அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 7 September 2017

இஸ்லாம் கூறும் அரசியல்


இன்றைய அரசியல் சூழலில் அரசை கொண்டு எந்த வகையிலும் தங்களுக்கு பயன் இருக்கப்போவதில்லை என்கின்ற நினைப்பு அனைத்து தரப்பு மக்களிடத்திலும் மேலோங்கிய எண்ணமாக இருக்கின்றது.

ஆனால் முன் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி  முறையை பார்க்கும்போதும்  வரலாற்று சம்பவங்களை படிக்கும்பொழுதும் மெய்சிலிர்த்து போகிறது. எந்த அளவு நீதமான ஆட்சியை, மக்களுக்காக இருக்கும் ஓர் ஆட்சிமுறையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைத்திருந்தார்கள், அதனை பின்பற்றி பின் வந்த ஆட்சியாளர்கள் எவ்வளவு நீதமாக நடந்தார்கள் என்பதை நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும்.

இது போன்றதொரு ஆட்சி மக்களுக்கு மத்தியில் நிலவும் என்பதும்  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலை வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் அந்த சூழ்நிலையில் நம்முடைய பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லி கொடுத்தார்கள்.

அதனால் தான் இந்தியாவின் மட்டுமல்ல உலகத்தின்  பல பெருந்தலைவர்கள் எல்லாம் இஸ்லாமிய ஆட்சி முறையை போற்றி அப்படிப்பட்ட ஆட்சி தான் எங்கும் நிலவ வேண்டும் என்று அவர்கள் கூறியவை :

ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
– காந்திஜி –

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.
– கவியரசி சரோஜினி நாயுடு –


இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.
எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
– மைக்கேல் ஹெச். ஹார்ட் – ‘The 100′ என்ற நூலில்.


ஜவஹர்லால் நேரு
அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் நுழைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற நிலையில் இந்திய நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின், இஸ்லாத்தைப் பரப்பும் துணிவால் அவர் தம்மீதும் தமது கொள்கைமீதும் எத்துணை உறுதி பூண்டிருந்தார் என்பது தெளிவு.
இத்தகைய உறுதியான மனோபாவத்தை அன்றைய சூழ்நிலையில் அவர் உண்டாக்கிக்கொண்டது ஆச்சிரியப்படத் தக்கதே. இத்தகைய ஒரு உறுதியால்தான் மனித வாழ்க்கைக்கு புறம்பான நிலையிலிருந்த காட்டரபிகளைக் கொண்டு உலகில் சரிபாதி பகுதியிலே வெற்றிக்கொடி நாட்டினார்.
இத்தகைய வெற்றிக்குக் காரணம், முதலாவதாக முஹம்மத் நபி (ஸல்) கொண்டிருந்த உறுதி-ஊக்கம். இரண்டாவதாக இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம். (டிஸ்கவரி ஆப் இந்தியா)

கெட்ட ஆட்சி முறையின் அடையாளங்கள் :


حدَّثَنَا سَعِيدُ بْنُ سَمْعَانَ ، قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَتَعَوَّذُ مِنْ إِمَارَةِ الصِّبْيَانِ وَالسُّفَهَاء
فَقَالَ سَعِيدُ بْنُ سَمْعَانَ ‪: ‬فَأَخْبَرَنِي ابْنُ حَسَنَةَ الْجُهَنِيُّ ، أَنَّهُ قَالَ لأَبِي هُرَيْرَةَ ‪: " ‬مَا آيَةُ ذَلِكَ ؟ قَالَ : أَنْ تُقْطَعَ الأَرْحَامُ ، وَيُطَاعَ الْمُغْوِي ، وَيُعْصَى الْمُرْشِدُ‪ " .‬  صحيح الأدب المفرد 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் இப்படிப் பிரார்த்திப்பார்கள்.  இத்தகைய ஆட்சிக்கான அடையாளம் என்ன என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட்து. அவர் மூன்று அடையாளங்களைச் சொன்னார்கள்  :

1.   உறவுகளுக்கு மரியாதை இருக்காது.
2.   தப்பான தலைவர்களுக்கு மக்கள் கட்டுப்படுவார்கள்
3.   நல் வழிகாட்டிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்

ஆட்சியாளர் பிறருக்கு மோசடி செய்வது குறித்து : 


كتب عمر - رضي الله عنه - إلى أحد وُلاتِه موعظة، فقال: أمَّا بعد، فإذا دَعَتْكَ قدرتُك على الناس إلى ظلمهم، فاذكر قدرةَ اللهِ عليك في نفاد ما يأتي إليهم، وبقاء ما يُؤْتَى إليك.பண பலத்தின் ஒட்டுமொத்த சாராம்சம் : 


وروى أن ابن السماك دخل على الرشيد يومًا فاستسقى فأتى بكوز فلما أخذه قال على رسلك يا أمير المؤمنين لو منعت هذه الشربة بكم كنت تشتريها قال بنصف ملكي قال اشرب هنأك الله تعالى فلما شربها قال أسألك لو منعت خروجها من بدنك بماذا كنت تشترى خروجها قال بجميع ملكي قال إن ملكا قيمته شربة ماء وبولة لجدير أن لا ينافس فيه فبكى هارون الرشيد بكاء شديدًا.

எல்லாம் இருந்தும் எளிமையாக வாழ்ந்த  ஆட்சியாளர்கள்  : 


وقال عنه مالك بن دينار - رحمه الله -: الناس يقولون عنِّي: زاهد، وإنما الزاهد عمر بن عبدالعزيز الذي أتته الدنيا فتركها.


எளிமையுடன் வாழ்ந்தும் மக்களை இலகுவான முறையில் கேள்விகேட்கும் உரியமையும்  அதற்க்கு தகுந்த பதிலை தரும் ஆட்சியாளர் உமர் ரலியல்லாஹு அன்ஹு

: وقف عمر يخطب الناس وعليه ثوب طويل فقال: أيها الناس اسمعوا وعوا. فقال سلمان الفارسي: والله لا نسمع ولا نعي. فقال عمر: ولِمَ يا سلمان؟ قال تلبس ثوبين وتُلبسنا ثوبا. فقال عمر لابنه عبد الله: يا عبد الله قم أجب سلمان. فقال عبد الله: إنّ أبي رجل طويل فأخذ ثوبي الذي هو قسمي مع المسلمين ووصله بثوبه. فقال سلمان: الآن قل يا أمير المؤمنين نسمع وأمر نُطع.


நல்ல ஆட்சி அமைவதின் அவசியம் :


وقال الفضيل بن عياض : لو كان لي 
  مستجابة ما صيرتها إلا في الإمام لأني لو جعلتها للنفسي لم تجاوزني ولو جعلتها له كان صلاح الإمام صلاح العباد والبلاد.

இமாம் புழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் கூறினார்கள். என்னிடம் ஒரேயோரு பிரத்தியேகமான துஆவை அல்லாஹ் வழங்கி நீ விரும்பியதைக் கேள் என்றால் யாஅல்லாஹ் நல்ல ஆட்சியாளரைக் கொடு என்று தான் கேட்பேன். ஏனெனில் மற்ற விஷயங்கள்   எனக்கு மட்டுமே பயன்தரும். ஆனால் நல்ல ஆட்சியாளர் அமைந்தால் மக்கள் அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்றார்கள்.

எனவே ஆட்சி என்பது நீதமானதாக, எந்த ஒரு அடித்தட்டு நபருக்கும் அநியாயம் இழைக்கப்படாததாக இருக்க வேண்டும். அப்படி அமையும் ஆட்சி தான் அனைத்து மக்களின் உள்ளத்திலும் மகிழ்வை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க ஓர் நல்லாட்சி நம் நாட்டிலும் இன்னும் உலகெங்கிலும் நிலவ அல்லாஹ் தவுபீக் செய்வானாக !!No comments: