمنة إذا رأيا المنكر وجب تغييره باليد مع الاستطاعة، كالأمير في حدود صلاحيته، وكذلك الهيئة في حدود صلاحيتها، وكالأب مع أهل بيته، والأخ مع أهل بيته، على حسبالقدرة، كخمر يراق، آلة لهو تكسر وما أشبه ذلك


பற்றி பிடியுங்கள் !!  : 

இப்படி படிப்படியாக எல்லா செயல்பாடுகளையும் சிறந்த முறையில் கற்று தரும் ஓர் அழகிய மார்க்கத்தை, அதில் சொல்லப்பட்ட சில செயல்பாடுகளை குறை கூறுபவர்கள் அறிவீனர்கள் தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதனை புரிந்து விளங்கிக்கொள்ளும் அளவுக்கு புத்தி அவரிடத்தில் இல்லை என்பதை தவிர மார்க்கத்தில் சொல்லப்பட்டதில் எந்த விதமான குறியும் இல்லை என்பது தான் உண்மை.

எந்த ஒரு சமூகமும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டால் தான் அது தலைநிமிர்ந்து நிற்கமுடியும் . அறியாதவர்கள் அறிவுள்ளவர்களின் சொற்படி அவர்களின் தலைமையின் கீழ் வந்துவிட வேண்டும். ஆனால் இன்றுள்ள அமைப்புகள் அதனை எல்லாம் மறந்து, நாங்கள் தான் பெரியவர்கள், நாங்கள் தான் சிறந்தவர்கள் என்று தம்பட்டம் அடிப்பதிலேயே தங்களுடைய நோக்கத்தை மறந்து விடுகின்றனர்.

ஆனால் அல்லாஹு தஆலா கூறுகின்றான்  :


وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்திக் காண்பிக்கின்றான். (03:103).

ஆனால், எல்லா கருத்துவேறுபாடுகளையும் மறந்து, ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்தால் நிச்சயம் நம்முடைய சமூகம் சீராகும். ஒவ்வொருவரும் நம் மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடி பின்பற்ற வேண்டும். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காமல் எந்த பொறாமையும் நஞ்சும் உள்ளத்தில் இல்லாமல் அல்லாஹ்விற்கு பயந்து தனது அன்றாட கடமைகளை நிறைவேற்றி உரியவருக்கு அவருடைய ஹக்க்கை கொடுத்து ஏமாற்றாமல், குரோதம் கொள்ளாமல் நமக்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் காண்பித்து கொடுத்த பாதையில் சிறந்த முறையில் ஈமானுடன் வாழ்ந்தால் சிறந்த சமூகமாக அல்லாஹ் நம் இஸ்லாமிய சமூகத்தை ஆக்கி வைப்பான். இன்ஷா அல்லாஹ் !!


No comments: