அநியாயங்கள் பெருகி வரும் காலம், கியாமத் நெருங்கி வரும் காலம். நம் சகோதர சகோதரிகள், உலகின் பல்வேறு இடங்களிலும் வேதனைப்படுத்தப்படுகிறார்கள். எந்த காரணங்களும் இல்லாமல், ஈவு இரக்கமின்றி மிருக குணம் கொண்ட கவயவர்கள் இந்த அநியாயங்களை அரங்கேற்றுகின்றார்கள். முதலில் தங்குவதற்கு தனி இடமே இல்லாமல் நாடோடிகளாக இருந்தவர்களுக்கு, ஐயோ பாவம் என்று இடம் கொடுத்த பலன், அவர்களையே துன்புறுத்துகிறார்கள்.
அன்று அண்ணல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தை தழுவியதன் ஒரே காரணத்திற்காக உத்தம ஸஹாபாக்களை காஃபிர்கள் வேதனைக்குள்ளாக்கிய வரலாறுகள் நாம் படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் தன்னை அறியாமல் கண்களிலே கண்ணீர் நிற்கும் நிகழ்வுகள் பல நடந்தேறி இருக்கும். அந்த செய்திகளை கேட்டு உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவர்களுக்காக இறைவனிடத்தில் கையேந்தி துஆ செய்து சுபசோபனங்கள் சொல்லும்பொழுது மனம் குளிர்ந்திருக்கும்.
ஆனால், நாம் வரலாறுகளில் படித்த நிகழ்வுகள் ஒரு சில காலமாக நம் கண்முன்னே அரங்கேறி வருகின்றது. எதனை முஃமின்கள் அவர்கள் ஈமனுடையவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக துன்புறுத்தப்படுகின்றார்கள்.
இவ்வளவு கடினமான சோதனைகளை அவர்கள் சந்திப்பதே நம்மை விட ஈமானில் பலம் வாய்ந்தவர்கள் அவர்கள் தான் என்பதற்கு ஓர் அத்தாட்சி.
روى عَنْ سَعْد بن أبي وقاص رضي الله عنه قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ , أَيُّ النَّاسِ أَشَدُّ بَلاءً ؟ قَالَ : الأَنْبِيَاءُ , ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ , فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ , فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلاؤُهُ , وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ , فَمَا يَبْرَحُ الْبَلاءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ.
(الترمذي 2398)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடத்தில் மக்களில் யார் அதிகம் சோதனைக்குள்ளாக்கப் படுவர் என்று கேட்கப்பட்ட பொழுது, நாயகம் அவர்கள் சொன்னார்கள் : நபிமார்கள், அதன் பின் அவர்களை போன்றவர்கள், அதன் பின் அவர்களை போன்றவர்கள் என்று. ஒவ்வொருவரும் அவரின் மார்க்கத்தின் ஈடுபாட்டின் அளவுக்கு சோதிக்கப்படுகிறார்கள் என்றார்கள்.
ஏன் அவர்களுக்காக நாம் எதாவது செய்ய வேண்டும் :
நமக்கும் அவர்களுக்கும் இடையே இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்கின்ற பந்தம் இருக்கின்றது.
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ
“திண்ணமாக! இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள். எனவே, உங்களின் சகோதரர்களின் காரியத்தில் சீர்திருத்தத்தையே நீங்கள் நாடுங்கள்!” ( அல்குர்ஆன்: 49: 10 )
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ
“இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் மற்ற இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் நேசர்கள் ஆவார்கள்”. ( அல்குர்ஆன்: 9: 71 )
قول رسول الله - صلى الله عليه وسلم -: ((المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا))
وقوله - عليه السلام -: ((مثل المؤمنين في توادهم وتراحمهم؛ كمثل الجسد، إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى)).
முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அன்போடும், கருணையோடும் இருப்பதற்கு உதாரணம் சொல்லவேண்டுமெனில் உடலை உதராணமாகச் சொல்லலாம். காய்ச்சலின் போதோ, அல்லது ஏதாவது நோவினையின்போதோ உடலின் ஏதாவது ஒரு உறுப்புக்கு பாதிப்புஎன்றால் ஒட்டு மொத்த உடலும் அதில் பங்கெடுத்துக்கொள்கின்றதே அதைப் போன்று” என நபி {ஸல்}அவர்கள் கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு வேதனை தரும் காஃபிர்களை என்ன செய்தார்கள் ?
عن أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول: "اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".
قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ : "وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا".
சுபுஹு தொழுகையில் துஆ செய்வார்கள் :
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ عَلَى أَحَدٍ أَوْ يَدْعُوَ لِأَحَدٍ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ . رواه البخاري (4284)
عن أبي هريرة -رضي الله عنه- قال: كان رسول الله -صلى الله عليه وسلم- يقول حين يفرغ من صلاة الفجر من القراءة ويكبر ويرفع رأسه: «سمع الله لمن حمده ربنا ولك الحمد». ثم يقول وهو قائم: «اللهم اشدد وطأتك على مضر، واجعلها عليهم كسنى يوسف، اللهم العن لحيان ورِعْلا وذكوان وعصية عصت الله ورسوله»
ஆஹ்ஜாப் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் காபிர்களுக்கு எதிராக செய்த துஆ :
وعنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا قال : دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ عَلَى الْمُشْرِكِينَ فَقَالَ : (اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ ، سَرِيعَ الْحِسَابِ ، اللَّهُمَّ اهْزِمْ الْأَحْزَابَ ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ) . رواه البخاري (2775) ومسلم (1742)حديث ابن مسعود رضي الله عنه، قال: قال النبي صلى الله عليه وسلم «اللهم أعنِّي عليهم بسبع كسبع يوسف» أي: سبع سنين عجاف لا ماء فيها ولا زرع. وأورد أيضاً حديث ابن أبي أوفى رضي الله عنهما، قال: دعا رسول الله صلى الله عليه وسلم على الأحزاب، فقال: «اللهم منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب وزلزلهم» البخاري
இவ்வாறு காபிர்களுக்கு எதிராக துஆ செய்வது 2 நேரங்களில் மட்டுமே :
إحداهما : أنه يدعو لهم إذا أمِن غائلتهم ، ورجا هدايتهم ، والأخرى : أنه يدعو عليهم إذا اشتدت شوكتهم ، وكثر أذاهم ، ولم يأمن مِن شرهم على المسلمين " انتهى .
"عمدة القاري شرح صحيح البخاري" (21/443) .
நாம் அவர்களுக்காக என்ன செய்தோம் ?
எத்தனை கொடூரங்களை நம் சகோதர சகோதரிகள் அனுபவித்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்காக என்ன செய்தோம் இதுவரை ?
அன்று பத்ரு போரில் ஸஹாபாக்கள் காபிர்களை விட மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த போது அவர்கள் செய்த துஆ தான் அல்லாஹ்வின் உதவியை பெற்று தந்தது என்பதை நாம் மறக்க கூடாது.
وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (3:123)
அவர்களுக்காக நம்மால் இயன்ற அளவு இறைவனிடத்தில் கையேந்தி கண்ணீர் வடித்து துஆ செய்ய வேண்டும். அது தான் அவர்களுக்காக நாம் செய்யும் நம்மால் இயன்ற ஓர் மிக பெரிய உதவி.
அல்லாஹ் உலக முஸ்லிம்களை பாதுகாத்தருள்வானாக! ஆமீன்!
No comments:
Post a Comment