அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 27 July 2017

விஷ நோய்களும் இஸ்லாமிய தீர்வுகளும்

தற்போது மக்களுக்கு மத்தியில் நோய்கள் பரவளாக இருக்கிறது குறிப்பாக டெங்கு காய்ச்சல். எனவே மக்களுக்கு நோய்களை பற்றி சில தெளிவுகளையும் படிப்பினைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டிருக்கின்றோம்.

(டெங்கு காய்ச்சல் பற்றிய முழு விழக்கமும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது)

டெங்கு பரவுவது கொசுக்கலால் தான் . சின்ன கொசு அது என்ன செய்ய போகிறது என்ற மக்களின் அலட்சியப்போக்கு. இந்த காய்ச்சலுக்கு மக்கள் ஆளாகி இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு அல்லாஹ் பெரும் படிப்பினையை குர்ஆனில் சொல்கிறான்.

إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضَةً فَمَا فَوْقَهَا

கொசுவை உதாரணம் காட்ட அல்லாஹ் வெட்கப்படமாட்டான். கொசுவை உதாரணம் காட்டுவது அற்பமான செயல் இல்லை என்பதை அல்லாஹ் புரியவைக்கின்றான்.

உண்மையில் கொசு சாதரணமான் விஷயம் அல்ல . காரணம் அந்த அற்ப கொசுக்காக தான் நாம் இன்று கொசு வலை , ஓடொமொஃஸ் , குட்நைட் ,ஆல் அவுட் இன்னும் பல.இப்பொது இச்சமுதாயம் புரிந்திருக்கும் ஏன் இறைவன் கொசுவில் படிப்பினை பெற சொன்னான் என்பதை.

சிரிய கொசுதான் நம்ரூதின் படையையும் அழித்து அவன் தலையிலும் ஏறின 400வருடங்கள் அதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இவ்வுலகில் வேதனை தந்தான். பின் அவன் இறந்து போனான்.

تفسير القرآن-عبد الرزاق بن همام الصنعاني211 - (1 / 105)

 حديث نمرود

 عبد الرزاق قال نا معمر عن زيد بن أسلم أن أول جبار كان في الأرض نمرود قال وكان الناس يخرجون يمتارون من عنده الطعام فخرج إبراهيم يمتار مع من يمتار قال فإذا مر به الناس قال من ربكم قالوا أنت حتى مر به إبراهيم قال من ربك قال الذي يحى ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر قال فرده بغير طعام قال فرجع إبراهيم إلى أهله فمر على كثيب رمل أعفر فقال ألا آخذ من هذا فآتي به أهلي فتطيب نفوسهم حين أدخل عليهم فأخذ منه فأتى أهله قال فوضع متاعه ثم نام قال فقامت امرأته إلى متاعه ففتحته فإذا هو بأجود طعام رآه أحد فصنعت له منه فقربته إليه وكان عهده بأهله أنه ليس عندهم طعام فقال من أين هذا فقالت من الطعام الذي جئت به فعرف أن الله زرقة فحمد الله ثم بعث الله تعالى إلى الجبار ملكا أن آمن بي وأتركك على ملكك قال فهل رب غيري قال فجاءه الثانية فقال له ذلك فأبى عليه ثم أتاه الثالثة فأبى عليه فقال له الملك فاجمع جموعك إلى ثلاثة أيام فجمع الجبار جموعه  قال فأمر الله الملك ففتح عليه بابا من البعوض قال فطلعت الشمس فلم يروها من كثرها قال فبعثها الله تعالى عليهم فأكلت لحومهم وشربت دماءهم فلم تبق إلا العظام والملك كما هو لم يصبه من ذلك شيء قال فبعث اللع عليه بعوضة فدخلت في منخره فمكث أربع مائة سنة يضرب رأسه بالمطارق وأرحم الناس به من جمع يديه ثم ضرب بهما رأسه وكان جبارا أربع مائه سنة فعذبه الله أربع مائة سنة كملكه ثم أماته الله وهو الذي كان بنى صرحا إلى السماء فأتى الله بنيانه من القواعد وهوالذي قال الله تبارك وتعالى فأتى الله بنينهم من القواعد

இஸ்லாமிய நல் வழி காட்டுதலை பின்பற்றினால் சில வியாதிகளையும் நாம் தவிர்கலாம்

இக்காய்ச்சல் பரவ காரணம் கொசு அது பரவ முக்கியக்காரணம் சாலையில் தெருக்கலில் தேங்கும் தண்ணீர்.  

நபியின் வார்த்த்யை கவனியுங்கள் " வழியில் இருக்கும் வேதனை தரும் விஷயத்தை அகற்றுங்கள்"
اماطة الاذي عن الطريق 

 இது எல்லவற்றிர்கும் பொருந்தும். தெருக்களில் தேங்கும் தண்ணீரை அகற்றுவது முஃமீன்கள்  கடமை. அது ஈமானின் ஒரு பங்காகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்

முறையான மருதுவர்களை அனுகி நோய்குண்டான ஆலோசனைகலையும் முன் ஏற்பாடுகளையும் பெற வெண்டும். இது இஸ்லாம் வழியுருத்தும் மிக முக்கியமான அம்சம் . மார்கத்தில் வணக்கத்திர்கு முதல் முக்கியத்துவம். ஆனால் அதற்கு முன்பு நம் உடலை ஆரோக்கியத்துடன் பேணவேண்டும் என மார்க்கம் குறிப்பிடுகிறது.

தொழுகை கடமை. அதற்கு ஒழு அவசியம். ஆனால் அந்த ஒழு செய்தால் உடல் நிலை பாதிப்பாகும் என்ற நிலை இருந்தால் தயம்மம் அதாவது தண்ணீரை பயன்படுத்தாமல் மன்னை தடவுவது. நோன்பு கடமை அதன் சிறப்புகள் ஏராளம் ஆனால் ஒரு நோயாளி நோன்பு வைத்தால் தன் உடல் பாதிப்பகும் என அவன் பயந்தால் அவன் நோன்பு விட அனுமதி உண்டு.

இந்த மார்க சட்டங்களை வைத்து பார்கும்போது உடல் நலத்தை பெரிதும் பேண வேண்டும் என்பது நமக்கு தெரிய வருகிறது.  முறையான மருதுவர்களை அனுகி நோய்குண்டான ஆலோசனைகலையும் முன் ஏற்பாடுகளையும் பெற வெண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

ஆனல் இறைவன் நோயின் மூலமாகவும் அடியார்கலுக்கு பல நன்மைகளை வைதிருக்கிறான்.

முதலில் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் காரணம் நம்மை விட கொடுமையான் கடுமையான நோயால் பாதிப்புக்குள்ளானவர்கள் நிறைய நபர்கள் உண்டு அவர்களை போல் இல்லாமல் எனக்கு லேசாக்கிய அல்லாஹ்வுக்கு அனைத்து புகழும் என நன்றி செலுத்தவேண்டு,.

புழைல் இப்னு இயால் என்ற பெரியாரின் மகளின் உள்ளங்கையில் நோய் ஏற்பட்டது.அவரின் தந்தை எப்படி இருக்கிறது? என் கேட்டார் அதற்கு அவர்களின் மகள் என் உள்ளங்கையை தவிர்த்து மற்ற எல்லா உறுப்புகளையும் எனக்கு சுகமளித் அல்லாஹ்வை நான் புகழ்கிறேன் என்று சொன்னள் அந்த தீன் குள பெண்.

أن الفضيل بن عياض (رحمه الله) كانت له بنت صغيرة فمرض كفها فسألها يوماً: يا بنية كيف حال كفك فقالت يا أبت بخير, والله لئن كان الله تعالى ابتلى مني قليلاً فلقد عافى الله مني كثيراّ, ابتلى كفي وعافى سائر بدني فله الحمد على ذلك.

நோயும் ஒரு அருட்கொடை

குறிப்பக காய்ச்சல் வர வேண்டும் என் அபுஹுரைர அவர்கள் துஆ செய்தார்கள். காரனம் உடல் முழுவதும் பரவும் என்பதால் அதர்கு கூலி அதிகம்

 503 - وعن عطاء عن أبى هريرة قال : ما من مرض يصيبنى أحب إلى من الحمى لأنها تدخل في كل عضو منى وان الله عز و جل يعطى كل عضو قسطه من الأجر

நோய் சில நபர்களுக்கு மட்டும் வருவதர்கு காரணம் அவர்களுக்கு எதிர்பு சக்தி இல்லை ஆனால் நோய் வந்து குணமான் பின் அந்த நோயை மருமுறை எதிர்பதர்கான சக்தியும் ஆரோக்கியமும் உடலில் கிடைகிறது.

அல்லாஹ் நோய்யின் மூலமாக தன் அடியானை பயமுருத்தி நல் வழி பக்கம் திருப்புகிறான்

من فوائد المرض: تخويف الله للعبد حتى يرجع إليه ويستقيم على دينه قال تعالى: " وأخذناهم بالعذاب لعلهم يرجعون ". فما ابتلاه الله إلا ليخوفه لعله أن يرجع إلى ربه.

அபூ தாவூதில் வந்த  ஹதீஸ் சொல்வது நோய் வராதவர் நம்மை சார்தவரல்ல என்ற பெருமானாரின் எச்சரிக்கை வார்தயை கவனிக்க வேண்டும் நோயும் நன்மையே

أخرج الإمام أبو داوود في سننه (رحمه الله) عن عامر مرفوعاً إلى الرسول صلى الله عليه وسلم أنه قال ( إن المؤمن إذا أصابه سقم ثم عافاه منه كان كفارةً لما مضى من ذنوبه وموعظة له فيما يستقبل,

فقال رجل ممن حوله يارسول الله وما الأسقام ؟ والله ما مرضت قط فقال رسول الله صلى الله عليه و سلم " قم عنا فلست منا "

நோயின் மூலமாக அல்லாஹ்வின் பிரியம் கிடைகிறது. அல்லாஹ் ஒருவரை பிரியபட்டால் அவர்களுக்கு நோயை கொடுத்து சோதிப்பான்

அதனால் தான் மக்க்ளில் அல்லாஹ்விர்கு அதிகம் பிரியமானவர்கள் நபிமார்கள் எனவே தான் அவர்களுக்கு அதிகமான் சோதனையை அல்லாஹ் கொடுத்தான்

من فوائد المرض, محبة الله للمريض:

الرسول صلى الله عليه وسلم ( إن عظم الجزاء مع عظم البلاء وإن الله إذا أحب قوماً ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط

قال صلى الله عليه وسلم (أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالامثل, يبتلى الرجل على حسب دينه فإن كان دينه صلباً اشتد بلاؤه وإن كان في دينه رقة ابتلي على حسب دينه, وما يبرح البلاء بالعبد حتى يتركه يمشي على الأرض ما عليه خطيئة ) رواه الترمذي.

நோயாலிகளுக்கு ஆரோக்கியமாக இருந்து நன்மை செய்யும் நபரின் கூலியை கொடுக்கிறான்

عن  أبي موسى الأشعري ( إذا مرض العبد أو سافر كتب الله تعالى له من الأجر مثل ما كان يعمل مقيماً صحيحاً)رواه البخاري.

நோயாளிகளை நலம் விசாரிது நாம் நலினமாக சில நல்ல ஆறுதல் வார்தைகளை சொல்ல வேண்டும். அவ்வாறு நலம் விசாரிக்க தவரினால் அல்லாஹ் கண்டிக்கிரான்

في الحديث القدسي يقول الله:" ابن آدم عبدي فلان مرض فلم تعده, أما لو عدته لوجدتني عنده " رواه مسلم.

இவ்வுலகில் நலமாக இருந்தவர்கள் மறுமையில் தனக்கு நோய் வர வில்லை என்றும் தன் உடல் முழுவதும் பூமியில் கத்திரியால் வெட்டப்பட்டாலும் பரவாயில்லை என் ஏங்குவார்கள் காரணம் நோயாலிகளின் நன்மை மறுமையில் அவர்களின் நோயின் காரணமாக அல்லாஹ் பிரம்மிப்பாக வழங்குவான்.

عن جابر رضي الله عنهما قال, قال رسول الله صلى الله عليه وسلم: ( يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب لو أن جلودهم قرضت في الدنيا بالمقارض ) رواه الترمذي.

No comments: