அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 20 July 2017

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா?

حدثنا عبدان أخبرنا عبد الله عن يونس عن الزهري أخبرني أبو سلمة بن عبد الرحمن أنه سمع أبا هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மேற்கண்ட ஹதீஸின்படி நாம் எப்போதும் இந்த அரசாங்கத்திற்கு கீழ்ப்படிந்தே நடக்கிறோம். அல்லது நம்மை கீழ்ப்படிந்து நடக்க வைப்பதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் இந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கம் என்று உருவாக்கப்பட்டதற்கான காரணமே மக்கள் நலன் கருதி செயல்படுவதற்காகத்தான். ஆனால் சமீப காலமாக நடக்கும் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் மக்களுக்கு எதிராகவே உள்ளது.
அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து எதிர்த்து கேட்கும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
حدثنا أبو نعيم حدثنا أبو الأشهب عن الحسن  أن عبيد الله بن زياد عاد معقل بن يسار في مرضه الذي مات فيه فقال له معقلإني محدثك حديثا سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعت النبي صلى الله عليه وسلم يقول ما من عبد استرعاه الله رعية فلم يحطها بنصيحة إلا لم يجد رائحة الجنة 

ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
(நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்' எனக் கூறினார்கள்.

மக்கள் விரோத போக்கை கடைப்பிடிக்கும் அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தொடர்ந்து மக்களுக்காக போராடிய திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் அடைந்தது. கடைசியில் மாணவி வளர்மதியையும் குண்டர் சட்டத்தில் அடைத்தது. போராட்டங்களுக்கு அனுமதியளிக்காமல் பார்த்துக் கொள்ளும் அரசு, ஒரு வேளை போராட்டத்திற்கு அனுமதியளித்திருந்தால், இந்நேரம் பல மெரீனா போராட்டங்கள் உருவாகியிருக்கும். காரணம், கதிராமங்கலம், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, மாட்டிறைச்சி என்று ஏராளமான பிரச்னைகள் மக்களை பாதித்திருக்கிறது.

ஆட்சியாளர்கள், உமர் ரலி அவர்களின் ஆட்சியைப் பற்றி படித்தாக வேண்டும்.
19 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க இலக்கிய வாதியும்அரசியல் பிரமுகரும் வரலாற்று ஆய்வாளருமான வாசிங்கடன் இர்விங்க் உமர்(ரலிஅவர்களின் வாழ்க்கை முறையையும் ஆட்சிமுறையையும் பற்றி சில வரிகளில் ஒரு சித்திரம் தருகிறார்உலகிற்கு உமர் அவர்கள் விட்டுச் சென்ற தடங்களி ஒரு சிறு பதிவு அதுஇர்விங் எழுதுகிறார்;
The whole history of Omar shows him to have been a man of great powers of mind, inflexible integrity, and rigid justice. He was, more than any one else, the founder of the Islam empire; confirming and carrying out the inspirations of the prophet; aiding Abu Beker with his counsels during his brief caliphate; and establishing wise regulations for the strict administration of the law throughout the rapidly-extending bounds of the Moslem conquests. The rigid hand which he kept upon his most popular generals in the midst of their armies, and in the most distant scenes of their triumphs, gave signal evidence of his extraordinary capacity to rule. In the simplicity of his habits, and his contempt for all pomp and luxury, he emulated the example of the Prophet and Abu Beker. He endeavored incessantly to impress the merit and policy of the same in his letters to his generals. 'Beware,' he would say, 'of Persian luxury, both in food and raiment. Keep to the simple habits of your country, and Allah will continue you victorious; depart from them, and he will reverse your fortunes.' It was his strong conviction of the truth of this policy which made him so severe in punishing all ostentatious style and luxurious indulgence in his officers. Some of his ordinances do credit to his heart as well as his head. He forbade that any female captive who had borne a child should be sold as a slave. In his weekly distributions of the surplus money of his treasury he proportioned them to the wants, not the merits of the applicants. 'God,' said he, 'has bestowed the good things of this world to relieve our necessities, not to reward our virtues: those will be rewarded in another world”
Washington Irving - In his book Mahomet and His Successors

உமரின் முழு வரலாறு அவரை தீட்சணயம் மிக்க அறிவாளியாகவும்,எதற்கும் வளையாத நேர்மையாளராகவும்நீதியின் மீது அதிக பிடிமானம் கொண்டவராகவும் காட்டுகிறது.  இஸ்லாமியசாம்ராஜ்யத்தை நிறுவதிலும் முஹம்மது நபியின் நடைமுறைகளைஎடுத்துச் செல்வதிலும் அபூபக்கருக்கு உதவுவதிலும் அவர்அனைவரைக் காட்டிலும் முன்னணியில் இருந்தார்முஸ்லிம்களால்விரைர்வாக கைகொள்ளப்பட்ட பகுதிகள் அனைத்திலும் சட்டத்தின்கட்டுப்பாடான் ஆட்சியை வழங்குவதற்காக தீட்சண்யம் மிக்கநடைமுறைகளை அவர் நிறுவினார்படைத்தலைவர்கள் மீது அவரதுபிடி இரும்புப் பிடியாக இருந்த்துபடைத்தலைவர்களை தன்னுடையகட்டுக்குள் வைத்திருந்த்து அவரது ஆட்சித்திறனுக்கு ஒருஅடையளமாகும்படைத்தலைவர்கள் பிரபலமானவராகவும்வெகுதூரத்தில் அவர்கள் வென்றெடுத்த பகுதிகளில் இருந்த போதும்உமருக்கு கட்டுப்படுவதிலிருந்து அவர்கள் துளியும் விலக வில்லை.

எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வதிலும்ஆடம்பரத்தைஉதறுவதிலும் தனக்கு முந்திச் சென்ற இறைத்தூதருடையவும்அபூபக்கருடையவும் முன்னுதாரனத்தை அவற்றை அப்படியேபின்பற்றினார்தான் கடைபிடித்த அதே வழிமுறைகளை தன்னுடைபடைத் தலைவர்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தினார்.“ஆடம்பரமாக உண்ணுவதிலும்  ஆடை அணிவதிலும் பாரசீகர்களின்பகட்டை உங்களுக்கு நான் எச்சரிக்கிறேன்உங்களது தேசத்தின்எளிமையையே நீங்கள் தொடர்ந்து கடைபிடியுங்கள்அல்லாஹ்உங்களுக்கு தொடர்ந்து வெற்றியை தருவான் என்று தொடர்ந்துவலியுறுத்தினார்இத்தகை குற்றச்சாட்டு எந்த அதிகாரி மீதாவதுசொல்லப் பட்டால் அவர்ருக்கு கடுமையாக தண்டனை வழங்கினார்.அரசாங்கத்திடம் மிஞ்சியிருக்கிற பணத்தை வாரந்தோறும் பங்குவைத்த அவர் கேட்டுவருகிறவர்கள் அனைவருக்கும் கொடுக்காமல்தேவையுடையவர்களை கண்டறிந்து பங்குவைத்தார். “ இந்த உலகின்அருள்வளங்களை அல்லாஹ் நமீது பொழிவதுநாம் நமதுதேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேஅன்றி நாம் செய்த நனமைகளுக்கான கூலியாக அல்லஅவைகளுக்கான கூலி மறுமையில் கிடைக்கும் என்று அவர்கூறுவார்.

இர்விங்க்கின் இந்த வார்த்தகள் உமர் (ரலிஅவர்களின் ஆட்சிமுறையையும் வாழக்கைப் போங்கையும் ஒரு சேர விவரிக்கின்றனஎன்றாலும் உமர் (ரலிஅவர்களின் தனிப்பட்ட வாழ்வியல்நடைமுறைகளும்ஒழுங்கமைப்பும்நீதியுணர்வும்பக்தியும்சமூகஅக்கறையும்மதிநுட்பம் மிகுந்த நடவடிக்கைகளும் அவ்வளவுஎளிதில் வார்த்தைகளுக்கு சிக்கிவிடக்கூடியதல்ல.

அவரது வரலாற்றை வாசிக்கிற யாரும் ஆச்சரியப் படாமலும்அழாமலும் வாசித்து விட முடியாது. 18 ம் நூற்றாண்டின்இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான வரலாற்றாசிரியர் கிப்பன் அந்தஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்.

Yet the abstinence and humility of Umar were not inferior to the virtues of Abu Bakr: his food consisted of barley bread or dates; his drink was water; he preached in a gown that was torn or tattered in twelve places; and a Persian satrap, who paid his homage as to the conqueror, found him asleep among the beggars on the steps of the mosque of Muslims- Gibbon - In The Decline and Fall of the Roman Empire

தொளிக் கோதுமையினால் செய்யப்பட்ட ரொட்டி அல்லது பேரீத்தம்பழங்களே அவரது உணவாகவும்சாதரண தண்ணீரே அவரதுபாணமாகவும் இருந்ததுஅவரது சட்டை பணிரெண்டு இடங்களில்தையல் போடப்பட்டிருந்த்துபாரசீக இராஜதந்திர ஒருவர் மரியாதைநிமித்தமாக அவரைச சந்திக்க மதீனாவுக்கு வந்த போதுபள்ளிவாசலின் படிக்கட்டுகளில்  ஏழைகளோடு ஏழையாக உமர்உறங்கிக் கொண்டிருக்க கண்டார்.”
இது மக்காட்சியாக இருக்கும் வரைதான் மக்கள் அரசை நம்புவார்கள். ஒரு வேளை சர்வாதிகார ஆட்சியாக மாறும் பட்சத்தில் மக்கள் புரட்சி வெடிப்பதில் சந்தேகமில்லை.


No comments: