அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 21 September 2017

ஹிஜ்ரி - கடந்து வந்த வரலாற்றை மறக்க வேண்டாம்


அல்லாஹ்வினுடைய மிகப்பெரும் கிருபையில் இஸ்லாமிய ஹிஜ்ரி வருடத்தின் புதிய ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம்! கிட்டத்தட்ட ஹிஜ்ரத் நிகழ்வு நடைபெற்று 1438 ஆண்டுகள் கடந்துவிட்டன. 

ஆனால், ஒவ்வொரு வருடமும் அதனை பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாமலே ஆண்டுகள் கடந்து சென்று விடுகின்றது. 

  • எதற்காக நம் இஸ்லாமிய மார்க்கத்தின் வருடக்கணக்கு ஹிஜ்ரி என்று சொல்லப்படுகிறது ?
  • எதனால் அது வருடத்தின் ஆரம்பமாக கணக்கிடப்படுகிறது

  • ஏன் மற்ற ஏதேனும் ஒரு நிகழ்வை வருடத்தின் ஆரம்பமாக கணக்கிட வைக்கப்படவில்லை ? 
  • அந்த ஹிஜ்ரத் ஒவ்வொரு வருடமும் நமக்கு எதனை  நினைவுப்படுத்துகிறது ?
இது போன்ற தகவல்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை என்று சொல்வதை விட, என்பது போன்ற கேள்விகள் கூட  பலருக்கு எழுவதில்லை. ஆங்கில தேதியை தினம் தினம் மறக்காமல்  பார்த்துகொள்ளும் நாம், இஸ்லாமிய பிறை கணக்கை சிந்தனையில் கூட எண்ணுவது கிடையாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 

இவற்றை பற்றிய தகவல்களை நாம் அறிந்துகொள்ளும் முன்பு ஒரு சில முக்கியமான ஹிஜ்ரத் பற்றிய செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஹிஜ்ரத் என்றால் என்ன ?

ஹிஜ்ரத் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதோ அல்லது ஒன்றை விட்டு மற்றொன்றின் பக்கம் போவதற்கு சொல்லப்படும். 


من المعاني المعروفة للهجرة عند العلماء أنها انتقال، وهذا الأخير نوعان: انتقال حسي من مكان إلى مكان كانتقاله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المنورة. وانتقال معنوي من الشرك إلى الإيمان، ومن الجاهلية إلى الإسلام، ومن المعصية إلى التوبة، ومن الغفلة إلى الذكر. ومنهم من زاد من ثقافة مجتمعات غير المؤمنين بنظمها وعقائدها وأخلاقها وقيمها وعاداتها وتقاليدها وتطبيقاتها المختلفة، إلى ثقافة الإيمان بمظاهره وتطبيقاته ومؤسساته.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு முன் உள்ள நபிமார்கள் செய்த ஹிஜ்ரத் பற்றி அல்லாஹ் குர்ஆனால் கூறுவது : 

நபிமார்களில் பெருமானார் அவர்களுக்கு முன்பு மூன்று நபிமார்கள் ஹிஜ்ரத் செய்ததாக குர்ஆன் மூலம் தெரிய வருகிறது

1.கலீலுல்லாஹ் இபுராஹிம் (அலை) அவர்களின் ஹிஜ்ரத்

‎قال الله تعالي: وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ   37:99

பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) "நான் என் இறைவனிடமே செல்கின்றேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்" (என்று கூறி,)

‎قال الخازن في تفسيره : أي مهاجر إلى ربي وأهجر دار الكفر قاله بعد خروجه من النار { سيهدين } أي إلى حيث أمرني بالمصير إليه وهو أرض الشام فلما قدم الأرض المقدسة سأل ربه الولد .
2.நபி லூத் (அலை) அவர்களின் ஹிஜ்ரத்

‎قال الله تعالي: فَآَمَنَ لَهُ لُوطٌ وَقَالَ إِنِّي مُهَاجِرٌ إِلَى رَبِّي إِنَّهُ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 29:26

(இப்ராஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி) ஒருவர் மட்டுமே அவரை நம்பிக்கை கொண்டார். (ஆகவே, இப்ராஹீம் அவரை நோக்கி) "நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (என்னுடைய இந்த ஊரை விட்டுச்) செல்கிறேன். நிச்சயமாக அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத்தில் அவர்களோடு நபி லூத் (அலை) அவர்களும் இருந்ததாக நமக்கு வரலாற்று நூல்களில் தெரிய வருகிறது.

3.கலீமுல்லாஹ் மூஸா (அலை) அவர்களின் ஹிஜ்ரத்

‎قال الله تعالي: وَلَقَدْ أَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي فَاضْرِبْ لَهُمْ طَرِيقًا فِي الْبَحْرِ يَبَسًا لَا تَخَافُ دَرَكًا وَلَا تَخْشَى20:77

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். "நீங்கள் என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுங்கள். (வழியில் குறுக்கிடும்) கடலில் (உங்களது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். (உங்களை எதிரிகள்) அடைந்து விடுவார்களென்று நீங்கள் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உங்களுடைய மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீங்கள் அஞ்சாதீர்கள்" (என்றும் அறிவித்தோம்).

மூஸா (அலை) அவர்கள் எகிப்தில் இருந்து இஸ்ரவேலர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள்.

நாம் எப்படி அதை செய்வது ?


இப்படியாக நமது நாயகம் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மட்டுமின்றி மற்ற நபிமார்களும் தங்களது வாழ்வில் ஹிஜ்ரத் செய்துள்ளார்கள். 

ஆனால், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை தனது வாழ்வில் ஒரு முறையாவது செய்ய வேண்டும் என்று ஏங்கும் சிலருக்கு தானும் அந்த ஹிஜ்ரத்தின் சுன்னத்தை பின்பற்ற வேண்டும் என்ற ஏக்கம் உள்ளத்தில் இருந்து கொண்டே தான் இருக்கும். 

அவர்களின் ஏக்கத்திற்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வாழ்வில் கடைபிடிப்பதற்காக ஒரு நல்ல வழியை காண்பித்து கொடுத்திருக்கிறார்கள் : 

قول النبي صلى الله عليه وسلم في موقف آخر: “المهاجر من هاجر السوء فاجتنبه” -مسند الإمام أحمد رحمه الله، ج2، ص: 224.

ஆம் ! நாம் செய்ய வேண்டிய ஹிஜ்ரத், பாவங்களை விட்டும் தவிர்ந்து நன்மைகளை செய்வதன் பக்கம் விரைந்து செல்வது தான். 


  عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْهِجْرَةِ أَفْضَلُ قَالَ ‏"‏ أَنْ تَهْجُرَ مَا كَرِهَ رَبُّكَ عَزَّ وَجَلَّ 


سبب التأريخ عند المسلمين 

ذكر في ذلك أكثر من سبب ، ولا تعارض بينها ولا مانع من وقوعها جميعا ، فتكون كلها أسبابا لبداية التأريخ عند المسلمين ، وقد تقدم ما ذكره الحافظ ابن حجر عن ابن سيرين قال :- قدم رجل من اليمن فقال :- رأيت باليمن شيئا يسمونه التأريخ يكتبونه عام كذا وشهر كذا ، فقال عمر هذا حسن فأرخوا )

وقال ابن الأثير :_ وسبب ذلك أن أبا موسى الأشعري كتب إلى عمر أنه يأتينا منك كتب ليس لها تأريخ ، فجمع عمر الناس للمشورة ، فقال بعضهم : أرخ بمبعث النبي ، وقال بعضهم :- بمهاجرة رسول الله ، فقال عمر :- بل نؤرخ بمهاجرة رسول الله ، فإن مهاجرته فرق بين الحق والباطل ) قاله الشعبي,وقال ابن كثير في البداية والنهاية :-
وقد ذكرنا سببه في سيرة عمر ، وذلك أنه رفع إليه صك مكتوب لرجل على آخر دين يحل عليه في شعبان ، فقال : أي شعبان ؟ أمن هذه السنة ؟ أم التي قبلها ؟ أم التي بعدها ؟ ثم جمع الناس فقال :- ضعوا للناس شيئا يعرفون فيه حلول ديونهم ، فيقال أنهم أرد بعضهم أن يؤرخوا كما تؤرخ الفرس بملوكهم, كلما هلك ملك أرخومن تاريخ ولاية الذي بعده ، فكرهوا ذلك ، ومنهم من قال :- أرخوا بتاريخ الروم من زمان ابن اسكندر, فكرهوا ذلك ،
وقال قائلون :- أرخوا من مولد رسول الله ، وقال آخرون :- من مبعثه علية السلام ، وأشار علي بن أبي طالب وآخرون :- أن يؤرخ من هجرته من مكة إلى المدينة لظهوره لكل أحد فإنه أظهر من المولد والمبعث ، فاستحسن ذلك عمر والصحابة . فأمر عمر أن يؤرخ من هجرة رسول الله صلى الله عليه وسلم


ஒவ்வொரு வருடமும் ஹிஜ்ரத் நமக்கு நினைவூட்டுவது என்ன ?

அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன், குடும்பத்தினருடன், மக்கமா நகரத்தை விட்டும் மதினா நகரிற்கு ஹிஜ்ரத் செய்த போது பல விதமான நிகழ்வுகள் நடைபெற்றதை வரலாற்று பக்கங்களில் காண்கின்றோம்! 

அவற்றில் பல்வேறு கருத்துக்களை உணர்த்தினாலும்,  நமக்கு கிடைக்கும் ஓர் முக்கிய படிப்பினை, 

நாம் எங்கு இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்ற ஒரு நம்பிக்கை. 

அதுவே நம் வாழ்வில் அனைத்து துன்பங்களிலும், கஷ்டங்களிலும் சோதனைகளிலும், மனா உறுதியை நமக்கு தரும். 

அதை தான் நாயகம் அவர்கள் தனது உற்ற தோழரான ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் குகையில் இருக்கும் போது, ஆறுதலாக கூறிய அந்த வார்த்தையை அனைத்து முஃமின்களுக்கும் அதை கொண்டு படிப்பினை பெற வேண்டும் என்று தனதிருமறையில் கூறிக்கட்டி இருக்கின்றான். 

நபி அவர்கள் அபூபக்கர் ரலி அவர்களுக்கு கொடுத்த நம்பிக்கை

 اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌ ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى‌ ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏ 

(நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கொன்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கின்றான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி "நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங் களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்) தான் மிக உயர்வானது. அன்றி, அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்பதை நாம் ஒவ்வொரு முறையும் நினைவில் வைக்க வேண்டும். 


أن معية الله معيتان، معية عامة ومعية خاصة.
1 - المعية العامة
المعية العامة ؛ أي الله جل جلاله مع كل الخلق بعلمه، مع الكافر، مع الملحد مع القاتل، بعلمه.
﴿ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ ﴾
( سورة الحديد الآية:4 ).
هذه معية عامة يشترك بها كل الخلق، لكن الله حينما يقول:
﴿ وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ ﴾
(سورة الأنفال ).
2 - المعية الخاصة
﴿ مَعَ الصَّادِقِينَ ﴾
(سورة التوبة ).
هذه معية خاصة، تعني معية التوفيق، معية التأييد، معية الحفظ، معية النصر لذلك إذا كان الله معك فمن عليك ؟ المعية الخاصة لها ثمن، المعية العامة بلا ثمن، لأن الله مع كل مخلوق، أما الخاصة:
﴿ وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآَتَيْتُمُ الزَّكَاةَ وَآَمَنْتُمْ بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضاً حَسَناً ﴾
( سورة المائدة الآية 12 ).


நாம் அடைந்திருக்கும் இருந்த வருடத்தை மிக சிறப்புமிக்க வருடமாக, அவனது ரஹ்மத்தையும் பரக்கத்தையும்  அடையக்கூடிய வாய்ப்பை நமக்கு தந்தருள்வானாக ! கடந்த நம்முடைய வருடத்தின் பாவங்களை மன்னித்தருள்வாயாக. நம் முடிவை நல்ல முடிவாக ஆக்கியருள்வானாக ! ஆமீன் ! 


1 comment:

Anonymous said...

ما شاء الله