அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 25 January 2018

இஸ்லாமியர்களும் இந்திய அரசியல் சாசனமும்

ربما تحتوي الصورة على: ‏‏نص‏‏

Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


அல்லாஹ் கூறுகிறான்..


     لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

உங்களுடைய மார்க்கம் உங்களுடையது. என்னுடைய மார்க்கம் என்னுடையது..( சூரத்துல் காஃபிரூன் ).


இந்த நாட்டில் எல்லாருக்கும் சம அளவிலான எந்த மதத்தையும் பாதிக்காத அளவுக்கு சட்டங்கள் இயற்ற பட்டது..ஆனால இன்றைய சூழ்நிலையில் தனக்கேற்றவாறு சட்டங்களை பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எல்லா மதத்தையும் சீண்டி பார்க்கும் அளவிற்கு தான் இன்றைய அரசியல் இருக்கிறது ....ஆனால் இந்திய அரசியல் சட்டம் என்பது எல்லா இனத்தவரும் பொருந்தும் வகையில் சட்டங்கள் அமைக்கப்பட்டது .இந்திய குடியரசு தினத்தை கொண்டாட தயாராக இருக்கும் நிலையில் எதனால் இந்த தினம் கொண்டாட படுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.


இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை 
தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.

தலைவர் அம்பேத்கர் :


மாநிலங்களின் சட்டங்களுக்கான குழு, மத்திய அரசின் அதிகாரங் களையும் கடமைகளையும் வகுக்கும் குழு, மத்திய அரசின் அரசியல் சட்டங்களைத் தெரிவு செய்யும் குழு ஆகியவற்றுக்கு ஜவாஹர் லால் நேருவே தலைவராக இருந்தார். அடிப்படை உரிமைகள், சிறுபான்மை யினர், பழங்குடிகள் உரிமை, விலக்களிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்குத் தலைவர், உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல். ஒட்டுமொத்தமான அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

இந்த அரசியல்சட்ட நிர்ணய சபை மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்களுக்குப் பணி செய்தது. 11 தொடர்களாகக் கூட்டங்கள் நடந்தன. மொத்தம் 165 நாட்கள் சபை கூட்டம் நடந்தது. அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பான பிரதான விவாதங்களுக்கும் திருத்தத் தீர்மானங்களுக்கும் செலவிடப்பட்டது. மொத்தம் 7,635 திருத்தத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் 2,473 விவாதித்து பைசல் செய்யப்பட்டன. பிரிட்டனில் நடை முறையில் உள்ள அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் சட்டங்களின் சில அம்சங்களும் தேவைக்கேற்பச் சேர்க்கப்பட்டன.

நிர்ணய சபை :

அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான அரசியல்சட்ட நிர்ணய சபை 9.12.1946-ல் முதல்முறையாகக் கூடியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில்தான் அரசியல் சட்ட நிர்ணய சபை கூடியது. இந்தச் சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததாலும், சில சமஸ்தானங்கள் உறுப்பினர் தகுதியை இழந்ததாலும் இந்தியப் பகுதிக்கான அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது. இவற்றுள் 207 உறுப்பினர்கள் பல்வேறு மாகாண சட்டசபைகளிலிருந்து பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுதேச சமஸ்தானங்கள் 93 பிரதிநிதிகளை அனுப்பின. 4 பிரதான மாகாணங்களிலிருந்து 4 பேர் சேர்க்கப்பட்டனர்.

13.2.1946-ல் இந்த சபைக்கான நோக்கங்களைத் தெரிவிக்கும் தீர்மானத்தை ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்தார். 22.1.1947-ல் இந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. 14.8.1947-ல் இந்த சபை கூடி, சட்டத்தை வகுக்கும் பணியைத் தொடங்கியது. 29.8.1947-ல் அரசியல் சட்டத்தை வகுக்கும் குழு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு முதலில் சச்சிதானந்த சின்ஹா தலைவரானார். பிறகு, பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். ஹரேந்திர குமார் முகர்ஜி என்ற வங்காள கிறிஸ்தவர் துணைத் தலைவரானார்.

இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பணி செய்தது. பாபு ராஜேந்திர பிரசாத் 4 குழுக்களுக்குத் தலைவராக இருந்தார். நிர்ணய சபைக்கான விதிகளை வகுக்கும் குழு, வழிகாட்டும் குழு, நிர்ணய சபைக்காகும் நிதியை நிர்வகித்தல், ஊழியர்களை அமர்த்துதல் ஆகியவற்றுக்கான குழு, தேசியக் குடியைத் தேர்வுசெய்யும் குழு ஆகியவற்றுக்கு அவர் தலைவராகத் திகழ்ந்தார்.


அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு : 


1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee)உருவாக்கப்பட்டது.

பீ. இரா. அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே.எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
டி. பி. கைதான்

ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இக்குழுவில் இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948,பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபைக்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 november 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. "இந்திய அரசியலமைச் சட்டம்-1950" இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.

இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன் விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில சட்டத்தின் ஸ்தாபக கொள்கைகளைக் கொண்டிருந்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் பெற்ற நாள்: 1949 நவம்பர் 26

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியும் சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப் பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்துபூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இது முறையாக ஏற்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும், அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று தலைசிறந்த இடதுசாரிச் சிந்தனையாளர் எம்.என். ராய் முதன்முதலாக 1934-ல் குரல் கொடுத்தார். அவருடைய யோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1935-ல் அதையே தீர்மானமாக நிறைவேற்றி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசும் அந்த யோசனையை ஏற்றது. கவர்னர் ஜெனரல் லின்லித்கோ பிரபு தலைமையிலான தேசிய நிர்வாகக் கவுன்சில் இதற்காக விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே பூர்வாங்க வேலைகள் தொடங்கின.

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி(federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், " இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்றும் " இந்திய யூனியன்" என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் ஒரு முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்து தான் பெற்றோம். 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பங்களிப்பு, அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்து பெற்றோம். அரசியல் சட்டத்திருத்த முறையை தென் ஆப்ரிக்காவிடம் இருந்து பெற்று திருத்தினோம். ராஜ்யசபா நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்து கடனாக பெற்றோம்.



இந்திய அரசியலமைப்பின் முகப்புரை :


1.நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்

2.சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி
3.எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை;
4.படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட;
மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட.

இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்:


இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 9 அட்டவணைகளும் (Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (Article) களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், ஒன்றிய அரசின் நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது:

இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து,

அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம்.



அடிப்படை உரிமைகள் :


இந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:

இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு (பிரிவு-14)
வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு-15)
பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு (பிரிவு-16)
தீண்டாமை ஒழிப்பு (பிரிவு-17)
பட்டங்கள் ஒழிப்பு (பிரிவு-18)
ஏழு சுதந்திரங்கள் (பிரிவு-19 முதல் 22)
சமய உரிமை (பிரிவு 25-28)
சிறுபான்மையினரின் பண்பாட்டு,கல்வி உரிமை (பிரிவு 29-30)
இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)
ஆகியன முக்கியமானவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமுலாகிவிடும்.

இஸ்லாமியர்கள் இந்திய அரசியல் சட்ட குழுவில் இருந்தார்கள் என்பதில்லாமல் எல்லா மதத்தை சார்ந்தவர்கள்  அந்த குழுவில் இருந்த போதிலும் எந்த மதத்திற்கும் இடையூறு இல்லாமல் பொதுவான வகையில் எழுதப்பட்டு வடிவமைக்கபட்டது .


சமத்துவம்,சமாதானம் ,சகோதரத்துவத்துடன் தான் எல்லா மதத்தினரும் பழகுகிறார்கள்.யாருக்கும் யாருடனும் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வாழ்வது மிக சிறப்பு.என்றபோதிலும்  நாட்டை ஆளுகின்ற தலைவர்களே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக சட்டங்களை இயற்றினாலும் அல்லது திருத்தி அமைத்தாலும் இஸ்லாமிய சட்டத்தில் ஒரு  துரும்பை கூட மாற்ற முடியாது என்பது திருக்குரானின் சான்று :

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

இந்த வேதத்தை நாமே  இறக்கினோம் ..அதை நாமே பாதுகாப்போம்...

இஸ்லாமிய சட்டங்கள் அனைத்துமே தனி மனிதரால் இயற்றப்பட்டதோ ,காலங்களுக்கு ஏற்ப திருத்தப்படுவதோ கிடையாது .கிடையாது என்பதை விட முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் இதை இறங்கியவன் அல்லாஹ்.அவன் அழிவில்லாதவன்.நிரந்தரமானவன். அவன் இயற்றிய சட்டங்களும் மாற்றமுடியாதவை .எந்த மனிதரால் திருத்த முடியாதவை .அது மாத்திரமல்லாமல் ,

 إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ

அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்.

இந்திய சட்டத்தை முழுமையாக இஸ்லாமியர்கள் காப்பாற்றுகிறார்கள்.எல்லோரும் சமம் என்ற ஒருமைபாட்டை தொழுகையில் அணியிலும் ,வெள்ளிக்கிழமை ஜும்மாவின் முறையிலும்,ஹஜ்ஜின் அனைத்து இடத்திலும் காண முடியும்.இதை சொல்லி தெரிவிக்க வேண்டிய செயதி இல்லை என்ற போதிலும் தன உயிரை விட மற்றவனை உயர்வாக மதிக்க சொன்ன மார்க்கம் இஸ்லாம்.அடுத்தவன் பசித்திருக்க நீ புசித்தல் அது ஈமானின் நல்ல அடையாளமில்லை என்று கற்று கொடுத்த மார்க்கம் இஸ்லாம்.சக மனிதர்களுக்கு  செய்ய வேண்டிய கடமையை தெள்ளத் தெளிவாய்  உரைத்தது இஸ்லாம்.பெயரிலே அமைதியையும்,சமாதானத்தையும் உரக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்..

இவ்வளவு தன்மைகளையும் உள்ளடக்கிய போதிலும் தன மார்க்கத்திற்கு ஒரு இடையூறு என்றால் அனைவரும் கை கோர்த்து எங்களுடைய உரிமைகளையும்,உடைமைகளையும் பெற்றே தீருவோம் என்பது எங்கள் உணர்வுகள் உரக்க சொல்லும் தகவல் .....

யாருக்காகவும் எதையும் கொடுப்போம் .இஸ்லாத்திற்க்காக எதையும் இழப்போம் ...

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவரையும் ஒற்றுமையோடு வாழ தவ்பீக் செய்வானாக.......!!!!!

ஆமீன் ஆமீன் யா ரப்பால் ஆலமீன் ......!!!!!


1 comment:

SIRAJUDEEN said...

Masha Allah.. Very good effort
A must read for every one...