அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 15 June 2017

சொர்க்கம் - اللهم اعتق رقابنا من النار وادخلنا الجنة

அல்லாஹு மனிதர்களையும் ஜின்களையும் தன்னை வணங்கவும் வழிபடவும் அல்லாஹ் படைத்தான். அவ்வாறு யார் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு வழிபட்டு நடக்குகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் தன பொருத்தத்தை தருவதோடு மட்டுமல்லாமல் உயர்ந்த சொர்கத்தையும் தருகிறான்.

குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக்காட்டுவான்.
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَوَاتُ وَالأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
3:133. இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும்சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள்பூமியைப் போலுள்ளதுஅது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் மனிதர்களுக்கு சொர்கத்தில் அனைத்து விதமான அருட்கொடைகளையும் வைத்திருக்கிறான். அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு உண்டு. சொர்க்கத்தில் யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை இல்லை. அச்சமில்லாத சூழலை அல்லாஹ் அமைத்து தந்திருக்கிறான். நிரந்தர சுகம் சொர்க்கத்தில் மட்டும் தான் கிடைக்கும். தனக்கு கிடைக்கும் சுகங்களும் இன்பங்களும் தன்னை விட்டும் வெகு விரைவில் போய்விடுமோ என்ற கவலை யார் மனதிலும் இருக்காது. அப்படிப்பட்ட இடம் தான் சொர்க்கம். தன்னை படைத்த இறைவனை கண்டு மகிழ்கிற வாய்ப்பு சொர்க்க வாசிகளுக்கு உண்டு.
சொர்கவாசிகளுக்கு நிரந்தர பணியாட்கள் உண்டு. இந்த சுகங்களும் இன்பங்களும் இவ்வுலகில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்தவர்களுக்கு கிடைக்கும் பாக்கியம்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொர்கத்தை பற்றி வர்ணிக்கும்போது சொன்னார்கள்.
“ சொர்க்கத்தில் முதல் படித்தரத்தில் நுழைபவர்கள் பெளர்ணமி நிலவை போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்து (நுழைபவர்கள்) வானத்தில் உள்ள ஒளி மிகுந்த நட்சத்திரத்தை போன்று இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரு நபரின் உள்ளத்தின் மீது இருக்கும். அவர்களுக்கு மத்தியில் எந்த விரோதமும் பொறாமை எண்ணமும் இருக்காது. ”

இன்பங்கள் மட்டும் அல்லாஹ் இன்றைக்கு மனிதன் தொலைத்த தாக நினைத்துகொண்டிருக்கும் மன நிம்மதியும் சொர்க்கத்தில் கிடைக்கும்.
சொர்க்க வாசிகள் சொர்க்கத்தில் நுழையும் பொது மலைக்குமார்கள் அவர்களை சலாம் சொல்லி அன்போடு அழைப்பார்கள். இன்முகத்துடன் அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் சொல்லுவான்.

وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ
39:73. எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்அங்கு அவர்கள் வந்ததும்அதன் வாசல்கள் திறக்கப்படும்அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்நீங்கள் மணம் பெற்றவர்கள்எனவே அதில் பிரவேசியுங்கள்என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்)

கம்பீரமான குரலில் ஒரு அழைப்பாளரின் சப்தம் சொர்க்க வாசிகளின் காதுகளில் விழும். அது பாதுகாப்பு வாக்குறுதி சப்தம். அந்த சப்த்தத்தை கேட்ட பின் சொர்கவாசிகளுக்கு உள்ளத்தில் பயம் ஏதும் இருக்காது. பயம், வலி, மரணம், நோய் போன்றவைகள் ஏற்படாத ஒரு பாதுகாப்பான இடத்தில் நாம் இருக்கிறான் என்ற உணர்வும் நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்படும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
:« يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلاَ تَسْقَمُوا أَبَداً، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلاَ تَمُوتُوا أَبَداً، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلاَ تَهْرَمُوا أَبَداً، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلاَ تَبْتَئِسُوا أَبَداً
(சொர்க்கத்தில்) ஒரு அழைப்பாளர் உரக்க சொல்லுவார்  “நிச்சயம் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு உண்டு. ஒருபோதும் உங்களுக்கு நோய் ஏற்படாது. இங்கு நீங்கள் நிரந்தரமாக வாழ்வீர்கள் மரணம் உங்களுக்கு இல்லை. நீங்கள் இளமையாக இருப்பீர்கள் வயோதிகம் உங்களுக்கும் ஒருபோதும் ஏற்படாது. நீங்கள் இன்பவாக இருப்பீர்கள் சிரமங்கள் உங்களுக்கு இல்லை ”

இதை தான் அல்லாஹ் குர்ஆனிலும் சொல்லிக்காட்டுவான்.
وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
 "பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்" என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்

மக்கள் சொர்க்கத்தில் பார்த்தல் மெய் சிலிர்த்து போய்விடுவார்கள். அதன் கட்டிட அமைப்பு வியக்கவைக்கும். வெள்ளியும் தங்கமும் சுவற்றின் கற்களாக அமைந்திருக்கும். கஸ்தூரி நறுமண வாசம். போடிக்கர்களுக்கு பதில் முத்துக்கள் போடப்பட்டிருக்கும். அறைகள் மேல் அறைகளின் காட்சி பார்பவரை கவரும்.

அல்லாஹ் சொல்கிறான்.
لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَعْدَ اللَّهِ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ
39:20. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்பட்டு நடக்கின் றார்களோ அவர்களுக்கு, (சுவனபதியில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மென்மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாறமாட்டான்

இத்தகைய பிரம்மாண்டமான ஒரு சொர்கத்தை நிரந்தர சுக உலகத்தை அல்லாஹ் வெற்றி பெற்ற நம்பிக்கையாளர்களுக்கு வைத்திருக்கிறான். அல்லாஹ் நாடிய அந்த வெற்றி பெற்ற கூட்டம் மட்டும்தான் இந்த சுகங்களை அனுபவிக்க முடியும். இல்லை என்று சொல்லுகிற வார்த்தை சொர்கத்தில் வசிப்பவர்களுக்கு தேவை இல்லை. அனைத்தும் கிடைக்கும் நிரந்தரமாக கிடைக்கும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

“ முமீன்களுக்கு சொர்க்கத்தில் ஒரு கூடாரம் இருக்கிறது. அது ஒரே முத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் நீளம் அறுபது மயில் தூரம். அதில் வேறு மக்களும் இருப்பார்கள். ஆனால் ஒருவர் மற்றவரை காணமாட்டார் ”

அல்லாஹ் சொர்க்கத்தில் இன்னும் பல இன்பங்களை வைத்திருக்கிறான். அவர்களுக்கு சொர்க்கத்தில் பல மனைவிமார்களை வைத்திருக்கிறான். ஹூருல் ஐன் பெண்கள் அவர்களுக்காக அல்லாஹ் வழங்குவான்.

குர்ஆனில் அல்லாஹ் சொல்லுகிறான்.
الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ* ادْخُلُوا الجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ
43:69. இவர்கள்தாம் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் வழிபட்டு நடப்பவர்கள் 43:70. ஆகவே, (மறுமையில் இவர்களை நோக்கி) "நீங்களும் உங்கள் மனைவிமார்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சுவன பதிக்குச் சென்றுவிடுங்கள்" (என்று கூறப்படும்)

சொர்க்கத்தில் அல்லாஹ் பல ஆறுகளை வைத்திருக்கிறான். தண்ணீரால் நிரம்பிய ஆறுகள் மட்டுமல்ல. பால் தேன் நிறைந்து ஓடும் ஆறுகள்.

குர்ஆனில் அல்லாஹ் இதை வர்ணிக்குப்போது சொல்லிக்காட்டுகிறான்.
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ
47:15. இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையாவது: அதில் தீங்கற்ற (பரிசுத்தமான) நீரருவிகள் இருக்கின்றன. பரிசுத்தமான ருசி மாறாத பாலாறுகளும் இருக்கின்றன. திராட்சை ரச ஆறுகளும் இருக்கின்றன. அது குடிப்பவர்களுக்குப் பேரின்பமளிக்கக்கூடியது. தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன. அன்றிஅதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவர்க்கங்கள் இருப்பதுடன்இறைவனின் மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. (இத்தகைய இன்பங்களை அனுபவிப் பவனுக்கு) நரகத்தில் என்றென்றுமே தங்கியிருந்துகொதிக்கும் நீர் புகட்டப்பட்டுகுடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடக்கூடிய நரகவாசி ஒப்பாக முடியுமா?

சொர்க்க வாசிகளின் உணவை பற்றி அல்லாஹ் சொல்கிறான்.
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ* وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
56:20. இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -56:21விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).

56:32ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -56:32. ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் –

சொர்கவாசிகளின் குடிபானங்களை அல்லாஹ் வர்ணிக்கிறான்.
إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا
76:5நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்குவளைகளிலிருந்து (பானம்அருந்துவார்கள்அதன் கலப்பு காஃபூராக (கற்பூராகஇருக்கும்,

وَيُسْقَوْنَ فِيهَا كَأْساً كَانَ مِزَاجُهَا زَنجَبِيلاً
76:17மேலும் (ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சிகலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

 وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَاباً طَهُوراً
அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.

சொர்கவாசிகள் உயர்தர ஆடைகளை உடுத்தி இருப்பார்கள். அதை குர்ஆனில் பல இடங்களில் சொல்லிக்காட்டுகிறான்.

يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ

அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும்முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.

يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ نِعْمَ الثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا
அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும்ஸுன்துஸ்இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடையநற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.  

அல்லாஹ் இவ்வுலகில் நல அமல்கள் செய்து அவனுக்கு வழிபட்டு நடந்த அடியார்களுக்கு மறுமையில் சுவனபதிகளை வைத்திருக்கிறான். அத்தகைய பாக்கியத்தை நமக்கும் தந்து அருபுரிவானாக! ஆமீன்!

No comments: