அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 13 July 2017

வழி தேவை

இன்றைக்கு இளைஞர்களுக்கு முறையான வழி காடுதல்கள் இல்லாததால் அவர்கள் வழி தவி போகிற சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக இஸ்லாமிய வட்டாரத்தில். முதியோர்களின் முதுமை அனுபவம் எப்படி சமூகத்திற்கு தேவையோ அதுபோல அல்லது அத்துடன் இளம் இளைஞர்களின் பலமும் தேவை. முதுமை அனுபவம் சமூக வளர்ச்சியின் திட்டம் ஆனால் இளைஞர்களின் பலமோ அதை செயல்படுத்தும் ஆயுதம். எனவே முதுமை இளமை ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் இரண்டு உண்மையான ஆயுதங்கள். பெருமானார் இந்த இரண்டு பலன்களுக்கும் தன்னுடைய சபைகளில் மரியாதை தந்தார்கள்.
பத்ருபோருக்கு பழிவாங்கும் நோக்கத்தில் குறைஷிகள் படையை திரட்டினார்கள். இந்த செய்தி பெருமானாருக்கு வந்தது. என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தார்கள் ஒரு கூடம் சொன்னது நாம் மதீனாவிலே இருப்போம் அவர்கள் நம் ஊருக்குள் வந்த போர் செய்வோம் என்று. மறு கூடம் சொன்னது நாம் மதீனாவிற்கு சென்று போர்செய்வோம் என்று. முதல் கூடம் முதியோர்களின் கூடம். இரண்டாம் கூடம் அது இளைஞர்களின் கூட்டம்.
இப்படி பெரியோர்களின் கருத்துகளுக்கு மதிபளிப்பதொடு இளைஞர்களின் உணர்வுகளுக்கும் பெருமானார் மதிப்பு தந்தார்கள்.
இளமை பருவம் கத்தியை போன்றது அதை வைத்து காயப்படுத்தவும் முடியும், அதன் கூர்மையை வைத்து பல தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் முடியும். பயன்படுத்தும் விதத்தை பொருத்து தான் உள்ளது.
அதனால் தான் பெருமானார் இளமையை நல்ல முறையில் பயன்படுத்த உபதேசம் செய்தார்கள். 
ஒரு நபருக்கு ஐந்து பொன் மொழிகளை பெருமானார் உபதேசம் செய்தார்கள் அதில் ஒன்று  உன் முதுமைக்கு முன் இளமையை பயன்படுத்திகொள். 
المستدرك على الصحيحين للنيسابوري4/  341
 7846 أخبرني الحسن بن حكيم المروزي أنبأ أبو الموجه أنبأ عبدان أنبأ عبد الله بن أبي هند عن أبيه عن ابن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم لرجل و هو يعظه : اغتنم خمسا قبل خمس : شبابك قبل هرمك و صحتك قبل سقمك و غناك قبل فقرك و فراغك قبل شغلك و حياتك قبل موتك

முதுமை அறிவுரைகளையும் அனுபவங்களையும் சற்று ஓய்வோடு செய்யவேண்டும் என்பது போன்ற பருவம். எனவே இளமை பருவம் மட்டும் தான் துடிப்பும் தன்னபிகையின் வெளிப்பாடும் உள்ள பருவம். 
ஆரம்பத்தில் இஸ்லாத்தை தழுவிய வர்களில் இளைஞர்கள் தான் அதிகம். இஸ்லாத்தின் ஆரம்பத்தில் முஷ்ரிக்குகள் மூலமாக பல தொல்லைகள் கிடைத்தது. அவைகள் அனைத்தையும் எதிர்த்தும் அல்லது சகித்தும் இஸ்லாத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த எல்லா கச்தங்களையும் தாங்கி இஸ்லாத்தில் இருந்தவர்கள் பலரும் இளைஞர்கள். 
மூசா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் இஸ்லாத்தை பனூ இஸ்ராயீல்களுக்கு எடுத்து சொன்னபோது அதை சிலர்கள் ஏற்றுகொண்டார்கள் சிலர் பிரவ்னின் கொடுமையை பயந்து ஒதுங்கினார்கள். அவர்களை பற்றி குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான்.

{ فَمَا آمَنَ لِمُوسَى إِلا ذُرِّيَّةٌ مِنْ قَوْمِهِ عَلَى خَوْفٍ مِنْ فِرْعَوْنَ وَمَلَئِهِمْ أَنْ يَفْتِنَهُمْ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الأرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
இஸ்லாத்தை ஏற்ற சில மக்கள் இளைஞர்கள். காரணம் பிரவ்னின் கொடுமையை பயந்து பலர் இஸ்லாத்திற்கு முன் வர பயந்தார்கள். 
تفسير ابن كثير (4/  287)
يخبر تعالى أنه لم يؤمن بموسى، عليه السلام، مع ما جاء به من الآيات (1) البينات والحجج القاطعات والبراهين الساطعات، إلا قليل من قوم فرعون، من الذرية -وهم الشباب
குர்ஆனில் அல்லாஹ் மற்றொரு இளைஞர் கூட்டத்தை பற்றி சொல்கிறான். 
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُمْ بِالْحَقِّ إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى (13)
(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.
அன்றைய காலத்து அரசனை எதிர்த்த நபர்களை குர்ஆன் அவர்களின் வயதின் காலத்தையும் குறிபிடுகிறது. எனவே இளமை பருவம் ஒரு நாட்டையும் ஒரு பெரும் அரசனியும் கூட எதிர்த்து நிற்கிற துணிவு கொண்ட ஒரு அற்புதமான பலம் மிக்க பருவம். அதை சரியான முறையில் பயன்படுத்த வழி காட்டப்பட வேண்டும். மேற்படி உள்ள வசனத்தில் குர்ஆன் அவர்களுக்கு நேர்வழியை அதிகப்படுதினோம் என சொல்வதை விதை அவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் தேவை படுகிறது.
நபி இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் சிற்சில சம்பவங்களை அல்லா குர்ஆனில் சொல்கிறான். அவர்களின் இளமை பருவத்தையும் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்
இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் ஊரின் திருவிழா வந்த நாளில் அதற்கு செல்லாமல் அவர்கள் ஊறில் தங்கி விடுகிறாகள். அவர்களின் ஊரில் சிலை வணக்கங்கள் அதிகம். பேசாத கேட்காத இந்த சிலைகளிடத்தில் இந்த மக்கள் எதை கோரிக்கை வைக்கிறார்கள் என இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வியந்தார்கள். சிலை வணக்கத்தை ஒழிக்கும் முதல் முயற்சியாக மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு வர எண்ணி அவர்களின் சிலை ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள எல்லா சிலைகளையும் உடைத்து விட்டு பெரிய சிலையின் கழுத்தில் கோடரியை மாறிவிட்டு வந்துவிட்டார்கள். 
   திருவிழா முடிந்து மக்கள் திரும்பி வந்த பார்க்கும் பொது கொந்தளித்துவிட்டர்கள். காரணம் தங்கள் தெய்வங்களை சிலைகளை யாரோ உடைத்துவிட்டார்கள் என்று. இதை அரசனிடம் சொல்ல இப்படி யார் செய்தது என விசாரிக்க பலரும் தெளிவாக ஒரு கருத்தை சொன்னார்கள் 
அதை குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான்
قَالُوا سَمِعْنَا فَتًى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ (60)
இப்ராஹிம் என்று சொல்லப்படுகிற ஒரு இளைஞர்.
இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களை விசாரித்த பொது அவர்கள் சொன்னார்கள் பெரிய சிலையின் கழுத்தில் கோடரி இருக்கிறது அதை வைத்து பார்க்கும்பொது பெரிய சிலை இந்த சிறிய சிலைகளை உடைத்திருக்கும் என்றார்கள். அசைவற்ற சிலைகள் எப்படி உடைத்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலை அவர்களின் தவறான கொள்கை புரிய வைக்க காரணமாகி போனது. அசைவற்ற சிலைகள் எனில் மற்ற சிலைகளை உடைக்க கூட சக்தி பெறாது எனில் நீங்கள் சொல்கிற கோரிக்கைகளை மாதிரம் எப்படி அந்த சிலைகள் செவி ஏற்க்கமுடியும் என்ற பதில்கள் அவர்களை விளக்கப்பட்டது. 
ஒரு அரசனை ஒரு ஊர் மக்களை எதிர்த்த ஒரு இளைஞரின் வரலாற்றை குர்ஆனில் அல்லா சொல்கிறான்.

இளமைப்பருவத்தில் இருந்தே தன்னை வணக்கத்தில் ஈடுபடுத்திக் கொள்பவருக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்..
عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ إِمَامٌ عَادِلٌ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلَاءٍ فَفَاضَتْ عَيْنَاهُ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسْجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا قَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ يَمِينُهُ (بخاري
 இந்த இளமை பருவத்தின் காலம்  பத்திலிருந்து துளிர் விட்டு நாற்பது வரை வீர நடை போடுகிறது. அந்த இளமை பருவற்றை நாம் பாதுகாத்து நல்ல வழியில் பயன்படுத்துவோம்.

No comments: